திங்கள், 6 செப்டம்பர், 2010

ப. சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய கருத்து: விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு


ஆமதாபாத், செப்.6- மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்த குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 25-ம் தேதி தில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது 'காவித் தீவிரவாதம்' என்கிற வார்த்தையை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பயன்படுத்தினார். இந்நிலையில், அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தைச் சேர்ந்த சுவாமி நிஜானந்த் தீர்த் என்பவர் ஆமதாபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
"காவி நிறம் என்பது இந்து மதம் மற்றும் துறவிகளின் அடையாளமாக உள்ளது. அது கடவுள், அமைதி, தியாகம் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்கிறது. 'காவித் தீவிரவாதம்' என்கிற வார்த்தையை பயன்படுத்தியதன் மூலம் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் லட்சக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவோரை தண்டிக்க வேண்டும்." என்று சுவாமி நிஜானந்த் தீர்த் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஆமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எம்.ஜி. தவே முன்னிலையில், அந்த மனு இன்று விசாரணைக்கு வந்ததது. இதில், சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள போஸீஸ் அதிகாரி விசாரணை நடத்தி 90 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கருத்துக்கள்

இந்தியக் கண்டத்தின் மண்ணின் மைந்தர்களை நசுக்கும் இந்தியப் பயங்கரவாதத்திற்கு எதிராக இருக்கும் ப.சி. எனத் தவறாகக் குறிக்கப் பெற்றதற்கு வருந்துகிறேன்.இந்தியப் பயங்கரவாதத்திற்கு எதிராக என்னும் இடத்தில் இந்தியப் பயங்கரவாதத்திற்குத் துணையாக என்று வாசிக்கவும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/6/2010 6:10:00 PM
பயங்கரவாதம் என்பது அருள்நெறி போற்ற வேண்டிய சமயங்களின் பெயராலும் நிகழ்கிறது. என்றாலும் பொதுவாகப் பயங்கரவாதம் என்றால் இசுலாம் மட்டுமே முன்நிறுத்தப்படுகின்றது. எனவே, பாபர் மசூதி இடிப்பு, கோத்ரா எரிப்பு, தலைவெட்டிக் கொண்டு வந்தால் பரிசு என்று அறிவிப்பு முதலானவற்றைக் கண்டு மனம் வெதும்பி ப.சி. அவர்கள் கூறியுள்ளார். அது தவறெனில் இந்து சமயத்தின் பெயரால் நடைபெற்ற வன்முறைகளை ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும். தமிழ் நாடடவர் முதன்மைப் பொறுப்பில் இருப்பதையும் அடுத்து இதைவிட மிகுதியான தலைமைப் பொறுப்பிற்கு வந்து விடுவாரோ என அஞ்சியும் தமிழ்நாட்டவர்க்கு எதிரானவர்கள் கிளர்ச்சி செய்கின்றனர். அதே நேரம், ஈழத்தமிழர்க்கு எதிரான இந்தியப் பயங்கரவாதத்திற்கு உறுதுணையாக இருக்கும் இந்தியக் கண்டத்தின் மண்ணின் மைந்தர்களை நசுக்கும் இந்தியப் பயங்கரவாதத்திற்கு எதிராக இருக்கும் ப.சி. இதைக் கூறியுள்ளதுதான் வியப்பு. அவ்வாறே அவர் அடுத்து காங்கிரசு பயங்கவாதம் குறித்தும் கூறினால் நன்று. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/6/2010 6:08:00 PM
. இந்த வழக்கில் இருந்து சிதம்பரம் தப்பிக்க ஒரு வழி இருக்கிறது அவர் ஒரு மன நோயாளி என மருத்துவ சான்றிதழை நீதிபதி இடம் காண்பிக்கலாம்.....
By வீர ஹிந்து முத்துபேட்டை ...
9/6/2010 5:50:00 PM
Ivana nalla uttru paarungal.... Avane than Onbathu paiyan... Ivanoda pecha en mathikanum
By Hindustan-Kuruvi
9/6/2010 5:46:00 PM
இங்கே கருணாநிதி பேசும் பேச்சுகளை அந்த நீதிமன்றம் கேட்டால் என்ன சொல்லுமோ? அதன் மரம் வெட்டி ராம தாஸ், தன் ஜாதிக்கரப்பயளுவளை ஜட்ஜ் ஆக்கி விட்டால் , கடு வெட்டி மற்றும் அவர்தம் கும்பலை விட்டு தமிழ் நாட்டை சூறை தேங்காய் போல் ஆகினாலும் வன்னிய நீதி மன்றம் ஒன்னும் செய்யாது. ஒரு வாரம் தொலை காட்சில் பார்த்த அட்டாக் பாண்டி கும்பலை ஒரு சின்ன கொழந்தை கூட அறிந்தும் ரௌடிபயல் மற்றும் அவன் முதலாளி அஞ்சாநெஞ்சன் வெள்ளை சட்டை போட்டு வெளியில் திரி கிறார்களே . கருணாநிதி தனது ஆட்களை மெதுவாக உயர் நீதி மன்றத்திலும் மற்றும் எல்லா நீதித் துறைஎளும் புகுதியதினால் தான்
By கோழி
9/6/2010 5:44:00 PM
தன தாயினை தானே இகழ்ந்து பேசியவரை தண்டிக்க முயற்சிப்பது விவேகமல்ல ! கொஞ்சம் தாயின் பெருமைகளை புனிதத்தை புரிந்து கொள்ள ஞானத்தை அருளலாம் ! அறியாமையில் கிடப்பவன் அரசன் என்றாலும் மந்திரியே என்றாலும் அவர்களின் பேச்சினைப் பொருட்படுத்தி பயன் இல்லை வருத்தப் படுவதில் பொருள் இல்லை !!! @ rajasji
By rajasji
9/6/2010 5:26:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

"பிராமி' எழுத்துகள் மதுரை பகுதியிலிருந்தே வட இந்தியப் பகுதிக்கு பரவியுள்ளன

First Published : 06 Sep 2010 12:04:37 PM IST


மதுரை, செப். 5: "பிராமி' எழுத்துகள் மதுரை பகுதியிலிருந்தே வட இந்தியப் பகுதிக்குப் பரவியுள்ளன என்று காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ப.ஆனந்தகுமார் கூறினார்.  மதுரை 5-வது புத்தகத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் "மதுரைக் கவிஞர்கள்' எனும் தலைப்பில் அவர் ஆற்றிய உரை:  மதுரை நகர் மலைகள் சூழ்ந்ததாக உள்ளது. இம்மலைகளில் அரிய பல கல்வெட்டுகள் உள்ளதை அறியமுடிகிறது. பிராமி எழுத்துக் கல்வெட்டுகள் யானைமலையில் உள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் குகைகளில் இக்கல்வெட்டுகள் காணப்படுகின்றன.  அண்மையில் தேனி மாவட்டம், புலிமான்கோம்பையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்ட நடுகல்லானது கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரியவந்துள்ளது. அதில் பிராமி எழுத்துகள் இடம்பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.வட இந்தியப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அசோகர் கால கல்வெட்டுகளில் பிராமி எழுத்துகள் இருந்ததால் அங்கிருந்தே தெற்குப் பகுதிக்கு பிராமி பரவியிருக்கலாம் எனக் கருதப்பட்டது. ஆனால், புலிமான்கோம்பை நடுகல் மூலம் தெற்கிலிருந்தே வடக்கிற்கு பிராமி எழுத்துகள் சென்றிருப்பது தெரியவருகிறது.  இதன்மூலம் மதுரையில் பழங்காலந்தொட்டே கலாசாரம் மிக்க மக்கள் வாழ்ந்திருப்பதை அறியலாம். மதுரையைப் பற்றி வெளிநாட்டவரான மெகஸ்தனிஸ் உள்ளிட்டோரது குறிப்புகளிலும் காணப்படுகிறது. வால்மீகி ராமாயணம், அசோகர் கல்வெட்டுகள் மூலமும் மதுரையின் பழமையை அறியலாம்.  சங்க இலக்கிய நூல்களில் 416 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 53 புலவர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள். மதுரையில் வணிகர், ஆசிரியர் என அனைத்துத்துறையைச் சேர்ந்தவர்களும் சங்ககாலப் புலவர்களாக விளங்கியுள்ளனர்.  சங்க இலக்கியத்தில் 206 பாடல்கள் மதுரைப் புலவர்களால் பாடப்பெற்றவையாகும். இதன்மூலம் மதுரை சிறந்த கலாசார நகராக விளங்கியிருப்பதை அறியலாம்.நவீன கவிதைகளை மதுரையில் பலரும் தற்போது எழுதி வருகின்றனர். அவர்களில் குறிப்பிட்ட சிலரே மதுரையின் வரலாறைப் பதிவுசெய்யும் வகையில் கவிதை எழுதியுள்ளனர். அவர்களில் ஜெயபாஸ்கரன் கவிதைகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. என்.நன்மாறன் எம்.எல்.ஏ.வும் குழந்தைக் கவிதைகள் எழுதுபவராக உள்ளார். அவர் சந்திராயன் விண்கலம், சந்திரனைப் பற்றி எழுதிய கவிதை அறிவியல்பூர்வமாக உள்ளது என்றார். நிகழ்ச்சியில் எஸ்.பி.ஜெ. மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி தலைவர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் முன்னிலை வகித்தார். மீனாட்சி புத்தக நிலையம் முருகப்பன் வரவேற்றார். பபாசி தலைவர் சேது. சொக்கலிங்கம், வணிக வரித் துறை இணை ஆணையர் தேவேந்திரபூபதி, இளசைசுந்தரம், வளவன் அரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துக்கள்

இவ்வுரையை இருட்டடிப்பு செய்யாமல் வெளியிட்ட தினமணிக்குப் பாராட்டுகள். பேரா.ப.அனந்த குமார் வரலாற்றுச் செய்திகளையெல்லாம் வெறும் உரையாகக் காற்றில் கலந்து வெற்றரையாக மாறாமல் இருக்க கட்டுரைகள் வடிவிலும் நூல் வடிவிலும் மக்கள் அறியச் செய்ய வேண்டும். ஆங்கிலத்தில் எழுதிப் பிற மொழியினரும் உணரச் செய்ய வேண்டும்.
பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
9/6/2010 12:28:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
இராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று முகநூலில் நான் ஒரு மறுமொழி அளித்திருந்தேன்>>

வால்மீகி இராமாயணத்தில் வரும் ஒரு  தொடர் அதன் சூழலை ப் புரிந்து  கொள்ளாமல் பலராலும் தவறாகவே எடுத்தாளப்படுகிறது.

நாட்டை இராமன் ( போன்றவர்கள்) ஆள வேண்டும் என்னும் பொருளிலேய‌ே அனை வரும் கையாளும் பொழுது  இராவணன்  (‌ போன்ற மண்ணின் மைந்தர்கள்) ஆள வேண்டும் என்னும் இனஉணர்வு வேண்டும் என்னும் பொருள்பட  பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தம்முட ய துரத்தப்பட்டேன் பாவியத்தில் குறிப்பிட்டிருப்பார். 

இவ்வாறு. நம் நாட்டை யார் ஆண்டால் நமக்கென்ன என்று கவலை யற்று இருக்கக் கூடாது என்னும்  நோக்கத்திலேயே நாம் பார்க்கின்றோம்.   ஆனால் அடுத்தவர் நாட்டு உட் சிக்கல்களில் தலையிடாமை வேண்டும் என்னும் பொருளில்தான் இத் தொடர் கூறப்படுகிறது.

இத் தொடர்   சுக்கரீவன்படைகளால்   அப்படை இராவணனால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்படும் பொழுது நமக்கு உரிமை யல்லாத இலங்கையை அம் மண்ணிற்குரிய  இராவணன் ஆண்டால் என்ன? அதனைக் கவர எண்ணும்  இராமன் ஆண்டால் நமக்கு என்ன?   நாம் ஏன் உயிரைக் கொடுக்க வேண்டும் ?  என்பதாகச்  சொல்லப்பட்ட ‌தாகும்். 
இந்திய அரசும் தனக்கு உரிமையல்லாத  இலங்கையின் நலனில்,  ஓர வஞ்சனையுடன் கருத்து  செலுத்துவது போல் நடித்து இனப் படுகொலைகளுக்குத் துணை புரிவதற்கு மாற்றாக, ஒதுங்கியிருந்தது என்றால்   எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? காலம் இன்னும் உள்ளது. இனியேனும் இந்தியா ஒதுங்கியிருந்தால் நன்றே!

அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
கூட்டணி மாற வேண்டும்!


பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் அறிவித்திருந்த, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒருநாள் வேலைநிறுத்தம் அரசின் தகுந்த முன்னேற்பாடுகளால் பிசுபிசுத்துப் போய்விட்டது. ஆனால், மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம் தாமதமாக மழை பெய்தாற்போல டாஸ்மாக் ஊழியர்களுக்கு சில நாள்கள் கழித்து ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம், ஊதிய உயர்வு ஆகிய இவை இரண்டுமே அடைமழை பெய்யும் என எதிர்பார்த்தோருக்கு லேசான சாரல் பெய்ததைப்போல இருந்தது என்பதே உண்மை. வேலைநிறுத்தத்தை முறியடிக்க தமிழக அரசு காவல் துறையின் உதவியுடன் மதுக்கடைகளைத் திறந்திருந்தது. இதனால், அன்றைய தினம் மட்டும் குடிமகன்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மது அருந்தி மகிழ்ந்த திருப்தி. இது தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றில்கூட முதன்முறையாக இருந்திருக்கலாம்.  மதுவிலக்கையும் மீறி மது அருந்தினால் காவலர்கள் கண்டுபிடித்து விடுவார்களோ, கைது செய்து விடுவார்களோ என்று குடிமகன்கள் அஞ்சியஞ்சி மது குடித்தனர். அது கர்மவீரர் காமராஜ் காலம்!  தற்போது நடப்பது காமராஜ் ஆட்சிதான் என்று மேடைதோறும் முழங்குபவர்களின் ஆட்சியிலோ இப்படி ஒரு காண்பதற்கரிய காட்சி.  பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து அறிவு தீபமேற்ற அல்லும்பகலும் பாடுபட்டார் காமராஜ். அறிவை அழிக்கும் மதுக்கூடங்களை அதிகரித்து மகத்தான சாதனை புரிந்துகொண்டிருக்கின்றனர் இன்றைய ஆட்சியாளர்கள்.  தங்கள் ஆட்சியிலும் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதே என இவர்கள் கூறலாம். ஆனால் இளம் பருவத்தினர் "பார் வசதி உண்டு' என எழுதப்பட்ட குறைந்தது இரண்டு, மூன்று மதுபானக் கடைகளையாவது தாண்டித்தான் தினமும் பள்ளிக்கூடத்துக்குச் செல்ல வேண்டிய நிலை. விளைவு...படித்துப் பயன்பெற வேண்டிய நஞ்சை நிலம், மது என்னும் நஞ்சைக் குடிக்கத் தொடங்கி எவருக்கும் பயன்படாத களர் நிலமாகிவிடுகிறது. இப்போதெல்லாம் மாணவர்கள் பயமின்றி பள்ளிச் சீருடைகளிலேயே மதுக்கடைகளுக்கு வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  நலத்திட்டங்கள் குறித்தோ, அரசின் செயல்பாடுகள் குறித்தோ எதிர்க்கட்சிகள் ஏதேனும் கேள்வி எழுப்பினால் கேரளத்தைப் பாருங்கள், மேற்குவங்கத்தைப் பாருங்கள் என்பது தமிழக முதல்வரின் வழக்கம். மதுகுறித்த கேள்விகளுக்கு மட்டும் மெüனத்தையே பதிலாகத் தந்து, அரசின் இலவசத் திட்டங்களுக்கு டாஸ்மாக் மது மூலம் வரும் நிதிதான் பக்கபலமாக இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லும் முதல்வர், மதுவை முற்றிலும் ஒழித்தாலும் மாநிலத்தின் வளர்ச்சி தடைபடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக குஜராத்தைப் பார்க்கலாமே! காந்தி பிறந்த புண்ணிய பூமியில் மது முற்றிலும் ஒழிக்கப்பட்டிருக்கிறது. கள் கூடாது என்பதற்காக தனது தோப்பில் இருந்த தென்னை மரங்களை வெட்டித்தள்ளிய, சுயமரியாதை உணர்வை உசுப்பிவிட்ட பெரியார், ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்ட "தென்னாட்டு காந்தி" அண்ணா, மதுவிலக்கை முழுமையாக ஆதரித்த ராஜாஜி, காமராஜ் போன்ற புண்ணியர்கள் பலர் பிறந்த தமிழகத்திலும் மது முற்றிலும் ஒழிக்கப்படுவதுதானே நியாயம்?  தாம் மதிப்போரின் கொள்கைகளைக் காற்றில் விட்டுவிட்டு அவர்களுக்கு சிலைகளும், சித்திர மண்டபங்களும் எழுப்புவதால் என்ன பயன்?   மதுவிலக்கு குறித்து ஓர் அதிகாரமே தந்தார் அய்யன் திருவள்ளுவர். தென்கோடியில்  அவருக்கு சிலை வைத்த ஆட்சியாளர்களோ, அவர் சொன்னதை விலக்கிவிட்டு, மதுவுக்கு அதிகாரம் தந்திருக்கின்றனர்.  ஆண்டுக்காண்டு மது விற்பனை மெல்ல அதிகரித்த காலம்போய் மாதந்தோறும், நாள்தோறும் மது விற்பனை அசுர வேகத்தில் அதிகரிப்பதைப் புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடிகிறது. மதுவிற்பனை மூலம் அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி கிடைக்கிறதாம். ஆனால், குடித்துக்குடித்து குடல் வெந்துபோகும் ஏழைக் குடிமகன் விழுந்து கிடக்கவும், அவன் இறந்துவிட்டால் அவன் குடும்பத்துக்கும் தெருக்கோடிதானே கிடைக்கிறது.  டாஸ்மாக் பணியாளர்களுக்கு நல்ல வருவாயில், நிரந்தரமான மாற்றுப் பணி தருவதுடன், குடி என்னும் தவறான பாதையிலிருந்து மக்களை மாற்றும் பணியையும் மேற்கொள்ள வேண்டியது அரசின் முக்கிய கடமைதானே!   இளைஞர் நலனில் அக்கறை கொண்டு இளைய சமுதாயத்துக்கு நன்மை செய்ய பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. வீதிகள்தோறும் குறைந்த கட்டணத்தில் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறந்தால் எதிர்காலத் தூண்களின் உடல் நலத்தை வளர்க்கலாம். பள்ளிக்கூடங்களை அதிகம் திறந்தால் பகுத்தறிவை வளர்க்கலாம். மாறாக, மதுக்கூடங்களைத் திறப்பதன் மூலம் இளைய சமுதாயத்துக்கு என்ன நன்மைகளைச் செய்துவிட முடியும்? தமிழகத்தில் பிரதான இரு கட்சிகள் மற்ற விஷயங்களில் எப்படியோ, மது விஷயத்தில் மட்டும் ஒன்றாகவே சிந்திக்கின்றன. ஒற்றுமையுடன் செயல்படுகின்றன.   இங்கு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வற்றாமல் வாரி வழங்கும் மது அரக்கனுடன் கூட்டணி வைத்துக்கொள்வதே வழக்கமாக உள்ளது. அந்த நிலை மாறி மதுவுடனான கூட்டணி முறை முற்றிலும் ஒழிய வேண்டும். மக்கள் வாழ்வில் நிம்மதியும், அமைதியும் ஏற்பட கட்சிகள் மதுவிலக்குடன் புதிய கூட்டணி அமைக்க வேண்டும்.
கருத்துக்கள்

மது விலக்கை நீக்கியது மிகப்பெரிய குற்றம்தான் . மறுக்க இயலாது. ஆனால், மதுப பழக்கம் உள்ள மாநிலங்கள் மது விலக்கை நடைமுறைப்படுத்தினால் தரும் நிதியுதவியை எவ்வளவோ மன்றாடி மதுப்பழக்கம் இல்லா தமிழகத்திற்குக் கேட்ட போது அன்றைய மத்திய (காங்கிரசு) ஆட்சியினர் புதிய மது விலக்கினர்க்கு மட்டுமே நிதியுதவி தரப்படும; தமிழ் நாட்டிற்குத் த்ர முடியாது என விடாப்பிடியாக அடம்பிடித்து மறுத்து இராது இருந்திருந்தால் தமிழ்நாடும் மதுவிலக்கு நாடாகத் திகழ்நதிருக்கும் அல்லவா? எனவே, கழகங்களின் குற்றச் செயலில் காங்கிரசிற்கும் பெரும்பங்கு உண்டு என்பதை மறவாதீர்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/6/2010 3:32:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தலையங்கம்: ஞாயிறு தூற்றுதும்!


செப்டம்பர் 5-ம் தேதிதான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படும் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் என்றாலும், துரதிருஷ்டவசமாக, அந்த நாள் இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமையாக அமைந்துவிட்டதால், இந்தியாவில் பெரும்பாலான பள்ளிகளில் ஒருநாள் முன்னதாகவே கொண்டாடி முடித்துவிட்டனர். தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சிகூட பிரதமரால் சனிக்கிழமையே நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. டாக்டர் இராதாகிருஷ்ணன் படித்த வேலூர் ஊரிசு கல்லூரியில்கூட (ஒரு சிலர் மட்டும்) அவரது படத்துக்கு சனிக்கிழமையே மலர்தூவி வணங்கிவிட்டார்கள். முறைப்படியான விழா, கல்லூரி வேலைநாளில் நடைபெற உள்ளதாம். ஆசிரியர் தினம் மட்டுமன்றி, தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஆகியனவும்கூட, சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் அமைந்துவிடுமேயானால், வெள்ளிக்கிழமையே உறுதிமொழி ஏற்று, கடமையை சீக்கிரமே முடித்துக் கொள்கிற வழக்கம் அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுவிட்டது. இந்த ஆண்டு சுதந்திர தினத்தைத் திட்டாத அரசு ஊழியர்களோ ஆசிரியர்களோ இல்லை என்றே சொல்லிவிடலாம். சுதந்திர தினம் என்ன ஆயுதபூஜையா, முதல்நாளே அலுவல்நேரத்தின் கடைசி ஒரு மணி நேரத்தில், பொரிகடலை வைத்து சாமி கும்பிடுவதைப் போல, முதல்நாளே கொடியேற்றிவிட! கொடியேற்ற ஆசிரியர் வரவில்லை என்பதற்காக பள்ளிக்குப் பூட்டுப் போட்ட கிராமங்களையும் இந்த ஆண்டு பார்க்க நேர்ந்தது.இப்படிச் சிணுங்கிக் கொண்டே கொண்டாடுவதைக் காட்டிலும் அந்த விழாவையே ரத்து செய்துவிடலாமே! எதற்காக இப்படி முன்னதாகவே கொண்டாடுவதும், அரைகுறையாக நடத்துவதும்! தனியார் நிறுவனங்களிலும் சாலையோரத்திலும் ஓய்வுநாள் என்பதே இல்லாமல் பணியாற்றிக்கொண்டிருப்போர் ஒருபுறம் இருந்தாலும், ஒரு ஞாயிற்றுக்கிழமையைத் தியாகம் செய்யக்கூட இவர்களுக்கு மனம் வருவதில்லையே, இவர்களைப் பொதுநல ஊழியர்கள் என்று அழைப்பதேகூடத் தவறல்லவா? இதுபற்றிக் கேட்டால், "நாங்கள் மனிதர்கள் இல்லையா? ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் குடும்பத்தோடு இருக்க வேண்டாமா?' என்பார்கள். இவர்கள் எத்தனை மணி நேரத்தைக் குடும்பத்துக்காகச் செலவிடுகிறார்கள் என்று கணக்கிட்டால், மற்ற வாரக் கிழமைகளைவிட குறைவாகத்தான் இருக்கும்.ஞாயிற்றுக்கிழமை ஜாலியாக இருக்க வேண்டும், மாலையில் ஓட்டலுக்குப் போக வேண்டும், விழாக்களில் பங்குகொள்ள வேண்டும், காலை முதல் மாலை வரை டிவி அல்லது டிவிடி பார்க்க வேண்டும், சிக்கன், மட்டன், மீன் என்று ஏதாவது ஒரு அசைவ உணவு உண்டே ஆக வேண்டும், மது அருந்த வேண்டும், இதுதான் ஜாலி என்பதாகக் கருதப்படும் நிலைமை உருவாகிவிட்டது. இது எந்த அளவுக்குப் போகிறதென்றால், நூலகத்துக்கும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வேண்டும் என்று கேட்கிற அளவுக்குப் போயுள்ளது. ஆண்டு முழுவதும் தீபாவளி, பொங்கலிலும்கூட செயல்பட்டால்தானே அது அறிவாலயம் (நூலகம்)!ஞாயிற்றுக்கிழமை ஜாலியாக இருக்க வேண்டும் என்கிற மனநிலை இளைஞர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வர வேண்டும்; வேறொரு நாளில் வாரவிடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னாலும்கூட, "ஃபிரண்ட்ûஸ மிஸ் பண்ணிடுவேனே' என்று அந்த வேலையைத் தவிர்க்கிற மனநிலை இளைஞர்களிடம் உருவாகியிருக்கிறது என்றால், ஞாயிற்றுக்கிழமையிலும் உழைக்கின்ற மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதே நினைவுக்கு வராமல் மனது மரத்துப்போகும் என்றால், இதை ஞாயிறு நோய் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்ல!இதெல்லாம் போகட்டும். இந்த ஞாயிறு மனநோய் சேவைப் பிரிவு ஊழியர்களையும் பீடித்துக் கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மின்வாரியம், தொலைத்தொடர்பு ஊழியர்களைப் பிடிப்பது முயல்கொம்புதான். மேலிடத்தில் செல்வாக்கு இருந்தால்  மட்டுமே சராசரி இந்தியக் குடிமகனுக்கு ஞாயிறு சேவை வாய்க்கும்.இதெல்லாம்கூடத் தொலையட்டும். மருத்துவமனை மருத்துவர்களையும் இந்த நோய் பீடித்திருக்கிறது என்பதுதான்  வேதனையிலும் வேதனை. ஞாயிற்றுக்கிழமையன்று திடீர் உடல்நலக் குறைவு அல்லது விபத்தில் காயம் என்பதற்காக எந்த மருத்துவமனைக்குப் போனாலும், டாக்டர்கள் இருப்பதில்லை.  சாதாரண கிளீனிக்குகள் மூடப்பட்டிருக்கும். 24 மணி நேர சேவை மருத்துவமனை என்று அறிவிப்பு இருந்தாலும் செவிலியர் மட்டுமே இருப்பார்.கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும்கூட பயிற்சிமருத்துவர்கள் ஓரிருவர் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் தாற்காலிகமான சிகிச்சையைத்தான் தருவார்கள். அரசு மருத்துவமனை என்றால் டீன் தயவு இருந்தால்தான் முடியும். அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் மோதல், டாக்டர் மீது தாக்குதல் என்கிற செய்திகள் எந்தக் கிழமையில் நடைபெறுகிறது என்பதைக் கணக்கிட்டால் 99 விழுக்காடு ஞாயிற்றுக்கிழமையாகவே இருக்கும்.ஞாயிற்றுக்கிழமை மட்டும் தமிழகம் முழுக்க, ஐந்து நட்சத்திர ஓட்டல் உள்பட, ஒரு நாள் மதுவிலக்கு அமல்படுத்தினாலும்கூட போதும், இந்த ஞாயிறுநோய் பாதி குணமடைந்துவிடும்! இந்தக் கருத்தை நாம் முன்வைத்தால், அண்டை மாநிலங்களும் இதைப் பின்பற்றுமா என்கிற அசட்டுத்தனமான கேள்வி கேட்கப்படும்.நமக்குத் தெரிந்து இரவு பகல், நாள் கிழமை என்று பாராமல் இயங்கும் முதல்வர் கருணாநிதியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைப்பாடமான உழைப்பை மட்டும் நம்மில் யாரும் பின்பற்றத் தயாராக இல்லையே என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். ஓய்வு தேவையில்லை என்பதல்ல நமது வாதம். ஓய்வு என்கிற பெயரில் பொழுது வீணடிக்கப்படுவதும், ஞாயிறு என்கிற காரணத்தால் கடமை மறப்பதும் தவறு என்பதுதான் நாம் வலியுறுத்த விரும்பும் கருத்து!
கருத்துக்கள்

உதய சூரியன் மீது அச்சம் கொண்டு ஞாயிறு தூற்றுதும் எனத்தலைப்பு அளிக்கப்பட்டு்ள்ளது போலும். அதே நேரம் ஆள்வோர் மீதும் அச்சம் உள்ளதால் கலைஞரைப் பாராட்டி முடித்துவிட்டீர்கள் போலும். பொதுவாக ஓய்வு தேவைப்படும் உளவியல் அடிப்படையிலும் குடும்பத்தினருடன் செலவழிக்க வேண்டிய பணிச்சுமை கருதியும் வாய்ப்பு நலன்கள் முதலான பிற காரணங்கள் க்ருதியும் விடுமுறை நாளில் அமையும் விழாக்களை முன்னதாக நடத்துவதால் குடி ஒன்றும் முழுகி விடாது. சடங்கு முறையிலான விழாக்கள் எப்பொது நடந்தால் என்ன? விடுமுறையும் விட்டு விட்டுச் சடங்கினை நிறைவேற்ற வர வேண்டும் என்பதால் தேவை யற்ற எரிபொருள் செலவு, உழைப்பு வீணாதல், போன்றவைதான் ஏற்படுகின்றன. நீங்கள் இந்த நாட்களில் விடுமுறை விடுவதிலலையா? அதுபோல்தான் பிறவும். ஆசிரியவுரை போன்ற கருத்து சிலரிடம் தவறாகப் பதிந்துள்ளது உண்மைதான். அக்கருததைப போகக வேண்டும். உடனடி மருத்துவம் போன்ற சில அடிப்படைப் பணிகள் நீங்கலாகப் பொதுவாக ஞாயிறு முழு ஓய்வு நாளாக இருப்பது வரவேற்கத்தக்கதே. எந்தக் குற்றமும் இல்லை. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/6/2010 3:21:00 AM
அயோக்கியனுக்கு ஜால்ரா போடுவதை நிறுத்துக தினமணியாரே! தேச நலன் இல்லாது உழைத்து என்ன பயன்? கருணாநிதிக்கு சோம்பேறிகள் மேல்!
By கிராம வாசி
9/6/2010 12:41:00 AM
டி.ஆர்.பாலு தமிழரோ, இந்தியரோ அல்ல, அசல் சிங்களவர் என்பதைத்தான் அவர் அளித்துள்ள பேட்டி வெளிப்படுத்துகிறது என, கவிஞர் தாமரை கூறியுள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் இதழுக்கு, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அளித்துள்ள பேட்டி குறித்து, கவிஞர் தாமரை கூறியிருப்பதாவது, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தமிழரா, இந்தியரா என்ற குழப்பம் அவருக்கே இருக்கும். இதில் எந்தக் குழப்பமும் தேவையில்லை. அவர் தமிழரோ, இந்தியரோ அல்லர், அசல் சிங்களவர் என்பதைத்தான் அவர் அளித்துள்ள பேட்டி வெளிப்படுத்துகிறது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு இந்தியா வழங்கும் உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களை சென்றடைகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் போலீஸ்காரனாக இந்தியா செயல்பட முடியாது என்றும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள இராணுவ குடியிருப்புகள் அமைப்பது தொடர்பாக ஆதாரமில்லாமல் குறைசொல்ல முடியாது என்றும் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். அவரது இந்த பேட்டி நமக்கு மட்டுமல்ல, அவர் சார்ந்திருக்கும் தி.மு.க. தலைமைக்கே வியப்பை அளித்திருக்கக் கூடும். அப்படி இல்லைய
By yeskay
9/6/2010 12:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இலங்கையில் இந்திய ராணுவ தலைமை தளபதி


கொழும்பு,செப்.5: இந்திய ராணுவ தலைமை தளபதி வி.கே. சிங் இலங்கைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார். கொழும்பு விமான நிலையம் சென்றடைந்த வி.கே. சிங் மற்றும் அவரது மனைவியை இலங்கை ராணுவ தலைமை தளபதி ஜெகத் ஜெயசூரியா வரவேற்றார். வி.கே. சிங், இலங்கைக்கு 5 நாள் அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ளார். அவரின் இந்த பயணத்தை இரு நாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகின்றன. இப்பயணத்தின் மூலம் இரு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பு மேலும் வலுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-இலங்கை இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு பேச்சுவார்த்தை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தைக்கு ஆயத்தப்படுத்தும் பயணமாகவே வி.கே.சிங்கின் பயணம் கருதப்படுகிறது. வி.கே.சிங், இந்த பயணத்தின்போது இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச, பிரதமர் ஜெயரத்னே, பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபட்ச, வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ், ஆகியோரை சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.  
கருத்துக்கள்

இரு நாடுகளின் படைத்துறை ஒத்துழைப்பு மேலும் வலுப்படும் என்றால் தமிழர்கள் மேலும் அழிக்கப்படுவர் என்றுதானே பொருள். அந்தோ பரிதாபம் ஈழத்தமிழர்கள்@ அதனினும் பரிதாபம் கையறுநிலையில் உள்ள இந்தியத் தமிழர்கள்! தமிழர்க்கு ஒரு நீதி ஆரியரக்கு ஒரு நீதி என்ற அளவு கோல் கொண்டுள்ள இந்தியத்தால் ஒருமைப்பாட்டிற்கு ஏற்பட்டுள்ள இடர் பேரிடராகிறது. முதலில் இந்திய அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் தமிழக வரலாற்றைத் தொடக்கமாகக் கொண்ட உலக வரலாற்றைப் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களது வெளியுறவுக் கொள்கை சீர‌டையும். தமிழர்களு்க்கு விடிவு பிறக்கும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/6/2010 3:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

தெற்கு ஆஸி. முதல்வர் அணிக்கு எதிரான நட்புறவு கிரிக்கெட்: தமிழக முதல்வர் அணி வெற்றி


சென்னை, செப்.5- சென்னையில் தமிழக முதல்வர் அணி மற்றும் தெற்கு ஆஸ்திரேலிய முதல்வர் அணி இடையே இன்று நடைபெற்ற நட்புறவு கிரிக்கெட் ஆட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக முதல்வர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற தெற்கு ஆஸ்திரேலிய அணி முதல் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதையடுத்து, அந்த அணி 10 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய தமிழக முதல்வர் அணி 5.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
தமிழக முதல்வர் அணியின் கேப்டன் ஸ்டாலின் பந்துவீச்சில் தெற்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக் ரேன் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின், அசோக் பொன்முடி, எல். சிவராமகிருஷ்ணன், நடிகர் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
"இத்தகைய போட்டிகள் மூலம் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நட்புறவு மேம்படும். ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தவிர்கப்படவும் இவை உதவும். இதுபோன்ற நட்புறவு போட்டிகள் எதிர்காலத்தில் தொடர்ந்து நடைபெற வேண்டும்" என்று போட்டி தொடங்கும் முன்னர் ஸ்டாலின் கூறினார்.
ஆட்ட நாயகன் விருது ஸ்டாலினுக்கும் அசோக் பொன்முடிக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
தெற்கு ஆஸ்திரேலிய முதல்வரும் அந்த அணியின் கேப்டனுமான மைக் ரேன் வீசிய கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்து தமிழக முதல்வர் அணி வெற்றி இலக்கை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
தெற்கு ஆஸி. அணியின் பிரைன் மேயஸ் மற்றும் ஜெர்விஸ்  ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இந்த கிரிக்கெட் போட்டியின் இடையே கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. வெற்றி பெற்ற தமிழக முதல்வர் அணிக்கு ஆளுநர் பர்னாலா பரிசுக் கோப்பை வழங்கினார்.
தமிழக முதல்வர் அணி வீரர்கள்:
ஸ்டாலின் (கேப்டன்)  - 2
பொன்முடி - 9
ஜித்தன் ரமேஷ் - 7
வெள்ளக்கோயில் சாமிநாதன் - 6
நடிகர் அரவிந்த் - 4
எஸ்.பி.பி. சரண் - 3
ரமணா - 0
துரைமுருகன்
ஸ்ரீகாந்த்
எல்.சிவராமகிணன்
என்.வெங்கட்ராகவன்
அசோக் பொன்முடி
நடிகர் பிரசன்னா
சாக்ஷி சிவா

கூடுதல் ரன்கள் - 8
தெற்கு ஆஸ்திரேலிய முதல்வர் அணி வீரர்கள்:
மைக் ரேன் (கேப்டன்) - 0
ஏ.கே. தரீன் - 10
பீட்டர் வர்கீஸ் (இந்தியாவுக்கான தூதர்) - 5
பாப் போர்டு - 5
ஆர்ச்சி - 3
மார்க் - 2
டெர்ரி - 1
டேனி
பிரைன் மேயஸ்
துஷார் அகர்வால்
டோனி
மிக்லே
ஜெர்விஸ் 
கூடுதல் ரன்கள் - 5
கருத்துக்கள்

பணம் அல்லது பரிசு அல்லது விருந்து கொடுத்து பெற்ற வெற்றி யல்ல என்று நம்பலாம் அல்லவா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/5/2010 8:26:00 PM
இங்கும் மேட்ச் fixingaa ? அட கடவுளே!
By sothu pandaram
9/5/2010 8:14:00 PM
Rangaraj. Yoy are absolutely correct.
By soranai
9/5/2010 8:10:00 PM
ANY MATCH FIXING ? BECAUSE DMK IS GOOD IN VOTE FIXING..
By rangaraj
9/5/2010 7:52:00 PM
Rajasji is 100% correct.
By Sundaram
9/5/2010 7:21:00 PM
கிறுக்குப் பயலுவ ! ஒருத்தனுக்கு கிறுக்குப் புடுச்சா கீழ்பாக்கத்துக்கு அனுப்பலாம் ! எல்லோருக்கும் கிறுக்குப் புடுச்சதால புழல் சிறையில தூக்கி போடுங்கடா !!! @ rajasji
By rajasji
9/5/2010 6:16:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ஆசிரியர் தினம்: ஆளுநர், முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா வாழ்த்து


சென்னை, செப்.4: ஆசிரியர் தினத்தையொட்டி ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, ஆளுநர் பர்னாலா வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர் சமுதாயத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மிகச்சிறந்த சிந்தனைவாதியாகவும், ஆசிரியராகவும் விளங்கி நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர். கற்பித்தலில் புதிய கோணத்தை உருவாக்கிக் கொடுத்தவர் அவர். அவரது கொள்கைகள், கோட்பாடுகள் இன்றளவும் ஆசிரியர் மற்றும் இளைய சமுதாயத்துக்கு பயனுள்ளவையாக இருக்கின்றன. ஆசிரியர் தினமான இந்த நாளில் நம்மை தகுதிவாய்ந்த குடிமக்களாக உருவாக்கிக் கொடுத்த நமது குருக்களுக்கு மரியாதை செலுத்துவோம் என்று பர்னாலா கூறியுள்ளார்.முதல்வர் கருணாநிதி: முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான, செப்டம்பர் 5-ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் சீரிய முறையில் கல்வித் துறையில் தொண்டாற்றி வரும் ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரொக்கப்பரிசுடன், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.வேலைவாய்ப்புப் பதிவு முன்னுரிமைப்படி இதுவரை ஏறத்தாழ 80 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தமுறை நியமனத்தில் குறைந்த ஊதியத்துடன் பணியாற்றிய 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம், பணியிட மாறுதலுக்கு கலந்தாய்வு என பல்வேறு சலுகைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.தமிழக அரசின் இத்தகைய அரிய பல திட்டங்களால் ஆசிரியர்கள் மகிழ்வோடு பணிபுரிந்துவரும் இந்த வேளையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் ஆசிரியர் தின விழா சிறப்புடன் நிகழவும், ஆசிரியப் பெருமக்கள் தங்கள் குடும்பத்துடன் வளமாகவும், நலமாகவும் வாழவும் உளமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் என்று தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா: கல்விக் கண் திறக்கும் அரிய பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மனிதனாகப் பிறத்தல் அரிது, அவ்வாறு பிறந்தாலும் கல்வியில் சிறந்து விளங்குதல் அதைவிட அரிது என்பர்.அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கல்வியை போதித்து மாணவ-மாணவியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஆற்றல் படைத்தவர்கள் ஆசிரியர்கள். இளைய சமுதாயத்தினரை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும், புகழ் மிக்கவர்களாகவும் ஆக்கும் சக்தி படைத்தவர்கள் ஆசிரியர்கள். சமூக சேவை செய்வதற்குச் சிறந்த வழி ஆசிரியர் பணிதான். ஏழை, எளிய மாணவ-மாணவியர் கல்வி பயில தடையாக இருப்பது வறுமை என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர்., பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தலைசிறந்த தத்துவ ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான மறைந்த டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த நாளாகிய இந்த நன்னாளில், கல்வியின்மை நீங்கட்டும். ஆசிரியர் வாழ்வு சிறக்கட்டும் என்று ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

செப்டம்பர் 5 ஆம் நாள் என்பது செந்தமிழறிஞர் கப்பலோட்டிய தமிழர் விடுதலைப் போராளி படைப்புச் செம்மல் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள். திருப்பதி முதலான பகுதிகள் ஆந்திராவில் சேரக் காரணமாக இருந்த, திருக்குறளைப் பழித்துக் கூறிய, திருக்குறள் போற்றும் நூலைத் தடை செய்த தமிழ்நாட்டில் கல்வி கற்றும் தமிழர்க்கு எதிராக அரசியல் நடத்திய மேதகு இராதாகிருட்டிணன் பிறந்த நாளைக் கொண்டாடும் நாம் நாட்டு விடுதலைக்கென தன்னையே ஒப்படைத்த அறிஞரின் பிறந்தநாளை மறக்கலரமா? திருக்குறளைப் பயிலாதவர் பெற்றோராக இருந்தாலும் புறக்கணிப்பேன் என்று கூறிய செந்தமிழறிஞர் வ.உ.சிதம்பரனார் அவர்கள் பிறந்த நாளில் திருக்குறளைப் புறக்கணித்தவர் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் நாம் உண்மையான நாட்டுப் பற்றாளரை உண்மையான அறிஞரை மறக்கலாமா? வ.உ.சி.வழி நின்று வண்டமிழ் வளர்ப்போம்! வ.உ.சி.புகழை வையகமெங்கும் பரப்புவோம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/5/2010 4:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

(எடுக்கப்பட்ட செய்தியை மீண்டும் பதிகிறேன்.)
By Ilakkuvanar Thiruvalluvan
9/6/2010 2:57:00 AM
5 நாள்களுக்குள் காவிரியில் தண்ணீர் திறக்கப்படும்: எடியூரப்பா


காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கோயிலில் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வருகிறார் கர்நாடக முதல்வர் பி. எஸ். எடியூரப்பா.
காரைக்கால், செப். 4: கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்துவருவதால், அடுத்த 5 நாள்களுக்குள் காவிரியில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கூறினார்.
உண்மைதான். மழை நீரைச் சேமித்து வைத்து அதனால் பெருக்கெடுத்தோடி எங்களுக்கு அழிவு வரக்கூடாது என்பதற்காக நாங்கள் எங்கள் மக்களைக் காப்பாற்ற நீரை வெளியேற்றுவோம். நீங்கள் காவிரி அணையைத் திறக்க வைத்தது எங்கள் சாதனை என்று பேசிக் கொள்ளலாம். எனவே, எங்களுக்கும் மிகுதியான நீர் ஓர் அஞ்சத்தக்க சிக்கல் அல்ல. ஆனால்,அணை நிரம்பும் வரை தமிழகம் எவ்வளவுதான் வாடினாலும் நாங்கள் அணையைத் திறந்து விட மாட்டோம். அப்பொழுது நாங்கள் அதனைச் சாதனையாகச் சொல்லிக் கொள்வோ்ம். இதுதான் கருநாடகத்தின் நிலையான கொள்கை.வே
த‌னையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/5/2010 4:14:00 AM
100% true Mr.Rajasji
By Akash
9/5/2010 1:21:00 AM
தமிழகம் கர்நாடகத்தின் வடிகால் ! அதாவது மழை பெய்து உபரி நீர் இருந்தால் கர்நாடகத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்டுவிடாமல் இருக்க சிறிதளவு நீர் வெளியேற்றப்படும் ! இதற்க்கு தமிழகத்திற்கு நீர் அளிப்பது என்று பெயர் ! வாழ்க தேசீய ஒற்றுமை ! @ rajasji
By rajasji
9/4/2010 11:24:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *