திங்கள், 22 ஜூன், 2009

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 22: அவசரகாலச் சட்டம்!



புதிய அரசமைப்புச் சட்ட எதிர்ப்பு
ஸ்ரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்திற்குப் பிறகு சிங்களப் பேரினவாதம் பெரிய அளவில் கட்டவிழ்த்து விடப்பட்டது எனலாம். தமிழர்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் முயற்சியும், முடிந்தால் முழுவதுமாக வெளியேற்றிவிடும் முயற்சியும் முனைப்புடன் கட்டவிழ்த்து விடப்பட்டன.1971-74 தர நிர்ணயம் மற்றும் மாவட்ட ஒதுக்கீடுகள் சட்டம்:செய்தி நிறுவனத் தணிக்கை; தர நிர்ணயம் மற்றும் கல்வித் துறை மாவட்ட ஒதுக்கீடுகள் பல்கலைக்கழக அனுமதியின் கீழ் கடைபிடிக்கப்பட்டன. புத்தக வெளியீடுகள் கட்டுப்படுத்தப்பட்டன. பத்திரிகைச் சுதந்திரம் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சமூக வேறுபாடுகளைச் சீர் செய்வதற்காக இவை கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது.பல்கலைக்கழக வளாகங்கள் முறைப்படுத்தப்படுதல் ஏற்கெனவே தமிழ் மக்களின் கோரிக்கையாக இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்திய விதம் சிக்கல் மிகுந்ததாக இருந்தது.தமிழரின் பல்கலைக்கழக அனுமதிகளை இது மிகவும் பாதித்தது. படித்த தமிழ் இளைஞர் மற்றும் ஆய்வாளர்களுக்கு ஒரு பலத்த அடியைக் கொடுத்தது.1974 யாழ் பல்கலைக்கழக புனரமைப்புச் சட்டம்:பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தைத் துவக்கியதன் மூலம் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கை தமிழ் மக்களின் நிர்ப்பந்தத்தின் பேரில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மீண்டும் இதனை இங்கு செய்த விதம் கேள்விக்குறியாக மாறியது. தர நிர்ணயமும் இச் சட்டத்தோடு இணைந்து தமிழ் மாணவர்கள் விகிதமும், அங்கு அனுமதிக்கப்பட்ட பாடங்களும் நிறைவு தருவதாக இல்லை.1971-1978 புதிய அரசியல் அமைப்புச் சட்டங்கள்:1972-இல் இலங்கை குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டது. புதிய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாகியது. 1948-ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு சட்டத்தில் சிறுபான்மையோருக்கு இருந்த 29-ஆவது பிரிவு-தமிழர் உரிமைகளுக்கான சட்ட ரீதியான சிறப்புப் பாதுகாப்புகள், மற்றும் மத சிறுபான்மையோருக்கான பாதுகாப்புரிமைகள் அனைத்தும் நீக்கப்பட்டன. சிங்கள மொழி, சிறப்புத் தகுதியைப் பெற்றது. புத்த மதம் அதிகார பூர்வமான மதமாக அறிவிக்கப்பட்டது. சிங்களப் பேரினவாத அடக்குமுறை வடிவத்திற்கு, மதவாத முகமூடிகளைத் தரித்து அதைச் சட்டபூர்வமானதாக ஆக்கியது.அதேபோன்று 1978-ஆம் ஆண்டு புதிய அரசியல் சட்டம், புதிய ஆட்சி முறை-ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் நாட்டைக் கொண்டு வந்தது. இதன் மூலம் அரசு அதிகார வடிவம் ஒரு முனையாக மையத்தில் குவிக்கப்பட்டது.ஏற்கெனவே இருந்த சட்ட ஷரத்துகளில் பலமுனை அதிகார வடிவ அமைப்புகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. (மாவட்டம், உள்ளூர் ஆட்சி அதிகாரம் ஆகியவை பரவலாக்கப்பட்ட அதிகார வரம்புகள் குறுக்கப்பட்டன). இதன் மூலம் நாட்டில் உடனடியான பொருளாதாரத் திட்டமிடல், புதிய பொருளாதாரக் கொள்கைகள் நிறைவேற்றம் போன்றவை நிகழ்த்துவதற்கு வாய்ப்புகள் திறந்து விடப்பட்டன.1972-74 நிலச் சீர்திருத்தம்:1972-74 நிலச் சீர்திருத்தங்கள் தமிழர்களைப் பெரிதும் பாதித்தது. தோட்டங்களில் பணியாற்றிய இந்தியத் தமிழ்த் தொழிலாளர்கள் நிலங்களை இழந்தனர்.நில ஆக்கிரமிப்பின் கீழ் பல நிலங்கள் பிடுங்கப்பட்டன. விவசாய நிலங்களைப் பிரித்து அளிப்பது என்றில்லாமல் மலைப்பகுதியில் உள்ள தோட்ட நிலங்களைப் பிரிப்பது இதன் முக்கிய அம்சமாக இருந்தது.நிலச் சீர்திருத்தத்தில் தமிழர்களுக்குப் பதிலாக சிங்களவர்களுக்கு நிலங்கள் கை மாறின.1975 காணி உச்சவரம்புச் சட்டம்: தமிழர்கள் தங்களது சொந்த நிலம் என்று பரம்பரை பரம்பரையாகக் கருதி வந்த பகுதிகளில் சிங்களவர்களின் ஆதரவால் இட ஆக்கிரமிப்பும், அரசு உதவியுடன் கூடிய குடி அமர்த்தலும் செய்யப்பட்டு, அங்கு சிங்களவர்கள் பெரும் எண்ணிக்கையில் குடி அமர்த்தப்பட்டனர்.தமிழர்களுக்குப் போதிய பங்கீடு கிடைக்கவில்லை. மேலும் உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்களின் உதவியுடன் மாதிரிக் கிராமங்களையும், மாதிரிக் காலனிகளையும் அரசு உருவாக்கியது.பழைய குடியிருப்புகள் கலைக்கப்பட்டுப் புதிய குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் தொழிலாளர் குடியிருப்புகள், சிங்களவர் காலனிகளாக ஆக்கப்பட்டன. அதில் சிங்களவர்கள் பெரும் அளவில் குவிக்கப்பட்டனர். தமிழர்களுக்கான ஒதுக்கீடும் குறைக்கப்பட்டது.1979 பயங்கரவாத தடுப்புச் சட்டம்:மனித உரிமைகளை மறுக்கும் பல விதிகள் இந்தச் சட்டத்தினுள் நுழைக்கப்பட்டன. இதன் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் 18 மாதங்கள் அமைச்சர் தீர்மானிக்கும் இடத்தில் வைக்கலாம். போலீஸôர் முன் ஒருவர் கூறிய புகார் ஆதாரமாகக் கருதப்படும். கொலை, கடத்தல், ஆயுதம் வைத்திருத்தல், இனக்கலவரம் ஏற்படுத்தக்கூடிய சொற்கள், சைகைகள் இதில் அடங்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 5 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும்.1980-பல நல்வாழ்வுத் திட்டச் சட்டங்கள்:1. கிராமப்புறங்கள் மேம்பாட்டுத் திட்டம்.2. நட்லி குடியேற்றத் திட்டம்.3. நகர விரிவாக்கத் திட்டம்.4. கிராமப்புற ஒன்றிணைப்பு.5. பொருளாதாரத்தைப் பன்முகப்படுத்துதல்.6. மீன் காடாக்கம்.7. மாதிரிக் கிராம நிலப்பங்கீடு.அவசரகாலச் சட்டம்:1983-ஆம் ஆண்டில் தொடங்கி ஆண்டுக் கணக்கில் நாடாளுமன்ற ஒப்புதல் மூலம் யாழ்ப்பாணத்தில் அவசரநிலை நீட்டிக்கப்பட்டது. இச்சட்டம் பிரயோகிக்கப்பட்டால், சாதாரண உரிமைகள் யாவும் பறிக்கப்பட்டுவிடும். கைது, தடுப்புக்காவலில் வைப்பது, சடலங்களை அழிப்பது போன்றவை தாராளமாக நடைபெறும். தடுப்புக்காவலில் ஒருவர் வைக்கப்பட்டால், அவரது உறவினரிடம் தெரிவிப்பது அவசியம் என ஐ.நா.சபையின் 92 வது பகுதி அனுமதிக்கிறது. ஆனால், இலங்கையின் அவசரகாலச் சட்டத்தில் இதற்கு இடமில்லை.இந்தச் சட்டங்கள், நல்வாழ்வுத் திட்டங்கள் அனைத்தும் சிங்களமயமாக்கும் கொள்கையை ஒட்டி வந்தனவாகும். மாதிரிக் கிராமங்களை உருவாக்கியது போன்று மாதிரித் தோட்டங்களும் இச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டன. மாதிரிக் கிராமங்களில் விவசாயிகளுடைய மேம்பாட்டிற்கு என்று கூறிக்கொண்டு சிங்கள விவசாயிகளைக் குவிக்கவும் தமிழ் விவசாயிகளை வெளியேற்றவும் இச்சட்டம் பயன்பட்டது.அதேபோன்று மாதிரித் தோட்டங்களில் சிங்களவர்களைக் குடியேற்றித் தமிழர்களை வெளியேற்றக்கூடிய அவர்களை முற்றாகப் புறக்கணிக்கக் கூடிய வகையில் இவைகள் அமைந்தன.மீன் காடாக்கம் என்ற திட்டத்தின் கீழ் மலையகத் தமிழ் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். நகர விரிவாக்கம் என்பது மலையகத் தமிழ் நகரங்களை விரிவாக்குவதன் கீழ் புறநகர்ப் பகுதிகளில் குடியிருப்புகளை அதிகப்படுத்தி, நகரத்தைச் சிங்களப்படுத்தும் திட்டத்தினை உருவாக்கினார்கள். கிராமப்புற-தோட்டப்புற ஒன்றிணைப்பு என்ற மட்டத்தின் கீழ் நாலைந்து அடுத்தடுத்த கிராமங்களை இணைப்பதன் மூலமும், அதற்கான பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலமும் விவசாயப் பகுதி நிலங்களில் குடியேற்றத்தைத் திணிப்பதன் மூலமும் சிங்கள மயமாக்கப்பட்டது.நல்வாழ்வுத் திட்டங்களின் பெயரில் அவை சிங்களவர் நல்வாழ்வுத் திட்டங்களாகவே உருவெடுத்தன. சட்ட ரீதியான ஒடுக்கு முறையின் மூலம் பொருளாதார ரீதியாகத் தமிழர்களைப் பின் தள்ளினர். பொருளாதார ரீதியான பின் தள்ளுதல் மூலம் வாழ்நிலை மாற்றங்களில் குழப்பங்களை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கையில் ஒரு நிச்சயமற்ற தன்மைக்கும் உத்திரவாதமற்ற வாழ்க்கைக்கும் தமிழர்களைச் சிங்களப் பேரினவாதம் தள்ளியது.தடை செய்யப்பட்ட பகுதிகள்:கடல் பகுதிகள்-யாழ்ப்பாணம்-மன்னார், வவுனியா-முல்லைத்தீவு போன்ற பகுதிகள், காட்டுப்பகுதிகள் போன்றவற்றில் தடை விதிக்கப்பட்டால், மீன்பிடிக்க, படகில் செல்ல, கடைத்தெரு, மருத்துவமனை, கல்விச்சாலை மற்றும் அலுவலகங்கள் செல்ல யாவற்றுக்கும் தடை உண்டு.கடல் பகுதியில் மீனவர் மீன்பிடித்தொழிலில் இறங்கமுடியாது. எல்லை சுருக்கப்பட்டுவிடும். நகரங்களில், காடுகளில் அனுமதியின்றி நடமாடுவோரைச் சுட்டுத்தள்ளும் ஆணையை போலீஸôர், ராணுவத்தினர் யாரிடமும் பெறத் தேவையில்லை. நீதிமன்ற நடவடிக்கைகள் முற்றாக ரத்தாகிவிடும். இவைகளின் மூலம் சிங்களப் பேரினவாதம் புத்தத்தின் முகமூடி தரித்து ரத்தச் சேற்றில் கைகளை நனைக்கக் கூடிய அளவிற்கு முன்னேறியது.

ஞாயிறு, 21 ஜூன், 2009


இராமேசுவரம், ஜூன். 20-
இலங்கையில் இருந்து நேற்று காலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற் கரைக்கு ஒரு பிளாஸ்டிக் படகில் முல்லைத்தீவு மாவட்டம் கச்சிலமடுவை சேர்ந்த சத்தியசீலன் (வயது39), அவரது மனைவி மாலினி (37) ஆகியோர் வந்தனர். சத்தியசீலன் குண்டு காயத்துடன் காணப்பட்டார். பின்னர் இருவரும் தனுஷ்கோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
குண்டு காயத்துடன் வாலிபர் வந்ததால் விடு தலைப்புலியா? என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. உடனே போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதன் பின்னர் 2 பேரும் போலீசாரிடம் கூறியதாவது:-
நாங்கள் கச்சிலமடு பகுதியில் வசித்து வந்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராணுவத்தினர் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாக தமிழ் மக்கள் மீது தாக்கு தல் நடத்தினர். இதனால் அங்கிருந்து இடம் பெயர்ந்து வழியர்மடம் பகுதிக்கு சென்று அங்கு கடற்கரையில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தோம்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் பலியாகி உள்ளனர். போரில் தமிழ் மக்களை பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்தி ராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
கடந்த ஏப்ரல் மாதம் ராணுவம் நடத்திய தாக்குதலில் எனது கணவர் சத்தியசீலன் வயிற்று பகுதிக்கு கீழே குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவரை முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தேன். குண்டு பாய்ந்ததில் எனது கணவருக்கு சிறுநீரக குழாய் பாதிக்கப்பட்டு விட்டது.
அதன் பின்னர் அங்கிருந்து வவுனியா சென்று உயிர் பிழைத்தால் போதும் என்று ரூ.1 லட்சம் கொடுத்து இங்கு வந்து விட்டோம். எங்களது 2 குழந்தைகள் எனது பெற்றோரிடம் உள்ளனர். கணவரை குணப்படுத்தவே இங்கு அழைத்து வந்துள்ளேன். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரு டன் உள்ளார். ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்கள் எங்கும் செல்ல முடியாதபடி முள்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சரியான அடிப்படை வசதி, உணவு கிடைக்கவில்லை.
நிவாரணக் கப்பலை இலங்கை அனுமதிக்க தலையிட வேண்டும்: கருணாநிதி
தினமணி


இலங்கை அரசால் திருப்பி அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள் அடங்கிய "கேப்டன் அலி' கப்பல் சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

முன்பு தமிழக மக்கள் திரட்டித் தந்த பொருள்களையே ஈழத் தமிழர்களிடம் ஒப்படைக்காத அரசுகள் அயல்நாட்டவர் திரட்டித் தந்த பொருள்களையா ஒப்படைப்பார்கள்? புதிய நாடகத்தின் முடிவைப் பொறுத்திருந்து பார்ப்போம்!


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/21/2009 3:58:00 AM

CAN SOMEONE SEND THIS LIVING "CORPSE" KARUNANIDHI TO KILPAK MENTAL HOSPITAL?.THIS WILL BE A GREAT TO THE TAMIL RACE.AFTER RESPONSIBLE FOR KILLING OVER 50,000 SL TAMILS THIS JOKER TALK ABOUT MEDICINE HA HA HA DO YOU THINK SL TAMILS ALSO VOTE FOR RS;500-AND BURIYANI PACKET?

By DANDY
6/20/2009 9:18:00 PM

MK resign your post if the central Govt is not asking srilanka to accept the important things like medicines etc. No use is getting Minister posts only for earning for your stomach.

By ram
6/20/2009 6:16:00 AM
பணவீக்கம் பூஜ்யத்துக்கும் கீழாக சரிந்தது
தினமணி




பணவீக்கம் 'வற்றும்' பொழுது விலைகள் குறைய வேண்டும். இல்லையேல் கணக்கீடு தவறு. உண்மையில் பண வீக்கப் போக்கு இறங்குமுகமாகச் சென்றால் வரவேற்கத் தக்கதே! அயல்நாட்டுப் பணப் பரிமாற்ற மதிப்பில் நம் பண மதிப்பு உயரும்! இதனால் அயல் நாட்டில் நம் பொருளின் விலை ஏறும் என அஞ்சி இதனை வரவேற்காமல் இருப்பது தவறு.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/21/2009 3:49:00 AM

Dear Editor , Educate Persons like Mr. Dhanapalan that getting less salary for more work is nothing to do with negative inflation or deflation. Deflation means buying power of money has increased but country like ours can withstand Inflation and not deflation. The main problem in our country is we have good economists and finance persons educated from all famous universities around globe and they make all policies, and fit only for European or western culture. Our country needs policy makers who know the in and out of an ordinary Indian and his mentality. Till then we can read all these things like any other news.

By H.Krishnamurthy
6/19/2009 10:50:00 AM

Dear Editor , Educate Persons like Mr. Dhanapalan that getting less salary for more work is nothing to do with negative inflation or deflation. Deflation means buying power of money has increased but country like ours can withstand Inflation and not deflation. The main problem in our country is we have good economists and finance persons educated from all famous universities around globe and they make all policies, and fit only for European or western culture. Our country needs policy makers who know the in and out of an ordinary Indian and his mentality. Till then we can read all these things like any other news.

By H.Krishnamurthy
6/19/2009 10:50:00 AM

Do more work get less salary one way of inflation control

By Dhanabalan
6/19/2009 9:16:00 AM

If there is no relation between inflation and prices, why the govt is wasting the time in giving such information?

By Mani
6/19/2009 5:20:00 AM


இந்திய வெளியுறச் செயலருக்கு எதிராக நேபாளத்தில் கறுப்புக் கொடி
தினமணி

Last Updated : 20 Jun 2009 03:16:25 PM IST


அயல்நாட்டுக் கைக் கூலியாக இருந்து கொண்டு இந்திய அரசைத் தவறான பாதையில் ஆட்டிப் படைக்கும் இவரைப் போன்றவர்களுக்கு மலையாளிகளே கருப்புக் கொடி காட்டும் நாள் விரைவில் வருவதாக!

இந்நன்னாளை எதிர்நோக்கும்
இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/21/2009 3:36:00 AM

Let all the Malayalee dogs get out of the power from the central government of India. They are the traitors and these Narayanan and Sivasankara Menon might have got bribe from China and Pakistan and indirectly they are destroying India and now tamil nadu wiill be afected very soon because of Srilanka's Minilitary base establishment. Congress has no shame. For Indian Political Party an Italian bitch is the leader. It is a big shame for all the Indians.

By Peter
6/20/2009 7:59:00 PM

It is true that their fear/apprehensions are reason there should not be any loss of innocent lives as elsewhere taken place Their move to show their bitterness appreciated. They are not tamils to fight amonst them and fate sealed by some one who is not concerned. A similarity between Tamils and Muslims are such the unity would be only lip service when it comes something against their personal or benefit certainly some kind of loss inevitable. Example is Saddam Hussain and LTTE Leader. Whereas in the case of crow group the unity is bonded and none can challenge. Tamils wants to have some statues installed wherever they need without any importance whereas crow group has number of tradition temple entire world which would be a transit camp to nurture clan till they stand on foot. Unable to convince Lanka to permit vessel Vanangamun and anchored and crews need potable water and within few days no one will be known where the foodstuff would be. Kudos to Nepalis.

By V Gopalan
6/20/2009 7:58:00 PM

Very good. well done. The Malayal d_g is not good .

By Devar
6/20/2009 7:35:00 PM

hello Dinamani, How to do in Tamil.

By Devar
6/20/2009 7:33:00 PM






"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 21: சட்ட வடிவிலான அடக்குமுறைகள்



புதிய அரசமைப்புச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் (1961)
சிங்களப் பேரினவாத மனப்பான்மையுடைய சிங்களவர்கள், ஆங்கிலேயர் ஆட்சியில் தங்கள் நலன்களுக்குப் பாதகமான சட்ட முன்வடிவங்களை ஆங்கிலேயர் வைக்கயில் அவை தமிழர்க்கு ஒரு சில சலுகைகளையே அளித்த போதிலும், அவற்றுக்கு முட்டுக்கட்டையிட்டு, தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாமல் அவற்றுக்கு எதிராகத் தங்கள் மக்களின் எதிர்ப்புக் குரல்களை ஒன்றிணைக்க முயற்சித்தனர்.தாங்கள் ஆட்சிக்கு வந்த பின் புதிய வடிவில் வேறு பல சட்டங்களைக் கொண்டு வந்து, பழைய சட்டங்களைத் தூக்கியெறிந்து தமிழர்களை ஒடுக்க நினைத்தனர்.ஆரம்ப காலச் சிங்கள இனவாதம், சட்ட வடிவங்களை முன்வைத்தே தமிழர்களை ஒடுக்கியது.1920-சட்ட நிரூபண சபைக்கான திருத்தம்:மலையக மக்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு, டொனமூர் ஆணைக்குழுவின் சிபாரிசை அரசு அமலாக்க நினைக்கிறது. ஆனால் மலையக மக்களின், குறிப்பாக தமிழர்களின் வாக்குரிமையால் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தில் பங்கு கிடைத்துவிடும் என்றும், அம்மக்களின் ஆதரவால் இடதுசாரிகளின் கை, பாராளுமன்றத்தில் ஓங்கும் என்பதால் சிங்களவர்கள் இதை அமலாக்குவதை எதிர்த்தனர்.1931-"டொனமூர் சிபாரிசு' சில திருத்தங்களுடன் அமலாதல்:அத்திருத்தங்களினால் யாழ் சிறுபான்மையினர் பாதிப்படைகின்றனர். யாழ் பகுதி மக்கள் கடுமையாக இதை எதிர்க்கின்றனர்.1937-"உள்ளாட்சித் தேர்தல் வாக்குரிமைச் சட்டம்':இச்சட்டத்தால் உள்ளாட்சித் தேர்தலில் தோட்டத் தொழிலாளர் பங்கேற்காத வகையில், அவர்களின் நலன்களை அமலாக்காதபடிக்கு, அவர்களுக்கு வாக்குரிமையைப் பறிக்கக்கூடிய வகையில் இச்சட்டம் வந்தது. இதன் மூலம் பழைய ராணுவ முகாம் பாணியில் காலனிகளில் தமிழர்கள் பிற சமூக மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்.1940-"வாழ்விடத் தெரிவு பிரஜைகளை பதிவு செய்தல்' சட்டம்:இச்சட்டத்தின் மூலம் தமிழர்கள் தாங்கள் எந்தப் பகுதி மற்றும் குடியிருப்புகளில் தங்கி வாழ்கின்றனர் என்பதைப் பதிவு செய்தல் வேண்டும். அது மட்டுமல்லாது அவர்களின் நடமாட்ட விஸ்தரிப்பையும் இதன் மூலம் கட்டுப்படுத்துகிறது. இச்சட்டத்தில் சில விதிகள் கடுமையாக்கப்பட்டு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.1939-இல் இருந்ததை விட 57,000 பேர் தமிழர்களின் எண்ணிக்கையில் குறைக்கப்பட்டனர். மேலும் இச் சட்டத்தின் மூலம் 1943-இல் பெருமளவுக்கு வாக்காளர்கள் குறைக்கப்பட்டனர்.1948-49 "குடியுரிமைச் சட்டம்':இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமான 15 லட்சம் மக்கள் தொகையுள்ள மலையகத் தமிழர்களுக்கு விழுந்த முதல் அடி இதுவாகும். தமிழருக்கான குடியுரிமை மறுக்கப்பட்டது. உலகில் எந்த நாட்டிலுமே இல்லாத ஒரு குடியுரிமைச் சட்டம் இது.சில நாடுகளில் அம்மண்ணிலேயே பிறந்தவர்களுக்குக் குடியுரிமை உண்டு. வேறு சில நாடுகளில் சில காலம் வாழ்ந்தாலே குடியுரிமை பெறும் தகுதி கிடைத்து விடுகிறது. இன்னும் சில நாடுகளில் குடியேறியவர்கள் அங்குள்ள சட்டங்களுக்கு ஒப்புதல் வாக்குமூலம் தந்து ஏற்றுக்கொண்டாலே போதுமானது. ஆனால் தலைமுறை தலைமுறையாக இலங்கையிலேயே வாழ்ந்து, இந்தியாவுடன் தொடர்பினை இழந்த மக்களுக்கு; அதே நாட்டில் ஏற்கெனவே குடியுரிமை பெற்றிருந்தவர்களுக்கு, இச் சட்டத்தின் மூலம் குடியுரிமை மறுக்கப்பட்டது.இது ஒரு விநோதமான சட்டமாகும். சிங்களப் பெயர் அமைந்திருந்தால் அவர்களுக்குப் பிரஜா உரிமை உண்டு. குழந்தைகளுக்கோ உறவினருக்கோ தமிழ்ப் பெயர் இருக்குமானால் அவர்களுக்கு பிரஜா உரிமை இல்லை. இச்சட்டம் குடும்பங்களையே பிளவுபடுத்தியது. மேலும் இஸ்லாமியப் பெயர் கொண்டிருந்தால் அவர்களுக்குப் பிரஜா உரிமை இல்லை. இதில் விசித்திரம் என்னவென்றால், "குடியேறியவர் லைசென்சு கொள்கை சட்டத்தின்' கீழ் ஏற்கெனவே சட்டப்பூர்வமாக குடியேறியவர்கள், இச்சட்டத்தின் மூலம் சட்ட விரோதமாகக் குடியேற்றியவர்களாகக் கருதப்பட்டனர்.1949- "இந்திய பாகிஸ்தான் குடியிருப்பு சட்டம்':இச்சட்டத்தின் மூலம் விண்ணப்பதாரர்கள், பத்தாண்டுக்கு முன்பிலிருந்து தொடர்ச்சியாக அந்நாட்டிலேயே இருந்திருந்தால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும். இது மேலோட்டமாகச் சாதாரண ஒரு நிகழ்ச்சியாகத் தெரியும். ஆனால் பத்தாண்டுகளுக்குத் தொடர்ச்சியாக இருந்திருப்பதை நிரூபிப்பதில் கண்டிப்பான வழிமுறைகளும் சிக்கலான நடைமுறையும் பல அதிகார விதிகளும் உருவாக்கப்பட்டுக் குடியுரிமை பெறுவதை மேலும் சிக்கலாக்கின.1948-49 "தேர்தல் திருத்தச் சட்டம்': (Elecltion Amendment Act:)தமிழர்களுக்கு வாக்குரிமைப் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது இச்சட்டத்தின் மூலம்தான். தொகுதிகளின் எண்ணிக்கையில் அதிகமான அளவிற்கு சிங்களவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட வகையில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.1. தோட்ட நிர்வாகிகள் உரிமையாளர்களின் நலன்கள் இதன் மூலம் பாதுகாக்கப்பட்டது. தமிழர்கள் உரிமை பறிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல; 1931-இல் அளிக்கப்பட்ட வாக்குரிமை பறிக்கப்படுகிறது. 1949-இல் உருவான குடியேற்ற மசோதாவில் உள்ள ஷரத்துக்கள் இறுதி வடிவம் பெறுதலும் இச்சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள். இச்சட்டப்படி 1951 ஆகஸ்டு 5 வரை பிரஜா உரிமைகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.2,37,034 விண்ணப்பங்களில் குடும்பத்தவர் உள்ளிட்ட 8,25,000 பேருக்கு தமிழ் பிரஜா உரிமை கோரப்பட்டது. ஆனால் 1951-இல் இருந்து 1962 வரை 11 ஆண்டுகள் விண்ணப்பங்களை அரசு பரிசீலனை செய்வதிலேயே கழித்தது. 1962-இல் ஒரு லட்சத்து முப்பத்து நாலாயிரத்து நூற்று எண்பத்தெட்டு பேர் விண்ணப்பித்ததில் 16.2 சதவிகிதம் பேரே பிரஜா உரிமை பெற்றனர்.1956-"ஆட்சி மொழிச் சட்டம், தனிச் சிங்கள மொழிச் சட்டம்':இலங்கை முழுவதும் சிங்கள மொழி ஒரே ஆட்சிமொழியாக ஆக்கப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் அரசாங்க நிறுவனங்கள், கல்வி, நீதிமன்றம் போன்ற துறைகளில் இதனை அமல்படுத்திய விதம், தமிழர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பெரும் தொல்லைகளை அளிப்பதாக இருந்தது.1957, 1965 ஒப்பந்தங்கள் ரத்து:தமிழ் தலைவர்களுடன் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயகா 1956-லும், டட்லி சேனநாயகா 1965-ஆம் ஆண்டிலும் ஆட்சி மொழிச் சட்டம் மற்றும் பிற பாகுபாடுகளினால் ஏற்படும் விளைவுகளை ஒட்டி, தமிழர்களுக்கு ஏற்பட்ட குறைகளை நீக்கிட ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆனால் இந்த இரண்டு ஒப்பந்தங்களுக்கு எதிராகச் சிங்களவரிடையே செல்வாக்கு மிக்க புத்த பிட்சுக்கள் மற்றும் தலைவர்களின் தலையீடு காரணமாக இவை ரத்து செய்யப்பட்டன. அவ்வப்போது தமிழர்களின் குறைகள் தீர்க்கப்படும் என்று சிங்கள ஆட்சியாளர்கள் அறிவிப்புச் செய்து கொண்டே வந்தனர்.அவர்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்று அறிவிப்புகளை அளிப்பதும் சில அரசியல் பதவிகளை அளித்து அரசியல் லாபத்திற்காகச் சிறுபான்மையினரைப் பயன்படுத்திக் கொண்டும் வந்தனர். அது மட்டுமல்லாது தமிழை ஒரு மாநில மொழியாகவும் ஆக்கியது உள்பட, சிறப்பு வசதிகள் தமிழர்களுக்குச் செய்யப்பட்டன. ஆனால் சில நேரங்களில் சிங்கள இனவாதக் கொள்கை கொண்டவர்களால் இவை எதிர்க்கப்பட்டன.சில நேரங்களில் அவர்களே பெரும் விளம்பரங்களை இச்செயல்களுக்குத் தந்தனர். ஆனால் இச்சட்டங்களை உண்மையிலேயே அமல்படுத்தியது மிகமிகக் குறைவே ஆகும்.1960-61 "கல்வித் துறை தேசியமயம்':பள்ளிகளை தேசியமயமாக்கியது, 2 ரோமன் கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் பிரிவினரை மிகவும் பாதித்தது. தனியார் பாடசாலைகள் பல தேசிய மயமாக்கப்பட்டன. வெளித் தோற்றத்தில் ஒரு முற்போக்கான அம்சமாக இது தென்படும். ஆனால், இதை அமலாக்கும்போது மதச்சிறுபான்மையினருடைய நிறுவனங்கள் அனைத்தும் அரசு மயமாக்கிச் சிங்களவருடைய நிர்வாகத்தின் கீழ் நிலைநிறுத்தப்பட்டது. இதன் மூலம் மலையகத்தில் இருக்கும் தமிழ்ப் பாடசாலைகள் அனைத்தும் சிங்களப் பாடசாலைகளாகவும் மாற்றப்பட்டன. அங்கு சிங்கள மொழி முதன்மை பெற்றுக் குழந்தைகளின் தாய்மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டது. இதனால் மலையக மக்கள் பெருமளவிற்குப் பாதிப்பு அடைந்தனர். மதச் சிறுபான்மையோருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு பறிக்கப்பட்டது.அதே நேரத்தில் 1964-இல் அக்டோபர் 30-ஆம் தேதி ஸ்ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தப்படி சுமார் 6 லட்சம் பேர் குடியுரிமை இழந்து விடுகின்றனர்.
கருத்துகள்

கருத்துக்கள்

ஒரு நூற்றாண்டிற்கும் மேலாகவே தமிழர்களைச் சட்ட முறைப்படியும் அடக்கி வைத்தும் சட்ட முறைகளை மீறி வன்முறையால் ஒடுக்கியும் சிங்களவர்கள் நடந்து கொள்வதை நன்கு புரிந்துகொள்ளும் பொழுது, இவற்றிற்கு எதிரான எல்லா வகை அறப் போராட்டங்களாலும் பயன் இல்லாத பொழுது, - நாம் எந்த ஆயுதத்தை ஏந்த வேண்டும என்பதை எதிரியே தீர்மானிப்பதால் - ஆயுதப் போராட்டத்ததைத் தாய் மண்ணை மீட்க ஈழத் தமிழர்கள் முனைந்ததில் என்ன தவறு இருக்க முடியும்? அடுத்த நாட்டு இறையாண்மையில் தலையிடக் கூடாது என்று சொல்லிக் கொண்டே ஈழத்தமிழ் நாட்டு இறையாண்மையில் தலையிட்டு வரும் உலக வஞ்சகர்களை என் செய்வது? ஈழத் தமிழர்களை - ஈழத் தமிழ்நாட்டைக்- காப்பதற்கு இனியேனும் ஒரு விதி செய்வோம்! அதை எந்த நாளும் காப்போம்! வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ - உலக உறவுகள்!


வீர வாழ்த்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/21/2009 3:13:00 AM

If you think that news papers are controlled by Brahmins you are living in dark age and you are stupid. The Hindu (with the name suggests it is a relgious name denoting the main religion of India) is owned by a Christian Missionery and not by brahmins. Same way the Times of India group. Stop blaming upper caste by meanign brahmins control your fate. Think that your fate is what you create for yourself and not by others, "theethum nanrum pirar thara vara" - wake up Tamils
By Tamil Nanban
6/22/2009 8:23:00 AM

I urge all patriotic Tamils in India and lanka to stand up to the indian and lankan armies in armed revolt. Tamil Nadu has to be free to release Eelam from its troubles, and for that we need China and Pakistan. In the pogroms, all Tamils outside Tamilagam will need to flee to Tamilagam, and we'll have more recruits. Let's go friends, we'll contact the Chinese defence ministry and consulate in Chennai.

By Elangovan
6/21/2009 10:27:00 PM

why india supported sri lankan government?so indian government also a terrorist.india was watched by genocide killing of tamils.

By charlesraj
6/21/2009 1:44:00 PM

INDIA ACCEPTED PLANTATION TAMILS WHO LIVED IN SRI LANKA OVER 200 YEARS SAME IMDIA ACCPETED BURMESE TAMILS .WILL THE SAME INDIA ACCEPT HINDI/GUJARATI SPEAKING TOMOROW IF FIJI ISLANDS AND KENYA THROW THEM OUT?????BECAUSE INDIAN TAMILS ARE SLAVES AND IT IS POSSIBLE TO BUY ANY TN LEADERS.DELHI CAN HIRE,LEASE AND BUY SO CALLED TAMIL NADU LEADERS WHENEVER THEY LIKE AND SAME DELHI THINKS WITH FEW MALAYALIES AND ITALIAN COBBLER WOMAN CAN CRUSH THE FREEDOM SPRIT OF SL TAMILS.DONT WORRY SL TAMILS WILL PAY THEIR GRATITUDE BY SUPPORTING CHINA AND PAKISTAN IN ALL POSSIBLE WAY LOCALY AND INTERNATIONALY THEN YOU WILL KNOW WHO IS FOOL.OVER TO INDIAN PATRIOTIC TAMIL SLAVES

By NANBY
6/21/2009 1:22:00 PM

thanks dinamani please you will send this artical to thamil bloods drinker sonia rajhbeksha mr thamil durokees home minister chidhambaram M. Karunanithi jayalalitha thery not eat with salt

By thamil
6/21/2009 9:46:00 AM

LOT OF PEOPLE HERE DONT UNDERSTAND HISTORY AND WRITE. GEORGE WASHINGTON GOT FREEDOM FROM BRITISHERS TELLING FARMERS TO FIGHT WITH GUN. STILL THATS THE REASON AMERICANS DONT WANT TO GIVE UP GUNS AS THEY FEEL THATS THER BIRTH RIGHT. FOR BRITISHERS HE IS AN TERRORIST. FOR AMERICANS HE IS THE FATHER OF THE COUNTRY. BAGATH SINGH AND SUBASH CHANDRA BOSE ARE TERRORIST FOR BRITISHERS. HOWEVER THEY ARE FREEDOM FIGHTERS FOR INDIA. LET IT BE ANY COUNTRY THE STRUGGLE COULD BE DIFFERENT. HOWEVER IMPORTANCE IS TO UNDERSTAND ROOT CAUSE. WHEN SINHALESE BARBARIANS CORNER YOU AND BEAT YOU FOR YEARS THEN YOU WILL KNOW THE PAIN. EATING IDLY AND DOSA WATCHING CRICKET AND WRITING OPINIONS IS EASY. READING HISTORY OF THEIR STRUGGLE AND PLEASE WRITE YOUR COMMENTS. SL FREEDOM MOVEMENT STARTED PEACEFULLY.KUTTIMANI AND JAGAN EYES WERE PLUCKED OUT. HOW WILL YOU KNOW WHEN WE ARE COMING FROM A SOCIETY WERE BRAHMINS CONTROL THE PRESS, WHERE POLITICANS CORRUPT THE SOCIETY. WAIT AND WATCH WHEN CHINA,PAKISTAN,BANGALA

By tamizhan
6/21/2009 9:43:00 AM

Ilakkuvanar Thiruvalluvan VAZHGA UNGAL KOTRAM.BECAUSE OF FEW PEOPLE LIKE YOU IN TN RAIN IS THERE. MAN MADE RELIGION, CASTE WAS MADE BY UPPER CASTE PEOPLE TO DOMINATE THE KNOWLEDGE , COUNTRIES COMES AND GOES. THE LANGUAGE IS EVOLVED WITH EVOLUTION. VAZHGA TAMIL EELAM. ONE DAY WE WILL ACHIEVE THIS. I AM SO CONFIDENT ABOUT SL TAMILS FIGHTING NATURE. LET SOME ONE IN PARALLEL FIGHT IN DEMOCRATIC WAY ALSO IN SL. I AM VERY CONFIDENT TAMILS WILL GET FREEDOM IN FEW MORE YEARS. I PITTY WHAT IS GOING TO BE THE STATE OF INDIA. WE HAVE VERY WRONG LEADERS ,PARTIES AND CORRUPT POLITICIANS ON THE TOP. HOW MANY YEARS IT TAKES TO EVOLVE AND FIX THE PROBLEM. IF THEY WANT TO FIX CORRUPTION CONGRESS COULD HAVE DONE LONG TIME BACK. THEY WONT DO IT. BEACUSE OF SAME CONGRESS COUNTRY WILL BE SPLIT.

By tamizhan
6/21/2009 9:25:00 AM

1964-இல் அக்டோபர் 30-ஆம் தேதி ஸ்ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தப்படி சுமார் 6 லட்சம் பேர் குடியுரிமை இழந்து விடுகின்றனர் என்பது தவறு. அவர்கள் ஏற்கனவே 1948 இல் குடியுரிமை இழந்துவிட்டனர். இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா 600,000 மலையக மக்களை திருப்பி எடுக்க சம்மதித்தது. அதற்கு கைமாறாக 300.000 தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்க சிறிலங்கா சம்மதித்தது. இந்த 600,000 பேர்தான் இப்போது நீலகிரியில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள்.

By Keeran
6/21/2009 7:51:00 AM