மும்பை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மும்பை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

மும்பையில் தமிழ்ச் சங்கம் பாண்டுப்பு சார்பில் இலவசத் தமிழ் வகுப்புகள்



மும்பையில் பாண்டுப்பு தமிழ்ச் சங்கம் சார்பில் இலவசத் தமிழ் வகுப்புகள்

தமிழ்ச் சங்கம் பாண்டுப்பு சார்பில் இலவசத் தமிழ் வகுப்பு அடுத்த மாதம்(செப்டம்பர்) 3-ந்தேதி முதல் தொடங்குகிறது. வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை பாண்டுப்பு மேற்கு, காவுதேவி சாலைப் பகுதியில் உள்ள அன்னை சிவகாமி தேசிய நினைவு மன்றத்தில் நடைபெறும்.

முதல் நாள் வகுப்பை அன்னை சிவகாமி தேசிய நினைவு மன்றத் தலைவர் மாயாண்டி தொடங்கி வைக்கிறார். தமிழ்ச் சங்கம் பாண்டுப்பு தலைவர் ச.சி.தாசன், மன்ற செயலாளர் எட்வர்ட்டு, பொருளாளர் வில்சன் முதலான பலர் முன்னிலை வகிக்கின்றனர். வகுப்பில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சேர்ந்து தமிழ் எழுத, படிக்கக் கற்றுக்கொள்ளலாம்.

வகுப்பில் சேரும் அனைவருக்கும் தேவையான புத்தகங்களும் ஏடுகளும்  வழங்கப்படும்.


வெள்ளி, 10 ஜூன், 2022

ஐவருக்குச் செம்மொழி வேள் விருது – பாராட்டு விழா 2022, சென்னை

 

அகரமுதல




மும்பை இலெமுரியா அறக்கட்டளை, தமிழ் அறக்கட்டளை, பெங்களூரு ஆகியன சார்பில்

“செம்மொழி  வேள்”  விருது  –  பாராட்டு  விழா  2022

தலைமை : முனைவர் மு.ஆறுமுகம்

அமெரிக்காவின்  ஆர்வர்டுபல்கலைக்  கழகத்  தமிழ்இருக்கை      ஆட்சிக்குழு உறுப்பினர்

வரவேற்புரை : மும்பை சு.குமணராசன்

மும்பை  இலெமுரியாஅறக்கட்டளை  நிறுவனத்தலைவர்

 நிகழ்விடம் : சென்னை இராசாஅண்ணாமலைபுரம், முத்தமிழ்ப்  பேரவை இராசரத்தினம்  கலையரங்கம்

நாள் :   வைகாசி 29, 2053 /12.6.2022   ஞாயிறு மாலை 5.30 மணி

      செம்மொழிவேள்  விருது,  பாராட்டுவிழா  –  2022,  நிகழ்ச்சிக்கு    நிகழ்த்துகிறார். முதன்மை   விருந்தினர் :மரு.  பொன்.அன்பழகன்

 மும்பை, மகாராட்டிர மாநிலத்   தொழில்   மேம்பாட்டுக்  கழக  நிருவாகத்தலைவர்          

 முன்னிலை : டி.கே.சந்திரன்    

இயக்குநர்       சென்னைசில்க்கு  –  குமரன்தங்க  மாளிகை,

செ.துரைசாமி

 

 அனைத்திந்தியத்    தமிழ்ச்    சங்கப்பேரவைத்  தலைவர்

வீ.க.செல்வக்  குமார்

   சென்னை மெட்டக்குசு          ஆய்வக மேலாண்மை  இயக்குநர்

 பூ.மாரிமுத்து

 சாராபிளாசுடிக்குசு     நிறுவனங்கள்   தலைவர் 

 ஆ.தென்சிங்கு

 மும்பை    ஆணிபெசிலிட்டீசு-சொல்யூசன்சு    நிருவாக இயக்குநர்

இசாக்கு

தமிழ்    அலை    பதிப்பக உரிமையாளர்       

 அறிமுகக்கூடல்,      நட்புறவாடல், மாணவர்     கலைஞர்கள் அமைப்பு   இயல்   இசை கூத்தரங்கம்   நடைபெறுகிறது.

“செம்மொழி வேள்”விருது பெறுநர்

கவிப்பேரருவி ஈரோடு         தமிழன்பன்,

முனைவர்  பொன்  கோதண்டராமன்    (எ)பொற்கோ, 

பேராசிரியர் முனைவர்  இ.சுந்தரமூர்த்தி,

பேராசிரியர்    முனைவர் ப.மருதநாயகம், 

பேராசிரியர்  முனைவர்  மறைமலை இலக்குவனார்

சிறப்பு விருது – சிலம்பு நம்பி : இளவரசு அமிழ்தன்

வாழ்த்துரை

இரா.செல்வம்

இதில்  இந்தியத்  தோல்பொருட்கள்   ஏற்றுமதிக்கழகச்  செயல்  இயக்குநர்

முனைவர்  சு.பாண்டியன்

வருமான        வரித்துறைகூடுதல்  ஆணையர் 

 முனைவர் சேது குமணன்

சேதுபாசுகரா  கல்விக்  குழுமம் – வேளாண்மைக்கல்லூரித்   தலைவர்

திருமதி  புனிதாகணேசன்

பாரத்து   கல்விக்   குழுமம் தலைவர் 

 படைக்கோ  நா.சோம  சுந்தரம்

கடலோரப்பாது காப்புப் படை (கிழக்குப்  பகுதி  

 பேராசிரியர்   கு.வணங் காமுடி

வடதமிழக ஒருங்கிணைப்பாளர்,  தமிழியக்கம்

  நெறியாள்கை முத்துமணி  நன்னன் 

புலவர்     கார்த்தியாயினி

பெங்களூரு  தமிழ்  அறக்  கட்டளை    










சனி, 29 டிசம்பர், 2018

க.ப. அறவாணன் படத்திறப்பு, மும்பை

அகரமுதல


அறிஞர் க.ப.அறவாணன் படத்திறப்பு, மும்பை
மேனாள் துணைவேந்தரும், தமிழ் வளர்ச்சித் துறை ஆய்வாளருமான தமிழறிஞர் க.ப. அற்வாணனின் படத்திறப்பு-நினைவேந்தல் நிகழ்வு மும்பை, முலுண்டு, வித்யா மந்திர் பள்ளி அரங்கில் வெள்ளிக்கிழமை(மார்கழி 13, 2049 – 28/12/2018)  மாலை  நடை பெற்றது.
இலெமுரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருவையாறு ஔவைக் கோட்டம் நிறுவன்ர் மு.கலை வேந்தன் கலந்து கொண்டு க.ப. அறவாணன் படத்தினைத் திறந்து வைத்து நிறைவுரையாற்றினார்.
மும்பையின் பல்வேறு அமைப்புகளின் சார்பாளர்கள் பெ. கணேசன், நெல்லைப் பைந்தமிழ், மு.மகேசன், இரா. தமிழ் நேசன், கே. ஆர். சிறீநிவாசன், வெ. சித்தார்த்தன், மிக்கேல் அந்தோணி, இறை சா. இராசேந்திரன், சிறீதர் தமிழன் உள்ளிட்ட பலர் க.ப. அறவாணனின் தமிழ்த் தொண்டு குறித்து நினைவுரையாற்றினர்.
மும்பையின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கலந்து க.ப. அறவாணன் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். 

செவ்வாய், 25 டிசம்பர், 2018

தமிழறிஞர் க.ப.அறவாணன் நினைவேந்தல் – படத்திறப்பு, மும்பை

அகரமுதல

 மார்கழி 13, 2049 / 28.12.2018

வெள்ளி மாலை 6.00

பண்டிதர் சவகர்லால் நேரு சாலை

மும்பை 400 080

 தலைமை: சு.குமணராசன்

படத்திறப்பு: முனைவர் மு.கலைவேந்தன்

இலெமூரியா அறக்கட்டளை
தானே, மும்பை 400 606

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

மும்பை இளம்பெண்ணின் புத்திசாலித்தனம்: பின்தொடர்ந்தவர்களுக்குச் சிறை


http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_802407.jpg

மும்பை இளம்பெண்ணின் புத்திசாலித்தனம்: பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்களுக்கு ஓராண்டு ச் சிறை
மும்பை: ஆட்டோவில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை, பின்தொடர்ந்து, தொந்தரவு செய்த இளைஞர்களுக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த இளைஞர்களின் தொந்தரவை, மொபைல் போனில் படம் பிடித்து, அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அதன் மூலம் அந்த குற்றவாளிகள் மீது போலீசாரை நடவடிக்கை எடுக்கச் செய்த பெண்ணை பலரும் பாராட்டியுள்ளனர்.


ஆட்டோவில் தனியாக:

பத்து நாட்களுக்கு முன், மும்பையில், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இளம் பெண், அலுவலகம் முடிந்து வீட்டிற்கு, ஆட்டோ ஒன்றில் பயணித்து கொண்டிருந்தார். ஆட்டோவை டிரைவர் ஓட்ட, பின் இருக்கையில், அந்தப் பெண் மட்டும் இருப்பதைப் பார்த்த, பைக்கில் வந்த இரு இளைஞர்கள், அந்தப் பெண் சென்ற ஆட்டோ அருகில் பைக்கை ஓட்டியபடி வந்து, கேலியும், கிண்டலும் செய்துள்ளனர். ஆட்டோ டிரைவர், வண்டியை வேகமாக ஓட்டிச் சென்றால், அவர்களும் வேகமாக வந்து, அந்தப் பெண்ணை, "ஈவ் - டீசிங்' செய்துள்ளனர். இதனால், அந்தப் பெண் மிகுந்த மனவேதனை அடைந்தார்.


மொபைலில் படம்:

இது போன்ற சம்பவங்கள், மும்பை சாலைகளில் வெகு சாதாரணம் என்பதால், இதற்கு முடிவு கட்ட விரும்பிய அப்பெண், தன் கையிலிருந்த மொபைல் போனில், அந்த இளைஞர்களின் அட்டூழியத்தை படம் பிடித்தார். வீட்டுக்குச் சென்ற அப்பெண், உடனடியாக, அவர்களின் சேட்டையை, சமூக வலைதளம் ஒன்றில், பதிவேற்றம் செய்து, "இது போன்ற அட்டூழியங்கள் தடுக்கப்பட வேண்டும்' என, வலியுறுத்தினார். அந்தப் படங்களை, சமூக வலைதளத்தில் பார்த்தவர்கள், இளம் பெண்ணை தொந்தரவு செய்த இளைஞர்கள் யார் என்பதை அறிந்து, அந்தத் தகவலை, போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.


துப்புரவு மேற்பார்வையாளர்கள்:

அதன் பிறகு, அந்தப் பெண்ணை தொடர்பு கொண்ட போலீசார், அவரிடம் புகார் எழுதி வாங்கிய பின், அந்த இளைஞர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் இருவர் மீதும், சமீபத்தில் அமலுக்கு வந்துள்ள, இந்திய குற்ற நடைமுறைச் சட்டம், 354 மற்றும் 354 டி பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். விசாரணையில், பைக்கில் வந்த அந்த இளைஞர்கள், மும்பை மாநகராட்சியில், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞர்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்தப் பெண்ணின் விவரங்கள், வெளியிடப்படவில்லை. அந்தப் பெண்ணை, சக பெண்கள் பலரும், இணையதளத்தில் பாராட்டியுள்ளனர். குற்ற நடைமுறைச்சட்டம், 354 பிரிவின் கீழ், மும்பையில் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இது தான்.


குற்ற நடைமுறை சட்டம் 354, 354 டி:

டில்லியில், 23 வயது மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, பெண்களின் பாதுகாப்பிற்காக, குற்ற நடைமுறை சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டன. அதன் படி, பெண்களைப் பின் தொடர்ந்து, தொந்தரவு செய்பவர்களுக்கு, ஜாமினில் வெளிவர முடியாத அளவிற்கு, ஓராண்டு சிறை தண்டனை விதிக்க முடியும். பின்தொடர்தல் என்றால், பெண் பின்னால் வந்து தொந்தரவு செய்வது முதல், போனில் தொடர்பு கொண்டு வழிவது, இன்டர்நெட்டில் ஆபாசமாக பேசுவது, வேறு எந்த விதமான முறையிலும், அப்பெண்ணுக்கு பயத்தை உண்டு பண்ணுவது, பின்தொடர்தல் என, கருதப்படுகிறது. பின் தொடர்தல் குற்றத்திற்கான ஆதாரங்களை காட்டினால் போதும், பின்தொடர்ந்தவர்களுக்கு, ஓராண்டு சிறை நிச்சயம். மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் கூட விதிக்கப்படலாம்.

புதன், 24 ஜூலை, 2013

மும்பையில் தமிழ் வழி கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவுங்கள்


[தமிழ்_ஆராய்ச்சி]: தமிழ் வழி கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவுங்கள்

khathir avan tnkmumbai@gmail.com via hotmail.com 
3:42 PM (12 hours ago)

to kmohan.livewire, praba.alagar, bcc: tamil_araichchi
மும்பையில் புலம்பெயர்ந்து வாழும் , தமிழ் வழி கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவுங்கள் !! இது சம்பந்தமான தகவல்கள் இணைக்க பட்டிருக்கு .படிப்பிற்கு உதவிடுங்கள் 

- தமிழர் நட்பு கழகம் (பதிவு ) மும்பை .

AN APPEAL
“ACTION”- is the best possible word .- H.M.cuba
THAMIZHAR NATPU KAZHAGAM, MUMBAI, was formed in 1999 to address the issues of Tamils living in Mumbai slums. M.khathiravan who is the founder president of the organization, Since, majority of the tamils are migrants, among the local population, they have been neglected and facing discrimination.
Through the organization we have been addressing the issues concerning to the slum dwellers, such as insufficient drinking clean water, quality education and other basic amenities. We have been actively participating and mobilizing people to voice against the nuclear power plants and also against the “Genocide of Tamils in Eelam”. & protect and save tamizh language
For the last 5 years we have been organizing programmes to encourage and support the Tamil students from the slums to continue their education. As part of the programme we distribute notebooks, uniforms, geometry box and other educational materials for about 500 students.
This year also we are planning to organize the same programme at cheetacamp Mumbai on dated 28 th july 2013. and we appeal to all of you to come forward to contribute money for the cause.
WE APPEAL TO ALL OF YOU TO CONTRIBUTE TO THIS NOBLE CAUSE GENEROUSLY.
Thanks & please contact further details
M.KHATHIRAVAN
PRESIDENT: THAMIZHAR NATPU KAZHAGAM [REGD]
PROJECTcordinator: SLUM [SOCIAL LEAGE FOR URBAN MISSION]
CELL: +919321454425
EMAIL: TNKMUMBAI@GMAIL.COM


https://mail-attachment.googleusercontent.com/attachment/u/0/?ui=2&ik=7a7ddcb2ba&view=att&th=1400db2fddb47558&attid=0.1&disp=inline&realattid=f_hjgy2ekz0&safe=1&zw&saduie=AG9B_P9sxQ9Syp4FQar079Xa4M8v&sadet=1374620541464&sads=uEP1SYCcl_-n2Un6k1Dm-Y9IR7w&sadssc=1 
https://mail-attachment.googleusercontent.com/attachment/u/0/?ui=2&ik=7a7ddcb2ba&view=att&th=1400db2fddb47558&attid=0.2&disp=inline&realattid=f_hjgy2el91&safe=1&zw&saduie=AG9B_P9sxQ9Syp4FQar079Xa4M8v&sadet=1374620578545&sads=cbA3Q99frGXzW-cdpsj4ALlgWo0

 https://mail-attachment.googleusercontent.com/attachment/u/0/?ui=2&ik=7a7ddcb2ba&view=att&th=1400db2fddb47558&attid=0.3&disp=inline&realattid=f_hjgy2elf2&safe=1&zw&saduie=AG9B_P9sxQ9Syp4FQar079Xa4M8v&sadet=1374620619367&sads=FjISHLW2h_WQ5VgeySmPYx_EJtk
-- https://mail-attachment.googleusercontent.com/attachment/u/0/?ui=2&ik=7a7ddcb2ba&view=att&th=1400db2fddb47558&attid=0.8&disp=inline&realattid=f_hjgy2md37&safe=1&zw&saduie=AG9B_P9sxQ9Syp4FQar079Xa4M8v&sadet=1374620761616&sads=uutPZN9JAebOcIS7PRolmqX0AHg


https://mail-attachment.googleusercontent.com/attachment/u/0/?ui=2&ik=7a7ddcb2ba&view=att&th=1400db2fddb47558&attid=0.9&disp=inline&realattid=f_hjgy2md98&safe=1&zw&saduie=AG9B_P9sxQ9Syp4FQar079Xa4M8v&sadet=1374620856354&sads=b9wOHWaHXDKN8WelQ9xBx3F2ynQ 

திங்கள், 10 ஜூன், 2013

உயர்கல்விக்காகத் தேர்வாகியுள்ள மும்பை சிவப்பு விளக்கு ப் பகுதி ப் பெண் சுவேதா



அமெரிக்காவில் உயர்கல்விக்காகத் தேர்வாகியுள்ள மும்பை சிவப்பு விளக்கு ப் பகுதி ப் பெண் சுவேதா
நியூயார்க்:மும்பையைச் சேர்ந்த செக்ஸ் தொழிலாளியின் மகள், அமெரிக்காவில் உயர் கல்விக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மும்பையின் சிவப்பு விளக்கு பகுதியான, காமாட்டிபுராவைச் சேர்ந்தவர், ஸ்வேதா, 18. இவரின் தாத்தா, பெண்களை வைத்து செக்ஸ் தொழில் நடத்தி வந்தார். இதில் விரும்பமின்றி, ஸ்வேதாவின் தாய் அங்கிருந்து தப்பித்து சென்று, தலைமறைவாக வாழ்ந்து வந்தார். எனினும், சூழ்நிலையின் காரணமாக, அவரும் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டார்.

ஸ்வேதாவின் தாய், குழந்தையை பெற்றெடுத்து, நல்ல முறையில் வளர்த்து வந்தார். அதன் பின், பாலியல் தொழிலையும் கைவிட்டார். இருப்பினும், பாலியல் தொழிலாளர்கள் வசிக்கும் காமாட்டிபுராவிலேயே வசித்ததால், விவரம் தெரியாத வயதில், ஸ்வேதாவும் பல ஆண்களால், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.இதனிடையே, அப்பகுதி அரசுப் பள்ளியில் படித்த ஸ்வேதா, கடந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று, ஓராண்டு காலம் படிப்பை தொடராமல், ஜார்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கும், நேபாள நாட்டின் மலை வாழ் மக்களிடமும் சென்று, அங்குள்ள சிறுமிகளிடம், பாலியல் துன்புறுத்தல் குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டார். இவரது சிறந்த பணிகளை பாராட்டி, அமெரிக்காவில் உள்ள, போர்டு கல்லூரி, கல்வி உதவித் தொகையுடன், இலவசமாக மேற்படிப்பை தொடரவும், ஸ்வேதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன் படி, ஆண்டுக்கு, 28 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை கிடைப்பதுடன், 10 லட்சம் ரூபாய் வரையிலான, மருத்துவக் காப்பீட்டையும் இலவசமாக வழங்கியுள்ளது.

இது தவிர, அமெரிக்காவிலிருந்து வெளியாகும், "நியூஸ் வீக்' பத்திரிகையில், "25 உமன்ஸ் அன்டர் 25 டு வாட்ச்' என்ற தலைப்பில், உலகில் கவனிக்கப்பட வேண்டிய, 25 வயதிற்கு உள்பட்ட, 25 பெண்கள் என்ற பட்டியலிலும், ஸ்வேதா இடம் பெற்றுள்ளார். இதில், தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் பிழைத்த, பாகிஸ்தானைச் சேர்ந்த, பள்ளி சிறுமி, மலாலாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.சிவப்பு விளக்கு பகுதியான, மும்பையின் காமாட்டிபுராவிலிருந்து, மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்லும் முதல் பெண், என்ற பெருமையையும் ஸ்வேதா பெற்றுள்ளார்.

தற்போது அமெரிக்கா செல்லும் ஸ்வேதாவுக்கு, ஓராண்டுக்கு முன்பே, சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுதல், குறித்த உலகளாவிய கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. பாஸ்போர்ட் இல்லாததால், அப்போது அமெரிக்க செல்ல முடியாத ஸ்வேதா, சைகாலஜியில் பட்டம் பெற்று, பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடப் போவதாக கூறியுள்ளார்.
 

திங்கள், 29 ஏப்ரல், 2013

முகநூலில் ஆதரவு திரட்டும் 79 அகவை மும்பைப் பெண்


முகநூலில்  ஆதரவு திரட்டும் 79  அகவை  மும்பை ப் பெண்
மும்பை : தன்னை க் கொடுமைப்படுத்திய போலீஸ் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 79 வயது பெண், "பேஸ்புக்' இணையதளம் மூலம் ஆதரவு திரட்டி வருகிறார்.

மும்பையைச் சேர்ந்த மோகினி கம்வானி, 79, என்ற பெண்ணுக்கும், சிலருக்கும் இடையே சொத்து பிரச்னை உள்ளது. அதை தீர்த்து வைக்கக்கோரி அப்பெண், போலீசில் முறையிட்டும், நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால், கடந்த ஆண்டு, மும்பையில் நடந்த குடியரசு தின விழாவில், மோகினி கம்வானி தற்கொலைக்கு முயன்றார்.
அதை அறிந்த போலீசார், அந்தப் பெண்ணை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அதற்கு பின்னரும் வழக்குகளைத் தொடர்ந்து, தொந்தரவு செய்து வருகின்றனர்.

இதனால் விரக்தி அடைந்த அப்பெண், 58 வயதான, தன் மகன் திலீப் என்பவருடன், "பேஸ்புக்' இணையதளத்தின் மூலம் ஆதரவு திரட்டி வருகிறார். அவரின் கோரிக்கைக்கு, 2,400 பேர் பதிலளித்து, ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.அவர்களில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர், பார்பரா என்பவர் உட்பட ஏராளமானோர் குறிப்பிடத்தக்கவர்களாக உள்ளனர்.

புதன், 23 ஜனவரி, 2013

மும்பையில் தமிழ் மகள் பட்டயக்கணக்குத்தேர்வில் (சி.ஏ.) முதலிடம்

 

மும்பையில் மிதியூர்தி(ஆட்டோ) ஓட்டும் தமிழரின் மகள் அகில இந்தியப் பட்டயக்கணக்குத்தேர்வில்

(சி.ஏ.) முதலிடம்

மும்பையில் ஆட்டோ ஓட்டும் தமிழரின் மகள், அகில இந்திய சார்ட்டர்டு அக்கவுன்டன்சி (சி.ஏ.) தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெயகுமார் பெருமாள் கடந்த சில ஆண்டுகளாக மும்பையில் தன் மனைவி, மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். அவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். அவரது மகள் பிரேமா ஜெயகுமாரும், 22 வயது மகனும் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற சி.ஏ. தேர்வில் பங்கேற்றனர். இந்நிலையில், சி.ஏ. தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன.
அதில் பிரேமா ஜெயகுமார் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர் 800க்கு 607 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் பி.டி.ஐ. செய்தியாளரிடம் கூறுகையில், ""இது எனது வாழ்நாள் சாதனை. என்னைப் பொறுத்தவரை, வெற்றிக்கான சாவி என்பது கடின உழைப்புதான். எனது இந்த வெற்றிக்கு என் பெற்றோர்தான் காரணம்.
அவர்களின் ஆதரவு மற்றும் ஆசி இல்லாமல் இந்த வெற்றி கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தி வந்தனர். எனக்காக இவ்வளவு தூரம் பாடுபட்ட அவர்களை இனி வசதியாக வாழ வைக்க விரும்புகிறேன். என் தந்தையையும், இல்லத்தரசியான தாயையும் நினைத்து பெருமைப்படுகிறேன்.
அவர்கள் எனது மற்றும் என் தம்பியின் படிப்புக்கு பணம் ஒரு தடையாக இருக்கும் நிலையை எப்போதும் ஏற்படுத்தியதில்லை'' என்று தெரிவித்தார். பிரேமாவின் சகோதரரும் சி.ஏ.வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
முன்னதாக, மும்பை பல்கலைக்கழகம் நடத்திய பி.காம் மூன்றாம் ஆண்டுத் தேர்வில் பிரேமா 90 சதவீத மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.


மும்பை: சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் (சி.ஏ.,) படிப்பில், தமிழகத்தை சேர்ந்த, பிரேமா ஜெயகுமார் என்ற மாணவி, நாட்டிலேயே முதலாவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த ஜெயகுமார் பெருமாளின் மகள், பிரேமா. குடும்பத்தினருடன் சிறு வயது முதல் மும்பையில் வசித்து வருகிறார். இவர் தந்தை, மும்பையில், ஆட்டோ ஓட்டுகிறார். கடந்த ஆண்டு, நவம்பரில் நடந்த, சி.ஏ., இறுதி தேர்வை பிரேமா எழுதினார். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின.

மொத்தமுள்ள, 800 மதிப்பெண்களில், 607 மதிப்பெண் பெற்று, நாட்டிலேயே, முதலாவது மாணவியாக பிரேமா தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் தம்பியும், சி.ஏ., படிப்பில் இப்போது வெற்றி பெற்று உள்ளார்.

மும்பை, மாலாடு பகுதியில், ஒரு அறை வீட்டில் தாய், தந்தை, தம்பியுடன் வசிக்கும் பிரேமா, ""கடின உழைப்பு தான் வெற்றிக்கு காரணம்,'' என, தெரிவித்துள்ளார். பி.காம்., படிப்பிலும், மும்பை பல்கலைக்கழகத்தில், 90 சதவீத மதிப்பெண் பெற்று, இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றவர் பிரேமா.

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

இந்தியாவில் தயாரான செயற்கை இதயம்

இந்தியாவில் தயாரான செயற்கை இதயம்: மறு மின்னேற்ற கலன் (ரீ-சார்ஜ் பேட்டரி) மூலம் இயங்கும்
இந்தியாவில் தயாரான செயற்கை இதயம்: ரீ-சார்ஜ் பேட்டரி மூலம் இயங்கும்
மாலை மலர் மும்பை, செப். 23-

உலகில் இந்தியாவில்தான் இதய நோயாளிகள் அதிகம் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது. குடும்ப பின்னணி, பணிச்சூழல், உணவு முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதய நோய் வருவதாக கூறப்படுகிறது. இதய நோய்க்கு இந்தியாவில் ஆண்டுக்கு 40 லட்சம் பேர் பலியாகின்றனர். நெஞ்சு வலி என்று சொல்லப்படும் இதய கோளாறால் இளம் வயதிலேயே பலர் உயிரிழக்கின்றனர்.

இதய நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக செயற்கை இதயம் கண்டு பிடிக்கப்பட்டு, வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான 400 கிராம் எடையுள்ள இயந்திரத்தினால் ஆனது இந்த செயற்கை இதயம். மும்பையை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி ஒன்று இந்த செயற்கை இதயத்தை வரவழைத்து நோயாளி ஒருவருக்கு பொருத்தி வெற்றிகரமாக செயல்பட வைத்திருக்கிறது.
இதற்காக அந்த மருத்துவமனையின் டாக்டர்கள் பந்த்ராவில் உள்ள ஆசிய இதய நோய் மருத்துவமையத்தில் பயிற்சி மேற்கொண்டனர். இந்த செயற்கை இதய கருவி, இதயம் செய்யும் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும். செய்கை இதய கருவியானது, ரீசார்ஜ் செய்யத்தக்க பேட்டரிகள் மூலம் இயங்கும். ஆனால், விலைதான் அதிகம்.

தற்போது ஆசிய இதய நோய் மருத்துவ மையத்தில் கிடைக்கும் செயற்கை இதயத்தின் விலை 1 கோடி ரூபாய் ஆகும். இதுபற்றி, இம்மையத்தின் இயக்குநர் டாக்டர் ராமாகாந்த் பண்டா கூறியதாவது:-

இந்தியாவில், இதய நோயால் பாதிக்கப்படுவர்களில் ஒரு சதவிகிதம் பேருக்கு மட்டுமே மாற்று இதயம் பொருத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. இந்த செயற்கை இதய கருவியானது, நிஜ இதயத்தை விட மிகச் சிறியது. இதய கோளாறுக்கு ஒரு நல்ல தீர்வாக இந்த கருவி அமையும். இதய நோயாளிகளுக்கு இதன் மூலம் புத்துயிர் கிடைக்கும். எப்போதும் போல் நோயாளிகள் அனைத்து வேலைகளையும் செய்யலாம். தண்ணீரில் நீந்த மட்டுமே கூடாது. நோயாளிகள் புத்துணர்ச்சியுடன் திகழ்வர்.

இவ்வாறு அவர் கூறினார்.