திங்கள், 25 அக்டோபர், 2010

திருமாவளவனின் கூட்டணி விரோதக் கருத்து ஒரு கேலிக்கூத்து: தங்கபாலு

சென்னை, அக்.24- காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருமாவளவன் அத்துமீறிய அரசியல் விமர்சனங்களை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து திமுக தலைவர் கருணாநிதிக்கே அறிவுரை வழங்கியுள்ளார். 70 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட முதல்வர் கருணாநிதிக்கு திருமாவளவன் அறிவுரை கூறியிருப்பது மிகப்பெரிய கேலிக்கூத்தாகும்.தமிழக காங்கிரஸ் யார் தோளிலாவது சவாரி செய்யும் கட்சி என்று அவர் கூறியுள்ளார். வெற்றி தோல்விகளை கண்டு காங்கிரஸ் துவண்டு போனதில்லை. காங்கிரஸ் கட்சி இன்றுவரை தொய்வில்லாமல் மக்கள் தொண்டு ஆற்றிவருகிறது.தலைவர் மூப்பனாரால் அறிமுகப்படுத்தப்பட்டு, அரவணைக்கப்பட்ட திருமாவளவன் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், கூட்டணி தர்மத்துக்கு விரோதமாகவும் பேசுவது நல்ல பண்பு அல்ல. இத்தகைய நடவடிக்கையை அவர் இனி நிறுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு கே.வீ. தங்கபாலு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

அப்படியானால் கூட்டணியிலுள்ள திருமாவைத்தாக்கிப் பேசுவதும் அறிக்கை விடுவதும் எந்தக் கூட்டணி அறம்? எத்தனைக் கடல்களில் கழுவினாலும் போகாதக் குருதிக்கறை படிந்த காங். ஓரளவேனும் வெற்றி பெற திருமாவின் வாக்குவங்கியும் உதவியதைத் தங்கபாலு மறக்க வேண்டா. வீரமுடன் வெட்டிப்பேச்சு பேசுவதை விட்டு விட்டு எக் கட்சியுடனும் கூட்டு சேராமல் தனித்துப் போட்டியிட்டு மண்ணைக் கவ்வ அவர் ஆயத்தமாக உள்ளாரா? மக்கள் நலனைக் கருதாமல் தம் மக்கள் நலனைக் கருதிக் காங்.உடன் கலைஞர் கூட்டணி வைத்திராவிட்டால் அக்கட்சி தமிழ்நாட்டிலஇருந்த இடம் தெரியாமல் போய் இருக்கும் என்பதை மறக்க வேண்டா. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/25/2010 3:11:00 AM
Shivaji and MGR "lived" with Jeya's Mom. But Jeya without any hesitation also "lived" with them in additon to Shoban Babu and jai shanker. Now since now no men wants to live with her, She is having lesbian living with another married wome.
By "Kalangum Ullam"
10/25/2010 2:16:00 AM
முதலமைசாரான பிறகு, கருணாநிதி செய்த முதல் காரியம், SSR மனைவி விஜயகுமாரியை, இராவணன் போல் அடுத்தவன் மனைவியை தூக்கிக்கொண்டு போய்விட்டான் இந்த கிழட்டு கருணாநிதி, 70 ஆண்டு கால அரசியல் வரலாறு இதுதானா? டே மொட்டை தங்கபாலு, இந்த விழயம் உனக்கு தெரிந்தும்தானே பேசுகின்றாய்?
By "Kumurum Ullam"
10/25/2010 12:26:00 AM
த்ங்கபாலு போன்ற்வர்கள்கூட அறிக்கை விடுகிறார்கள் என்றால் அதில் ஏதேனும் விசேசம் இருக்கும். அடுத்த் ஆண்டு நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் தணித்து போட்டியிடவேண்டும். இத்னை இவர் ஏற்றுககொள்வாறா? துணிச்சல் வேண்டும். பார்ப்போம்!
By Emmen
10/24/2010 9:16:00 PM
VC's real face we can see now a days thro' their posture. This is happening with full hearted blessing from Karunanidhi. If congress believes this, that shows congress's..........
By Aadhavan
10/24/2010 8:22:00 PM
good satement prs
By prs venkatesan
10/24/2010 8:07:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

சாகித்ய அகாதெமி கிளை தமிழகத்தில் அமைவது மாநில அரசின் கையில் உள்ளது


புதுக்கோட்டை, அக். 23:  மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனமான சாகித்ய அகாதெமிக்கு பிற மாநிலங்களைப்போல தமிழகத்திலும் கிளை அமைவது மாநில அரசின் கையிலேயே உள்ளது என்றார் அந்த அமைப்பின் தென் மண்டலச் செயலர் பெங்களூர் ஜா. பொன்னுத்துரை.  புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:  ""சாகித்ய அகாதெமி சார்பில் கவிஞர்கள் சங்கம நிகழ்ச்சி தென் மாநில மொழிகளில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே தேனி, மதுரை, நாகர்கோவில், திருச்சியில் நடைபெற்ற நிலையில் தற்போது புதுக்கோட்டையில் நடைபெறுகிறது. பல்வேறு படைப்பாளிகள் பங்கேற்கும் இத்தகைய நிகழ்ச்சிகள் புதிய போக்குகளை உருவாக்கும் களங்களாகத் திகழ்கின்றன.  சாகித்ய அகாதெமி கடந்த 1954-ல் பிரதமர் நேருவால் தொடங்கப்பட்டது. நாட்டின் உயரிய இலக்கிய அமைப்பு இன்றளவும் இதுதான். தமிழகத்தைத் தவிர நாடு முழுவதும் அதற்கு மாநிலக் கிளை அமைப்புகள் உள்ளன. தமிழகத்தில் அமைக்கப்படாததன் காரணம் தெரியவில்லை.  இந்த விஷயத்தில் பொதுவாக மாநில அரசுதான் மத்திய அமைப்புக்கு தனது விருப்பத்தைத் தெரிவிப்பது சம்பிரதாயம். ஆகையால், தமிழகத்தில் கிளை அமைய மாநில அரசிடம் இது தொடர்பாக நாங்கள் வலியுறுத்துவோம். தமிழகத்தில் சாகித்ய அகாதெமியின் மாநில மையம் அமைவது தமிழக அரசின் கையில்தான் உள்ளது'' என்றார் பொன்னுத்துரை.  பேட்டியின்போது, கவிஞர்கள் மு. மேத்தா, தங்கம் மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துக்கள்

இதன் விற்பனைக் கிளை மையம் சென்னையில் உள்ளது. மாநிலக் கிளை வேறு என்ன பணி யாற்றும்? அதனை விளக்கித் தென்மண்டலச் செயலரே உரிய நடவடிக்கையை எடுத்தால் தமிழ்நாடும் ஒத்துழைத்து விரைவில் அதன் கிளை அமையும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2010 3:30:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
வெளிநாடுவாழ் தமிழர் நலனுக்கு தனி அமைச்சகம் தேவை: கி.வீரமணி


வேலூர், அக். 23: வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காப்பதற்கு தமிழக அரசில் தனி அமைச்சகம் தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.  திருப்பத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில், உலக நாத்திகர்கள் மாநாடு திருச்சியில் 2011 ஜனவரி 7-ம் தேதி தொடங்கி, மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. உலகின் பல நாடுகளில் இருந்தும் பங்கேற்க உள்ளனர். பகுத்தறிவு, அறிவியல் கண்காட்சி, கருத்தரங்குகள், மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளுடன், பேரணியும் நடைபெறும்.  இலங்கையில், லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில், எஞ்சிருப்போரும் அடிப்படை உரிமைகள், வசதிகள் இன்றி அல்லல் படும் நிலை இன்றும் தொடர்கிறது.  ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே முல்வேலி முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் உதவியுடன் பாரம்பரிய தமிழர்களின் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நடந்து கொண்டிருக்கிறது. இந்திய அரசு நேரடியாக தலையிட்டு எஞ்சியுள்ள தமிழர்களின் வாழ்வுரிமை, சுயமரியாதை ஆகியவற்றுக்கு உத்திரவாதம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு தமிழர்களையே தூதர்களாக நியமிக்க வேண்டும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், தனி அமைச்சகம் ஒன்றை மாநில அரசு உருவாக்க வேண்டும். பஞ்சாப், கேரளம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற தனி அமைப்பு உள்ளது.  தனியார் துறைகள், பன்னாட்டு நிறுவன வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தனிச் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும். தமிழக சட்டப் பேரவையிலும் இதுகுறித்த தனித் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.  நாடாளுமன்றத்தில் அளித்த உறுதியின்படி, அடுத்த ஆண்டுக்குள் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் 27 சதவீதம் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். பிற்பட்டோருக்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய பிற்பட்டோர் நல ஆணையத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும்.  மத்திய தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ் உள்ளிட்ட தேர்வுகளை தமிழில் எழுத வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதே தேர்வாணையம் நடத்தும் மற்ற தேர்வுகளில் பட்டதாரிகளுக்கு தமிழில் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்களும் தமிழில் தேர்வுகளை எழுதும் வகையில் ஆணை பிறப்பிக்க வேண்டும்.  பஞ்சு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும்: இந்தியாவின் பருத்தி, பஞ்சு நூல் உற்பத்தியில் 45 சதவீதம் தமிழகத்தில்தான் நடைபெறுகிறது.  ஜவுளித்துறைக்கு தொடர்பில்லாத பன்னாட்டு நிறுவனங்கள் வெளிச்சந்தையில் குறைந்த விலைக்குப் பஞ்சை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டு, செயற்கை விலை உயர்வை உண்டாக்குகின்றனர். இந்த விலை உயர்வால் விவசாயிகளுக்கோ, ஜவுளி உற்பத்தியாளர்களுக்கோ எந்தப் பயனும் இல்லை.  எனவே, பஞ்சு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். உள்நாட்டுத் தேவைக்கு மேல் இருந்தால் மட்டுமே பருவகாலத்திற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும், அளவை பங்கிட்டு ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும் என்றார்.  திராவிடர் கழக பொதுச் செயலர் கலி.பூங்குன்றன், துணைப் பொதுச் செயலர் துரை.சந்திரசேகரன், மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துக்கள்

தமிழ் மக்களின் நீண்ட காலக் கோரிக்கைகளை வீரமணியார் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி அவ்வாறு அயல்வாழ்தமிழர் துறை என ஒன்றை அமைக்குமாறு சொல்ல வேண்டும். தமிழக அரசும் அயல்வாழ் தமிழர் நல வாரியம் ஒன்றை அமைத்து அயலகத்தமிழர்களின் நலனிலும் அயல்நாடு செல்லும் தமிழர் நலனிலும் கருத்து செலுத்த வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2010 3:13:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ஒச்சாயி தமிழ்தான்: தா.பாண்டியன்

சென்னை, அக்.24: ஒச்சாயி என்ற பெயர் தமிழ்தான் என்றும், அப்பெயரில் எடுக்கப்பட்ட படத்துக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒச்சாயி என்ற பெயரில் ஒரு தமிழ்ப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழில் பெயர் சூட்டப்பட்ட திரைப்படங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளபடி, ஒச்சாயி படத்த்துக்கும் தரப்படவேண்டும்.ஆனால், சம்பந்தப்பட்ட இலாகா அதிகரிகள், ஒச்சாயி - தமிழ் தானா? நிரூபணம் தேவை எனக் கேட்டுள்ளனராம்.தென் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர், ஒச்சாயி என்ற பெயரில் வாழ்ந்து வருகின்றனர்.'ஒச்சாயி'' என்ற பெயர்ச் சொல், தமிழ் அல்ல என்றால், பல்லாயிரம் தமிழ்மொழி பேசும் தாய்மாரை அவமதிக்கும் செயலாகக் கருதப்படும்.எனவே, தவறை திருத்திக் கொண்டு, ஒச்சாயிக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என தா.பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துக்கள்

தமிழ் வளர்த்த பாண்டியர் பெயர் வைத்துள்ளதால் உங்கள் சொல்படி கேட்க வேண்டும் என்று இல்லை. விதி என்றால் விதிதான். ஒன்று கிரந்த எழுத்தைப் பயன்படுத்த வேண்டும். அல்லது ஆங்கிலத்தில் பெயருடன் சேர்த்து விளக்கம் இருக்க வேண்டும். படத்தயாரிப்பாளர் வெளியாளாக இருந்தாலும் வெளியீட்டாளராவது சுற்றமாகவும் வசதி படைத்தவராகவும் இருக்க வேண்டும். எனவே, வெறும் தமிழ்ப் பெயர் வைத்து எங்களை இழிவு படுத்துவதால் உதவ இயலாது. இப்படியே விட்டால் தாய்மொழி என்னும் குறுகிய வட்டத்திற்கள் அனைவரையும் அடைத்து விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டடியுள்ளது. இவ்வாறு உரியவர்கள் பேசிக் கொண்டிருக்கலாம். எதற்கு வம்பு? ஆங்கிலத்தில் விளக்கம் கொடுத்து விடச் சொல்லுங்கள். உதவி கிடைக்கும்.
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2010 3:05:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இராக் போரில் 66 ஆயிரம் பொதுமக்கள் பலி: விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல்

நியூயார்க்/வாஷிங்டன், அக்.23: இராக் போரில் 66 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட அதிர்ச்சித் தகவலை "விக்கிலீக்ஸ்' இணையதளம் வெளியிட்டுள்ளது.இராக் போர் குறித்து 4 லட்சம் ஆவணங்களை திங்கள்கிழமை வெளியிடப் போவதாக "விக்கிலீக்ஸ்' ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த ஆவணங்கள் வெளியானால் பொதுமக்களுக்கும் இராக்கில் உள்ள பன்னாட்டு வீரர்களின் உயிருக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று பென்டகனில் பன்னாட்டுப் படைகளின் (நேட்டோ) தலைவர் ஆண்டர்ஸ் ஃபாக்ஸ்ராஸ்முùஸன் எச்சரித்திருந்தார்.இந்நிலையில் 4 லட்சம் ஆவணங்களின் முக்கிய தகவல்களை "நியூயார்க் டைம்ஸ்' நாளேடு சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.இராக் போரின்போது நடத்தப்பட்ட கொடுமைகள், சித்திரவதைகள் ஆகியன ஆவணங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான சம்பவங்கள் அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளன. இராக்கில் உள்ள பொதுமக்களில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது  குறித்தும், இராக் ராணுவத்துக்கு ஈரான் எந்த வகையில் உதவியது என்பதும் இராக் ராணுவ மற்றும் போலீஸôரின் செயல்பாடு குறித்தும் டைம்ஸ் நாளேட்டில் தகவல் வெளியாகியுள்ளது.உலகிலேயே ராணுவத்தின் போர் ரகசியம் இந்த அளவுக்கு அம்பலமானது இதுவே முதல் முறை. இராக் போரில் 1,09,032 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பொதுமக்கள் 66,081, ஊடுருவல்காரர்கள் 23,984, இராக் ராணுவத்தினர் 15,196, கூட்டுப் படை வீரர்கள் 3,771 பேர் உயிரிழந்துள்ளனர்.மொத்தம் 3,92,000 ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.விக்கிலீக்ஸ் இணையதள தகவல் வெளியீட்டால் அமெரிக்க ராணுவத்துக்கு ஏற்பட்டுள்ள அவப் பெயர், தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆராய ஒரு குழுவை பென்டகன் நியமித்துள்ளது என்று பென்டகன் பத்திரிகை தொடர்பு அதிகாரி ஜெஃப் மாரெல் தெரிவித்தார்.அச்சுறுத்தல் அதிகமுள்ள 300 இராக்கியர்களை அமெரிக்க ராணுவம் கண்டறிந்துள்ளது. ஆனால் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.போர் குற்றத்துக்கான நிர்பந்தங்கள் குறித்த கள அறிக்கையில் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப்படைகளும் இராக் அரசும் எந்த அளவுக்கு வரம்பு மீறியுள்ளன என்பது புரியும் என்று விக்கிலீக்ஸ் இணையதள தலைமை ஆசிரியர் ஜூலியன் அஸôஞ்ஜ் குறிப்பிட்டுள்ளார்.அடிப்பது, தீயிட்டு கொளுத்துவது, சவுக்கால் அடிப்பது உள்ளிட்ட கொடுமையான வன்முறைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆப்கானிஸ்தான் தொடர்பான 92 ஆயிரம் ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.இம்முறை விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஆவணங்கள் நியூயார்க் டைம்ஸ், தி கார்டியன், லெ மோன்டே, அல் ஜஸீரா, டெர் ஸ்பெகல் ஆகிய ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் சிறப்புப் பேட்டியில் ஜெஃப் மாரெல் கூறியிருப்பது: தனிநபரும் சட்டத்தை மீறலாம் என்பதற்கு விக்கிலீக்ஸ் வழிவகை செய்துள்ளது. ரகசிய தகவல்களை உலகிற்கு வெளியிட்டதோடு, இவை எதிரிகள் கையில் கிடைக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தான் குறித்து விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களை அங்குள்ள பயங்கரவாதிகள் ஆராய்ந்து வருகின்றனர். அதன் மூலம் ரகசியங்களை அறிந்து ராணுவத்துக்கு எதிராக அவர்கள் செயல்பட வழியேற்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இத்துடன் இராக்கில் உள்ள கூட்டுப் படைக்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 2006-ம் ஆண்டு டிசம்பரில்தான் மிக அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரே மாதத்தில் 3,800 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஷியா-சன்னி முஸ்லிம் இனத்தவரிடையே மோதல் ஏற்பட்டபோது ராணுவம் ஷியா பிரிவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.சில சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அமெரிக்க ஹெலிகாப்டரை வீழ்த்திய நிகழ்வுகளும் நடந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

உலகெங்கும் இவ்வாறு அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்த உலகச் சான்றோர்கள் முன்வர வேண்டும். பொறுப்பான ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் படைத்தலைவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். அமெரிக்காவின் செல்வாக்கைச் செல்லாக் காசாக்கப் பிறநாடுகள் முயல வேண்டும். தமிழ் ஈழத்தில் நடைபெற்ற் படுகொலைகள் குறித்தும் நடைபெறும் அட்டூழியங்கள் குறித்தும் வெளிக் கொணர்ந்து பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். விக்கிலீக்சு பொறுப்பாளர்கள் வாழ்க! வாழ்க! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2010 3:04:00 AM
அடாவடி அமெரிக்க மீது உலக நாடுகள் உடனே போர் தொடுத்து அப்பாவி பொதுமக்களை காப்பாற்ற வேண்டும். உலக அரங்கில் முதல் தீவிரவாத நாடு அமெரிக்கா தான் அமெரிக்கா ஊடகங்கள் கூட உண்மை செய்தியை தந்து நடுநிலையை கடைபிடித்து உள்ளது ஆனால் இந்திய ஊடகங்களோ அமெரிக்காவின் பிச்சை காசுக்காக உண்மையை மறைக்கிறது.
By Thakbeer ali
10/24/2010 1:03:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தேர்தல் தீர்ப்புக்கு பொதுக் கூட்டம் அளவுகோல் அல்ல: முதல்வர் கருணாநிதி

சென்னை, அக். 23: ""தேர்தல் தீர்ப்புக்கு பொதுக்கூட்டம் அளவுகோல் அல்ல'' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கோவை, திருச்சி மற்றும் மதுரையில் கண்டனப் பொதுக் கூட்டங்களை நடத்தினார். இந்தக் கூட்டங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். இந்த நிலையில், முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி, பொதுக் கூட்டங்களுக்கு மக்கள் கூடுவது குறித்து சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:"மத்தியில் ஆளுகின்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், அந்த அணியுடன் தோழமை கொண்டு மாநிலத்தில் திமுக அணியும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்றன. இந்த ஆட்சிகள் மீது கடுமையானதும், காரசாரமானதுமான தாக்குதலை நடத்தியே மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என்று ஒரு அணியைத் திரட்டுவதற்கான ஆயத்தங்கள் அனைத்திந்திய அளவிலும், தமிழக அளவிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.இன்றுள்ள அரசியல் நிலையை மாத்திரம் அளந்து பார்த்தோ - எடைபோட்டுப் பார்த்தோ திமுக எந்த முடிவையும் எடுக்க விரும்பவில்லை. அனைத்திந்திய அளவில் ஜாதி, மத வேறுபாடுகள், மதமாச்சரியங்கள், மனித நேயத்துக்கு மாறான செயல்கள், மூடநம்பிக்கைகள் என்ற அடிப்படையில் நடைபெறும் முயற்சிகள் எதுவாயினும், அது இந்திய மக்களின் ஒற்றுமையைக் குலைக்கக் கூடியதாகவும், மத நல்லிணக்கத்துக்கு மாறுபட்டதாகவும், திராவிட இன உணர்வுகளைச் சிதைக்கக் கூடியதாகவும், தமிழின்பால் கொண்டுள்ள பற்றினை அசைக்கக் கூடியதாகவும் அமையுமேயானால், அவற்றைப் பொறுத்துக் கொண்டு வாய்மூடி மௌனியாக திமுக இருந்ததும் இல்லை; இருக்கப் போவதுமில்லை.வீறுநடை போட்டு வருகிறோம்: திமுகவின் இந்த உணர்வுகளை - அவற்றின் அடிப்படையிலான லட்சிய முழக்கங்களை, ஒரு குறைந்தபட்ச அளவிலான பொதுத் திட்டங்களாக அமைத்துக் கொண்டுதான், இந்திய அளவிலும், தமிழக அளவிலும் தேர்தல் அல்லாத நேரங்களிலும் கூட கட்சிகளின் தோழமை அணிகள் உருவாகி இருக்கின்றன. அந்த அணிகளில் ஒன்றாக விளங்கி வீறுநடை போட்டு வருவதுதான் திமுக.ஒரு கட்சியைப் பொறுத்தவரை தேர்தலுக்காக எடுத்து வைக்கும் திட்டங்கள், கொள்கைகள், அவற்றை நிறைவேற்றும் பாங்குகள் இவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, தேர்தலுக்கு முன்பு அந்தக் கட்சியின் பிரசாரத்துக்காகக் கூடுகிற அல்லது கூட்டப்படுகின்ற கூட்டத்தையே அளவாக வைத்துக் கொண்டு, எது நல்ல கட்சி அல்லது எது பெரிய கட்சி என தீர்ப்பு வழங்கிட முடியாது.கடந்த 1971-ம் ஆண்டு இந்திரா காங்கிரஸ் கட்சியுடன் அணிவகுத்து தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டம் திமுகவுக்கு ஏற்பட்டது. அப்போது, காமராஜரும், ராஜாஜியும் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் திமுக அணியை எதிர்த்துப் பேசினார்கள். அந்தக் கூட்டத்தின் புகைப்படத்தைப் பார்த்து, நாம் வெற்றி பெறுவோமா என்பது போல விழிகளை அகல விரித்துப் பார்த்தார் திமுக-இந்திரா காங்கிரஸ் அணியின் தலைவர் இந்திரா காந்தி.ஆனால், ""இதுவரை அரசு புரிந்துள்ள சாதனைகளையும், அடுத்து வரும் ஆட்சிப் பொறுப்பில் புரியவிருக்கும் சாதனைகளையும் நம்பிக்கையோடு ஏற்றுக் கொண்டிருக்கின்ற மக்கள் நம்மை ஏமாற்ற மாட்டார்கள்'' என்று இந்திரா காந்திக்கு விளக்கம் அளித்தேன்.தேர்தலில் திருவல்லிக்கேணி கடற்கரையில் கூடிய அந்தக் கூட்டம்; கணித்த ஆரூடத்தையும் மிஞ்சி தெருவோரத்தில் நின்ற மனிதர்களின் தீர்ப்பை வென்று காட்டியது.   கூட்டத்தை வைத்துக் கொண்டு...: கூட்டத்தை வைத்துக் கொண்டு வெற்றி தோல்வியை எடைபோட்டு விடக் கூடாது என்பதற்காக அல்ல, நாம் கூறுகிற கருத்துகளை சீர்தூக்கிப் பார்த்து மக்கள் தீர்ப்பளிப்பதற்கு கூட்டம் தேவைதான் என்பதில் இருவேறு எண்ணம் இல்லை. ஆனால், கூட்டம் மாத்திரமே அளவுகோல் எனக் கணிப்போர் அதுவே அளவுகோல் என நினைத்துவிடக் கூடாது' என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

.பெருந்தலைவரே முன்பு ஒரு முறை நான் பேசினால் கூட்டம் கூட்டமாகத் திரளுகிறீர்கள். ஆனால் வாக்களிக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று பேசியுள்ளார். ஆகவே, பொதுவாகக் கூட்டத்திற்கும் தேர்தல் வெற்றிக்கும் தொடர்பிருப்பதாகக் கூற இயலாது. எனினும் இந்த அறிக்கையின் மூலம் அ.இ.அ.தி.மு.க நிகழ்ச்சிக்குப் பெரும் அளவில் மக்கள் திரளுவதை ஒப்புக் கொண்டுள்ளார். எனவே, கூட்டம் ஒரு வகை எழுச்சி உணர்வைக் கட்சியினரிடமும் மாற்ற உணர்வை மக்களிடமும் ஏற்படுத்தும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். வெற்றி பெறும் கட்சிக்கு வாக்களிப்பதையே விரும்பும் மக்கள் இதுதான் வெற்றி பெறும் கட்சி என்ற முடிவிற்கு வந்து விட்டால் என்னாவது? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2010 2:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
லிபியா நாட்டில் தவித்த தமிழர்கள்: அமைச்சர் அழகிரி முயற்சியால் மீட்பு


மதுரை, அக்.23: லிபியா நாட்டுக்கு வேலைக்குச் சென்று சம்பளம் மற்றும் உணவு இல்லாமல் தவித்த தமிழர்கள், மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க.அழகிரியின் முயற்சியால் மீட்கப்பட்டனர்.   இது குறித்து மதுரையில் மத்திய அமைச்சரின் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:  தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து கட்டுமானப் பணிகளுக்காக 80-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சில ஆண்டுகளுக்கு முன் லிபியா சென்றனர். அங்குள்ள நிறுவனம் தமிழகத் தொழிலாளர்களுக்கு சம்பளம் மற்றும் உணவு சரிவர வழங்காமல் இருந்துள்ளன.     இதுகுறித்து மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து லிபியாவில் உள்ள இந்திய தூதரகத்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தொடர்புகொண்டு தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.    துரிதமாக செயல்பட்ட இந்திய தூதரகம், முதற்கட்டமாக 40 தமிழர்களை மீட்டது.  மீட்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரும் விரைவில் இந்தியா வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

நல்ல முயற்சிக்குப் பாராட்டுகள். இதுபோல் புலம் பெயர்ந்த தமிழர்கள் நடுக்கடலில் தத்தளிப்பதில் இருந்தும் அயல்நாடுகளில் தடுத்து வைக்கப்படுவதில் இருந்தும் மீட்க வேண்டும். அயல்வாழ் தமிழர் நலன் என ஒரு துறையை உருவாக்கி அழகிரியின் பொறுப்பில்
விடவேண்டும். இதற்கான கோரிக்கை வைத்து அவர் வெற்றி பெற வேண்டும்.
By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2010 2:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
மறு பதிவு: நல்ல முயற்சிக்குப் பாராட்டுகள். இதுபோல் புலம் பெயர்ந்த தமிழர்கள் நடுக்கடலில் தத்தளிப்பதில் இருந்தும் அயல்நாடுகளில் தடுத்து வைக்கப்படுவதில் இருந்தும் மீட்க வேண்டும். அயல்வாழ் தமிழர் நலன் என ஒரு துறையை உருவாக்கி அழகிரியின் பொறுப்பில் விடவேண்டும். இதற்கான கோரிக்கை வைத்து அவர் வெற்றி பெற வேண்டும். By Ilakkuvanar Thiruvalluvan 10/24/2010 2:45:00 AM எஞ்சிய தமிழர்களையும் உடனே மீட்க வேண்டும். அயல்வாழ் அமைச்சுத்துறை குறித்து வீரமணியார் பேசிய பேச்சு வேறு பக்கத்தில் வந்துள்ளது. அவ்வாறிருக்க இச்செய்தியை நீக்கியது முறைதானா? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2010 3:20:00 PM
REAL TAMILAN
By hussain
10/24/2010 2:02:00 PM
அருணாசலப் பிரதேசம் குறித்து இணையதளத்தில் சீனா விஷமம்

பீஜிங், அக்.23- இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலம் தனது நாட்டுக்கு சொந்தமானது போன்று இணையதளத்தில் உலக வரைபடத்தை சீனா வெளியிட்டுள்ளது."கூகுள் எர்த்" இணையதளத்துக்குப் போட்டியாக சீன மொழியில் தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தில் இவ்வாறு விஷமமான முறையில் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.தெற்கு திபெத் என்று சீனா வாதிட்டு வரும் பகுதியில் அருணாசலப் பிரதேசம் இணைந்திருப்பது போல் அந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள லடாக் பகுதிக்கு உட்பட்ட அக்சய் சின் பகுதியும் சீனாவுக்கு சொந்தமானது போன்ற தோற்றத்தில் அந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்துடன் இந்தியாவின் அக்சய் சின் பகுதி இணைந்திருப்பது போன்று வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளது.சீனாவுடனான உறவில் சிக்கல் உருவாகும் என்ற கருத்தின் அடிப்படையில், தலாய் லாமாவுக்கு தில்லியில் உள்ள மத்திய அரசின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குவதை இந்திய வெளியவுறவு அமைச்சகம் தடுத்து வைத்துள்ள நிலையில், சீனா வேண்டுமென்றே இணையதளத்தில் இவ்வாறு விஷமத்தனமான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துக்கள்

இராமர் பூமி வழக்கில் தொடர்ந்து ஒருவர் உரிமை கோரியதால் அவருக்கும் ஒரு பங்கு என்று தீர்ப்பு வழங்கியதன்அடிப்படையில் நாளை தொடர்ந்து கோரும் சீனாவிற்கும் அருணாச்சலத்தில் ஒரு பங்கு உண்டு என எந்த நீதிபதியேனும் சொல்லக்கூடும். எனவே, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அடிக்கடி இவ்வாறு சீனா வரைபடத்தில் குறும்பு செய்வதும் இந்தியா அறிக்கையுடன் விட்டு விடுவதுமாக உள்ளது. இதனைத் தடுத்து நிறுத்தும் வல்லமை காங்.கிற்குக் கிடையாது. எனவே, இந்திய ஒருமைப்பாட்டைக் கருதி காங்.ஐ 
ஆட்சிப்பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும். சீனாவிற்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2010 2:40:00 AM
I no more feel sad about such things after my people were butchered by india in Eezham.
By Truth
10/24/2010 1:57:00 AM
எங்க போனாங்க நம்ம வெளியுறவுச்செயலாளர், அமைச்சரெல்லாம்? அட ஒரு அறிக்கையை விடுங்கப்பா. அது போதும். நம்ம காங்கிரஸ் ஆட்சியில அதுமட்டும்தான் கிடைக்கும்.
By sboopa
10/23/2010 6:04:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
மிழகத்தில் மாற்றம் ஏற்படும்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ


திண்டுக்கல், அக். 22: மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்குவதன் மூலம் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா தெரிவித்தார்.    தமிழகத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுவரும் இளைஞர் காங்கிரஸ் குழு, வியாழக்கிழமை இரவு திண்டுக்கல் நகருக்கு வந்தது. அப்போது யுவராஜா கூறியதாவது: கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை இளைஞர் காங்கிரஸ் சார்பில் பாத யாத்திரைக் குழு பிரசாரம் மேற்கொள்கிறது.    1,250 கி.மீ. தூரம் பயணம் மேற்கொண்டு 2 கோடிக்கும் மேற்பட்ட மக்களைச் சந்திக்க உள்ளோம். மத்திய அரசின் சாதனைகளை விளக்கிக் கூறுவதே எங்கள் நோக்கம். இதன்மூலம் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும்.    மத்திய அரசின் நலத்திட்டங்களை மாநில அரசு பொதுமக்களிடம் எடுத்துக் கூறுவதில்லை. கூட்டணியில் இருந்தாலும் அரசின் தவறுகளை சுட்டிக் காட்டும் கடமை காங்கிரசுக்கு உண்டு. ஆட்சி முடிந்த பின்னரும், தங்களது சொத்து விவரங்களைத் தெரிவிக்க அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என்றார் அவர்.    முன்னதாக, குள்ளனம்பட்டிக்கு வந்த யாத்திரைக் குழுவினரை காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு மாவட்டத் தலைவர் அப்துல்ஜப்பார் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.      
கருத்துக்கள்

இந்தியக் கண்டத்திலுள்ள தேசிய இனங்களை ஒடுக்கி அயல் இனமாகிய ஆரிய இனத்தை மட்டும் வளரச் செய்வதிலும் ஊழல் பெருக்கத்திலும் சுண்டைக்காய் நாட்டிடம் தமிழ் மீனவர்களைக் காவு கொடுப்பதிலும் தமிழினத்தை இலங்கைத் தீவில் ஒழித்து வருவதிலும் தன் நாட்டுப் பகுதிகளை அயல்நாட்டிடம் பறிகொடுத்து நிற்கும் பரிதாப நிலையிலும் காங்கிரசே முழுமையான சாதனை புரிந்துள்ளது என்பதையும் மக்கள் புரிந்து கொண்டு்ளார்கள். காங். வீழ்ந்தால் இந்தியா வலிவும் பொலிவும் பெறும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2010 2:30:00 AM
தம்பி யுவராஜ் அவர்களே! தமிழரை, இலங்கை அரசு வெற்றி கொண்டதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று பலருக்கும் புரிந்திருக்கிறது. அதுவும் சென்ற தேர்தலின் முடிவு அறிவிக்கப்பட்டு காங்கிரஸ் ஆட்சியமைக்கக் கூடும் என்ற நிலை தெரிந்த பின்னரே பிரபாகரன் கொல்லப்பட்டார். வரும் தேர்தலில் காங்கிரஸுக்கு மாற்றம் வரும். வளர்ச்சியா? வீழ்ச்சியா? தமிழக மக்கள் சரியான தீர்ப்புத் தருவார்கள்.
By நாடோடி
10/23/2010 9:25:00 PM
ANNAN YUVARAJA VALHA! JAYA AMMAYAR VALARHA!KARUNA OLIHA!
By INDRAJIT, KANGEAYAM
10/23/2010 12:36:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *