ilakkiyam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ilakkiyam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 நவம்பர், 2011

இந்திய இலக்கியச் சிற்பிகள் : சி.இலக்குவனார் – படித்துப் பயனடைக

சி.இலக்குவனார் – படித்துப் பயனடைக

பதிவு செய்த நாள் : 12/11/2011


புத்தகம் :
சி.இலக்குவனார்:

தமிழ்க் காப்புக் கழகம் மூலமும் ‘சங்க இலக்கியம்’,  ‘குறள் நெறி’ , முதலான இதழ்களைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் நடத்தியும், தமிழ் மறுமலர்ச்சிக்கு ஊக்கம் தந்தவர். இவருடைய ‘தமிழ் உரிமைப் பெருநடைப்பயணம்‘ தமிழர் வரலாற்றில் பெரும் புரட்ச்சியை ஏற்ப்படுத்தியது. ஆங்கில அறிவின் திறத்தால் தமிழ் மேன்மையை உலகுக்குக் காட்டியவர். இவரது ஆய்வு நூல்கள் சிறந்த விளக்கங்களையும், கூறிய முடிவுகளையும் தமிழர்க்கு வழங்கின. நுண்மான் நுழைபுலமும் அஞ்சா நெஞ்சமும் இவரின் தனி அடையாளங்கள். “ஆசிரியர் மறைமலை அடிகளாரின் பரந்தாழ்ந்த புலமையுடன். அறிஞர் கா.சு.பிள்ளையின் நுண்மான் நுழைபுல ஆய்வுத்திறனும், நாவலர் சோம சுந்தர பாரதியாரின் நிமிர்நடையும் துணிவும் உடையவர் இலக்குவனார்” எனக் குறிப்பிட்டார் பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரை. இலக்குவனாரது தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு மிகச் சிறப்பானது. ‘அரும்புலமையும் அஞ்சாமையும் சார்பற்ற நோக்கும் கொண்டவர் இவர்‘ என  அறிஞர் அண்ணா குறிப்பிட்டுள்ளார். வாழ்நாள் முழுமையும் தமில்காத்துத் தமிழ் வளர்க்கும் செந்தமிழ்க் காவலராகவே திகழ்ந்தார். அன்பின் பிணைப்பினால் பண்பு கெழுமிய மிகப்பெரும் நண்பர் குழாம் இவருக்கு உண்டு.

ஆசிரியர் :
இந்நூலாசிரியர் மறைமலை இலக்குவனார் தமிழ்நாடு அரசின் கலைக்கல்லூரிகளில் 35 ஆண்டுகாலம் பணிபுரிந்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஓராண்டுகாலம் சிறப்புவருகை பேராசிரியராகப் பனி புரிந்த இவர் பல்துறைசார் அணுகுமுறைகள் வழி இலக்கியத்தை ஆய்வதில் பெரும் நாட்டமுடையவர். திறனாய்வுத் துறையில் இவர் எழுதியுள்ள பன்னிரண்டு நூல்களும் இலக்கிய ஆய்வுப்புலத்தில் புதிய திசைகளைப் புலரவைக்க வேண்டும் என்னும் இவரது பெராவலைப் புலப்படுத்துவன எனலாம்.

புத்தகம் கிடைக்குமிடம் :
சாகித்திய அகாதெமி
#443, குணா அடுக்ககம்,
அண்ணா சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை-600 018.

அட்டைப் படங்கள்:



3

புதன், 26 அக்டோபர், 2011

vaazhviyal unmaikal aayiram 471-480 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 471-480

thamizh (tamil) is the mother of all indian languages - Prof.Dr.S.Ilakkuvanar :இந்திய மொழிகளின் தாயே தமிழ்தான்

சனி, 22 அக்டோபர், 2011

புதன், 19 அக்டோபர், 2011

Multi personality of Dr.S.Ilakkuvanar - Thirukkural Studies: பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி

நன்றி “சென்னை வானொலி நிலையம்”
பதிவு செய்த நாள் : 18/10/2011


பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை – திருக்குறள் ஆராய்ச்சி

தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் காலத்தால் அழியாத கருவூலம்; உள்ளுதொறும் உள்ளுதொறும் உயர் எண்ணங்களை விளைவிக்கும் உயர்நூல்; எழுதப்பட்டது ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட அக்காலத்தில்தான் என்றாலும் எக்காலத்திலும் ஏற்றம் தரும் வாழ்வியல் இலக்கியம்; உலகிலே எண்ணற்ற நூல்கள் தோன்றிவரினும் உலக நூலாகக் கருதக்கூடிய ஒரே ஒப்புயர்வற்ற அறநூல். ஒப்புயர்வற்ற திருக்குறளில் முற்றும் துறைபோகிய புலனழுக்கற்ற புலவர் பெருமானாய்த் திகழ்ந்தவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள்.

தொல்காப்பியம், சங்கஇலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றை  ஆய்ந்தாய்ந்து அகன்ற அறிவுசான்ற சான்றோராக ஒருபுறமும் அவற்றைப் பாரெங்கும் பரப்பும் அருந்தமிழ்த் தொண்டராக மறுபுறமும் பேராசிரியர் சி.இலக்குவனார் திகழ்ந்தார். கடமையில் இருந்து வழுவாக் கல்வி ஆசானாகவும் தமிழ்நெறியைப் போற்றும் புலமையாளராகவும் உயர்தமிழுக்கு வரும் கேட்டினை உடைத்தெறியும் உரையாளராகவும் மக்களிடையே நல்ல தமிழைக் கொண்டு செல்லும் இதழாளராகவும் எங்கும் தமிழை ஏற்றம் பெறச்  செய்யும் போராளியாகவும் பன்முகப்பாங்குடன் திகழ்ந்த பேராசிரியர் அவர்களின் திருக்குறள் ஆராய்ச்சியைப்பற்றி மட்டும் ஈண்டுப் பார்ப்போம்.

தொடர்ச்சிக்கு :
 


இலக்குவனார் இலக்கிய இணையம், சென்னை
இணைந்து நிகழ்த்தும்
டாக்டர் சி. இலக்குவனார் நூற்றாண்டு உரையரங்கம்
நாள்: 29.9.2011                                                                                காலை 10.00 மணி

தமிழினத் தொன்மையையும் தனித்தன்மையையும் நிறுவும் வகையில் நமக்குக் கிட்டியுள்ள சான்றுகள் மிகச் சிலவே. அவற்றுள் தலையாயது ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம். மொழி, இலக்கியம், வாழ்வியல் மூன்றனுக்கும் இலக்கணம் கூறும் பண்பாட்டுப் பெட்டகம். இதுபோன்றதோர் இலக்கண நூல் உலகில் எந்த மொழியிலும் தோன்றியது இல்லை. தமிழிலும்கூட இதற்கு நிகரானதோர் இலக்கண நூல் இதுவரை உருவாகவில்லை. தொல்காப்பியத்திற்கு முன்னர்ப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இலக்கண இலக்கிய வளம் மிக்கதாய்த் தமிழ் இருந்துவந்திருக்கவேண்டும் என்பதற்கு இதுவே நற்சான்றாய்த் திகழ்கிறது.

தமிழால் வாழ்ந்தோர் பலர்; தமிழுக்காக வாழ்ந்தோர் மிகச் சிலர். அம்மிகச் சிலருள் ஒருவரான பேராசிரியர் சி. இலக்குவனார் நுண்மாண் நுழைபுலம் வாய்ந்த ஆராய்ச்சியாளர், மாணவர்களால் பெரிதும் போற்றப்பட்ட பேராசிரியர், உணர்ச்சிக் கவிஞர், எழுச்சியூட்டும் இதழாளர், தமிழினப் போராளி எனப் பன்முக ஆளுமை வாய்ந்தவர். தமிழின் இரு கண்களாக இலங்கும் தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் நுட்பமாய் ஆய்வுசெய்து அறிவுலகிற்கு வழங்கியவர். இவர் ஆற்றிய பல்வேறு பணிகளுள் எக்காலத்தும் நிலைத்த புகழ் தருவதாய்த் தமிழின் மேன்மையை உலகிற்கு உணர்த்துவதாய் அமைந்தது அவரது தொல்காப்பிய ஆராய்ச்சியேயாகும். தொல்காப்பியத்தின் அருமைபெருமைகளைப் பிறமொழி அறிஞர்கள் உணரவேண்டுமென்கிற உயரிய நோக்குடன் அதை ஆங்கிலத்தில் செம்மையாக மொழியாக்கம் செய்திருப்பதுடன் மொழியியல் பார்வையில் ஆழமும் விரிவும் பொருந்தியதொரு திறனாய்வையும் வழங்கியிருப்பது அவரது விரிந்த நூலறிவையும் புலமைசார் ஆய்வு அணுகுமுறையையும் பல்லாண்டுக் கடும் உழைப்பினையும் புலப்படுத்தி நிற்கின்றன.


தொடர்ச்சி காண்க   :




வியாழன், 13 அக்டோபர், 2011

அரசியல் ஆத்திசூடி

அரசியல் ஆத்திசூடி

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 13/10/2011


1. அறநெறி தவறுவோர்க்கு வாக்கு அளிக்காதீர்!
2. ஆருயிர்த் தமிழைப் போற்றாதவர்க்கு வாக்களிக்காதீர்!
3. இனப் பகைவருக்கு வாக்களிக்காதீர்.
4. ஈழத் தமிழர்களை அழித்தவர்க்கு வாக்களிக்காதீர்!
5. உண்மை பேசாதவர்க்கு வாக்களிக்காதீர்
6. ஊழலில் வாழ்பவர்க்கு வாக்களிக்காதீர்!
7. எளிமையை மறந்தவர்க்கு வாக்களிக்காதீர்
8. ஏய்த்துப் பிழைப்பவர்க்கு வாக்களிக்காதீர்!
9. ஐயததிற்கு இடம் ஆனவர்களுக்கு வாக்களிக்காதீர்!
10. ஒழுக்கக் கேடர்களுக்கு வாக்களிக்காதீர்!
11.ஓய்விலே சுவை காண்பவருக்கு வாக்களிக்காதீர்!
12. ஔவியம் (அழுக்காறு) உடையவர்க்கு வாக்களிக்காதீர்!
13. அஃகம் (முறைமை ) தவறுபவர்க்கு வாக்களிக்காதீர்!
14. கயவருக்கு வாக்களிக்காதீர்!
15. காலம் அறிந்து உதவாதவர்க்கு வாக்களிக்காதீர்!
16. கிடைத்ததை எல்லாம் சுருட்டுபவருக்கு வாக்களிக்காதீர்!
17. கீழான செயல் புரிவோருக்கு வாக்களிக்காதீர்!
18. குற்ற மனம் கொண்டவருக்கு வாக்களிக்காதீர்!
19. கூட்டுக் கொள்ளையருக்கு வாக்களிக்காதீர்!
20. கெடுமதி படைத்தோருக்கு வாக்களிக்காதீர்!
21. கேடு கெட்டன செய்வோருக்கு வாக்களிக்காதீர் !
22. கைச் சின்னத்திற்கு வாக்களிக்காதீர் !
23. கொடுங்கோலருக்கு வாக்களிக்காதீர் !
24. கோழைக்கு வாக்களிக்காதீர் !
25. கௌவை (துன்பம்) தருபவருக்கு வாக்களிக்காதீர் !
26. ‘ங’ போல் வளையாதவருக்கு வாக்களிக்காதீர் !
27. சட்டத்தை மதியாதவருக்கு வாக்களிக்காதீர் !
28. சாதி வெறியருக்கு வாக்களிக்காதீர் !
29. சிங்களக் கொடுமைக்குத் துணைபுரிபவருக்கு வாக்களிக்காதீர் !
30. சீறவேண்டிய பொழுது சீறாதவருக்கு வாக்களிக்காதீர் !
31. சுரண்டி வாழ்பவருக்கு வாக்களிக்காதீர்!
32. சூதருக்கு வாக்களிக்காதீர்!
33. செய்ய வேண்டுவன செய்யாதவருக்கு வாக்களிக்காதீர் !
34. சேர்ந்தாரைக் கொல்லுபவருக்கு வாக்களிக்காதீர்!
35. ‘சை’ என இகழ வேண்டியவருக்கு வாக்களிக்காதீர் !
36. சொல்தவறுவோர்க்கு வாக்களிக்காதீர்!
37. சோம்பேறிகளுக்கு வாக்களிக்காதீர் !
38. ஞமலி (நாய்) போல் தன்னினத்தையே எதிர்ப்பவருக்கு வாக்களிக்காதீர்!
39. ஞாட்பு (போர்க்களம் ) எனச் சொல்லிக் கொலைக் களம் ஆக்கியவருக்கு வாக்களிக்காதீர்!
40. ஞிமிறு (தேனீ) போல் சுறுசுறுப்பாக இயங்காதவருக்கு வாக்களிக்காதீர்!
41. ஞெகிழும் (மனம் இளகும்) இயல்புஅற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
42. ஞேயம் (அன்பு) இல்லாதவர்க்கு வாக்களிக்காதீர்!
43. ஞொள்ளும் (அஞ்சும்) இயல்பினருக்கு வாக்களிக்காதீர்!
44. தமிழ்ப்பகைவருக்கு வாக்களிக்காதீர் !
45. தாய்த்தமிழைப் பழிப்பவருக்கு வாக்களிக்காதீர் !
46. திருக்குறள் நெறி போற்றாதவருக்கு வாக்களிக்காதீர் !
47. தீந்தமிழை உயர்த்தாதவருக்கு வாக்களிக்காதீர் !
48. துன்பம் போக்காதவருக்கு வாக்களிக்காதீர் !
49. தூய தமிழைப் பேணாதவருக்கு வாக்களிக்காதீர் !
50.தெளிவில்லாதவருக்கு வாக்களிக்காதீர் !
51. தேவையைப் பெருக்கிக் கொள்பவருக்கு வாக்களிக்காதீர் !
52. தையலுக்கு (பெண்களுக்கு) இணை உரிமை அளிக்காதவருக்கு வாக்களிக்காதீர் !
53. தொன்மைத்தமிழைச் சிதைப்பவருக்கு வாக்களிக்காதீர் !
54. தோள்கொடுத்து உதவாதவருக்கு வாக்களிக்காதீர் !
55. தௌவையைப் (வறுமையை)ப் போக்காதவருக்கு வாக்களிக்காதீர் !
56. நற்றமிழில் பேசாதவருக்கு வாக்களிக்காதீர் !
57. நாணயம் தவறுபவருக்கு வாக்களிக்காதீர் !
58. நிதியைச் சுருட்டுவோருக்கு வாக்களிக்காதீர் !
59. நீதி தவறுவோருக்கு வாக்களிக்காதீர் !
60. நுகர் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்த அறியாதவருக்கு வாக்களிக்காதீர் !
61. நூக்கம் (ஊசலாட்டம்) உள்ளவர்க்கு வாக்களிக்காதீர்!
62. நெஞ்சாரம் (மனத்துணிவு) இல்லாதவர்க்கு வாக்களிக்காதீர்!
63. நேர்மை அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
64. நைச்சியம் பண்ணுவோர்க்கு வாக்களிக்காதீர்!
65. நொய்ம்மையாளருக்கு (மனத்திடம் இல்லாதவர்க்கு) வாக்களிக்காதீர்!
66. நோகச் செய்வோருக்கு வாக்களிக்காதீர்!
67. பகுத்தறிவு அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
68. பாடுபடாதவருக்கு வாக்களிக்காதீர்!
69. பிறன்மனை நோக்குபவர்க்கு வாக்களிக்காதீர்!
70. பீடு அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
71. புலனெறி அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
72. பூச்சாளருக்கு (வெளிப்பகட்டாளருக்கு) வாக்களிக்காதீர்!
73. பெரியாரைப் போற்றாதவர்க்கு வாக்களிக்காதீர்!
74. பேராசையாளர்க்கு வாக்களிக்காதீர்!
75. பையச் செயல்படுநர்க்கு வாக்களிக்காதீர்!
76. பொதுமையை மறுப்பவர்க்கு வாக்களிக்காதீர்!
77. போக்கிலிகளுக்கு வாக்களிக்காதீர்!
78. மக்கள்நேயம் அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
79. மாண்பற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
80. மிண்டுநர்க்கு (மதத்தால் பிழைப்பவர்க்கு) வாக்களிக்காதீர்!
81. மீச்செலவு (அடங்காச் செலவு) செய்யுநர்க்கு வாக்களிக்காதீர்!
82. முரடர்க்கு வாக்களிக்காதீர்!
83. மூடர்க்கு வாக்களிக்காதீர்!
84. மென்சொல் அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
85. மேன்மை அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
86. மையலில் திரிபவர்க்கு வாக்களிக்காதீர்!
87. மொழிக்கொலைஞர்க்கு வாக்களிக்காதீர்!
88. மோசடியாளர்க்கு வாக்களிக்காதீர்!
89. யாகம் செய்பவர்க்கு வாக்களிக்காதீர்!
90. வஞ்சகர்க்கு வாக்களிக்காதீர்!
91. வாய்மை அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
92. விலைக்குக் கேட்பவர்க்கு வாக்களிக்காதீர்!
93. வீறு அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
94. வெய்யனுக்கு(க் கொடியவனுக்கு) வாக்களிக்காதீர்!
95. வேடதாரிகளுக்கு வாக்களிக்காதீர்!
96. வையகம் சுரண்டுநர்க்கு வாக்களிக்காதீர்!
97. அன்னைத் தமிழைப் போற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
98 ஆரா அருந்தமிழை வளர்ப்பவர்க்கு வாக்களிப்பீர்!
99. இன்றமிழை இயம்புநர்க்கு வாக்களிப்பீர்!
100. ஈடில்லாத் தமிழை எழுதுநர்க்கு வாக்களிப்பீர்!
101. உயர்வளத்தமிழை உரைப்பவர்க்கு வாக்களிப்பீர்!
102. ஊடகத்தில் தமிழைக் காப்பவர்க்கு வாக்களிப்பீர்!
103. என்றும் தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்!.
104. ஏழிசைத் தமிழை ஏத்துவோர்க்கு வாக்களிப்பீர்!
105. ஐந்திரத் தமிழை அணிசெய்வோர்க்கு வாக்களிப்பீர்!
106. ஒண்டமிழை முன்னேற்றுவோர்க்கு வாக்களிப்பீர்!
107. ஓங்கல் தமிழை ஓதுவோர்க்கு வாக்களிப்பீர்!
108. ஔவைத் தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்!
109. கன்னித்தமிழைப் படிப்பவர்க்கு வாக்களிப்பீர்!
110. காவியத் தமிழைச் செழிப்பாக்குநர்க்கு வாக்களிப்பீர்!
111. கிளைமிகு தமிழைக் கிளப்பவர்க்கு வாக்களிப்பீர்! (கிளப்பவர் – எழுச்சியுடன் உரைப்பவர்)
112. கீழ்க்கணக்குத் தமிழை வழங்குநர்க்கு வாக்களிப்பீர்!
113. குன்றாத் தமிழைக் குயிற்றுநர்க்கு வாக்களிப்பீர்! (குயிற்றுநர் – மனத்தில் பதியும்படிச் சொல்லுபவர்)
114. கூத்துத் தமிழை அளிப்பவர்க்கு வாக்களிப்பீர்!
115. கெடுதி அறியாத் தமிழை விளம்புநர்க்கு வாக்களிப்பீர்!
116. கேடிலித் தமிழைப் பகறுவோர்க்கு வாக்களிப்பீர்!
117. கைவளத் தமிழைக் கட்டுரைப்பவர்க்கு வாக்களிப்பீர்!
118. கொற்றவர் தமிழைச் சொற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
119. கோலோச்சும் தமிழை ஓயாதுரைப்பவர்க்கு வாக்களிப்பீர்!
120. சங்கத் தமிழைச் செப்புநர்க்கு வாக்களிப்பீர்!
121. சான்றோர் தமிழைச் சாற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
122. சிறந்த தமிழைப் பேசுநர்க்கு வாக்களிப்பீர்!
123. சீர்மிகுந்த தமிழைப் பரவுநர்க்கு வாக்களிப்பீர்! (பரவுநர் – துதிப்பவர்)
124. சுடரொளித் தமிழை ஏத்துவோர்க்கு வாக்களிப்பீர்!
125. சூரியத் தமிழைச் சூழவைப்பவர்க்கு வாக்களிப்பீர்!
126. செந்தமிழைப் பரப்புநர்க்கு வாக்களிப்பீர்!
127. சேமத் தமிழைச் செவியறிவுறுத்துநர்க்கு வாக்களிப்பீர்!
128. சொல்லார் தமிழைச் சொல்லுநர்க்கு வாக்களிப்பீர்!
129. சோர்வறு தமிழை நலமாக்குநர்க்கு வாக்களிப்பீர்!
130. ஞாலத்தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்
131. தண்டமிழைத் தழைக்கச்செய்யுநருக்கு வாக்களிப்பீர்!
132. தாய்த்தமிழைத் தருநர்க்கு வாக்களிப்பீர்!
133. திருநெறிய தமிழைத் திரட்டுநர்க்கு வாக்களிப்பீர்!
134. தீந்தமிழைத் துதிப்பவர்க்கு வாக்களிப்பீர்!
135. துய்ய தமிழைத் துளங்கச் செய்வோர்க்கு வாக்களிப்பீர்!
136. தூய தமிழைத் துலங்கச் செய்வோர்க்கு வாக்களிப்பீர்!
137. தெய்வத்தமிழைத் துதிப்போர்க்கு வாக்களிப்பீர்!
138. தேனேரார் தமிழை ஒளிரச் செய்வோர்க்கு வாக்களிப்பீர்!
139. தொல்காப்பியத் தமிழை ஒல்காப்புகழ்ஆக்குநர்க்கு வாக்களிப்பீர்!
140. தோலா (ஈடழியா)த் தமிழை நிலைக்கச் செய்நர்க்கு வாக்களிப்பீர்!
141. நற்றமிழைப் பேசுநர்க்கு வாக்களிப்பீர்!
142. நானிலத் தமிழை நாடுநர்க்கு வாக்களிப்பீர்!
143. நிகரில்லன தமிழை முன்னேற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
144. நீடுபுகழ்த் தமிழை முழங்குநர்க்கு வாக்களிப்பீர்!
145. நுட்பத் தமிழை வளர்க்குநர்க்கு வாக்களிப்பீர்!
146. நூல் நிறை தமிழை நுவலுநர்க்கு வாக்களிப்பீர்!
147. நெறியாளர் தமிழைப் பாராட்டுநர்க்கு வாக்களிப்பீர்!
148. நேயத் தமிழைத் துய்ப்போர்க்கு வாக்களிப்பீர்!
149. பரவிய தமிழைப் பரப்புநர்க்கு வாக்களிப்பீர்!
150. பாரினார் தமிழைப் பாதுகாப்பவர்க்கு வாக்களிப்பீர்!
151. புகழ் நின்ற தமிழைப் புகழ்நர்க்கு வாக்களிப்பீர்!
152. பூந்தமிழைப் புகலுநர்க்கு வாக்களிப்பீர்!
153. பெருமிதத் தமிழை எய்வோருக்கு வாக்களிப்பீர்!
154. பேரின்பத் தமிழைச் சேர்ந்திசைப்போர்க்கு வாக்களிப்பீர்!
155. பைந்தமிழைப் பாடுநர்க்கு வாக்களிப்பீர்!
156. பொய்யாத்தமிழைப் படிக்குநர்க்கு வாக்களிப்பீர்!
157. போற்றித் தமிழைப் போற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
158. மருவிய தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்!
159. மாண்புறு தமிழை மலரச் செய்நர்க்கு வாக்களிப்பீர்!
160. மிக்கிளமைத் தமிழை மிழற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
161. மீக்கூர் (மேம்படும்)தமிழை மேம்படுத்துநர்க்கு வாக்களிப்பீர்!
162. முத்தமிழை முழங்குநர்க்கு வாக்களிப்பீர்!
163. மூவாத் தமிழைப் பயிற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
164. மேற்கணக்குத் தமிழை ஆய்வோர்க்கு வாக்களிப்பீர்!
165. வண்டமிழை வளர்க்குநர்க்கு வாக்களிப்பீர்!
166. வாடாத் தமிழை வாசிப்பவர்க்கு வாக்களிப்பீர்!
167. வினைநலத் தமிழை வியப்பவர்க்கு வாக்களிப்பீர்!
168. வீறார் தமிழை விரும்புநர்க்கு வாக்களிப்பீர்!
169. வெற்றித்தமிழைப் பூரிக்கச் செய்நர்க்கு வாக்களிப்பீர்!
170. வேந்தர் தமிழை ஏந்துநர்க்கு வாக்களிப்பீர்!
171. வையத் தமிழை வணங்குநர்க்கு வாக்களிப்பீர்!
நன்றி மீனகம் (meenakam.com)


செவ்வாய், 20 செப்டம்பர், 2011

ilakkuvanarin pataippumanikal 56-61: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 56-61

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 56. தொல்காப்பியர் குறிப்பிடும் ஐயர் வேறு; பிராமணர் வேறு

 

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 57. களவில் காதலித்தோர் கற்பில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்

 

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 58. உரையாசிரியர் தாம் அறிந்தவற்றையெல்லாம் நூலினுள் புகுத்த முயலுதல் பெருந்தவறு

 

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 59. நச்சினார்க்கினியர் தமிழர் வாழ்வியல் நெறியை மறைத்து விட்டார்

 

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 60. தொல்காப்பியரைப் பெண்ணுலகம் நாளும் போற்றுதல் வேண்டுமன்றோ?

 

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 61. நல்லரசின் போர்க்கொள்கை

 


Thamizhk katamaikal 86-91: தமிழ்க்கடமைகள் 86-91

vaazhviyal unmaikal aayiram 231-400: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 231-300

செவ்வாய், 14 டிசம்பர், 2010

Translations of Sanga Literature in thelungu (telugu) : சங்கத் தமிழ் நூல்கள் தெலுங்கில் மொழிபெயர்ப்பு

நல்ல முயற்சி. முயற்சியில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் செம்மொழித் தமிழ்ஆய்வு மத்திய நிறுவனத்திற்கும் பாராட்டுகள்.எந் தெந்த மொழிகளில் தமிழ் இலக்கிய மொழி பெயர்ப்புப் பணி நடைபெறுகிறது என்ற விவரத்தை அறிந்து தினமணி வெளியிடலாம். வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

சங்கத் தமிழ் நூல்கள் தெலுங்கில் மொழிபெயர்ப்பு

First Published : 14 Dec 2010 02:00:36 AM IST


மதுரை, டிச.13: சங்கத்தமிழ் நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் தெலுங்கில் தற்போது மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன என்று திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் ஜெயப்பிரகாஷ் கூறினார்.மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் திங்கள்கிழமை தொடங்கிய திருப்பதி தேவஸ்தானம் ஆழ்வார் திவ்ய பிரபந்தத் திட்டத்தின் சார்பிலான, பாண்டிய நாட்டுத் திருத்தலங்கள்  எனும் பொருளில், தேசிய அளவிலான கருத்தரங்கத் தொடக்கவிழாவில் அவர் பேசியதாவது:தேவஸ்தானம் சார்பில் சைவ, வைணவம் குறித்து வெளியிடப்பட்டும் நூலாசிரியர்களுக்கு | 30,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தமிழின் மிகத்  தொன்மையான சங்ககால இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களை முழுமையாக தெலுங்கில் மொழி பெயர்க்கும் பணிகள் நடந்துவருகின்றன. தற்போது அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை ஆகிய நூல்கள் தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. விரைவில் அவை வெளியிடப்பட உள்ளன.சங்கத்தமிழ் நூல்களை தெலுங்கில் மொழி பெயர்க்கும் பணிக்காக செம்மொழி ஆய்வு மையம் சார்பில் | 50 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது. இம்மொழிபெயர்ப்பு பணியில் வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சர்வோத்தமராவ், முனிரத்தினம், தேவசங்கீதம் ஆகியோருடன் நானும் ஈடுபட்டுள்ளேன். தமிழ் பட்டப்படிப்பை படிப்போர் அதை நன்றாகப் படிக்கவேண்டும். அதே சமயம் பிற மொழி ஒன்றையும் நன்கு கற்பது அவசியம். தற்போது மொழிபெயர்ப்புத் துறையில் 10,000 காலிப்பணியிடங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே, தமிழோடு பிறமொழியையும் கற்போருக்கு எதிர்காலத்தில் சிறப்பான வேலைவாய்ப்பு கிட்டும் நிலை உள்ளது என்றார்.பேராசிரியர் தமிழண்ணல்: நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து தமிழண்ணல் பேசியது: இலக்கியம் என்பது மனித மனத்தை பதப்படுத்துவதாகும். நமது சங்க இலக்கியங்கள் தெலுங்கில்  மொழிபெயர்க்கப்பட்டு வருவது வரவேற்புக்குரியது. நாம் அனைவரும் சகோதரர்கள். உலக இலக்கியங்கள் அனைத்தும் ஒரே வகையைச் சேர்ந்ததுதான். ஆகவே நமது தமிழ் இலக்கியம் சிறப்புற பிற மொழிகளில் அவை மொழிபெயர்க்கப்பட வேண்டும். பாண்டி நாட்டுத் திருத்தலங்களில், மதுரை அருகே உள்ள அழகர்மலை மிகவும் பழம்பெருமையும், தனிச்சிறப்பும் பெற்றதாகும். திருமலைக்கு முன்னதாகவே இம்மலை சிறப்புப் பெற்றிருந்ததை, சங்க பரிபாடல்கள் மூலம் அறியமுடிகிறது என்றார். செந்தமிழ்க் கல்லூரி செயலர் ரா.குருசாமி பேசுகையில், தமிழ்ச்சங்கங்களுக்கு கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு அரசு நிதி உதவி அளிக்கவேண்டும். தமிழ்க்கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடத்தை உடனடியாக நிரப்பிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.