ஞாயிறு, 21 ஜூன், 2009

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 21: சட்ட வடிவிலான அடக்குமுறைகள்



புதிய அரசமைப்புச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் (1961)
சிங்களப் பேரினவாத மனப்பான்மையுடைய சிங்களவர்கள், ஆங்கிலேயர் ஆட்சியில் தங்கள் நலன்களுக்குப் பாதகமான சட்ட முன்வடிவங்களை ஆங்கிலேயர் வைக்கயில் அவை தமிழர்க்கு ஒரு சில சலுகைகளையே அளித்த போதிலும், அவற்றுக்கு முட்டுக்கட்டையிட்டு, தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாமல் அவற்றுக்கு எதிராகத் தங்கள் மக்களின் எதிர்ப்புக் குரல்களை ஒன்றிணைக்க முயற்சித்தனர்.தாங்கள் ஆட்சிக்கு வந்த பின் புதிய வடிவில் வேறு பல சட்டங்களைக் கொண்டு வந்து, பழைய சட்டங்களைத் தூக்கியெறிந்து தமிழர்களை ஒடுக்க நினைத்தனர்.ஆரம்ப காலச் சிங்கள இனவாதம், சட்ட வடிவங்களை முன்வைத்தே தமிழர்களை ஒடுக்கியது.1920-சட்ட நிரூபண சபைக்கான திருத்தம்:மலையக மக்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு, டொனமூர் ஆணைக்குழுவின் சிபாரிசை அரசு அமலாக்க நினைக்கிறது. ஆனால் மலையக மக்களின், குறிப்பாக தமிழர்களின் வாக்குரிமையால் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தில் பங்கு கிடைத்துவிடும் என்றும், அம்மக்களின் ஆதரவால் இடதுசாரிகளின் கை, பாராளுமன்றத்தில் ஓங்கும் என்பதால் சிங்களவர்கள் இதை அமலாக்குவதை எதிர்த்தனர்.1931-"டொனமூர் சிபாரிசு' சில திருத்தங்களுடன் அமலாதல்:அத்திருத்தங்களினால் யாழ் சிறுபான்மையினர் பாதிப்படைகின்றனர். யாழ் பகுதி மக்கள் கடுமையாக இதை எதிர்க்கின்றனர்.1937-"உள்ளாட்சித் தேர்தல் வாக்குரிமைச் சட்டம்':இச்சட்டத்தால் உள்ளாட்சித் தேர்தலில் தோட்டத் தொழிலாளர் பங்கேற்காத வகையில், அவர்களின் நலன்களை அமலாக்காதபடிக்கு, அவர்களுக்கு வாக்குரிமையைப் பறிக்கக்கூடிய வகையில் இச்சட்டம் வந்தது. இதன் மூலம் பழைய ராணுவ முகாம் பாணியில் காலனிகளில் தமிழர்கள் பிற சமூக மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்.1940-"வாழ்விடத் தெரிவு பிரஜைகளை பதிவு செய்தல்' சட்டம்:இச்சட்டத்தின் மூலம் தமிழர்கள் தாங்கள் எந்தப் பகுதி மற்றும் குடியிருப்புகளில் தங்கி வாழ்கின்றனர் என்பதைப் பதிவு செய்தல் வேண்டும். அது மட்டுமல்லாது அவர்களின் நடமாட்ட விஸ்தரிப்பையும் இதன் மூலம் கட்டுப்படுத்துகிறது. இச்சட்டத்தில் சில விதிகள் கடுமையாக்கப்பட்டு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.1939-இல் இருந்ததை விட 57,000 பேர் தமிழர்களின் எண்ணிக்கையில் குறைக்கப்பட்டனர். மேலும் இச் சட்டத்தின் மூலம் 1943-இல் பெருமளவுக்கு வாக்காளர்கள் குறைக்கப்பட்டனர்.1948-49 "குடியுரிமைச் சட்டம்':இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமான 15 லட்சம் மக்கள் தொகையுள்ள மலையகத் தமிழர்களுக்கு விழுந்த முதல் அடி இதுவாகும். தமிழருக்கான குடியுரிமை மறுக்கப்பட்டது. உலகில் எந்த நாட்டிலுமே இல்லாத ஒரு குடியுரிமைச் சட்டம் இது.சில நாடுகளில் அம்மண்ணிலேயே பிறந்தவர்களுக்குக் குடியுரிமை உண்டு. வேறு சில நாடுகளில் சில காலம் வாழ்ந்தாலே குடியுரிமை பெறும் தகுதி கிடைத்து விடுகிறது. இன்னும் சில நாடுகளில் குடியேறியவர்கள் அங்குள்ள சட்டங்களுக்கு ஒப்புதல் வாக்குமூலம் தந்து ஏற்றுக்கொண்டாலே போதுமானது. ஆனால் தலைமுறை தலைமுறையாக இலங்கையிலேயே வாழ்ந்து, இந்தியாவுடன் தொடர்பினை இழந்த மக்களுக்கு; அதே நாட்டில் ஏற்கெனவே குடியுரிமை பெற்றிருந்தவர்களுக்கு, இச் சட்டத்தின் மூலம் குடியுரிமை மறுக்கப்பட்டது.இது ஒரு விநோதமான சட்டமாகும். சிங்களப் பெயர் அமைந்திருந்தால் அவர்களுக்குப் பிரஜா உரிமை உண்டு. குழந்தைகளுக்கோ உறவினருக்கோ தமிழ்ப் பெயர் இருக்குமானால் அவர்களுக்கு பிரஜா உரிமை இல்லை. இச்சட்டம் குடும்பங்களையே பிளவுபடுத்தியது. மேலும் இஸ்லாமியப் பெயர் கொண்டிருந்தால் அவர்களுக்குப் பிரஜா உரிமை இல்லை. இதில் விசித்திரம் என்னவென்றால், "குடியேறியவர் லைசென்சு கொள்கை சட்டத்தின்' கீழ் ஏற்கெனவே சட்டப்பூர்வமாக குடியேறியவர்கள், இச்சட்டத்தின் மூலம் சட்ட விரோதமாகக் குடியேற்றியவர்களாகக் கருதப்பட்டனர்.1949- "இந்திய பாகிஸ்தான் குடியிருப்பு சட்டம்':இச்சட்டத்தின் மூலம் விண்ணப்பதாரர்கள், பத்தாண்டுக்கு முன்பிலிருந்து தொடர்ச்சியாக அந்நாட்டிலேயே இருந்திருந்தால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும். இது மேலோட்டமாகச் சாதாரண ஒரு நிகழ்ச்சியாகத் தெரியும். ஆனால் பத்தாண்டுகளுக்குத் தொடர்ச்சியாக இருந்திருப்பதை நிரூபிப்பதில் கண்டிப்பான வழிமுறைகளும் சிக்கலான நடைமுறையும் பல அதிகார விதிகளும் உருவாக்கப்பட்டுக் குடியுரிமை பெறுவதை மேலும் சிக்கலாக்கின.1948-49 "தேர்தல் திருத்தச் சட்டம்': (Elecltion Amendment Act:)தமிழர்களுக்கு வாக்குரிமைப் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது இச்சட்டத்தின் மூலம்தான். தொகுதிகளின் எண்ணிக்கையில் அதிகமான அளவிற்கு சிங்களவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட வகையில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.1. தோட்ட நிர்வாகிகள் உரிமையாளர்களின் நலன்கள் இதன் மூலம் பாதுகாக்கப்பட்டது. தமிழர்கள் உரிமை பறிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல; 1931-இல் அளிக்கப்பட்ட வாக்குரிமை பறிக்கப்படுகிறது. 1949-இல் உருவான குடியேற்ற மசோதாவில் உள்ள ஷரத்துக்கள் இறுதி வடிவம் பெறுதலும் இச்சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள். இச்சட்டப்படி 1951 ஆகஸ்டு 5 வரை பிரஜா உரிமைகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.2,37,034 விண்ணப்பங்களில் குடும்பத்தவர் உள்ளிட்ட 8,25,000 பேருக்கு தமிழ் பிரஜா உரிமை கோரப்பட்டது. ஆனால் 1951-இல் இருந்து 1962 வரை 11 ஆண்டுகள் விண்ணப்பங்களை அரசு பரிசீலனை செய்வதிலேயே கழித்தது. 1962-இல் ஒரு லட்சத்து முப்பத்து நாலாயிரத்து நூற்று எண்பத்தெட்டு பேர் விண்ணப்பித்ததில் 16.2 சதவிகிதம் பேரே பிரஜா உரிமை பெற்றனர்.1956-"ஆட்சி மொழிச் சட்டம், தனிச் சிங்கள மொழிச் சட்டம்':இலங்கை முழுவதும் சிங்கள மொழி ஒரே ஆட்சிமொழியாக ஆக்கப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் அரசாங்க நிறுவனங்கள், கல்வி, நீதிமன்றம் போன்ற துறைகளில் இதனை அமல்படுத்திய விதம், தமிழர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பெரும் தொல்லைகளை அளிப்பதாக இருந்தது.1957, 1965 ஒப்பந்தங்கள் ரத்து:தமிழ் தலைவர்களுடன் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயகா 1956-லும், டட்லி சேனநாயகா 1965-ஆம் ஆண்டிலும் ஆட்சி மொழிச் சட்டம் மற்றும் பிற பாகுபாடுகளினால் ஏற்படும் விளைவுகளை ஒட்டி, தமிழர்களுக்கு ஏற்பட்ட குறைகளை நீக்கிட ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆனால் இந்த இரண்டு ஒப்பந்தங்களுக்கு எதிராகச் சிங்களவரிடையே செல்வாக்கு மிக்க புத்த பிட்சுக்கள் மற்றும் தலைவர்களின் தலையீடு காரணமாக இவை ரத்து செய்யப்பட்டன. அவ்வப்போது தமிழர்களின் குறைகள் தீர்க்கப்படும் என்று சிங்கள ஆட்சியாளர்கள் அறிவிப்புச் செய்து கொண்டே வந்தனர்.அவர்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்று அறிவிப்புகளை அளிப்பதும் சில அரசியல் பதவிகளை அளித்து அரசியல் லாபத்திற்காகச் சிறுபான்மையினரைப் பயன்படுத்திக் கொண்டும் வந்தனர். அது மட்டுமல்லாது தமிழை ஒரு மாநில மொழியாகவும் ஆக்கியது உள்பட, சிறப்பு வசதிகள் தமிழர்களுக்குச் செய்யப்பட்டன. ஆனால் சில நேரங்களில் சிங்கள இனவாதக் கொள்கை கொண்டவர்களால் இவை எதிர்க்கப்பட்டன.சில நேரங்களில் அவர்களே பெரும் விளம்பரங்களை இச்செயல்களுக்குத் தந்தனர். ஆனால் இச்சட்டங்களை உண்மையிலேயே அமல்படுத்தியது மிகமிகக் குறைவே ஆகும்.1960-61 "கல்வித் துறை தேசியமயம்':பள்ளிகளை தேசியமயமாக்கியது, 2 ரோமன் கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் பிரிவினரை மிகவும் பாதித்தது. தனியார் பாடசாலைகள் பல தேசிய மயமாக்கப்பட்டன. வெளித் தோற்றத்தில் ஒரு முற்போக்கான அம்சமாக இது தென்படும். ஆனால், இதை அமலாக்கும்போது மதச்சிறுபான்மையினருடைய நிறுவனங்கள் அனைத்தும் அரசு மயமாக்கிச் சிங்களவருடைய நிர்வாகத்தின் கீழ் நிலைநிறுத்தப்பட்டது. இதன் மூலம் மலையகத்தில் இருக்கும் தமிழ்ப் பாடசாலைகள் அனைத்தும் சிங்களப் பாடசாலைகளாகவும் மாற்றப்பட்டன. அங்கு சிங்கள மொழி முதன்மை பெற்றுக் குழந்தைகளின் தாய்மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டது. இதனால் மலையக மக்கள் பெருமளவிற்குப் பாதிப்பு அடைந்தனர். மதச் சிறுபான்மையோருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு பறிக்கப்பட்டது.அதே நேரத்தில் 1964-இல் அக்டோபர் 30-ஆம் தேதி ஸ்ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தப்படி சுமார் 6 லட்சம் பேர் குடியுரிமை இழந்து விடுகின்றனர்.
கருத்துகள்

கருத்துக்கள்

ஒரு நூற்றாண்டிற்கும் மேலாகவே தமிழர்களைச் சட்ட முறைப்படியும் அடக்கி வைத்தும் சட்ட முறைகளை மீறி வன்முறையால் ஒடுக்கியும் சிங்களவர்கள் நடந்து கொள்வதை நன்கு புரிந்துகொள்ளும் பொழுது, இவற்றிற்கு எதிரான எல்லா வகை அறப் போராட்டங்களாலும் பயன் இல்லாத பொழுது, - நாம் எந்த ஆயுதத்தை ஏந்த வேண்டும என்பதை எதிரியே தீர்மானிப்பதால் - ஆயுதப் போராட்டத்ததைத் தாய் மண்ணை மீட்க ஈழத் தமிழர்கள் முனைந்ததில் என்ன தவறு இருக்க முடியும்? அடுத்த நாட்டு இறையாண்மையில் தலையிடக் கூடாது என்று சொல்லிக் கொண்டே ஈழத்தமிழ் நாட்டு இறையாண்மையில் தலையிட்டு வரும் உலக வஞ்சகர்களை என் செய்வது? ஈழத் தமிழர்களை - ஈழத் தமிழ்நாட்டைக்- காப்பதற்கு இனியேனும் ஒரு விதி செய்வோம்! அதை எந்த நாளும் காப்போம்! வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ - உலக உறவுகள்!


வீர வாழ்த்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/21/2009 3:13:00 AM

If you think that news papers are controlled by Brahmins you are living in dark age and you are stupid. The Hindu (with the name suggests it is a relgious name denoting the main religion of India) is owned by a Christian Missionery and not by brahmins. Same way the Times of India group. Stop blaming upper caste by meanign brahmins control your fate. Think that your fate is what you create for yourself and not by others, "theethum nanrum pirar thara vara" - wake up Tamils
By Tamil Nanban
6/22/2009 8:23:00 AM

I urge all patriotic Tamils in India and lanka to stand up to the indian and lankan armies in armed revolt. Tamil Nadu has to be free to release Eelam from its troubles, and for that we need China and Pakistan. In the pogroms, all Tamils outside Tamilagam will need to flee to Tamilagam, and we'll have more recruits. Let's go friends, we'll contact the Chinese defence ministry and consulate in Chennai.

By Elangovan
6/21/2009 10:27:00 PM

why india supported sri lankan government?so indian government also a terrorist.india was watched by genocide killing of tamils.

By charlesraj
6/21/2009 1:44:00 PM

INDIA ACCEPTED PLANTATION TAMILS WHO LIVED IN SRI LANKA OVER 200 YEARS SAME IMDIA ACCPETED BURMESE TAMILS .WILL THE SAME INDIA ACCEPT HINDI/GUJARATI SPEAKING TOMOROW IF FIJI ISLANDS AND KENYA THROW THEM OUT?????BECAUSE INDIAN TAMILS ARE SLAVES AND IT IS POSSIBLE TO BUY ANY TN LEADERS.DELHI CAN HIRE,LEASE AND BUY SO CALLED TAMIL NADU LEADERS WHENEVER THEY LIKE AND SAME DELHI THINKS WITH FEW MALAYALIES AND ITALIAN COBBLER WOMAN CAN CRUSH THE FREEDOM SPRIT OF SL TAMILS.DONT WORRY SL TAMILS WILL PAY THEIR GRATITUDE BY SUPPORTING CHINA AND PAKISTAN IN ALL POSSIBLE WAY LOCALY AND INTERNATIONALY THEN YOU WILL KNOW WHO IS FOOL.OVER TO INDIAN PATRIOTIC TAMIL SLAVES

By NANBY
6/21/2009 1:22:00 PM

thanks dinamani please you will send this artical to thamil bloods drinker sonia rajhbeksha mr thamil durokees home minister chidhambaram M. Karunanithi jayalalitha thery not eat with salt

By thamil
6/21/2009 9:46:00 AM

LOT OF PEOPLE HERE DONT UNDERSTAND HISTORY AND WRITE. GEORGE WASHINGTON GOT FREEDOM FROM BRITISHERS TELLING FARMERS TO FIGHT WITH GUN. STILL THATS THE REASON AMERICANS DONT WANT TO GIVE UP GUNS AS THEY FEEL THATS THER BIRTH RIGHT. FOR BRITISHERS HE IS AN TERRORIST. FOR AMERICANS HE IS THE FATHER OF THE COUNTRY. BAGATH SINGH AND SUBASH CHANDRA BOSE ARE TERRORIST FOR BRITISHERS. HOWEVER THEY ARE FREEDOM FIGHTERS FOR INDIA. LET IT BE ANY COUNTRY THE STRUGGLE COULD BE DIFFERENT. HOWEVER IMPORTANCE IS TO UNDERSTAND ROOT CAUSE. WHEN SINHALESE BARBARIANS CORNER YOU AND BEAT YOU FOR YEARS THEN YOU WILL KNOW THE PAIN. EATING IDLY AND DOSA WATCHING CRICKET AND WRITING OPINIONS IS EASY. READING HISTORY OF THEIR STRUGGLE AND PLEASE WRITE YOUR COMMENTS. SL FREEDOM MOVEMENT STARTED PEACEFULLY.KUTTIMANI AND JAGAN EYES WERE PLUCKED OUT. HOW WILL YOU KNOW WHEN WE ARE COMING FROM A SOCIETY WERE BRAHMINS CONTROL THE PRESS, WHERE POLITICANS CORRUPT THE SOCIETY. WAIT AND WATCH WHEN CHINA,PAKISTAN,BANGALA

By tamizhan
6/21/2009 9:43:00 AM

Ilakkuvanar Thiruvalluvan VAZHGA UNGAL KOTRAM.BECAUSE OF FEW PEOPLE LIKE YOU IN TN RAIN IS THERE. MAN MADE RELIGION, CASTE WAS MADE BY UPPER CASTE PEOPLE TO DOMINATE THE KNOWLEDGE , COUNTRIES COMES AND GOES. THE LANGUAGE IS EVOLVED WITH EVOLUTION. VAZHGA TAMIL EELAM. ONE DAY WE WILL ACHIEVE THIS. I AM SO CONFIDENT ABOUT SL TAMILS FIGHTING NATURE. LET SOME ONE IN PARALLEL FIGHT IN DEMOCRATIC WAY ALSO IN SL. I AM VERY CONFIDENT TAMILS WILL GET FREEDOM IN FEW MORE YEARS. I PITTY WHAT IS GOING TO BE THE STATE OF INDIA. WE HAVE VERY WRONG LEADERS ,PARTIES AND CORRUPT POLITICIANS ON THE TOP. HOW MANY YEARS IT TAKES TO EVOLVE AND FIX THE PROBLEM. IF THEY WANT TO FIX CORRUPTION CONGRESS COULD HAVE DONE LONG TIME BACK. THEY WONT DO IT. BEACUSE OF SAME CONGRESS COUNTRY WILL BE SPLIT.

By tamizhan
6/21/2009 9:25:00 AM

1964-இல் அக்டோபர் 30-ஆம் தேதி ஸ்ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தப்படி சுமார் 6 லட்சம் பேர் குடியுரிமை இழந்து விடுகின்றனர் என்பது தவறு. அவர்கள் ஏற்கனவே 1948 இல் குடியுரிமை இழந்துவிட்டனர். இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா 600,000 மலையக மக்களை திருப்பி எடுக்க சம்மதித்தது. அதற்கு கைமாறாக 300.000 தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்க சிறிலங்கா சம்மதித்தது. இந்த 600,000 பேர்தான் இப்போது நீலகிரியில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள்.

By Keeran
6/21/2009 7:51:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக