nirubama லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
nirubama லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 மே, 2012

ஈழப்படுகொலைக்குத் துணை நின்ற நிருபமா ராவ்-விற்கு மதிப்புநிலை முனைவர் பட்டம் - மே 19 ஆம் நாள் புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

ஈழப்படுகொலைக்குத் துணை நின்ற நிருபமா ராவ்-விற்கு  மதிப்புநிலை முனைவர் பட்டம் - மே 19 ஆம் நாள் புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
1 post by 1 author in தோழமை
Tamil Internet Protester
Post reply
8:21 AM (10 hours ago)

ஈழப்படுகொலைக்கு துணை நின்ற நிருபமா ராவ்-விற்கு கவுரவ முனைவர் பட்டம் - மே 19ம் தேதி புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
புதுவை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வருகிற 19ம் தேதி நடைபெறவிருப்பதாகவும், இதில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் பங்கேற்பதாக துணைவேந்தர் தரீன் தெரிவித்துள்ளார்.
புதுவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுவை பல்கலைக்கழகத்தின் 22வது பட்டமளிப்பு விழா வருகிற 19ம் ÷தி நடைபெற உள்ளதென்றும், இதில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் கலந்து கொண்டு பட்டங்களை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
அவருக்கு புதுவை பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதென்ற துணைவேந்தர் தரீன், இதேப்போன்று இந்திய அரசின் முன்னாள் தலைமை நீதிபதி வெங்கடாச்சலய்யாவுக்கு டாக்டர். பட்டம் வழங்கப்பட உள்ளதாகவும், விழாவில் 16 ஆயிரத்து 755 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளதென்றார்.
புதுவை பல்கலைக்கழகத்தில் கூடுதலாக புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதென்ற துணைவேந்தர், மாணவ, மாணவிகளுக்கு கூடுதல் வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கடும் கண்டனம் தெரிவியுங்கள்
Prof.  J. A.  K. Tareen, Vice-Chancellor


வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவை நாம் நம்பலாமா?– ஈழவேந்தன்

இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவை நாம் நம்பலாமா? நம்பக்கூடாது என்பது தான் நாம் அளிக்கும் பதில்! – ஈழவேந்தன்

08 . 12 . 2004ல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் அவரோடு உரையாடியது மேதகு தலைவர். வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு 27 .12 . 2004 ல் அரசியற் துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் ஊடாக தலைவருக்கு அனுப்பிய கடிதம் இதோ தரப்படுகிறது. நிரூபமா ராவின் வெறிப் போக்குக்கு இது சான்று கூறும்.
தமிழ்த் தேசியத்தின் பார்வையில் ஈழவேந்தனின் பதிவுகள் என்ற என் நூலில் பக்கங்கள் 37 – 41
மேதகு தலைவர் வே. பிரபாகரன் அவர்கள்,
தமிழீழம்
இந்தியத் தூதுவர் திருமதி. நிரூபமா ராவ், துணைத் தூதர் திரு. மோகன் குமார் ஆகியோருடன் 08 . 12 . 2004 புதன்கிழமை அன்று முற்பகல் 10 .45 – 11 . 45 வரை நடைபெற்ற உரையாடலின் சுருக்கம்.
(தூதுவரோடு நடைபெற்ற ஆங்கில உரையாடலின் தமிழாக்கம்)
மேற்குறித்த இருவருடன் நான் நடாத்திய உரையாடலின் போது நாம் உணர்ந்த கசப்பான உண்மைகள். இந்தியா எங்களோடு இல்லை என்பது மட்டுமல்ல, எமக்கு மாறாகவும் செயற்படுகிறது என்பது வெளிப்படையாகத் தெரிய வருகிறது. இதை உங்களுக்குத் தெரிய வேண்டும் என்ற ஒரே நோக்குடன் இக் குறிப்புகள் தரப்படுகின்றன.
1 . இந்திய மாயையில் இருந்தும், ஆரிய மாயையில் இருந்தும் ஈழத் தமிழர்கள் விடுபட்டால் தான் அவர்களுக்கு வாழ்வு உண்டு என்று 2003 ஒக்டோபர் 22 ல் எனக்கு நீங்கள் கூறிய கூற்று முழுமையாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
2 . இந்தியாவில் அரசுகள் மாறினாலும் அடிப்படைச் சிந்தனை ஒன்று என்பதை நாம் உணர்ந்துள்ளோம். இந்தியாவிடம் ஈழத் தமிழர் மீது எத்தகைய பாசப் பிடிப்பும் இல்லை என்பது தெரிய வருகிறது. அதேவேளை ஆசியாக் கண்டத்தில் அது ஒரு வல்லரசாகவும் எமது பக்கத்து நாடாகவும் இருப்பதால் நாம் அதை பகைக்க முடியாது என்பது உண்மை. இதை ஒட்டி உங்கள் வழிகாட்டலை நாம் எதிர்பார்த்து நிற்கிறோம். உங்களுடனும் சு.ப. தமிழ்ச்செல்வனுடனும் வாய்ப்புள்ள போது நேராக உரையாட விரும்புகிறேன்.
3 . தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 பேரும், முதலில் தமிழகத்திற்கும், பின்பு டெல்கிக்கும் செல்வதற்காக முடிவெடுத்த நிலையில் என் (விசா) இசைவுச் சீட்டினைப் பெறுவதற்காகவே இந்தியத் தூதரகத்திடம் நியமனம் பெற்ற நிலையில் நான் அங்கு சென்றேன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
4 . இந்தியா எந்நிலையிலும் எங்களுடைய தமிழீழ கோரிக்கையை ஏற்காது என தூதுவரும் துணைத் தூதுவரும் உறுதிபடக் கூறினார்கள். “ஈழத்துக்கு ஒப்புதல் வழங்குவதில் உங்களுக்கு ஏதும் சிக்கல் இருப்பின் பொருள் பொதிந்த இணைப்பாட்சி உருவாவதற்காவது துணை நில்லுங்கள்” எனக் கேட்டேன். அவர்கள் புன்முறுவல் பூத்தார்கள், ஆனால் பதில் சொல்லவில்லை.
5 . மேலும் இறங்கி வந்த நான், ” நாம் இன்று கேட்கும் இடைக்கால அரசை அமைக்க உங்களது தார்மீக ஆதரவை வழங்குங்கள்” என்று கேட்ட போது , உங்கள் இடைக்கால அரசின் எடுத்துரைப்புகளிற் கூறப்பட்டுள்ள அதிகாரங்கள் ஏறக்குறைய தனி நாட்டுக்குரிய அதிகாரங்களாக விளங்குவதால் அதை நாம் ஏற்க முடியாது என கூறினார்கள்.
6 . “எம் மக்கள் படும் துன்பங்கள் எல்லை மீறுபவைகளாக இருக்கின்றன. உடனடியாக இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளவே நாம் இதனை வலியுறுத்தி நிற்கிறோம் ” என்று கூறிய போது ” ஏன் இடைக்கால அரசை மட்டும் கேட்கிறீர்கள், முழுத் தீர்வையும் காண முயலுங்கள்” என்றார்கள். “நிலப் பாதுகாப்பு, உள்ளகப் பாதுகாப்பு (internal security ) போன்றவற்றில் சிங்கள அரசு காட்டும் நேர்மையைப் பொறுத்து எமது முழுமையான அரசியற் தீர்வு அமையும் என்று நான் குறிப்பிட்டேன். அதற்கு அவர்கள் பதில் தரவில்லை.
7 . “குடியரசுத் தலைவர் சந்திரிகா நல்நோக்கத்தோடு செயற்படுகின்றார். அவரை நம்புங்கள்” என்று அவர் கூறிய போது முன்னுக்குப் பின் முரணான பல செய்திகளை சந்திரிக்கா தந்துகொண்டு இருக்கிறார். இடைக்கால அரசை ஒட்டி கடந்த யூன் 10ம் திகதி அவர் எமக்கு அளித்த வாக்குறுதியை சிறிதும் நிறைவேற்ற இல்லை. அவரோடு இணைந்திருக்கும் ஜே.வி. பி. யின் வெறியாட்டத்திற்கு அஞ்சி அடங்கியே அவரது அரசியற் சிந்தனை இருக்கிறது. ஆகவே நாம் அவரை நம்ப முடியாது என்று கூறினேன். இதற்கும் பதில் கூறாது புன்னகை பூத்தார்கள்.
8 . இந்திரா காந்தியை 1983 ஆகஸ்ட் 19ல் நான் கண்டு உரையாடியபோது, அவர் எமக்கு ஆதரவாக தெரிவித்த பல கருத்துக்களை, அவர்களுக்கு நான் நினைவுபடுத்தினேன். இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலை ( genocide ) என்பதை இந்திரா காந்தி ஏற்று நாடாளுமன்றத்தில் இச் சொல்லை கையாண்டதையும் நான் நினைவு கூர்ந்தேன். அரச ஆதரவோடு நடைபெறுகின்ற சிங்கள குடியேற்றம் எவ்வளவு தூரம் எம்மை பாதிக்கிறது என்பதை, அவர் முழுமையாக ஏற்றுக் கொண்டார் என்பதையும் நான் வலியுறுத்திக் கூறினேன். ஜே. ஆர். இந்தியாவினது மட்டுமல்ல இந்திராவினதும் எதிரி என்று அவர் கூறியதையும் நான் நினைவுபடுத்தினேன்.
9 . இந்திரா காந்தியுடன் நான் நடாத்திய உரையாடலை ஒரு சிறு வெளியீடாக வெளியிட்டிருந்தேன். அதனை அவர்களிடம் ஒப்படைத்தேன்.
10 . மன்மோகன் சிங் ஆட்சிக்கு வந்த போது நான் அவருக்கு அனுப்பிய கடிதத்தையும் அவர் எனக்கு அனுப்பிய பதிலையும் கொண்ட படிகளையும் நான் அவர்களிடம் கொடுத்தேன். இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங், இலங்கைக்கு இணைப்பாட்சியே இனச் சிக்கலை தீர்க்கும் என்று கூறியதை இக் கடிதத்தில் நான் குறிப்பிட்டதாகவும் எடுத்துரைத்தேன்.
ஈழத் தமிழ் உள்ளங்களை புண்படுத்தும் முறையில் இரு தூதுவர்களும் கூறியவை இதோ:
11 . இலங்கை இந்திய ஒப்பந்தங்களை நாம் எதிர்த்தது தவறு என்று சிறு கோபத்துடன் கூறினார்கள். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் முன்னுரையில் இலங்கையின் வட கிழக்கு மாகாணம் வரலாற்றின் அடிப்படையில் தமிழர் தாயகம் என்பதை ஏற்றுள்ளது நீங்கலாக வேறு எதுவும் ஈழத் தமிழ் மக்களுக்கு வாழ்வு கொடுக்கும் வகையில் அமையவில்லை என்று குறிப்பிட்டேன். ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதே மதுறு ஓயா, மணலாறு பகுதிகளில் அரச ஆதரவோடு சிங்களக் குடியேற்றம் நடைபெற்றதையும் நான் குறிப்பிட்டேன்.
12 . இவ் ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகளோடு இலங்கை அரசு நிறைவேற்றியிருக்க வேண்டும். தமிழருக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் சிங்களவர்கள். பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். இதில் இந்தியா நடுவராக மட்டும் தான் பணி புரிந்திருக்க முடியும். மாறாக தமிழரையும், தமிழ் உணர்வையும் புறக்கணித்த இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்வதை நாம் ஏற்பது கடினம் என்று குறிப்பிட்டேன்.
13 . திலீபனின் தியாகத்தை இந்திய அரசு மதிக்க மறுத்ததை குறிப்பிட்ட நான் காந்தீய வழியில் திலீபன் செய்த தியாகத்தை இந்தியா மதித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டேன். ஆனால் எம் மனத்தை மிக நோகச் செய்கின்ற முறையிலும் எமக்கு ஆத்திரத்தை வருவிக்கின்ற முறையிலும் திலீபன் தொடர்ந்து உண்ணா நோன்பு இருக்கமுடியாத நிலையில் மணிக்கணக்கில் குடிப்பதற்கு நீர் கேட்டும் விடுதலைப்புலிகள் ஈவிரக்கம் அற்ற முறையில் செயற்பட்டனர் என்று இந்தியத் தூதுவர்கள் குறிப்பிட்டனர்.
இந் நிகழ்ச்சிக்கு மூவர் சாட்சி என்று அவர் குறிப்பிட்ட போது நீங்கள் மூவரை உங்கள் கூற்றுக்கு துணைக்கு அழைக்கின்றீர்கள். ஆனால் ஆயிரக்கணக்கில் மக்கள் திலீபனின் உள்ளம் உருக்கும் நிகழ்ச்சியை கண்டு கண்ணீர் விட்டதை நான் குறிப்பிட்டபோது அதை அவர்கள் ஏற்க மறுத்தனர்.
14 . படைத் தளபதிகள் குமரப்பாவும் புலேந்திரன் உட்பட ஏனைய பத்து வீரர்களும் சயனைட் அருந்தி சாவதற்கும் புலிகள் தான் காரணம் என்று ஆணவத்தோடு கூறினார்கள்.
15 . புலிகளின் வன்முறையை தாம் ஏற்க முடியாது என்றும் ஒரு காலத்தில் தமது தோழர்களாக இருந்த ஏனைய விடுதலைப் போராளிகளை விடுதலைப் புலிகள் சாகடித்ததையும் கூறினார்கள் .
16 . தூதுவர்கள் தெரிவித்த கருத்தில் இருந்து ஈ. பி. டி. பி, வரதராஜப்பெருமாள் குழு, கருணா குழு போன்றோர் இந்தியத் தூதரகத்தில் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றனர் என்பதை இந்தியத் தூதுவர்களின் பேச்சு மறைமுகமாக உணர்த்தி நிற்கிறது.
17 . கடந்த பத்து ஆண்டுகளாக தமிழர்களுக்கு பெரும் பாதிப்பு, அழிவு ஏற்படவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டதை மறுத்து 1995ல் ரத்வத்தை தலைமையில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதன் பேரில் ஏற்பட்ட அழிவை நான் குறிப்பிட்டேன்.
இதனையடுத்து 1999 – 2000 ம் ஆண்டுகளில் யாழ் குடா நாட்டு நகரங்கள் சாம்பல் மேடாக மாறும் முறையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவத் தாக்குதல்களை நான் குறிப்பிட்டேன். இப்பொழுது யாழ்ப்பாணத்தில் ஏழு இலட்சம் தமிழர்கள் வெளியேறிய நிலையில் ஐந்து லட்சம் தமிழ் மக்களே வாழ்கிறார்கள்.
இங்கு யாழ்ப்பாணத்தில் குடிகொண்டிருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கையோ 50 ,000 ஆகும். இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பூமியாகவே யாழ்ப்பாணம் திகழ்கிறது. உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமிழ் மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல முடியாத நிலையிலும் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க முடியாத நிலையிலும் தத்தளிப்பதை நான் குறிப்பிட்டேன்.
18 . யாழ்ப்பாணம் நீங்கலாக வன்னி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் மக்களின் ஏக்கம் நிறைந்த வாழ்வை எடுத்துரைத்தேன்.
19 . திருகோணமலை திட்டமிட்டு பறிக்கப்பட்டு தமிழரின் தாயகம் துண்டிக்கப்படுவதையும் புள்ளிவிபரங்களோடு விளக்கினேன். என் கருத்துகளை அவர்கள் செவிமடுத்தார்களே அன்றி எம் துன்பம் நிறைந்த வாழ்வை ஒட்டி அவர்களுக்கு மருந்தளவு கூட அக்கறை இல்லை என்று அவர்களது உரையாடலில் இருந்து தெரிய வந்தது.
மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. ஏதோ ஈழத் தமிழருக்கு நன்மை விளைவிக்கும் என்று நாம் எதிர்பார்த்தது உண்மை. ஆனால் ஆட்சிகள் மாறினாலும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை டெல்கியின் தென் பிரிவே நிர்ணயிக்கின்றது என்பதை இந்த உரையாடலில் இருந்து அறிந்து கொண்டேன்.
ஈழத் தமிழர் சிக்கலில் இந்தியாவின் அணுகுமுறை எத்தகையது என்பது நீங்கள் நன்கறிந்த விடயம். எனினும் என் பட்டுணர்வை, அனுபவத்தை சொல்லி வைப்பது பயனளிக்கும் என்பதால் இக் கருத்துகளை சொல்லி வைக்கின்றேன்.
மா. க. ஈழவேந்தன்
நாடாளுமன்ற உறுப்பினர்
பிற்குறிப்பு:  இந்தியச் சிந்தனை பற்றி 27 . 12 .  2004 ல் தலைவருக்கு எழுதிய கடிதம் மேலே தரப்பட்டுள்ளது.  இப்பொழுது  2011 வது ஆண்டாகும்.  ஏழு ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் ஈழத் தமிழரை ஒட்டி இந்தியாவின் சிந்தனையில் எந்தவித நல்மாற்றமும்  இல்லை.  மாறாக 20  நாடுகளின் துணையோடு 2009  ல்  எமக்கு பேரழிவை ஏற்படுத்திய இந்தியாவின் வெறிப்போக்கு தொடர்கிறது.
2004  ல் நான் நிரூபமா ராவை சந்தித்த பொழுது அவர் இந்தியாவின் தூதுவர். இப்பொழுது அவர் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர். அவரின் பதவி உயர்வு ஈழத் தமிழர்களுக்கு மேலும் பாதகங்களை ஏற்படுத்தியுள்ளது. இப் பதவியில் இருந்து ஓய்வு பெறும் அவர்  இலங்கைக்குச் சென்று மகிந்தாவிற்கு பிரியாவிடை கூறி திரும்பி வந்துள்ளார். அத்தோடு ஆளும் சிங்களக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விட்டு வந்துள்ளார்.  டெல்கியில் அவர்களுக்கு  வரவேற்புரை வழங்கப்பட்டுள்ளது.  ஆனால் இவர்களுக்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொலையாளிகள் என்று கூறி காட்டிய எதிர்ப்பு எமக்கு தென்பு தருகின்ற நிகழ்ச்சியாகும். 
ஆனால் ஆபத்து தொடர்கிறது.  பதவி ஓய்வு பெரும் நிரூபமா ராவ் அமெரிக்காவிற்கு உயர் பதவி ஏற்று செல்கிறார்.  அண்மையில் அமெரிக்காவின் சிந்தனை எம் சார்பில் அமைந்துள்ளது. நாம் விழிப்போடு இல்லாவிடின் அமெரிக்காவின் சிந்தனையையும் நிரூபமா ராவ் கெடுக்கக் கூடும். என்றுமே விழிப்போடு இருப்பது தான் நாம் விடுதலைக்கு கொடுக்கின்ற விலை என்பதை உணர்ந்து இந்தியாவின் போக்கை ஒட்டி நாம் விழிப்போடு இருப்போமாக.
வைகோ,  மன்மோகன் சிங்கை சந்தித்த பின்பு   கூறியுள்ள கருத்துக்கள் எமது ஆழ்ந்த சிந்தனைக்குரியவை.  இலங்கை மீது பொருளாதாரத் தடையை விதிக்கும் படி மன்மோகன் சிங்கிற்கு வைகோ விடுத்த வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. காரணம் இந்தியா இலங்கை மீது பொருளாதார தடை விதித்தால் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள்  இலங்கை வந்துவிடும் என்று அச்சம் தெரிவித்தார் . ஆனால் ஸ்ரீலங்கா ஏற்கனவே சீனாவின் கட்டுப்பாட்டில் இயங்குவது உலகம் அறிந்த செய்தி. தன் எதிரியான தமிழனை அழிக்க இந்தியா தனது மூக்கை அறுக்க முடிவு செய்துள்ளது. எனினும் தமிழகத்தின் விழிப்புணர்ச்சி டெல்கியை  மீளச் சிந்திக்க வைக்கும் என்பது எமது  நம்பிக்கை. 
நல்லதை எதிர்பார்ப்போம். ஆனால் எதற்கும் ஆயத்தமாக இருப்போம்.   ஏதோ என் உள்ளொளி சொல்கிறது ஐ. நா. மன்றத்தில் தென் சூடானை அடுத்து 194வது நாடாக தமிழீழம் மலரப்போவது உறுதி. உலகில் எந்த சக்தியும் இதனை தடுக்க முடியாது. நம்புங்கள் நம்புங்கள் நாளை தமிழீழம் மலரும். 
மா. க. ஈழவேந்தன்


Short URL: http://meenakam.com/?p=32428
Share/Bookmark

சனி, 29 ஜனவரி, 2011

fishermen killing: niruba goes to ilangai: தமிழக மீனவர்கள் படுகொலை: இலங்கை செல்கிறார் நிருபமா ராவ்


அவர்  பேசும் பொழுதே படுகொலை தொடரும். கொன்றது யார் எனத் தெரியவில்லை என்பார்கள். வந்த பின்னும் தொடரும். எதற்குத்தான் பேச போகிறார்களோ தெரியவில்லை. சிங்களன் அடிபட்டதற்கே அலறுகிறான் அவன். கொடுரமாக் கொள்ளப்பட்டாலும்  வேடிக்கை பார்க்கும் நம் அரசுகள். என்ன கொடுமையட இது. 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
 
 
தமிழக மீனவர்கள் படுகொலை: இலங்கை செல்கிறார் நிருபமா ராவ்

First Published : 29 Jan 2011 12:51:07 AM IST


புது தில்லி, ஜன. 28: தமிழக மீனவர்கள் படுகொலை தொடர்பாக இலங்கை அரசுடன் விவாதிக்க வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ் ஞாயிற்றுக்கிழமை இலங்கை செல்கிறார்.  கடந்த இரண்டு வார காலத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களில் இரண்டு பேர் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலால் உயிரிழந்துள்ளனர்.  புதுக்கோட்டை ஜகதாபட்டினத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் பாக் ஜலசந்தி பகுதியில் ஜனவரி 12-ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு மீனவர் உயிரிழந்தார்.  கோடியக்கரைப் பகுதியில் ஜனவரி 22-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒருவரை கழுத்தில் சுருக்குக் கயிறு போன்று மாட்டி கடலில் தள்ளியதில் அவர் உயிரிழந்தார்.  இந்த சம்பவங்கள் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.  இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல்கள் எந்தவிதத்திலும் நியாயம் அல்ல என்று இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது.  இப் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஓரிரு நாள்களாக பல்வேறு மீனவர் அமைப்பினரும், கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில், வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவை இலங்கை சென்று அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளதாக அந்தத் துறை அதிகாரி ஒருவர் புது தில்லியில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்

சனி, 4 செப்டம்பர், 2010

சிங்கள-இநதிய உளவுப்படையால்  பரப்பப்படும் தவறான கருத்து. இங்கிருந்து செல்பவர்கள் தமிழர் எதி்ர்ப்பு , தமிழர் அழிப்புப் பணிகள் தொடர்பாகத்தான் சென்று வருகிறார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. இருப்பினும் ஒப்பிற்காகக்கூட அங்கு செல்லும் செயலர் தமிழ்த் தேசியக் கூட்டணி அமைப்பினரைச் சந்திக்க வில்லை என்பது செல்பவர்களின்நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்குகின்றது. இத்தகைய சூழலில் நாட்டு மக்களுக்காகத் தங்கள உயிரையும் பொருட்படுத்தாமல் போராடும்  தேசியக் காவலர்களைத்தவறாக எழுதுவது பரதேசிகளால்தான்  முடியும் என்பது வெளியிடப்பட்டுள்ள கருத்து மூலம் தெளிவாகிறது. மொழி இனக் காவலர்களாகத் திகழும் ஈழத்தமிழர்களும் அவர்களின் வீரத்தலைவர்களும் போராளிகளும் வெல்க! வெல்க! வெல்கவே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

வியாழன், 2 செப்டம்பர், 2010

ராஜபட்சவுடன் நிருபமா ராவ் சந்திப்பு


கொழும்பு, செப்.2: இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ், இலங்கை அதிபர் ராஜபட்சவை நேற்று மாலை சந்தித்துப் பேசினார். சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது.இந்தச் சந்திப்பின்போது இடம்பெயர்ந்த மக்களுக்கான குடியிருப்புத் திட்டம், வடக்கில் ரயில் பாதை புனரமைப்பு உள்ளிட்ட இந்தியா உதவுவதாகக் குறிப்பிட்ட திட்டங்கள் விரைவில் செய்துதரப்படும் என ராஜபட்சவிடம் நிருபமா உறுதியளித்ததாக இலங்கை அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.இலங்கையில் இந்திய முதலீட்டு ஆர்வம் அதிகரித்து வருவதாகவும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களும், கைத்தொழில் அதிபர்களும், இதர துறைகளைச் சேர்ந்தவர்களும் இலங்கையில் வர்த்தகம் செய்ய ஆர்வம் காட்டி வருவதாக ராஜபட்ச தெரிவித்தார்.ராஜபட்சவுடனான நிருபமா ராவின் இந்தச் சந்திப்பின்போது, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ராஜபட்சவின் செயலர் லலித் வீரதுங்க உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உடனிருந்ததாக இலங்கை அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

அடக் கடவுளே! தமிழர் வாழ்விடங்களில் சிஙகளர்களைக் குடியமர்த்துவது தொடர்பான இந்தியாவின் சார்பான உதவிகளைத் தொடர்ந்து அளிப்பதற்கான உறுதியைத் தெரிவித்து நாங்கள் என்றும் உங்கள் கொத்தடிமையே! சீனா அல்லது பாக். பக்கம் சாய வேண்டா! என வேண்டுகோள் விடுத்து -மன்னிக்கவும்- மண்டியிட்டு இறைஞ்சி தெரிவிக்கச் சென்றதற்குத்தான் இதோ போகிறார்! அதோ போகிறார்! நாளை மறுநாள் போகிறார்!நாளை போகிறார் ! இன்றே போகிறார்! போயே போய்விட்டார்! சுற்றிப்பார்த்தார்! பாராட்டினார்! என்ற பகட்டுரைகளா! பெண் மனம் கனிந்திருந்தால் அங்குள்ள அவலங்கள் கண்டு கரைந்து உருகியிருக்க வேண்டாமா? என் செய்வது? தலைவி எவ்வழி! அதிகாரியும் அவ்வழி! 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/2/2010 4:56:00 PM
..SHE WILL TELL HIM HOW TO FINISH TE REST OF THE SL TAMILS...
By KOOPU
9/2/2010 4:28:00 PM
thank you so much Mr. President !.....தமிழர்கள் எல்லாம் ரொம்ப சௌக்கியமா இருக்குறாங்க ! நல்ல மனோ தைரியமா சந்தோசமா இருக்குறாங்க ! அவுங்களுக்கு ஒரு குறையும் இல்லை ! நான் இந்தியா திரும்பியதும் Mr கருணாநிதி கிட்டச் சொல்லி உங்களுக்கு நன்றி கடிதம் எழுதச் சொல்லுறேன் ! வேறு ஏதாவது ரகசிய செய்தி இருக்கா Mr கருணாநிதிக்கு ! Once again i thank you for the nice meal dinner coffee and etc.......see you soon .....Buy buy........@ rajasji
By நிருபமா
9/2/2010 2:44:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இலங்கை மறு குடியமர்வு பணிகளில் இந்தியர்களை ஈடுபடுத்தமாட்டோம்: நிருபமா ராவ் மறுப்பு


கொழும்பு, செப். 1:  இலங்கை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களை மறுபடியும் குடியமர்த்துவதற்கான பணிகளில் இந்தியத் தொழிலாளிகளை ஈடுபடுத்தமாட்டோம் என்று இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் கூறினார்.உதவிகள் அனைத்தும் இலங்கை மூலமே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.இலங்கையில் இந்தியா மேற்கொண்டு வரும் மறு குடியமர்வு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்தியத் தொழிலாளிகளை ஈடுபடுத்த இருப்பதாக இலங்கை பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதை நிருபமா திட்டவட்டமாக மறுத்தார்.இலங்கையில் உள்ளூர் தொழிலாளர்களைக் கொண்டே கட்டுமானப் பணிகள் உள்பட அனைத்து நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள நிருபமா ராவ், தற்போது வடக்குப் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் அவதிப்படும் தமிழர்களை நேரில் பார்வையிட்டு வருகிறார். செவ்வாய்க்கிழமை வவுனியா செட்டிகுளத்தில் உள்ள முகாமை பார்வையிட்டார். புதன்கிழமை முல்லைத் தீவில் உள்ள அகதி முகாம்களை அவர் பார்வையிட்டார்.விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இறுதிக்கட்டத்தில் முல்லைத் தீவு மக்கள் பட்ட துயரங்களை, துன்பங்களை நினைவுகூர்ந்த அவர், அப்படிப்பட்ட துயரத்திலும் நெஞ்சுறுதியோடு இருந்த முல்லைத்தீவு மக்களை அவர் பாராட்டினார். உங்கள் உறுதி இரும்பைப் போன்றது என்று அவர் வர்ணித்தார்.முல்லைத்தீவில்÷போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்து மறு குடியமர்வு செய்து அவர்களது வாழ்வாதாரத்துக்கான உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்றார் அவர். அப் பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். முல்லைத் தீவு மாவட்ட அதிகாரிகளிடமும் அவர் ஆலோசனை நடத்தினார்.பின்னர் திரிகோணமலைக்கு சென்று கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையனைச் சந்தித்தார். அம் மாகாணத்தில் இந்தியா சார்பில் வீடுகளை கட்டிக் கொடுப்பது குறித்து இருவரும் ஆலோசித்தனர்.விதவைகள், வயோதிகர்கள், ஊனமுற்றோர் என போரினால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். திரிகோணமலைப் பகுதியில் உள்ள திருகோனேஸ்வரம் கோயிலுக்குச் சென்று அவர் வழிபட்டார்.முன்னதாக, செவ்வாய்க்கிழமை வடக்கு ஓமந்தை என்ற இடத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் 3 வலுவான பதுங்கு குழிகளை அவர் பார்த்தார். வெடிக்காத கண்ணி வெடிகள், வெடிகுண்டுகளை இலங்கை ராணுவ அதிகாரிகள் நிருபமாவிடம் அப்போது காண்பித்தனர். அப் பகுதியில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ள தமிழர்களைச் சந்தித்து அவர்களுக்கு விவசாய உபகரணங்களையும் வீட்டு உபயோகப் பொருள்களையும் அவர் வழங்கினார். அகதி முகாம்களில் சிரமப்படும் தமிழர்களுக்குத் தேவையானவற்றை இலங்கை அரசு செய்துதரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். அவருடன் இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் காந்தா, துணைத் தூதர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இலங்கை அதிகாரிகளும் சென்றனர்.ராஜபட்சவுடன் சந்திப்பு: வியாழக்கிழமை இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ்ûஸ நிருபமா சந்திக்கிறார்.
கருத்துக்கள்

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் என்று கூறியிருந்தார் என்றால் அது வரலாற்றுத் தவறு அல்லவா? தமிழ்மக்களுக்கு எதிரான சிங்கள - இந்தியப் போரில் என்று அல்லவா கூறியிருக்க வேண்டும். இவ்வாறு சொல்ல இயலாமல் போர் என்று பொதுவாகக் குறிப்பிட்டதைச் செய்தியாளர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் எனக் குறிப்பிடுகின்றனரா? எவ்வாறிருப்பினும் கொலைகாரன் கூட்டாளிக்கு உதவச் செல்வானா? தன்னால் வாழ்விழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவச் செல்வானா? ஏதோ பூ சுற்றுகிறார்கள். சுற்றட்டும்! சுற்றட்டும்! காலம் விரைவில் விடை கூறும். தமிழர்தாயகம் தன்னுரிமையுடன் தலைநிமிர்ந்து வாழும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/2/2010 6:17:00 AM
Why this Bull Shit: Do you use Indians to kill Tamils, or are you scared that tamils will take revenge or scared that Chinese workers will beat them up. Niruma you have done too much Tamil killings and Tamils are not dogs to eat the bones thrown by you and wag the tails. They will join the Chinese to take revenge on India.
By Marrikar
9/2/2010 6:15:00 AM
நிருபமா அவர்களே, முகாமில் இருந்த மக்கள்கிட்ட பேசுனீங்களா? அவங்க குறைய கேட்டீங்களா? தமிழருக்கு அதிகாரப் பகிர்வு பற்றி ஒரு வார்த்தையும் வரலியே? இல்ல நீங்களும் எங்களை ஏமாத்துறதுக்கு சும்மா விசிட் போனீங்களா? மதுரைக்காரன்.
By மதுரைக்காரன்
9/2/2010 4:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
முதல்வரின் கருத்து துரதிருஷ்டவசமானது: ஏ.பி. பரதன் பேட்டி



கோவை, செப். 1: கம்யூனிஸ்டுகள் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி கூறும் கருத்துகள் துரதிருஷ்டவசமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் ஏ.பி.பரதன் கூறினார். தமிழகத்திலும் மாவோயிஸ்டு தாக்குதல், வன்முறை, கொலைவெறித் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட கம்யூனிஸ்டுகள் திட்டமிட்டு வருவதாக கருணாநிதி  குற்றஞ்சாட்டினார்.÷இதற்குப் பதில் அளிக்கும் விதமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பரதன், கோவையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: சத்துணவு ஊழியர்களின் போராட்டத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் தூண்டிவிடவில்லை. அவர்களது நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பது தான் போராட்டத்தைத் தூண்டியுள்ளது. இப்படியிருக்க, கம்யூனிஸ்டுகளைப் பற்றி முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியுள்ள கருத்துகள் துரதிருஷ்டவசமானது. போராட்டம் என்பது ஜனநாயக ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. சத்துணவு ஊழியர்கள் மேற்கொண்ட போராட்டம் வேலைநிறுத்தம் அல்ல. அப்படியிருக்க முன்கூட்டியே நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும் என்பது தேவையற்றது. கோரிக்கைகளுக்காக போராடுவது குற்றம் அல்ல; ஆனால் சத்துணவு ஊழியர்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்பட்டுள்ளனர். ÷அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதும், விடுவதும் முதல்வரின் கையில் இருக்கிறது. இப்படியிருக்க, அவர்களது போராட்டத்துக்காக கம்யூனிஸ்டுகளை பழிபோடுவது ஏற்புடையதல்ல. இருப்பினும் இந்த குற்றச்சாட்டை பரிசாகவே ஏற்றுக் கொள்கிறோம். ஏனெனில், அடித்தட்டு மக்கள், உழைக்கும் வர்க்கத்தினரின் கோரிக்கைகளுக்கு கம்யூனிஸ்டு கட்சிகள்தான் எப்போதும் துணை நிற்கும். கம்யூனிஸ்டுகளையும், மாவோஸ்டுகளையும் ஒன்றுபடுத்தி முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். சத்துணவு ஊழியர்களின் போராட்டம் எவ்வித வன்முறையும் இன்றி ஜனநாயக முறைப்படிதான் நடந்தது. ஆனால், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பொதுக் கூட்டத்தில் திமுகவினர் கல்லெறிந்த சம்பவத்தையெல்லாம் அவர் மறந்துவிட்டார். இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களில் அது இல்லை, இது இல்லை என்று அவர் குறிப்பிடுகிறார். திமுக அரசு செய்யாத நல்ல பல விஷயங்களை இடதுசாரிகள் ஆளும் மாநிலங்கள் கடைப்பிடிக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, திமுக அங்கம் வகிக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு மாவோயிஸ்டுகளைப் பற்றி நன்றாகவே தெரியும். அக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவரே மாவோயிஸ்டுகளின் பேரணியை துவக்கி வைத்துள்ளதையும் முதல்வர் கருணாநிதி மறந்துவிட்டார்.  கம்யூனிஸ்டு கட்சிகளுடன் இதற்கு முன் திமுக கூட்டணி வைத்திருந்ததே, அப்போது கம்யூனிஸ்டுகள் பற்றி தெரியவில்லையா?. தனக்கும், தனது கட்சிக்கு எதிர்காலம் சாதகமாக இல்லை என்பதாலேயே இத்தகைய கருத்துகளை முதல்வர் கூறிவருகிறார். தமிழக முதல்வர் இனிமேல் இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீதெல்லாம் தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. நியாயமான கோரிக்கைகளுக்காக போராடுவோர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும்போதுதான் மாவோயிஸ்டுகள் உருவாக்கப்படுகின்றனர். நியாயமான கோரிக்கைக்காக ஜனநாயக ரீதியில் போராடிய சத்துணவு ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும். அகில இந்திய வேலைநிறுத்தம்...: தொழிற்சங்க உரிமைகளைப் பாதுகாப்பது, தொழிலாளர் நலச் சட்டங்களை தீவிரமாக அமல்படுத்துவது, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தொழிற்சங்கங்கள் சார்பில் செப்.7-ல் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இப் போராட்டம் வெற்றி அடைவதோடு, வரலாற்றில் இடம் பிடிக்கக் கூடிய போராட்டமாக இருக்கும். யாருக்கும் கவலையில்லை...: குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் காங்கிரஸ் தலைமையிலான அரசுடன் இடதுசாரிகள் கூட்டணி வைத்தன. அந்த செயல்திட்டத்தில் இருந்து விலகும்போதெல்லாம் அதைச் சுட்டிக் காட்டினோம். மக்களைப் பாதிக்கும் விஷயங்களைத் தடுத்து நிறுத்தினோம். இப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு குறிக்கோள், கோட்பாடுகள் கிடையாது. மத்திய அமைச்சர்கள் ராசா, அழகிரி என யாராக இருந்தாலும் அவரவர் விரும்பிய போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு கிடங்குகளில் இருக்கும் உணவு தானியங்களை பற்றாக்குறை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவின் இலங்கை பயணம் அங்குள்ள தமிழர்களின் நலனுக்குச் சாதகமாகவே இருக்கும் என்றார்.
கருத்துக்கள்

ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமை தொடர்பில சிங்கள- ஆரிய அடிமையாகக் குரல் கொடுக்கும் இவரது கட்சியை எப்படிக் குற்றம் சுமத்தினாலும் பொருததமே! நாட்டு மக்கள் மீதான வன் கொடுமைப் போர் நடைபெற்ற காலத்தில் இங்கிருந்து தூதுப் போர்வையில் சென்றவர்கள் போரை விரைவுபடுத்திப் பல்லாயிரக் கணக்கானவர் மடியக் காரணமாக இருந்தனர். கொடுந்துயரத்துக்குக் காரணமானவர்கள் செல்வதை அங்குள்ள தமிழர்களின் நலனுக்குச் சாதகமா இருக்கும் என்று சொல்வதே இவர்களின் தமிழ்ப்பகை உணர்வை வெளிப்படுத்துகிறது. காங்கிரசோடு சேர்ந்து ஆரிய அடிமைகளான போலி மார்க்கசியக் கட்சியினரும் மடியட்டும்.தினமணிக்கு வேண்டுகோள். தமிழர் நலனுக்குப் போராடும் இ.பொ.கட்சி என்னும் பெயரில் இ.பொ.க.(மா) -ஐக் குறிப்பிட வேண்டா. அது வேறு கட்சி. இது வேறு கட்சி. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/2/2010 5:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

நண்பர் கிருட்டிணராசு அவர்களே! உங்கள் பாராட்டிற்கு நன்றி. (தமிழனுக்கும் நன்றி.)ஆரியக் கருத்தைக் குறை கூறுவதால் ஆரியர்களை வெறுப்பதாகப் பொருள் கொள்ளக் கூடாது. ஆரியத்தைக் காப்பதற்காகச் சிலர் ஆரியம் என்பது வெள்ளைக்காரர்களால் கட்டிவிட்ட கதை என்கிறார்கள். அப்படியாயின் ஆரியம் குறித்த பல செய்திகள் சமற்கிருதத்திலேயே உள்ளனவே. தமிழ் உணர்வாளர் பாரதியார் கூட ஆரியமயக்கத்தால் வரலாற்றுப்பிழையாக ஆரிய நாடெங்கள் நாடே என்றார். ஆரிய நாட்டினர் ஆண்மையோடு இயற்றும் சீரிய முயற்சிகள் என்றார். உங்கள் கேள்விகளுக்கான விடைகளை முன்னரே தமிழறிஞர்கள் அளித்துள்ளனர். தமிழிய இதழ்களில் வந்துள்ளன. உங்களின் மின்வரியைத்தெரிவித்தால் நான் வாய்ப்பு ஏற்படும் பொழுது அவற்றைத் தெரிவிக்கின்றேன். வெள்ளையர்களை நானும் ஆரியன் நீயும் ஆரியன் என்று மயக்கி ஏமாற்றியவர்களைப் பற்றி அறிவீர்களா? தமிழ்நாட்டில் வாழும் ஒரு பகுதியினர் தங்களை ஆரியர்களாக எண்ணிக் கொண்டுதானே தமிழுக்கு எதிரான அழிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறான சூழலில் ஆரியத்தை வெல்வதுதானே மனித நேயம் மிக்கவர்களின் கடமையாக இருக்க வேண்டும்? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/2/2010 4:39:00 PM
கம்யூனிஸ்ட் சித்தாந்தமே நம்து கூட்டு குடும்ப வாழ்க்கை முறையே ஒட்டிய துதான்.
By Indian nation
9/2/2010 3:38:00 PM
ம.கி.சந்திர மௌலீஸ்வரன், அன்புள்ள தினமணி, நம் நாட்டுக் கம்யூனிஸ்டுகளுடன் 1945க்கு முன்பிருந்தே ஒரு மிக நல்ல பழக்கம் உயிருடன் உயிராக ஒட்டிப் பிறந்திருக்கிறது! அது மிக வசதியான 'ஞாபக மறதி'. சீனப் படையெடுப்பு முதல் கம்பபோடிய இனப் படுகொலை, ரஷ்யச் சிதறல், க்யூபா (அ)ராஜாங்கம், கி.ஜெர்மனி 'வளர்ச்சி' வரை அவர்கள் மறந்த நிகழ்ச்சிகள் எல்லாம் அவர்களுக்குப் பாதகமானவைதாம்! காலாவதியான ஒரு சித்தாந்தத்தை வைத்துக்கொண்டு காலம் 'தள்ளும்' இவர்கள் ஜனநாயக நாட்டிலிருந்து கொண்டுதானே செங்கொடி பிடிக்கிறார்கள்? கடந்த ஆட்சியில் 'அணுசக்திக் கொள்கை மீதான அரசு ஆதரவை மறுபரிசீலனை' செய்தே எத்தனை பெட்டி பணம் சேகரித்தார்கள்! இவர்களால் தந்தை மார்க்ஸிற்கு மாபெரும் கேவலம்! ம.கி.சந்திர மௌலீஸ்வரன், auztrapriyaa@gmail.com 02Sep2K10-Thursday-0257
By ம.கி.சந்திர மௌலீஸ்வரன்
9/2/2010 2:59:00 PM
DONT WORRY MR BARDHAN. THIS IS THE STYLE OF OUR CHIEF MINISTER. WHOEVER COMES IN HIS WAY AND TRY TO DISTURB HIS INTENTION, HE WILL CALL LIKE THIS ONLY. IT MAY BE A SURPRISE FOR YOU TO LISTEN SUCH COMMENTS FROM A PERSON WHO IS CHIEF MINISTER, BUT WE ARE USED TO IT. YOU SHD FEEL HAPPY THAT HE DID NOT CALL THE COMMUNISTS AS BARTARDS, TRAITORS AND ALL THOSE THINGS.
By Abhishtu
9/2/2010 2:17:00 PM
தமிழர் நலனுக்குப் போராடும் இ.பொ.கட்சி என்னும் பெயரில் இ.பொ.க.(மா) -ஐக் குறிப்பிட வேண்டா. அது வேறு கட்சி Yes Right Brother Ilakkuvanar Thiruvalluvan
By Tamilan In Qatar
9/2/2010 8:30:00 AM
இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களின் கருத்துகளை நான் தொடர்ந்து படித்துவருகிறேன். அவைகள் சீறிய சிந்தனையிலிருந்து உதிப்பதாகவே தோன்றுகிறது. ஆனால் அவர் அடிக்கடி "ஆரிய" "ஆரியன்" என்கிற் வார்த்தையை அடிக்கடி உபயோகப்படுத்துகிறார். அது அவரின் தரத்தை தாழ்த்துகிறது. பிரித்தாளும் சூழ்ச்சிக்கு மொத்த சொந்தக்காரர்களான ஆங்கிலேயரின் கட்டுகதைத்தான் ஆரிய இனம் என்பதை ஆங்கிலேய சரித்திர வல்லுனர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். தமிழக சுயநல அரசியல்வாதிகள்தான் ஓட்டுக்காக பாமர மக்களை ஏமாற்றுவதற்க்காக "ஆரிய" வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள் என்றால் அறிவு ஜீவியாக தோற்றமளிக்கும் "இலக்குவனார் திருவள்ளுவன்" கூடவா அந்த பித்தலாட்ட வார்த்தையை உபயோகிக்கவேண்டும்" இலக்குவனார் பதில் அளிக்கவேண்டும்.
By krishnaraj
9/2/2010 7:25:00 AM
I am not a supporter of Communists or their views. However the decent way in which Mr Bharathan has replied to the CM has to be appreciated. Eventhough Mr Karunanidhi oflate is saying that he is the only decent politician, his ways and means are not decent and there is no dignity either.
By G Sankaran
9/2/2010 7:10:00 AM

புதன், 1 செப்டம்பர், 2010

தமிழர்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும்: நிருபமா ராவ்


கொழும்பு ஆக. 31: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என்று இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் உறுதி கூறினார்.இலங்கை சென்றுள்ள நிருபமா ராவ், அங்கு அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். வவுனியாவில் உள்ள முகாமை அவர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். அங்குள்ள மக்களிடம் குறை, நிறைகளை கேட்டுத் தெரிந்து கொண்டார்."எங்களால் முடிந்தளவு உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்; இயன்றவரை கண்டிப்பாகச் செய்வோம்' என்று உள்ளூர் மக்களிடமும் அகதி முகாம்களில் உள்ள  தமிழர்களிடம் அவர் உறுதி கூறினார்.கொழும்பிலிருந்து விமானம் மூலம் வன்னி ராணுவ தலைமையகத்துக்குச் சென்ற அவர் பின்னர் அங்கிருந்து கார் மூலம் வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். செட்டிகுளத்தில் உள்ள முகாமை அவர் பார்வையிட்டார்.வடக்கு ஓமந்தை என்ற இடத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் 3 பதுங்கு குழிகளை அவர் பார்த்தார். வெடிக்காத கண்ணி வெடிகள், வெடிகுண்டுகளை இலங்கை ராணுவ அதிகாரிகள் நிருபமாவிடம் அப்போது காண்பித்தனர். அப் பகுதியில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ள தமிழர்களைச் சந்தித்து அவர்களுக்கு விவசாய உபகரணங்களையும் வீட்டு உபயோகப் பொருள்களையும் அவர் வழங்கினார்.பின்னர் வவுனியாவில் உள்ள அரசு பிரதிநிதியுடன் அவர் ஆலோசனை நடத்தினார். தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் மறுபடியும் குடியமர்த்துவது குறித்தும் அகதி முகாம்களில் உள்ள தமிழர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது குறித்தும் அரசுப் பிரதிநிதியிடம் அவர் ஆலோசித்தார்.அகதி முகாம்களில் சிரமப்படும் தமிழர்களுக்குத் தேவையானவற்றை இலங்கை அரசு செய்துதரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.அவருடன் இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் காந்தா துணைத் தூதர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இலங்கை அதிகாரிகளும் சென்றனர்.பின்னர் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும் பணிகளை அவர் பார்வையிட்டார். கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும் பணியில் இந்தியாவைச் சேர்ந்த 7 குழுக்கள் பணியாற்றி வருகின்றன. கண்ணி வெடிகளை அப்புறப்படுத்திய பின்னரே தமிழர்களை மறுபடியும் குடியமர்த்த முடியும் என்று கூறி, கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தி வருகிறது இலங்கை அரசு.நிருபமா கொழும்பு செல்வதற்கு முன், வடக்குப் பகுதியில் முல்லைத் தீவுக்கும் கிழக்குப் பகுதியில் திரிகோணமலைக்கும் புதன்கிழமை செல்கிறார்.கொழும்பு திரும்பியவுடன் புதன்கிழமை மாலை தமிழ் எம்.பி.க்கள் மற்றும் தமிழர் கட்சித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை செய்வார் என்று தெரிகிறது.ராஜபட்சவுடன் சந்திப்பு: வியாழக்கிழமை இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ்ûஸ சந்திக்கிறார்.தமிழர்களுக்கான நிவாரணப் பணிகள் மற்றும் மறு குடியமர்வுக்காக இந்தியா ஏற்கெனவே | 500 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது. இதுதவிர தமிழக அரசு சேகரித்த 2.5 லட்சம் குடும்ப நிவாரண பாக்கெட்டுகளையும் இந்தியா வழங்கி உள்ளது. இதுதவிர கூடாரங்கள், விவசாய உபகரணங்கள் உள்ளிட்ட 2500 மெட்ரிக் டன் நிவாரணப் பொருள்களும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்காக 55 பேருந்துகளை இந்தியா வழங்கியுள்ளது.சமீபத்தில் 4 லட்சம் சிமென்ட் மூட்டைகளையும் இந்தியா வழங்கியது. தமிழர்களின் சேதமடைந்த வீடுகளை பழுதுபார்க்க இந்த சிமென்ட் மூட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.மேலும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுப்பதாகவும் இந்தியா அறிவித்துள்ளது.இதுதவிர, வட கிழக்குப் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இந்தியா நிறைவேற்றி வருகிறது. ரயில் பாதை அமைப்பது, துறைமுகம், கலாசார மையங்கள், விளையாட்டு அரங்குகள் ஆகியவற்றைக் கட்டும் பணிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
கருத்துக்கள்

கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவிற்கு வராமலா போகும்?ஒத்திகை முடிந்ததும் நாடகம் அரங்கேறாமலா போகும்? இறுதியி்ல் குற்றவாளி நடிகர்களுக்குத் தண்டனை கிடைக்காமலா போகும்? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/1/2010 6:17:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *http://www.dinamalar.com/News_Detail.asp?Id=74695
தமிழர்களுக்கு இந்தியா உதவும் : நிருபமா உறுதி