சனி, 7 ஜூலை, 2012

பதவி ஆசையால் கொலைகாரக் காங். உடன் கூட்டணி- திருமா ஒப்புதல் வாக்குமூலம்

ன்கையூட்டு என்பதை அன்பளிப்பு  என்று  சொல்வதுபோல் பதவி ஆசையை இப்படியும் சொல்லலாமோ! எதிரிகள் ஒரு கோடி இட்டழைத்தாலும் தொடேன் எனச் சொல்ல வேண்டியவர் பதவி ஆசையால் இணைவதால் இனிமேல் ஈழம் எறெல்லாம் சொல்லிப் பயனில்லை.  அதை அவரே புரிந்து கொண்டார் என்பதால்தான்  சாதிப்படுகொலைகளுக்குக் கவலைப்படாமல் ஈழப் படுகொலைகளுக்குக் கவலைப்படுகிறார்களே எனத் தொண்டர்களைத் திசை திருப்புகிறார். போகட்டும் ! எங்கிருந்தாலும் வாழட்டும்! வேதனையுடன்  இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /



அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளவே காங்கிரசுடன் கைகோர்ப்பு: தொல்.திருமாவளவன்

First Published : 07 Jul 2012 02:03:30 AM IST


சிதம்பரம், ஜூலை 6: அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதற்காகவே காங்கிரஸýடன் கைகோத்து நிற்கிறோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.  கடலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல்.திருமாவளவனின் 50-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிதம்பரத்தில் பொற்காசுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சு.திருமாறன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் மா.செ.சிந்தனைச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. துரை.ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பங்கேற்று நிர்வாகிகளிடம் பொற்காசுகளை பெற்றுக் கொண்டு பேசியதாவது:  டெசோ அமைப்பில் தற்போது நாம் சேர்ந்து இருக்கிறோம். முதலில் நம்மை அவ்வமைப்பில் சேர்க்கவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி நம்மை அவ்வமைப்பில் சேர்த்து அறிவித்தார். அவர் அறிவித்ததால் நாமும் அவ்வமைப்பில் உள்ளோம். காங்கிரúஸôடு, பிரணாப் முகர்ஜியுடன் திருமாவளவன் ஏன் கைகோத்து நிற்கிறார் என சிலர் கேட்கிறார்கள். அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள நாம் அவர்களோடு கைகோத்து நிற்கிறோம்.  தமிழக அரசியல் சூழ்நிலையில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று திரள்வது ஒரு மாற்று சக்தியாக உருவாகும். ஈழத்தமிழர் பிரச்னையில் பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் அதிமுக, திமுக.வுக்கு மாற்றாக ஒன்று சேருவோம் என நான் கூறியதை யாரும் கேட்கவில்லை. அதனால் நேற்று உருவான கட்சியின் தலைவர் எதிர்க்கட்சி தலைவராகிவிட்டார். உண்மையான உழைப்புக்கு மரியாதை  இல்லை. ஆகவே கட்சிக்கு வலிமை சேர்க்க அனைவரும் நிதியை தாராளமாக வழங்க வேண்டும் என்றார் தொல்.திருமாவளவன். திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.எஸ்.அழகிரி எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக