சனி, 12 நவம்பர், 2011

இந்திய இலக்கியச் சிற்பிகள் : சி.இலக்குவனார் – படித்துப் பயனடைக

சி.இலக்குவனார் – படித்துப் பயனடைக

பதிவு செய்த நாள் : 12/11/2011


புத்தகம் :
சி.இலக்குவனார்:

தமிழ்க் காப்புக் கழகம் மூலமும் ‘சங்க இலக்கியம்’,  ‘குறள் நெறி’ , முதலான இதழ்களைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் நடத்தியும், தமிழ் மறுமலர்ச்சிக்கு ஊக்கம் தந்தவர். இவருடைய ‘தமிழ் உரிமைப் பெருநடைப்பயணம்‘ தமிழர் வரலாற்றில் பெரும் புரட்ச்சியை ஏற்ப்படுத்தியது. ஆங்கில அறிவின் திறத்தால் தமிழ் மேன்மையை உலகுக்குக் காட்டியவர். இவரது ஆய்வு நூல்கள் சிறந்த விளக்கங்களையும், கூறிய முடிவுகளையும் தமிழர்க்கு வழங்கின. நுண்மான் நுழைபுலமும் அஞ்சா நெஞ்சமும் இவரின் தனி அடையாளங்கள். “ஆசிரியர் மறைமலை அடிகளாரின் பரந்தாழ்ந்த புலமையுடன். அறிஞர் கா.சு.பிள்ளையின் நுண்மான் நுழைபுல ஆய்வுத்திறனும், நாவலர் சோம சுந்தர பாரதியாரின் நிமிர்நடையும் துணிவும் உடையவர் இலக்குவனார்” எனக் குறிப்பிட்டார் பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரை. இலக்குவனாரது தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு மிகச் சிறப்பானது. ‘அரும்புலமையும் அஞ்சாமையும் சார்பற்ற நோக்கும் கொண்டவர் இவர்‘ என  அறிஞர் அண்ணா குறிப்பிட்டுள்ளார். வாழ்நாள் முழுமையும் தமில்காத்துத் தமிழ் வளர்க்கும் செந்தமிழ்க் காவலராகவே திகழ்ந்தார். அன்பின் பிணைப்பினால் பண்பு கெழுமிய மிகப்பெரும் நண்பர் குழாம் இவருக்கு உண்டு.

ஆசிரியர் :
இந்நூலாசிரியர் மறைமலை இலக்குவனார் தமிழ்நாடு அரசின் கலைக்கல்லூரிகளில் 35 ஆண்டுகாலம் பணிபுரிந்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஓராண்டுகாலம் சிறப்புவருகை பேராசிரியராகப் பனி புரிந்த இவர் பல்துறைசார் அணுகுமுறைகள் வழி இலக்கியத்தை ஆய்வதில் பெரும் நாட்டமுடையவர். திறனாய்வுத் துறையில் இவர் எழுதியுள்ள பன்னிரண்டு நூல்களும் இலக்கிய ஆய்வுப்புலத்தில் புதிய திசைகளைப் புலரவைக்க வேண்டும் என்னும் இவரது பெராவலைப் புலப்படுத்துவன எனலாம்.

புத்தகம் கிடைக்குமிடம் :
சாகித்திய அகாதெமி
#443, குணா அடுக்ககம்,
அண்ணா சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை-600 018.

அட்டைப் படங்கள்:



3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக