திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

மீண்டும் ஆங்கில த் தலைப்புகளின் ஆதிக்கம்: சிறப்புச்செய்தி

இத்தகைய செய்தியை வெளியிட்ட தினமலருக்குப் பாராட்டுகள். தமிழ்ப் பெயர்  இல்லாப் படங்களையும் தொடர்புடைய கலைஞர்களையும் புறக்கணிக்கும் முடிவிற்குத் தமிழக மக்கள் முன்வரவேண்டும். திரைத்துறை தொடர்பான சங்கங்கள் கூடி இதற்கென ஒரு  முடி வெடுத்துத் தமிழ்ப் பெயர்களையே தமிழ்ப்படங்களுக்கும் புதுமுகக் கலைஞர்களுக்கும் சூட்ட வேண்டும்.  தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மீண்டும் ஆங்கில த் தலைப்புகளின் ஆதிக்கம்:  சிறப்புச்செய்தி

Again english title in tamil cinema: Special reportஆங்கிலத்தில் தலைப்பு வைப்பது என்பது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. அந்தக் காலத்திலேயே அதாவது 1940 களுக்கு முன்பே பாம்பே மெயில், டாக்டர் பங்காரு, டுபான் குயின், ஐ.சி.எஸ் மாப்பிள்ளை என ஆங்கிலத்தில் பெயர் வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு ஆண்டுக்கு பத்து படங்களாவது ஆங்கில பெயர்களோடு வெளிவந்தன. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. திரைப்படத் துறைக்கு பல்வேறு சலுகைகளை அவர் வாரி வழங்கிய போது, தூய தமிழில் பெயர் வைத்தால் அதற்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்பதும் ஒன்று. அதனால் அவர் ஆட்சி செய்த 5 வருடங்களும் எந்த படத்துக்கும் ஆங்கில பெயர் வைக்கப்படவில்லை. ரோபோ என வைக்கப்பட்ட பெயர் எந்திரன் ஆனது. காட்பாதர் என வைக்கப்பட்ட பெயர் வரலாறு ஆனது. இப்படி பல நடந்தது. தமிழ் கலர்சசாரத்துக்கு விரோதமான கருத்தைக் கொண்ட சிந்து சமவெளி போன்ற படங்களும், முழுக்க முழுக்க வன்முறை, ஆபாசம் நிறைந்த படங்களும் தமிழில் பெயர் வைத்து விட்டு வரிச்சலுகையை பெற்று வந்தது.

அதனால் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா இந்த சலுகையில் ஒரு திருத்தத்தை அறிவித்தார். அதாவது தமிழில் பெயர் வைத்தால் மட்டும்போதாது, அது நல்ல கருத்துள்ள படமாக இருக்க வேண்டும், தணிக்கை குழுவின் யூ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், அப்போதுதான் வரிவிலக்கு கிடைக்கும் என்று அறிவித்தார். இதற்கென தனி குழுவையும் அறிவித்தார். இதனால் பல படங்கள் தங்கள் கதைக்கும், காட்சிக்கும் நிச்சயம் யூ சான்றிதழ் கிடைக்காது என்பதை முன்பே புரிந்து கொண்டு ஆங்கில பெயர்களை வைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

அந்த வரிசையில் வந்த முதல் படம் பீட்சா. இது குழந்தைகள் பார்க்க முடியாத திகில் படம் என்பதை முன்பே உணர்ந்து ஆங்கிலத்தில் பெயர் வைத்தார்கள். சிம்கார்டு என்ற படம் தயாரிப்பில் உள்ளது. இது செல்போனால் வரும் சிக்கல்களை சொல்லும் படம். பாலாவும் சமுத்திரக்கனியும் நடிக்கும் படத்திற்கு ஹிட்லிஸ்ட் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது போலீஸ் என்கவுண்டர் பற்றிய கதை. கெஸ்ட் என்று ஒரு படம். வேண்டாத விருந்தாளி ஒருவன் ஒரு குடுமபத்திற்குள் புகுந்து செய்யும் வில்லத்தனங்கள் பற்றிய கதை. காதலர்களுக்குள் நடக்கும் சின்ன சின்ன சண்டைகளை மையமாக வைத்து தயாராகும் படத்துக்கு ஈகோ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதுதவிர டீல் என்ற பெயரிலும் ஒரு படம் தயாராகி வருகிறது.

தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர் கில்டு, தென்னிந்திய திரைப்பட வர்த்த சபை ஆகியவற்றிலும் தற்போது ஆங்கில தலைப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 2013ம் ஆண்டு 20 படங்கள் வரை ஆங்கிலத் தலைப்பில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தினமலர்

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

ஒச்சாயி தமிழ்தான்: தா.பாண்டியன்

சென்னை, அக்.24: ஒச்சாயி என்ற பெயர் தமிழ்தான் என்றும், அப்பெயரில் எடுக்கப்பட்ட படத்துக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒச்சாயி என்ற பெயரில் ஒரு தமிழ்ப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழில் பெயர் சூட்டப்பட்ட திரைப்படங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளபடி, ஒச்சாயி படத்த்துக்கும் தரப்படவேண்டும்.ஆனால், சம்பந்தப்பட்ட இலாகா அதிகரிகள், ஒச்சாயி - தமிழ் தானா? நிரூபணம் தேவை எனக் கேட்டுள்ளனராம்.தென் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர், ஒச்சாயி என்ற பெயரில் வாழ்ந்து வருகின்றனர்.'ஒச்சாயி'' என்ற பெயர்ச் சொல், தமிழ் அல்ல என்றால், பல்லாயிரம் தமிழ்மொழி பேசும் தாய்மாரை அவமதிக்கும் செயலாகக் கருதப்படும்.எனவே, தவறை திருத்திக் கொண்டு, ஒச்சாயிக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என தா.பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துக்கள்

தமிழ் வளர்த்த பாண்டியர் பெயர் வைத்துள்ளதால் உங்கள் சொல்படி கேட்க வேண்டும் என்று இல்லை. விதி என்றால் விதிதான். ஒன்று கிரந்த எழுத்தைப் பயன்படுத்த வேண்டும். அல்லது ஆங்கிலத்தில் பெயருடன் சேர்த்து விளக்கம் இருக்க வேண்டும். படத்தயாரிப்பாளர் வெளியாளாக இருந்தாலும் வெளியீட்டாளராவது சுற்றமாகவும் வசதி படைத்தவராகவும் இருக்க வேண்டும். எனவே, வெறும் தமிழ்ப் பெயர் வைத்து எங்களை இழிவு படுத்துவதால் உதவ இயலாது. இப்படியே விட்டால் தாய்மொழி என்னும் குறுகிய வட்டத்திற்கள் அனைவரையும் அடைத்து விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டடியுள்ளது. இவ்வாறு உரியவர்கள் பேசிக் கொண்டிருக்கலாம். எதற்கு வம்பு? ஆங்கிலத்தில் விளக்கம் கொடுத்து விடச் சொல்லுங்கள். உதவி கிடைக்கும்.
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2010 3:05:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

சனி, 6 ஜூன், 2009

நடிகர் எசு.எசு. இராசேந்திரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
தினமணி


சென்னை, ஜூன் 5: பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை சிங்கப்பூர் இந்திய கலைஞர் சங்கம் வழங்குகிறது. தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் (ஜூன்-7) ஞாயிற்றுக்கிழமை அந்த சங்கம் நடத்தும் "முக்கனி விருந்து' என்னும் நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்படுகிறது. வாழ்நாள் சாதனையாளர் விருதினை, பிரபல திரைப்பட இயக்குநர் முக்தா சீனிவாசன் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு வழங்குகிறார். மேலும், பழம் பெரும் நடிகர்களான கே.ஆர்.செல்வராஜ், பாலசுந்தரம், தில்லை மனோகரி ஆகியோர்களுக்கு "நாடக காவலர்' விருது வழங்கப்படுகிறது.
கருத்துகள்

மக்கள் சார்பாளராக முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரிய - இன்றைய நடிகர்கள் போல் முதல்வர் கனவில் ஒப்பனை போடாமல் உள்ளபடியே அரசியல் விழிப்புணர்வுடன் செயல்பட்ட - இலட்சிய நடிகருக்குப் பொருத்தமான விருதே வாழ்நாள் சாதனையாளர் விருது. தினமணி வாசகர்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துகளும பாராட்டுகளும் உரித்தாகுக! சிங்கப்பூர் இந்தியக கலைஞர் சங்கம் தொண்டு தொடரவும் வாழ்த்துகள்!


போற்றுதலுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/6/2009 3:00:00 AM