சனி, 13 மார்ச், 2010

கருணாநிதிக்கு "அம்பேத்கர் சுடர்' விருது: தொல். திருமாவளவன்



சென்னை, மார்ச் 12: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு "அம்பேத்கர் சுடர்' விருது வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு "அம்பேத்கர் சுடர்', திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு "பெரியார் ஒளி', கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுக்கு "காமராசர் கதிர்', மொழிஞாயிறு தேவநேயப் பாவாணருக்கு "செம்மொழி ஞாயிறு', கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு "காயிதேமில்லத் பிறை', ஞான அலாய்சியஸýக்கு "அயோத்திதாசர் ஆதவன்' ஆகிய விருதுகள் வழங்கப்பட உள்ளன.அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி சென்னையை அடுத்த மறைமலை நகரில் நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும்.மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்களால் எதிர்பார்த்த அளவுக்கு சிறுதொழில் வளர்ச்சியும், குடும்ப மேம்பாடும் ஏற்படவில்லை. போதிய முன் அனுபவம் இல்லாத காரணத்தால் சிறு தொழில்களில் ஈடுபட்ட பெண்கள் கடன்சுமையில் சிக்கியுள்ளனர்.எனவே மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு உடனே வேண்டும் என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கை. ஆனாலும் இப்போதைக்கு இந்த மசோதவை மக்களவையில் ஆதரிக்க முடிவு செùய்துள்ளோம். இப்பிரச்னைக் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்.நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில், மக்கள் தொகை அடிப்படையில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு அளிக்க வேண்டும். பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினருக்கு மாநிலங்களவையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.சர்ச்சை வேண்டாம்: முதல்வர் கருணாநிதி தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர். புதிய, பழைய சட்டப் பேரவையில் அவரது உருவப் படம் வைப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது. அதில் சர்ச்சையை எழுப்புவது தேவையற்றது.இந்திய அரசில் சாசனத்தின் தந்தை என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்தில் உள்ளதுபோல தமிழக சட்டப் பேரவை வளாகத்திலும் அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும்.மத்திய பட்ஜெட்டில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. இந்தியாவில் உள்ள இலங்கை அகதி முகாம்கள் திறந்தவெளி சிறைச்சாலைகள் போல இருக்கின்றன. இலங்கை அகதிகள் விரும்பாவிட்டால் கட்டாயப்படுத்தி அவர்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாது. செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாம்களை உடனடியாக மூட வேண்டும். அதில் உள்ளவர்களை சாதாரண அகதி முகாம்களுக்கு மாற்ற வேண்டும்.யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம் திறக்கப்படுவதை வரவேற்கிறேன் என்றார் திருமாவளவன்.
கருத்துக்கள்

அனைத்து நாடுகளிலும் தமிழ் ஈழத் தூதரகங்கள் அமைக்கும் நாள் விரைவில் வரட்டும்! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/13/2010 3:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக