P.Chidambaram லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
P.Chidambaram லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 நவம்பர், 2010

மழைக்காலம் முடிந்ததும் இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள்: ப.சிதம்பரம்

சென்னை, நவ.6: போரினால் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டும் பணிகள் மழைக்காலம் முடிந்ததும் தொடங்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.சென்னையில் முதல்வர் கருணாநிதியை சனிக்கிழமை காலையில் ப.சிதம்பரம்  சந்தித்தார். சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் அவர் கூறியது:இலங்கை அதிபர் ராஜபட்ச தில்லி வந்தபோது, அவருடன் விவாதிக்கப்பட்ட விஷயங்களை முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்தேன். வாழ்விடத்திலிருந்து இடம்பெயர்ந்த 50 ஆயிரம் பேருக்கு வீடு கட்டித் தர வேண்டும் என்கிற திட்டம் முன்னேற்றத்தில் உள்ளது.விரைவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று ராஜபட்சவிடம் நாங்கள் வற்புறுத்தியிருக்கிறோம்.மழைக்காலம் முடிந்த பிறகு, வீடு கட்டும் பணிகள் தொடங்கும் என்று அவர்கள் வாக்குறுதி தந்துள்ளனர்.மீனவர்கள் கைது: இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் இந்த ஆண்டில் ஒரு மீனவர் உயிரிழந்துள்ளார். ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர புதிதாக யாராவது கைது செய்யப்பட்டுள்ளார்களா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை.ஒபாமா வருகை: அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு முழுப் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. அவரது வருகையால் இருநாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்படுமா என்பதை அவரது பயணம் முடிந்த பிறகுதான் கூற முடியும். இந்திய-அமெரிக்க உறவு சீராக இருக்கிறது. இன்னும் வலுப்படுமா என்பதை பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் கூற முடியும் என்றார் ப.சிதம்பரம்.
கருத்துகள்

ஆனாலும் எந்த மழைக்காலம் எனப் பக்சேயும் கூறவில்லை. அடுத்த ஆண்டு கேட்டுக் கொள்ளலாம் என நாங்களும் இப்பொழுது கேட்கவில்லை. அதுபோல் மீனவர்கள் யாராவது கைது செய்யப்பட்டுள்ளாரகளா என்பது குறித்துக் கவலை இல்லை என்றதைத் தெரியவில்லை என அச்சிட்டுள்ளார்கள். எனப் ப.சி. பக்சேயிடம் பின்னர் விளக்கமளித்ததாகக் கேள்வி. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
11/7/2010 4:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 6 செப்டம்பர், 2010

ப. சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய கருத்து: விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு


ஆமதாபாத், செப்.6- மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்த குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 25-ம் தேதி தில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது 'காவித் தீவிரவாதம்' என்கிற வார்த்தையை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பயன்படுத்தினார். இந்நிலையில், அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தைச் சேர்ந்த சுவாமி நிஜானந்த் தீர்த் என்பவர் ஆமதாபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
"காவி நிறம் என்பது இந்து மதம் மற்றும் துறவிகளின் அடையாளமாக உள்ளது. அது கடவுள், அமைதி, தியாகம் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்கிறது. 'காவித் தீவிரவாதம்' என்கிற வார்த்தையை பயன்படுத்தியதன் மூலம் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் லட்சக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவோரை தண்டிக்க வேண்டும்." என்று சுவாமி நிஜானந்த் தீர்த் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஆமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எம்.ஜி. தவே முன்னிலையில், அந்த மனு இன்று விசாரணைக்கு வந்ததது. இதில், சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள போஸீஸ் அதிகாரி விசாரணை நடத்தி 90 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கருத்துக்கள்

இந்தியக் கண்டத்தின் மண்ணின் மைந்தர்களை நசுக்கும் இந்தியப் பயங்கரவாதத்திற்கு எதிராக இருக்கும் ப.சி. எனத் தவறாகக் குறிக்கப் பெற்றதற்கு வருந்துகிறேன்.இந்தியப் பயங்கரவாதத்திற்கு எதிராக என்னும் இடத்தில் இந்தியப் பயங்கரவாதத்திற்குத் துணையாக என்று வாசிக்கவும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/6/2010 6:10:00 PM
பயங்கரவாதம் என்பது அருள்நெறி போற்ற வேண்டிய சமயங்களின் பெயராலும் நிகழ்கிறது. என்றாலும் பொதுவாகப் பயங்கரவாதம் என்றால் இசுலாம் மட்டுமே முன்நிறுத்தப்படுகின்றது. எனவே, பாபர் மசூதி இடிப்பு, கோத்ரா எரிப்பு, தலைவெட்டிக் கொண்டு வந்தால் பரிசு என்று அறிவிப்பு முதலானவற்றைக் கண்டு மனம் வெதும்பி ப.சி. அவர்கள் கூறியுள்ளார். அது தவறெனில் இந்து சமயத்தின் பெயரால் நடைபெற்ற வன்முறைகளை ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும். தமிழ் நாடடவர் முதன்மைப் பொறுப்பில் இருப்பதையும் அடுத்து இதைவிட மிகுதியான தலைமைப் பொறுப்பிற்கு வந்து விடுவாரோ என அஞ்சியும் தமிழ்நாட்டவர்க்கு எதிரானவர்கள் கிளர்ச்சி செய்கின்றனர். அதே நேரம், ஈழத்தமிழர்க்கு எதிரான இந்தியப் பயங்கரவாதத்திற்கு உறுதுணையாக இருக்கும் இந்தியக் கண்டத்தின் மண்ணின் மைந்தர்களை நசுக்கும் இந்தியப் பயங்கரவாதத்திற்கு எதிராக இருக்கும் ப.சி. இதைக் கூறியுள்ளதுதான் வியப்பு. அவ்வாறே அவர் அடுத்து காங்கிரசு பயங்கவாதம் குறித்தும் கூறினால் நன்று. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/6/2010 6:08:00 PM
. இந்த வழக்கில் இருந்து சிதம்பரம் தப்பிக்க ஒரு வழி இருக்கிறது அவர் ஒரு மன நோயாளி என மருத்துவ சான்றிதழை நீதிபதி இடம் காண்பிக்கலாம்.....
By வீர ஹிந்து முத்துபேட்டை ...
9/6/2010 5:50:00 PM
Ivana nalla uttru paarungal.... Avane than Onbathu paiyan... Ivanoda pecha en mathikanum
By Hindustan-Kuruvi
9/6/2010 5:46:00 PM
இங்கே கருணாநிதி பேசும் பேச்சுகளை அந்த நீதிமன்றம் கேட்டால் என்ன சொல்லுமோ? அதன் மரம் வெட்டி ராம தாஸ், தன் ஜாதிக்கரப்பயளுவளை ஜட்ஜ் ஆக்கி விட்டால் , கடு வெட்டி மற்றும் அவர்தம் கும்பலை விட்டு தமிழ் நாட்டை சூறை தேங்காய் போல் ஆகினாலும் வன்னிய நீதி மன்றம் ஒன்னும் செய்யாது. ஒரு வாரம் தொலை காட்சில் பார்த்த அட்டாக் பாண்டி கும்பலை ஒரு சின்ன கொழந்தை கூட அறிந்தும் ரௌடிபயல் மற்றும் அவன் முதலாளி அஞ்சாநெஞ்சன் வெள்ளை சட்டை போட்டு வெளியில் திரி கிறார்களே . கருணாநிதி தனது ஆட்களை மெதுவாக உயர் நீதி மன்றத்திலும் மற்றும் எல்லா நீதித் துறைஎளும் புகுதியதினால் தான்
By கோழி
9/6/2010 5:44:00 PM
தன தாயினை தானே இகழ்ந்து பேசியவரை தண்டிக்க முயற்சிப்பது விவேகமல்ல ! கொஞ்சம் தாயின் பெருமைகளை புனிதத்தை புரிந்து கொள்ள ஞானத்தை அருளலாம் ! அறியாமையில் கிடப்பவன் அரசன் என்றாலும் மந்திரியே என்றாலும் அவர்களின் பேச்சினைப் பொருட்படுத்தி பயன் இல்லை வருத்தப் படுவதில் பொருள் இல்லை !!! @ rajasji
By rajasji
9/6/2010 5:26:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 30 ஆகஸ்ட், 2010


படிக்கின்ற காலத்துக்கு கல்விக் கடனுக்கு வட்டி இல்லை: ப.சிதம்பரம்

First Published : 30 Aug 2010 12:00:00 AM IST


காரைக்குடி,ஆக.29: கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு, 2009, 2010-ம் ஆண்டிலிருந்து தரப்பட்டிருக்கும் கல்விக் கடனுக்கு படிக்கின்ற காலங்களில் வட்டி இல்லை  என்றார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள வங்கிகள் பங்கேற்ற மாவட்ட ஆலோசனைக் குழு சிறப்பு முகாம், ஐ.ஓ.பி. காரைக்குடி மண்டலம் சார்பில் நடைபெற்றது. காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்விக் கடன் சிறப்பு முகாமில் 643 மாணவ, மாணவிகளுக்கு | 10 கோடியே 41 லட்சத்து, 36 ஆயிரம் கல்விக் கடன் வழங்கி, அமைச்சர் ப.சிதம்பரம் பேசியது: கடுமையான போட்டிகளின் மூலமாக உயர் படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை பெறுவதுதான் கல்வி. அதற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.கல்விக் கடன் வழங்கியதில் 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி முடிய நாடு முழுவதும் இருப்பில் உள்ள கல்விக் கடன்களைக் கணக்கில் கொண்டால், 19 லட்சத்து 41 ஆயிரத்து 882 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் மட்டும் 5 லட்சத்து 63 ஆயிரத்து 429 பேர் கல்விக் கடன் பெற்றிருக்கிறார்கள். நாட்டின் கல்விக் கடன் பெறும் மாணவர்களில் நான்கில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.எனது அரசியல் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் தீட்டப்பட்ட திட்டம் கல்விக் கடன் திட்டம். கல்விக் கடன் பெறுவோர் கல்விக் கடனை நிர்வகிக்கும் கனரா வங்கியை அணுகலாம்.கல்விக் கடனுக்கான வட்டி விவரம் குறித்து நிதித் துறையிலிருந்து எனக்கு தகவல் அனுப்பியிருக்கிறார்கள். கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு 2009, 2010-ம் ஆண்டிலிருந்து தரப்பட்டிருக்கும் கல்விக் கடனுக்கு படிக்கின்ற காலங்களில் வட்டி கிடையவே கிடையாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மாணவர்கள், எதிலும் முதல் வரிசையில் இடம்பெற வேண்டும். வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. வங்கித் துறையில் மட்டும் 1 லட்சம் பேர் பணியில் அமர்த்தப்படவிருக்கிறார்கள். அந்த வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.விழாவில், இந்தியன் ஒவர்சீஸ் வங்கித் தலைவர் எஸ்.ஏ. பட் தொடக்க உரையாற்றினார். காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினர் என். சுந்தரம், திருவாடானை சட்டப் பேரவை உறுப்பினர் கேஆர். ராமசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.விழாவில், தொழிலதிபர் பிஎல். படிக்காசு, சங்கராபுரம் ஊராட்சித் தலைவர் எஸ். மாங்குடி, இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் பி.வரதராஜன், யுகோ வங்கியின் இணைப் பொது மேலாளர் டி.என்.ரெüத்ரி, பேங்க் ஆப் இந்தியா இணைப் பொது மேலாளர் ஆர்.ஏ.சங்கரநாராயணன், கனரா வங்கியின் இணைப் பொது மேலாளர் பி.ஆர்.பாலசுந்தர், ஸ்டேட் வங்கி இணைப் பொது மேலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, ஐ.ஓ.பி. காரைக்குடி மண்டல முதன்மை மேலாளர் எம். ராமதாஸ் வரவேற்றார். இந்தியன் வங்கியின் வட்டாரத் தலைவர் கதிரேசன் நன்றி கூறினார்.
கருத்துக்கள்

கல்விக்கடன் தொடர்பாகத் தெரிவிக்கும் செய்திகள் எல்லாம நடைமுறையில் செயல்படுத்தப்படாதவையாகவே உள்ளன.ஏனெனில் வட்டிகளைத் திங்கள்தோறும் நாங்கள் செலுத்திக் கொண்டுதான் உள்ளோம். எனவே,நிதியமைச்சர் ஆக இருந்த உள்துறை அமைச்சர் ஆராய்ந்தறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவும்.
By Ilakkuvanar Thiruvalluvan
8/30/2010 4:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

தனியார் கல்வி நிலையங்கள் பணம் காய்க்கும் மரங்களாக முடியாது: ப. சிதம்பரம்


லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய உள்துற
சென்னை, ஆக. 28: தனியார் கல்வி நிலையங்கள் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்களாக மாறுவதைக் கட்டுப்படுத்த நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் கொண்டு வரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.சென்னையில் லயோலா கல்லூரியில் சனிக்கிழமை நடந்த முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சியில் அவர் பேசியது:இந்தியாவில் குழந்தைகளின் கல்விதான் மிக உயர்ந்த விஷயமாக பெற்றோரால் கருதப்படுகிறது. அதனால் இந்த சூழ்நிலையில் காளான்கள் போல புதிய கல்வி நிலையங்கள் உருவாவதைத் தவிர்க்க முடியாது.ஆனால், அவர்கள் பணம் காய்க்கும் மரங்களைப் போல ஆவதை அனுமதிக்க முடியாது. கல்வியில் தனியாரின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த விதிமுறைகள் இல்லை. தரமான கல்வியையும், நன்னெறி வழியில் மாணவர்கள் உருவாக்கப்படுவதையும் உறுதி செய்ய சில விதிமுறைகள் தேவைப்படுகின்றன. அதனால்தான் கட்டுப்படுத்துவதற்கு நிறைய மசோதாக்கள் தேவைப்படுகின்றன.வெவ்வேறு சமூகத்தினருக்கிடையே வெறுப்புணர்வு ஏற்படுவது கவலை தருவதாக இருக்கிறது. இவையெல்லாம் எப்படித் தோன்றின என்பது ஆச்சரியமாக உள்ளது.உள்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றபின், ஒரிசா மாநிலம் காந்தமால் மாவட்டத்தில்  பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சமூகத்தினரைப் பாதுகாப்பதை சவாலாக எடுத்துச் செய்ய வேண்டியிருந்தது.மதச்சார்பின்மையும் சகிப்புத் தன்மையும் நாட்டுக்கு முக்கியமானவை. இந்த நன்னெறிகளை மாணவர்களுக்கு கல்வி நிலையங்கள் போதிக்க வேண்டும் என சிதம்பரம் வலியுறுத்தினார்.
கருத்துக்கள்

இன்றைய கல்விக்கூடங்கள் பணம் காய்க்கும் மரங்களாக இருக்கும் பொழுது இவ்வாறு பேசிப்பயன் என்ன? ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களும் சாதி அமைப்பினரும் வெறிநீர் / சாராய விற்பனையாளர்களும் சொந்தமாக நிலமும் வளமும் இல்லாதவர்களும கல்விக்கூடங்கள் நடத்தத் தடை விதித்தாலே கல்விக்கூடங்கள் சிறக்கும். சாதி சமய வருவாய் வேறுபாடின்றி அனைவருக்கும் கல்வி கிடைக்கும் நிலை ஏற்படும் வண்ணம் அனவைருக்கும் இலவசக் கல்வி என்பதை நடைமுறைப்படுத்தினாலே கொள்ளைக்காரர்கள் கல்வி்த்துறையை விட்டு நீங்குவர். நாடு நலம் பெறும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/29/2010 3:32:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தமிழகத்தில் அடுத்த தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு இடம் தரும் அரசு அமையும்: ப.சிதம்பரம்


கோவை, ஆக. 28: தமிழகத்தில் அடுத்த தேர்தலுக்குப் பிறகு அமையும் அரசு, காங்கிரஸ் கட்சிக்கு இடம் தரும் அரசாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். கோவை சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற சி.சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் சனிக்கிழமை மேலும் அவர் பேசியது: தமிழகம் மற்றும் இந்திய வரலாற்றில் 1950-70 வரையிலான காலகட்டத்தை சி.சுப்பிரமணியத்தைத் தவிர்த்துவிட்டு எழுத முடியாது. இவரைவிட நேருவுக்கு 21 வயது அதிகம். இவருடைய ஆலோசனைகளை நேரு கேட்டார் என்பதில் இருந்தே சி.எஸ்.சின் பெருமை தெரியும். ராஜாஜிக்கு பிறகு தமிழக முதல்வர் பதவிக்கு வர காமராஜருக்கும், இவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. காமராஜர் முதல்வரானார். சி.எஸ். போட்டியில் தோற்றார். ஆனாலும், சி.எஸ்.சை காமராஜர் தமது அமைச்சரவையில் சேர்த்து நிதி மற்றும் கல்வித் துறையை சி.எஸ்.சிடம் ஒப்படைத்தார். கல்விக்கு கண் திறந்தவர் காமராஜர் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு கருவியாக இருந்து செயலாக்கம் கொடுத்தவர் சி.எஸ். தமிழகம் இன்று கல்வித் துறையில் முதன்மை பெற்ற மாநிலமாக திகழ்கிறது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் காமராஜர்.  காங்கிரஸ் கட்சியால் இந்தியாவை ஆட்சி செய்ய முடிகிறது. ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லையே என்ற ஆதங்கம் காங்கிரஸ் தொண்டர்களுக்கு உள்ளது. இந்த ஆதங்கம் 1969ம் ஆண்டில் இளைஞர் காங்கிரஸில் இணைந்த காலத்திலிருந்து எனக்கும் உள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஜி.கே.வாசன், மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் இந்த ஆதங்கம் உள்ளது. மக்கள் கூட்டணி ஆட்சியையே விரும்புகின்றனர். தனிப்பட்ட ஒரு கட்சியை முழுமையாக நம்ப மக்கள் தயாராக இல்லை. நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சி தான் நிலவுகிறது.  தமிழகத்திலும் கூட்டணி தான் வெற்றிபெறும். அது காங்கிரஸ் கூட்டணியாக இருக்கும். அடுத்த தேர்தலுக்கு பிறகு அமையும் அரசு, காங்கிரஸ் கட்சிக்கு இடம் தரும் அரசாக இருக்கும் என்றார்.மூன்று கோஷ்டிகள் புறக்கணிப்பு: மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், முன்னாள் அமைச்சர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.பிரபு ஆகியோரும் அவர்களது ஆதரவாளர்களும் பொதுக்கூட்டத்தைப் புறக்கணித்தனர். பிரபுவின் ஆதரவாளரும், கோவை மேயருமான ஆர்.வெங்கடாசலம் விமான நிலையத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வரவேற்பு நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்றுவிட்டு சென்றுவிட்டார். பொதுக்கூட்டத்தில் தங்களது தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதனால், இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று வாசன் மற்றும் இளங்கோவன் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
கருத்துக்கள்

கனவு காண யாவருக்கும் உரிமையுண்டு. நன்றாகக் கனவு காணுங்கள். ஆனால், மறைந்த தலைவரின் நினைவு போற்றும் விழாவில் கூடத்தங்களது குழுச் செல்வாக்கைக் காட்ட விரும்பும் காங்கிரசு ஆட்சிப் பொறுப்பில் ஏறினால் என்ன ஆகும் என்பதைத் தமிழக மக்கள் அறிவார்கள். பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் கேடு எனத் தெய்வப்புலவர் வழங்கிய அறிவுரையை உணருங்கள். ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்துடன் எக்கட்சியில் இணைந்து போட்டியிட்டாலும் தமிழினப் பகையாளிகளை மக்கள் ஆட்சியில் அமர விட மாட்டார்கள். அதனைப் புரியாமல் ஆட்டம் போட்டு அழிய எண்ணாதீர்கள். திருந்தப் பாருங்கள். வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பார்புகழ் பைந்தமிழ் நாடு! என்பதை முதலில் இலக்காகக் கொண்டு செயல்படுங்கள் எண்ணிய எய்தலாம்.
By Ilakkuvanar Thiruvalluvan
8/29/2010 3:21:00 AM
அதி மேதாவி போல ஷோ காட்டும் அரை வேக்காடு ப.சிதம்பரம். இவர் அளவுக்கு ஒரு செயல்திறமையற்ற நிதியமைச்சரை இந்தியா இந்த 63 ஆண்டுகளில் கண்டதில்லை. இப்போது உள்துறையை ஒரு வழி பண்ணிக்கொண்டு இருக்கிறார். பத்திரிக்கைகளால் கோமாளியை போல சித்தரிக்கப்பட்ட சுப்ரமண்யம் ஸ்வாமியை போன்ற ஒரு திறமையான நிதியமைச்சரையும் பார்த்துவிட்டோம். பெரிய அறிவு ஜீவியை போல சித்தரிக்கப்பட்ட ப.சிதம்பரம் போன்ற வெத்து வேட்டையும் பார்த்துவிட்டோம். இப்பல்லாம் பேச தெரியாமல் பேசி, வாயை கொடுத்து நல்லா வாங்கி கட்டிக்கொண்டு இருக்கிறார்.
By A.G.Shanmugam
8/29/2010 2:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம்: மக்களின் சுதந்திரத்தை பாதுகாக்க நடவடிக்கை- சிதம்பரம் உறுதி



புது தில்லி, ஏப். 29: தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தைத் தொடர்ந்து நாட்டு மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதுடன் அவற்றை பலப்படுத்துவதற்காக சட்டம் கொண்டுவர அரசு ஆலோசனை செய்துவருவதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.ஐபிஎல் விவகாரத்தைத் தொடர்ந்து அமைச்சர்கள், எம்.பி.க்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்பதாக புகார் எழுந்தது. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் மாநிலங்களவையில் வியாழக்கிழமை சிதம்பரம் பேசினார்.தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசிய ப.சிதம்பரம், சட்டத்துக்குப் புறம்பாக ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.தொலைபேசிகளை இடைமறித்துக் கேட்கும் தொழில்நுட்பத்தை தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. அவர் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான அறிக்கையை பிரதமருக்கு நேரிடையாக தெரிவிப்பார். தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தை நாடாளுமன்றத்துக்கு பொறுப்பான அமைச்சரின் கட்டுப்பாட்டுக்கு மாற்றுவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.எந்த ஒரு அரசும் உளவுத் துறையின்றி செயல்பட முடியாது. அது அரசின் ஓர் அங்கம். நாட்டின் நிதி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படும்போது நேரடி வரிக்கான மத்திய வாரியம் மற்றும் இதர அமலாக்கத் துறை அமைப்பினர் இடைமறித்து கேட்பதற்கு அதிகாரம் உள்ளது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது என்றார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய பாஜக உறுப்பினர் அருண் ஜேட்லி, வரி ஏய்ப்பு தொடர்பாக எழும் புகார்களைத் தொடர்ந்து தகவல்கள் பரிமாற்றங்களை இடைமறித்து கேட்பதற்கு மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றார்.இதற்கு பதிலளித்த சிதம்பரம், சட்டத்துக்குப் புறம்பாக தொலைபேசிகளை இடைமறித்துக் கேட்கப்பட்டதா என்பதை அரசு ஆராயும். எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.÷அரசின் நடவடிக்கைகளில் இடைத்தரகர்கள் முக்கிய பங்குவகிப்பதாக கூறப்படும் புகார்களை ஏற்றுக்கொள்ள முடியாது. தொலைபேசி ஒட்டுக் கேட்பதை தடுக்க போதுமான விதிகள் இல்லையெனில் தேவைக்கேற்ப சட்டம் இயற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாட்டு மக்களின் பாதுகாப்புக்கும் சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.திமுக - அதிமுக மோதல்தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை திமுக - அதிமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்பதாக அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் புகார் தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.விவாதத்தின்மீது பேசிய அதிமுக உறுப்பினர் மைத்ரேயன், தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தொலைபேசிகள் ஒட்டுக் கேட்பதாக தெரிவித்தார். என் தொலைபேசி மட்டுமல்லாமல் காங்கிரஸ் தலைவர் ஜெயந்தி நடராஜன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சில மத்திய அமைச்சர்களின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப்படுவதாக புகார் தெரிவித்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் ஆவேசம் அடைந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உறுப்பினர் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். திமுக உறுப்பினர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர்களும் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர்.அப்போது மைத்ரேயனுக்கு ஆதரவாக பாஜக உறுப்பினர் எஸ்.எஸ். அலுவாலியா பேசினார்.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து திமுக உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி குறித்து அதிமுக உறுப்பினர் இளவரசன் கண்ணியக் குறைவாக பேசியதாக கனிமொழி புகார் தெரிவித்தார். இதனால் திமுக - அதிமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் - பாஜக உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். இதனால் அவையில் மீண்டும் கூச்சல் நிலவியது. இதைத் தொடர்ந்து தலையிட்ட அவைத் தலைவர், அதுபோன்ற பேச்சு அவைக் குறிப்பில் இடம்பெற்றிருந்தால் அதை நீக்குவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கருத்துக்கள்

தையே ஒரு பிழைப்பாக வைத்துக் கொண்டு அரசியல் நடத்திக் கொண்டு இருக்கிறார்களே! நாட்டு நலனுக்காக ஒட்டுக் கேட்பது தவறல்ல! கொலைகாரரகளால் தலைவர்களுக்கு வரும் பேரிடர்களைத் தவிர்க்கவும் ஒட்டுக்கேட்பது உதவலாம். ஒற்றறிதலில் இன்னார் இனியார் என வேறுபாடு காட்டாமல் ஈடுபட வேண்டும். எனவே.அரசு ஒட்டுக் கேட்கும நடைமுறையைப் பின்பற்றி வந்தால் ஒத்துக் கொண்டு அதன் தேவையை உணர்த்த வேண்டும். அதே நேரம் ஆளும் கட்சிக்கு ஆள் பிடிக்கவும எதிர்க்கட்சிகைள அழித்தொழிக்கவும் இதனைப் பயன்படுத்தக் கூடாது.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/30/2010 3:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சனி, 10 ஏப்ரல், 2010

ப.சிதம்பரம் ராஜிநாமா கடிதம்: பிரதமர் நிராகரிப்பு



புதுதில்லி, ஏப்.9- சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 76 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ராஜிநாமா கடிதம் அளித்ததாகவும், அதை பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்துவிட்டதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தனது ராஜிநாமா கடிதத்தை நேற்று முன்தினம் ப.சிதம்பரம் அளித்தார் என்றும், அக்கடிதத்தை நேற்று பிரதமர் நிராகரித்துவிட்டார் என்றும் பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இன்று தில்லியில் நடைபெற்ற சிஆர்பிஎப் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ப.சிதம்பரம், ""தான்டவாடாவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நான் முழுப் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். சத்தீஸ்கரில் இருந்து தில்லி திரும்பியதும் பிரதமரை சந்தித்து எனது முடிவை எழுத்து மூலம் அளித்தேன்.'' என்று குறிப்பிட்டார்

இந்நிலையில், அவரது கடிதத்தை பிரதமர் நிராகரித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

இயல்பான பின்னணியி்ல் இத்தகைய முடிவுஎடுத்த ஒருவரைப் பாராட்ட வேண்டும். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பொழுதும் அதிகாரத்தின் துணை கொண்டு வெற்றியாகக் காட்டி அமைச்சர் ஆனவர் உளப்பூர்வமாக இச்செயலைச் செய்ய முன்வராமல்நடிக்கவே செய்கிறார் என்பதே உண்மையாக இருக்கும்.அடிமைத்தமிழன், போதிதருமா, நவீன்,பாளை.ஆறுமுகம், இலலிதா பிரியகுமார், சரி(ரைட்) முதலானவர்கள் பதிவுகள் இவரின் மற்றொரு முகத்தைக் காட்டுகின்றன அல்லது முகத்திரையைக் கிழிக்கின்றன. எனவே, தம் இன மக்களின் கொத்துக் கொத்தான படுகொலைகளுக்குக் காரணமானவர்களின் ஆட்சியில் உள்ளவர் தானும் காரணமாக இருப்பவர், உண்ணாநோண்புநாடகம் கூடஎழுச்சியை ஏற்படுத்திவிடக் கூடாது என நாடகம் போட்டவர் இனப்படுகொலைகளுக்கு எள்ளளவும் வருந்தாதவர் செய்கை நாடகம் என்பதையே காட்டுகின்றது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் படுகொலைகளுக்கு வருந்தாதவர் 100க்கும் குறைவான வீரர்களின் மறைவிற்கு அஞ்சுகிறார் என்பது உள்ளத்தால் இவரும் ஓர் ஆரியரே என்பதைக் காட்டுகின்றது. காங்கிரசுக் கட்சி அழியும் காலம் நாட்டில் துன்பம் ஒழியும் காலம் என மக்கள் எதிர் பார்ப்பது விரைவில் நிறைவேறும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/10/2010 4:04:00 AM

மாவோயிஸ்ட்களாய் பழங்குடியினரை மாற்றிவிட்டு அவர்களை கொன்றுகுவிக்க நல்லதொரு காரணம் அரசுக்கு கிடைத்துவிட்டது?! அதற்கு முன் தங்கள் நாடகம்.

By முவு
4/9/2010 10:29:00 PM

With te advent of IT, Govt. is considering all citizens/natural resources as tools for economics to feed international Gaint Organizations and most of the Politicians. This kind of activities is trigerring anger in citizens Mind. Unless the roots of the problems are addressed this kinds of humanloss can't be stopped. By submitting the resignation PC wants people to forget all the mistakes already done.

By Siva
4/9/2010 10:13:00 PM

P chidambaram before few weeks said the Buck stops at Buddadeb Bhattacharya's desk(CM of West Bengal) for failing to prevent the Maoists killing of WB police force. Today he had to eat humble pie and had to eat his own words. Thats the reason PC said Buck stops at his own desk. PC had to resign only to take cover before CPI comes down heavily on him. So PC shutup..

By jananesan
4/9/2010 9:52:00 PM

தயவுசெய்து எப்படியாவது ராஜினாமா செய்துவிடுங்கள். போனதடவை நிதி அமைச்சராக இருந்து ஏற்றுக்கொள்ள முடியாத பட்ஜெட்டை கொடுத்தீர். இப்போது உள்துறையில் இருந்து 75 பேரை கொன்று உள்ளீர்கள். தமிழ்நாட்டு மானத்தை காப்பாற்ற தயவுசெய்து காரைக்குடிக்கு திரும்புங்கள். 75 குடும்ப சாபத்தை ஏற்காதீர்.

By sboopa
4/9/2010 9:44:00 PM

P chidambaram before few weeks said the Buck stops at Buddadeb Bhattacharya's desk(CM of West Bengal) for failing to prevent the Maoists killing of WB police force. Today he had to eat humble pie and had to eat his own words. Thats the reason PC said Buck stops at his own desk. PC had to resign only to take cover before CPI comes down heavily on him. So PC shutup..we in TN know you. We know how u helped Karunanidhi coverup the Dinakaran case using CBI. Vetkamillai unakku..thoo..thooo

By Govind
4/9/2010 9:38:00 PM

well done minister, sir. we are proud of your action for undertaking the responsibility that happened in your ministry. but reeonsider your idea to resign but how to control the naxalites.

By raghavan
4/9/2010 8:01:00 PM

ப.சிதம்பரம் ராஜிநாமா கடிதம்: பிரதமர் நிராகரிப்பு.இது ஜாடிக்கு மூடி என்ற வழக்குச் சொல்லை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. இப்படியும் இந்திய ஜனத்தொகையை குறைக்கலாம் என்று இவர்கள் ரூம் போட்டு யோசித்திருப்பார்களோ?

By SAMY
4/9/2010 7:35:00 PM

ராஜினாமா ஒரு கொழைத்தனம் எதையும் தைரியமாக எதிர்கொள்ளவேண்டும். WE TOGETHER DESTROY THEM.

By Elango
4/9/2010 6:08:00 PM

It was not unexpected. He lost the MP election to Kannappan, but after some internal manouvre he was declared elected.If he were to be really a honest politician he should have accepted defeat. This is a small figment of how he is. Hence, this resignation is to deceive the public and to buy some kind of sympathy. May be this kind of acting he has learned from MK

By Right
4/9/2010 6:06:00 PM

THOUGH IT IS A DRAMA CHIDBRAM HAS STAGED IT VERY LATELY. IF HE COULD HAVRD RESIGNED SOON AFTER THE BRUTAL KILLING OF CRPF BY MAOISTS,THEN THE PEOPLE WOULD HAVE BELIVED HIM. BUT ANY WAY HE IS FAR BETTER THAN SHIVARAJ PATIL.

By Paris EJILAN
4/9/2010 5:53:00 PM

அண்ணா ராஜினாமா செய்யாதீங்கண்ணா ? அப்பறம் டில்லி பக்கம் தல வச்சு படுக்க இன்னொரு தபா எவனும் ஏமாற மாட்டான் , ஏதோ கடவுள் புண்ணியத்துல ஜெயிச்சீரு,அதோட காலத்த ஓட்டுங்கண்ணா .உங்க சன்னு கார்த்தி உங்களைய தான் நம்பிண்டு இருக்கா ,அத்த உட்டுடாதீங்க அப்பரம் உங்க இஸ்டம் வட்டா

By திருந்தாதவன்
4/9/2010 4:41:00 PM

adippathu pol adi azhuvathu pol azhu pazhamozhi than ithu. makaaludaya selvakku illamal thotra unakku DMK thayvil vetri endru perumai. ipadi irukkum unakku etharkku mathiya mandiri padhavi. rajinama nadagam veru epadi urupadum india. konjamavathu india munneranum ennam unakku irukiratha.

By suresh.s, qatar
4/9/2010 4:38:00 PM

May be he was well aware of political chemistry in every events like this. In the long run it might help the 64 year old man to be a candidate for "Prime Minister" for Congress. After all that's the only way to convince Hindi dominating Indian politics to have Tamil prime minister, or only other non-higher class person for the post, apart from Deva Gowda. Ofcourse he could deserve it!

By Observer
4/9/2010 4:32:00 PM

you traitor don't act.you have to answer the death of innocent people who died in eelam.

By lalitha piriyakumar.
4/9/2010 4:29:00 PM

தேர்தல் தோல்வியை பகிரங்கமாக ஒத்துக் கொண்டு ராஜினாம் செய்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? பாதிக்கப்பட்டவன் தமிழன். இதில் அவ்வாறு இல்லை அனைத்து மாநிலத்தவர்களும் உள்ளனர். அவர்கள் கேள்விக்கு பதில் கூற முடியாது. மேலும், மர்வோஸ்டுகளை ”கோழைகள்” என்று உசுப்பேற்றி விட்டதும் இந்த அறிவு ஜீவியே! தன்மானம் உள்ளவனாக இருந்தால் தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் மாறாக உலகத்தையே ஏமாற்றிக் கொண்டிருப்பது எதற்காக? நாட்டுக்கு சேவை செய்யவா? அல்லது சோனியா குடம்பத்திற்கு சேவகம் செய்யவா?

By Palay, Arumugam
4/9/2010 4:27:00 PM

IT WAS AN EXPECTED ACT OF CHIDAMBARAM. THOUGH IT IS A DRAMA, IT IS TIMELY AND REQUIRED ACT FOR SHOWING YOUR MODESTY AND RESPONSIBILITY. GOOD.

By R
4/9/2010 4:20:00 PM

BEST STAGE MANAGED DRAMA. YOU SHOULD HAVE RESIGNED WHEN INNOCENT TAMLS WERE WIPED OUT IN EELAM. ONLY PUSS IS RUNNING IN YOUR BODY, NOT BLOOD

By BOODHI DHARMA
4/9/2010 4:14:00 PM

எதிர்க்கட்சிகள் ராஜிநாமா செய்ய சொல்லும் முன் இவர்களாகவே ஒரு நாடகம் நடத்தி முடித்து விட்டார்கள். முசோனியா செய்த சிதம்பர ரகசியங்கள் எல்லாம் மெத்தப் படித்த மேதாவி சிதம்பரத்திற்கு தெரியும். அவ்வளவு சீக்கிரம் சிதம்பரத்தை கழட்டி விட்டு விட மாட்டார்கள்?

By நவீன் சென்னை
4/9/2010 4:08:00 PM

AFTER LALBAGADUR SASTRY THE ONLY GENTLEMAN IS CHIDAMBARAM TO MARAL RESPILITY. THANKS MR CHIDAMBARAM. yOU ARE A GOOD ADMINISTRATER. DONT WOORY. YOU ARE THE ONLY PERSON TO HANDLE THE HOME FOTFOLIO EFFECIENCLY. WITHDRAW YOR LETTER

By J RAJAGOPALAN
4/9/2010 4:01:00 PM

கருணாவின் உண்ணாவிரத நாடகத்தில் கடைசியில் வந்தவர், பதவி துறப்பு நாடகத்தில் முக்கிய பாத்திரம் ஏற்றிருக்கிறார். மக்களுக்கு எதிரான எல்லா போரிலும் தொட்ர்ந்து சிறப்பாக நடித்து, பணம் ஈட்டி கொண்டு இருக்கிறார்

By SlaveTamilOfIndia
4/9/2010 4:01:00 PM

இந்த நாடகம் எதிர்பார்த்த ஒன்று, இறந்து போன 78 வீரர்களின் உயிரை விட மத்திய மந்திரி பதவி அவ்வளவு பெரியதா? பின்னர் இதற்கு யார்தான் பொறுப்பு ஏற்பது? நாடு நலம் பெற நல்லாட்சி அமைந்திட, மான்புமிகு டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.

By தஞ்சை ராஜு
4/9/2010 3:56:00 PM

MATCHI.... SUPPER ACTING DAAAAAA!!!!!!!!!!!! EPPADIYE OTTUGADA NAIEGLA THOTHUPONAVAN ELLAM UTKARAVATHA EPPADITHAN NADAKKUM

By Ram Piter Abdul rahamann
4/9/2010 3:33:00 PM

Do your job better instead of creating over scenes like this

By arima
4/9/2010 3:24:00 PM

Mr.PC, what you have done is a honest and responsible decision. I hope you have taken this decision from bottom of your heart and your own conscience. I request you to distance yourself from DMK governement's wrong, poor and undemocratic actions for the betterment of tamilnadu and india.

By A.Pandi
4/9/2010 3:22:00 PM

சந்தேகமில்லை !..நீர் ஒரு மதிக்கத்தக்க ..பாராட்டப் பட வேண்டிய ஒரு அரசியல் தலைவர் !!! நடந்தது துரதிஷ்ட்டமான சம்பவம் !!! இது போன்று இனி நிகழாமல் உம்மைப் போன்ற அனுபவம் அறிவு உள்ளவர்களால் மட்டுமே நாட்டை வழிநடத்திச் செல்ல முடியும் ! உமது பணி சிறப்புடன் அமையட்டும் !!! எங்களுக்கு வேறு கதி இல்லை அய்யா !...நாங்கள் என்ன அழகிரியிடம் போயியா...எங்க நாட்ட காப்பாத்துங்கன்னு கேட்டு நிக்க முடியும் !!! உம்முடைய அரசியல் நாகரீகத்தைப் பார்த்த பிறகாவது .....களப் பட மருந்து ...காலாவதி மருந்து ...போன்ற கொடுமைகளுக்கு பொறுப் பேற்று தமிழக அரசு ராஜினாமா செய்வது சம்பந்தமாக யோசிக்கட்டும் !!!!!

By rajasji
4/9/2010 3:15:00 PM

Mr. chidambaram resgination submited to Pm. this is totaly 'I'wash. Mr. Chidambaram not fit to any post of Minisiter. he always only speaking and roaming condition. truly Anand chennai

By anand
4/9/2010 3:05:00 PM

டேய், தெரியும்டா ஒங்க டகல்பாஜி வேலையெல்லாம். எதாவது அசம்பாவிதங்கள் நடந்து விட்டால், நாலு பத்திரிக்கையாள‌களை கூப்பிட்டு, சவடாலாக விடுவதும், கண்டனம் விடுவதும், சவால் விடுவதும், வருத்தம் தெரிவிப்பதும். கேட்டு கேட்டு அலுத்து போச்சிடா. நிதியமைச்சரா இருந்து, பட்ஜெட் போடுகிறேன் என்று நாட்டின் பொருளாதாரத்தையே நாசமாக்கினாய். பிரணாப் முகர்ஜி வந்து ஓரளவு சரி செய்து, இப்போதுதான் கொஞ்சம் தேறி வருகிறது. இப்ப‌ உள்துறையை ஒரு வழி பண்ணியாக்கியாச்சி. தெண்ட தீவட்டிகளுக்கெல்லாம் இவ்வளவு பவர்ஃபுல் போஸ்ட் கொடுத்தால் இப்படித்தான். கால்நடை, காடுவளர்ப்பு மந்திரிக்கு கூட லாயக்கில்லை. டம்மி பிரதமர், டம்மி ஜனாதிபதி, செயல்திறமையற்ற சிதம்பரங்கள், ஊழலில் ஊறும் ராசாக்கள், ஆடுங்கடா, நல்லா ஆடுங்க. இப்போதைய மந்திரிகளில் பிரணாப் முகர்ஜி, மம்தா பானர்ஜியை தவிர எவனும் மந்திரி பதவிக்கே லயக்கில்லாதவனுங்க.

By Venkadesh
4/9/2010 3:01:00 PM

டேய், தெரியும்டா ஒங்க டகல்பாஜி வேலையெல்லாம். எதாவது அசம்பாவிதங்கள் நடந்து விட்டால், நாலு பத்திரிக்கையாள‌களை கூப்பிட்டு, சவடால விடுவதும், கண்டனம் விடுவதும், சவால் விடுவதும், வருத்தம் தெரிவிப்பதும். கேட்டு கேட்டு அலுத்து போச்சிடா. நிதியமைச்சரா இருந்து, பட்ஜெட் போடுகிறேன் என்று நாட்டின் பொருளாதாரத்தையே நாசமாக்கினாய். பிரணாப் முகர்ஜி வந்து ஓரளவு சரி செய்து, இப்போதுதான் கொஞ்சம் தேறி வருகிறது. இப்ப‌ உள்துறையை ஒரு வழி பண்ணியாக்கியாச்சி. தெண்ட தீவட்டிகளுக்கெல்லாம் இவ்வளவு பவர்ஃபுல் போஸ்ட் கொடுத்தால் இப்படித்தான். கால்நடை, காடுவளர்ப்பு மந்திரிக்கு கூட லாயக்கில்லை. டம்மி பிரதமர், டம்மி ஜனாதிபதி, செயல்திறமையற்ற சிதம்பரங்கள், ஊழலில் ஊறும் ராசாக்கள், ஆடுங்கடா, நல்லா ஆடுங்க. இப்போதைய மந்திரிகளில் பிரணாப் முகர்ஜி, மம்தா பானர்ஜியை தவிர எவனும் மந்திரி பதவிக்கே லயக்கில்லாதவனுங்க.

By R.Venkatesh
4/9/2010 3:00:00 PM

naalla nadaham. chidambaram is very good actor. edukkum layakkuillathavan.

By umaraman
4/9/2010 2:59:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *