thol.thirumavalavan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
thol.thirumavalavan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 ஜூலை, 2012

பதவி ஆசையால் கொலைகாரக் காங். உடன் கூட்டணி- திருமா ஒப்புதல் வாக்குமூலம்

ன்கையூட்டு என்பதை அன்பளிப்பு  என்று  சொல்வதுபோல் பதவி ஆசையை இப்படியும் சொல்லலாமோ! எதிரிகள் ஒரு கோடி இட்டழைத்தாலும் தொடேன் எனச் சொல்ல வேண்டியவர் பதவி ஆசையால் இணைவதால் இனிமேல் ஈழம் எறெல்லாம் சொல்லிப் பயனில்லை.  அதை அவரே புரிந்து கொண்டார் என்பதால்தான்  சாதிப்படுகொலைகளுக்குக் கவலைப்படாமல் ஈழப் படுகொலைகளுக்குக் கவலைப்படுகிறார்களே எனத் தொண்டர்களைத் திசை திருப்புகிறார். போகட்டும் ! எங்கிருந்தாலும் வாழட்டும்! வேதனையுடன்  இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /



அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளவே காங்கிரசுடன் கைகோர்ப்பு: தொல்.திருமாவளவன்

First Published : 07 Jul 2012 02:03:30 AM IST


சிதம்பரம், ஜூலை 6: அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதற்காகவே காங்கிரஸýடன் கைகோத்து நிற்கிறோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.  கடலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல்.திருமாவளவனின் 50-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிதம்பரத்தில் பொற்காசுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சு.திருமாறன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் மா.செ.சிந்தனைச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. துரை.ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பங்கேற்று நிர்வாகிகளிடம் பொற்காசுகளை பெற்றுக் கொண்டு பேசியதாவது:  டெசோ அமைப்பில் தற்போது நாம் சேர்ந்து இருக்கிறோம். முதலில் நம்மை அவ்வமைப்பில் சேர்க்கவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி நம்மை அவ்வமைப்பில் சேர்த்து அறிவித்தார். அவர் அறிவித்ததால் நாமும் அவ்வமைப்பில் உள்ளோம். காங்கிரúஸôடு, பிரணாப் முகர்ஜியுடன் திருமாவளவன் ஏன் கைகோத்து நிற்கிறார் என சிலர் கேட்கிறார்கள். அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள நாம் அவர்களோடு கைகோத்து நிற்கிறோம்.  தமிழக அரசியல் சூழ்நிலையில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று திரள்வது ஒரு மாற்று சக்தியாக உருவாகும். ஈழத்தமிழர் பிரச்னையில் பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் அதிமுக, திமுக.வுக்கு மாற்றாக ஒன்று சேருவோம் என நான் கூறியதை யாரும் கேட்கவில்லை. அதனால் நேற்று உருவான கட்சியின் தலைவர் எதிர்க்கட்சி தலைவராகிவிட்டார். உண்மையான உழைப்புக்கு மரியாதை  இல்லை. ஆகவே கட்சிக்கு வலிமை சேர்க்க அனைவரும் நிதியை தாராளமாக வழங்க வேண்டும் என்றார் தொல்.திருமாவளவன். திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.எஸ்.அழகிரி எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஞாயிறு, 10 ஜூன், 2012

மறைமுகமாக இந்தியைத் திணிக்க முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு

நேரடியாகவே பல வகைகளிலும் இந்தித்திணிப்பு நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதற்கு எதிராகத் தமிழக அரசியல் வாதிகள் என்ன செய்கிறார்கள்? ஆண்டிற்கு ஒரு முறை வீர வணக்க நாள் நடத்துவதாலோ எப்பொழுதாவது வீரமாகப் பேசுவதாலோ இந்தித் திணி்ப்பு நிற்காது.  தேசிய மொழிகளின் வளர்ச்சி குறித்தும்  இந்தித்திணிப்பால் அவை தாழ்வுறுவது குறித்தும் பிற மொழியாளர்களிடமும் விளக்கி  அவர்களுடன் இணைந்து வலிமையாக  எதிர்த்தால்தான் வெற்றி காண இயலும்.




மறைமுகமாக இந்தியை திணிக்க முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு

First Published : 10 Jun 2012 06:34:47 PM IST


புதுச்சேரி, ஜூன் 10: மறைமுகமாக இந்தியை திணிக்கும் முயற்சிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டினார்.இது குறித்து அவர் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:சிபிஎஸ்இ பாடத்திட்டம் 12-ம் வகுப்பு புத்தகத்தில் விடுதலைக்கு பின் இந்தியா என்ற தலைப்பில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கேலி செய்யும் சித்திரம் இடம் பெற்றுள்ளது. 1965-ம் ஆண்டு அப்போது நடைபெற்ற போராட்டத்தை எதிர்த்து ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் வந்த கார்ட்டூனை பாடப்புத்தகத்தில் போட வேண்டிய அவசியம் என்ன? மத்திய அரசு உடனடியாக பாடப்புத்தகத்தில் இருந்து இந்த கார்ட்டூனை நீக்க வேண்டும். இதை போடுவதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வெள்ளி, 11 மே, 2012

வருங்காலத்தமிழகமே தடம் புரண்டு வீழ்வதேன்? Thirumavalavan hurts sentiments of Eezham Tamils

Thirumavalavan hurts sentiments of Eezham Tamils

[TamilNet, Thursday, 10 May 2012, 17:43 GMT]
New Delhi parliamentarian and leader of Viduthalai Chiruthaigal Katchi (VCK), a member of ruling UPA alliance, Mr Thirumavalavan, meeting UPA leader Mrs Sonia Gandhi on Wednesday expressed his ‘appreciation’ about New Delhi’s stand on ‘Sri Lankan Tamils’ at the UNHRC resolution, and requested her to implement it and pressurise the Sri Lankan government to find a permanent political solution. The moment Thirumavalavan uses the phrase ‘Sri Lankan Tamils’ and thrust an identity despised by Eezham Tamils on to them, he perverts righteous political solution, commented Tamil political circles in the island. Rather than urging recognition of rights of the nation, the VCK leader pleading Sonia Gandhi, whose party presided over the genocide of Eezham Tamils, to implement UNHRC resolutions paving way for structural genocide, makes him no different from the Congress and CPI-M, they further said.


“I would like to appreciate that the position taken by our government on Sri Lankan Tamils in the UNHRC. Even after the visit of our Parliamentary Committee nothing is happened. I request you to pressurize the Sri Lankan government to find a permanent political solution to the Tamil issue. I also request you take necessary steps to implement the UNHRC resolution,” the last of the three requests of the VCK parliamentarian to his alliance leader said.

He was given with 10 minutes to meet the leader of his alliance, Sonia Gandhi.

As subjugated people of a nation facing genocide every day, the Eezham Tamils expect a party representing the oppressed people of the same ethnicity in Tamil Nadu to stand by the fundamentals. If they do not stand by it nobody else would do it, and if Tamil Nadu were not rising up New Delhi would never care.

But the VCK that exploits and imitates the symbols of the LTTE of Pirapaharan that stood against all the imperialisms of the world is pleading for concessions camouflaged to lead to permanent subjugation of the nation of Eezham Tamils, the Tamil political circles in the island pointed out.

The other concessions the VCK leader was pleading with Sonia Gandhi were the election of a Dalit Christian to the post of the President of India and job reservations for Dalits in the private sector of the corporates.

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

தமிழீழம் அமைய வேண்டுமெனப் பேரவையில் தீர்மானம்:இராமதாசு

தமிழீழம் அமைய வேண்டுமென பேரவையில் தீர்மானம்: ராமதாஸ்

First Published : 08 Aug 2011 01:15:39 AM IST

Last Updated : 08 Aug 2011 03:54:03 AM IST

சென்னை, ஆக.7: இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழம் அமைய வேண்டும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.  தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் "தமிழீழமே தீர்வு' என்ற தலைப்பில் சென்னை சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றது.  இதில் ராமதாஸ் பேசியது:  இலங்கைப் பிரச்னைக்குத் தமிழீழமே தீர்வாக இருக்க முடியும்.  சூடானில் இருந்து தெற்கு சூடான் ஏன் பிரிந்தது? இந்தோனிஷியாவில் இருந்து கிழக்கு தைமூர் ஏன் பிரிந்தது? என்பதையெல்லாம் தமிழீழக் கோரிக்கைக்கு எதிராகப் பேசுபவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.  தமிழீழத்திற்கு எதிராகப் பேசுபவர்கள் எங்களோடு விவாதிக்கலாம். எந்த இடத்தில் வந்து விவாதிக்கச் சொன்னாலும் திருமாவளவனும் நானும் தயாராக இருக்கிறோம்.  2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முசிறியில் ஜெயலலிதா பேசும்போது, "நாங்கள் வெற்றிபெற்றால், இந்திய ராணுவத்தை அனுப்பி பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேச நாட்டை பிரித்துக் கொடுத்தது போல, இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு பெற்றுத் தருவோம்' என்று பேசினார்.  இதன் அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் "இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழம் அமைய வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்ற வரவேண்டும்.  கருணாநிதி மீது தாக்கு: 2009-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை யுத்தத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, தமிழகத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் ஒரு தலைவர். அவர் யார் என்று உங்களுக்குத் தெரியும். அவர் பெயரை நான் சொல்லவில்லை. அவரை என்றைக்கும் தமிழன் மன்னிக்க மாட்டான்.  தமிழீழம் பெறுவதற்காக நானும் திருமாவளவனும் எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என்றார் ராமதாஸ்.  கருத்தரங்கில் தொல். திருமாவளவன் பேசியது: விடுதலைப்புலிகள் நசுக்கப்பட்டுவிட்டனர். இனி தமிழீழக் கோரிக்கை எழாது என்று இலங்கை அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் கடைசித் தமிழன் உள்ளவரை இந்தக் கோரிக்கை எழும்.  இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே தமிழீழம் கூடாது என்பதுதான். இப்போது ஆளும் காங்கிரஸ் கட்சியும் இதைத்தான் சொல்கிறது. பாஜகவும் இதைத்தான் சொல்கிறது.  இந்த விஷயத்தில் இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.  கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஈழப் பிரச்னையைப் போர்க்குற்றமாகக் கருதித்தான் போராடுகின்றனவே தவிர, தமிழீழம் அமைய வேண்டும் என்று கோரிக்கை வைப்பதில்லை.  திமுக தமிழீழமே தீர்வு என்று சொல்கிறது. ஆனால் இன்று சூழ்நிலை கைதியாக இருக்கிறது. அதனால் ஒன்றும் செய்யமுடியவில்லை.  முதல்வர் ஜெயலலிதா இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். இதனால் என்ன பயன்? இதுபோல் எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஒரு பயனும் இல்லை.  ஜெயலலிதாவால் தமிழீழம்தான் தீர்வு என்று அதிமுகவின் பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வரமுடியுமா? முடியாது.  ராஜீவ்காந்தி கொலை: ராஜீவ்காந்தி கொலைக்குக் காரணம் விடுதலைப் புலிகள் என்கின்றனர். ஆனால், இந்த விஷயத்தில் இன்னும் முழுமையான விசாரணை நடைபெறவில்லை. சந்திரசாமி, சுப்பிரமணிய சுவாமியை விசாரிக்க வேண்டும் என்றனர். அது முழுமையாக நடைபெற்றனவா? ராஜீவ்காந்தி கொலையின்போது பொதுமக்கள், பாதுகாவலர்கள் இறந்தனர். ஒரு காங்கிரஸ் தலைவர்கள்கூட பாதிக்கப்படாதது ஏன்? என்பதை எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ராஜீவ் கொலையில் சர்வதேச பின்னணி உள்ளது.  உலகத் தலைவர்கள் பெரும்பாலோரின் கொலையில் சிஐஏதான் பெரும் பங்கு வகித்திருந்தது என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது.  பாமகவோடு கூட்டணியா? காலில் உரலைக் கட்டிக்கொண்டு நடப்பதுபோல எம்.பி., பதவியைச் சுமந்து கொண்டிருக்கிறேன். இதனால் ஒரு பயனும் இல்லை.  இந்தப் பதவியைத் துறந்துவிட்டு,தமிழீழப் போராட்டத்திற்கு வரச் சொன்னால் இப்போதேகூட வர தயாராக இருக்கிறேன்.  ஏற்கெனவே, இரண்டரை ஆண்டுகள் மீதமிருக்கும் நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை உதறியவன் நான்.  பாமகவோடு அரசியல் கூட்டணி என்றால் நிர்வாகிகளோடு விவாதிக்க வேண்டும்.  பாமகவுடனான கூட்டணி குறித்து உடனே முடிவெடுக்க முடியாது என்று திருமாவளவன் கூறினார்.  பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொதுச்செயலாளர் து.ரவிக்குமார்,முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.  தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் "தமிழீழமே தீர்வு' என்ற தலைப்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற கருத்தரங்கில் பேசுகிறார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். உடன் (இடமிருந்து) முன்னாள்  மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்  தொல். திருமாவளவன், பொதுச்செயலாளர் து.ரவிக்குமார்.

செவ்வாய், 19 ஜூலை, 2011

நீதிக்குத் தலை வணங்க வேண்டும்: அரசுக்குத் தங்கபாலு வலியுறுத்தல்

நீதிக்குத் தலை வணங்க வேண்டும்: அரசுக்குத் தங்கபாலு வலியுறுத்தல்

First Published : 19 Jul 2011 04:44:13 AM IST

Last Updated : 19 Jul 2011 05:33:32 AM IST

சென்னை, ஜூலை 18: சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்குத் தமிழக அரசு தலை வணங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு வலியுறுத்தியுள்ளார்.  இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல் செய்ய வேண்டும், அதற்கான புத்தகங்களை இந்த மாதம் 22-ம் தேதிக்குள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற தீர்ப்பு மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மகிழ்ச்சி தருவதாக உள்ளது. சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்யவில்லை என்றும் குறைகளை நீக்கி அடுத்த ஆண்டு அமல் செய்வோம் என்றும்தான் உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு கூறியுள்ளது.  எனவே உயர் நீதிமன்றத்தின் இத் தீர்ப்பு அரசுக்கு வெற்றியோ தோல்வியோ அல்ல. எனவே, கெüரவம் பார்க்காமல் சமச்சீர் கல்வித் திட்டத்தை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தங்கபாலு கூறியுள்ளார்.  மேல்முறையீடு கூடாது - ராமதாஸ்: சமச்சீர் கல்வி வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  அவரது அறிக்கை: சமச்சீர் கல்விக்குத் தடை விதிக்க முடியாது என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. மீண்டும் மேல்முறையீடு செய்வதால் எந்தப் பயனும் இல்லை.  அரசின் பிடிவாதப் போக்கால் கடந்த 2 மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்குச் சென்றும் பாடம் படிக்க முடியாமல் உள்ளனர். முதல் பருவத் தேர்வும் நடக்கவில்லை.  செப்டம்பரில் காலாண்டுத் தேர்வு நடத்த வேண்டுமானால் இனியும் தாமதமில்லாமல் பாடங்களைத் தொடங்கியாக வேண்டும்.  எனவே, உயர் நீதிமன்ற அறிவுரைப்படி சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக அரசு செயல்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.  திருமாவளவன்: சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் வலியுறுத்தியுள்ளார்.  மேல்முறையீடு செய்யத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது மாணவர்களின் கல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்படும் பிடிவாதப் போக்கை வெளிப்படுத்துகிறது.  மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பெருந்தன்மையோடு இப் பிரச்னையை அணுக வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெள்ளி, 22 அக்டோபர், 2010

திருமாவளவன் ராஜிநாமா செய்ய வேண்டும்: கார்த்தி ப.சிதம்பரம்


சிதம்பரம், அக். 21: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காங்கிரûஸ விமர்சித்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்  தலைவர் தொல்.திருமாவளவன் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் கூறினார்.முன்னாள் எம்பி ப.வள்ளல்பெருமானின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சிதம்பரம் வந்த கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வாரப்பத்திரிகை ஒன்றில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விமர்சித்தும், தமிழக முதல்வருக்கு பல ஆலோசனைகளையும் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி உதவியுடன் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற அவர், இது போல கூறியது என்னாலும், எந்த ஒரு காங்கிரஸ் தொண்டனாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.எனவே உடனே அவர் தனது எம்பி பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். 125 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியை குறை சொல்ல அவருக்கு தகுதி கிடையாது. காங்கிரஸ் கட்சிக்கென்று ஒரு தனித்துவம் உண்டு. தமிழகத்தில் கூட்டணி குறித்து சோனியாகாந்திதான் முடிவு செய்வார்.மாநில அரசு திட்டங்கள் அனைத்துக்கும் மத்திய அரசுக்கு பங்கு உண்டு. மத்திய அரசால்   எந்த திட்டங்களையும் மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்த இயலாது. தமிழகத்தில் தற்போது ஜேஎன்என் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதிஉதவியுடன் 600 புதிய பஸ்கள் விடப்பட்டுள்ளது என்றார்.
கருத்துக்கள்

பாவம்! கோவன் வழியில் அறிக்கைகள் மூலம் தலைவராகலாம் எனக் கருதுகிறார்.திருமாவளவனுக்கு ஆதரவாகக் காங். பரப்புரை மேற்கொள்ள வில்லை. காங். வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகள் வாக்கு வங்கி உதவியதால் அனைத்துக் காங்.நா.உ.க்களையும் பதவி விலகச் சொல்வாரா? தோல்வி பெற்றதாக ஒப்புக் கொண்ட பின் முடிவை மாற்றி வெற்றி பெற்றதாகக் காட்டிக் கொண்டு அமைச்சர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் தன் தந்தையிடம் பதவி விலக வலியுறுத்துவாரா? வைக்கோ வெற்றியைத் தவறான முறையில் பெற்றதாகக் காட்டிப் பதவி ஏற்றுள்ள விருதுநகர் நா.உ.வைப் பதவி விலகச் சொல்வாரா? தமிழகத்திட்டங்கள் போல் மத்திய அரசு நிதியில் காங். ஆளும் பிற மாநிலங்களில் செயல்படுத்த வில்லையே! மத்திய அரசு நிதி தமிழக அரசு முதலான அனைத்து மாநில ஙகளின் நிதிப்பங்களிப்பின் மூலம்தானே உருவாகிறது. மத்திய அரசு திட்டங்கள் யாவும் மாநில அரசின் திட்டங்கள் எனக் கூறுவாரா? ஊழலின் ஊற்றுக்கண்ணும் உறைவிடமும் 
கோட்டையுமான காங். கட்சியில் 
இருந்துகொண்டு ஓயாது பொய் சொன்னாலும் அதன் ஊழல் கறையை மறைக்க முடியாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/22/2010 4:43:00 AM
HE..HE..HE THIS FELLOW`S FATHER DISOLVED HIS OWN PARTY AND SURRENDERED TO THIS ITALIAN COBBLER WOMAN JUST FOR A TEMPORARY MINISTER POST....HIS DIGNITY IS THIS...BUT HIS HEIR IS CRITISING OTHERS...WHAT A JOKE..AN ITALIAN WOMAN DECIDE THE FATE OF A 125 YEARS PARTY..NOT A SINGLE POVERTY INDIAN IS NOT QUALIFIED THIS POST....DEMOCK-CRAZY INDIAN STYLE..SORRY ISDYLE(INGLSIH)
By KOOPU
10/22/2010 4:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

கருணாநிதிக்கு சின்ன கருணாநிதி கடிதம்.

சவுக்கிற்குப் பட்டம் கொடுக்கத் தெரியவில்லை. சின்னக் கலைஞர் என்றுதான் பட்டம் கொடுக்க வேண்டும். அதை ஒரு சாரார் சின்ன எட்டப்பன் எனக் கருதலாம். மறுசாரார் பாராட்டாகக் கருதலாம். எவ்வாறிருப்பினும் எழுச்சித் தலைவர் திருமா அவர்கள் தன்னைப்பற்றி மறு ஆய்வு செய்ய உங்கள் படைப்பு அவருக்கு உதவும். எனினும் ஒன்றை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். சிலக் கசப்பான சூழல்களில் அவர் எடுத்த அரசியல் கூட்டணி   முடிவு அவருக்கு எதிராக உள்ளதை அவரே  அறிவார். பிற அரசியல் தலைவர்களை ஒப்பிடுகையில் திருமாவின் நெஞ்சுரம் பாராட்டத்தக்கதே. தன்னை நிலைப்படுத்திக் கொண்டால்தான் தன் குரலை ஒலிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற கண்ணோட்டத்தில் அவரது கூட்டணி கொலைகார அணியில் இணைந்தது மிகத் தவறுதான். எனினும் அடுத்த நிலைத் தலைவர்களில் வைக்கோ , திருமா முதலானவர்கள் இணைந்தால்தான் தமிழினம் எழுச்சி பெறும். தமிழரசி நடராசன் இதற்கான முயற்சியில் ஈடுபடலாம். பிறந்த நாள் கண்டுள்ள திருமாவிற்கு நல்வாழ்த்து சவுக்கின் சார்பாக நான் தெரிவிக்கின்றேன். அவர் மீது விழுந்த கரும்புள்ளிகளை அகற்றித் தமிழர் தாயகம் அமைவதில் தன் பங்களிப்பைப் பெருக்கி  வருங்காலத்தில் முதல்வராகத் திகழ்ந்து தமிழின உரிமைக்கு வழிகாட்டுவாராக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

சனி, 13 மார்ச், 2010

கருணாநிதிக்கு "அம்பேத்கர் சுடர்' விருது: தொல். திருமாவளவன்



சென்னை, மார்ச் 12: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு "அம்பேத்கர் சுடர்' விருது வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு "அம்பேத்கர் சுடர்', திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு "பெரியார் ஒளி', கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுக்கு "காமராசர் கதிர்', மொழிஞாயிறு தேவநேயப் பாவாணருக்கு "செம்மொழி ஞாயிறு', கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு "காயிதேமில்லத் பிறை', ஞான அலாய்சியஸýக்கு "அயோத்திதாசர் ஆதவன்' ஆகிய விருதுகள் வழங்கப்பட உள்ளன.அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி சென்னையை அடுத்த மறைமலை நகரில் நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும்.மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்களால் எதிர்பார்த்த அளவுக்கு சிறுதொழில் வளர்ச்சியும், குடும்ப மேம்பாடும் ஏற்படவில்லை. போதிய முன் அனுபவம் இல்லாத காரணத்தால் சிறு தொழில்களில் ஈடுபட்ட பெண்கள் கடன்சுமையில் சிக்கியுள்ளனர்.எனவே மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு உடனே வேண்டும் என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கை. ஆனாலும் இப்போதைக்கு இந்த மசோதவை மக்களவையில் ஆதரிக்க முடிவு செùய்துள்ளோம். இப்பிரச்னைக் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்.நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில், மக்கள் தொகை அடிப்படையில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு அளிக்க வேண்டும். பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினருக்கு மாநிலங்களவையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.சர்ச்சை வேண்டாம்: முதல்வர் கருணாநிதி தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர். புதிய, பழைய சட்டப் பேரவையில் அவரது உருவப் படம் வைப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது. அதில் சர்ச்சையை எழுப்புவது தேவையற்றது.இந்திய அரசில் சாசனத்தின் தந்தை என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்தில் உள்ளதுபோல தமிழக சட்டப் பேரவை வளாகத்திலும் அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும்.மத்திய பட்ஜெட்டில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. இந்தியாவில் உள்ள இலங்கை அகதி முகாம்கள் திறந்தவெளி சிறைச்சாலைகள் போல இருக்கின்றன. இலங்கை அகதிகள் விரும்பாவிட்டால் கட்டாயப்படுத்தி அவர்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாது. செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாம்களை உடனடியாக மூட வேண்டும். அதில் உள்ளவர்களை சாதாரண அகதி முகாம்களுக்கு மாற்ற வேண்டும்.யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம் திறக்கப்படுவதை வரவேற்கிறேன் என்றார் திருமாவளவன்.
கருத்துக்கள்

அனைத்து நாடுகளிலும் தமிழ் ஈழத் தூதரகங்கள் அமைக்கும் நாள் விரைவில் வரட்டும்! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/13/2010 3:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *