திருப்பூர்பெரியசாமிஅவர்களுக்குஉதவுங்கள்!தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்
அன்பார்ந்ததமிழ்ப்பெருமக்களே !
மொழிப்போர் ஈகியர், திருப்பூர்ப. பெரியசாமி அவர்களைத் தமிழ் உணர்வாளர்கள் நன்கு அறிவர்.
1965 இல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் திருப்பூரில் கலந்து கொண்டு போராடியவர் திரு. பெரியசாமி அவர்கள். அப்போது அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் கிளைச் செயலாளராக இருந்தார். இப்போது அவருக்கு அகவை 83.
இந்தித் திணிப்பை எதிர்த்து அவர் ஏற்றிய கருப்புக் கொடியை இறக்கச் சொல்லி காவல் துறை பெரியசாமிக்குக் கட்டளையிட்டது. கருப்புக் கொடியை இறக்க மறுத்துவிட்டார் பெரியசாமி.
1965 – இந்தி எதிர்ப்புப் போர் என்பது, தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய உரிமைப் போராட்ட நிகழ்வாகும். திருப்பூரில் ஏராளமானவர்களைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். அதேபோல், குமாரபாளையம் – பொள்ளாச்சி ஆகிய இடங்களிலும்இந்தியை எதிர்த்த தமிழர்களை சுட்டுக் கொன்று அவர்தம் பிணங்களைச் சரக்குந்தில் ஏற்றிச் சென்று காவல்துறையினர் எரித்தனர். தமிழ்நாடு முழுவதும் முந்நூறு பேருக்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், கொல்லப்பட்டவர்களின் உண்மையானஎண்ணிக்கையை அரசு வெளியிடவில்லை என்றும் 1965 மொழிப்போர் வரலாற்றை எழுதிய பேராசிரியர் அ. இராமசாமி அவர்கள் தமது “இந்திஎதிர்ப்புப்போராட்டவரலாறு” – நூலில் குறிப்பிடுகிறார்கள் (பாகம் 1, 2).
வரலாற்றுச் சிறப்புமிக்க அப்போராட்டத்தில் பங்கு கொண்ட பெரியசாமி அவர்கள் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளில் வழக்குப்போட்டார்கள். பெரியசாமி தலைமறைவாகிவிட்டார்.
மூன்று மாதம் தலைமறைவாக இருந்தார். பின்னர் அவரே நேரில் வந்து தன்னைஒப்படைத்துக் கொண்டார்.
நீதிமன்றம் இளைஞர் பெரியசாமிக்கு 18 மாத சிறைத் தண்டனை விதித்தது. ஏழு மாதச் சிறை வாசத்திற்குப் பிறகு, தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில் பெரியசாமி விடுதலை செய்யப்பட்டார்.
பின்னர், தி.மு.க.வில் முதன்மையாளராகச் செயல்பட்டார். தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டார். வேலம்பாளையம் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிற்காலத்தில், மொழிப்போர் ஈகி பெரியசாமி அவர்கள், மொழிப்போரில் உயிரீகம் செய்தோர் குடும்பத்தினர் – சிறை சென்றவர்கள். அவர்களின் குடும்பத்தினர் என எல்லாரையும் ‘மொழிப்போர் தியாகிகள் சங்கம்‘ நிறுவி ஒன்று திரட்டினார். அதன் தலைவராக ஈகி பெரியசாமி செயல்பட்டு வருகிறார். மொழிப்போர் ஈகியருக்கு தமிழ்நாடு அரசிடமிருந்து உதவித் தொகை பெற்றுத் தருவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டார்.
மொழிப்போரில் மிகப்பெரிய ஈகம் செய்த திருப்பூர் நகரில், அந்த ஈகியருக்கு நினைவுச் சின்னம் எதுவும் எழுப்பப்படவில்லை. ஈகி பெரியசாமி அவர்களின் முயற்சியால்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் மொழிப்போர் ஈகியர் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது.
இலஞ்சம் ஒழிப்புச் சங்கம் நிறுவி, கையூட்டு ஊழலுக்கு எதிராகப் பல்வேறு வழக்குகளை நடத்தினார். அதற்கான இயக்கங்கள் நடத்தினார். கையூட்டு கொடுக்கக்கூடாது என்ற ஒழுக்கத்தை மக்களிடம் பரப்பினார்.
பின்னர், தமிழ்நாட்டில் தமிழைக் கல்வி மொழியாக – ஆட்சி மொழியாக ஆக்க வேண்டுமென்ற இலட்சியத்திற்கு முதன்மை கொடுத்துச் செயல்பட்டு வந்தார். தமிழ் மொழி – இன உணர்வாளர்களின் செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டு தமிழ்நாடெங்கும் பல்வேறு போராட்டங்களிலும் மாநாடுகளிலும் கூட்டங்களிலும் கலந்து கொண்டு வந்தார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் 2005 மே 21 அன்று, ஈரோட்டில் நடத்திய “வெளியாரை வெளியேற்றுவோம்” மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ்நாடெங்கும் உள்ள மொழி இன உணர்வாளர்களுடனும், பல்வேறு கட்சி – இயக்கத் தலைவர்களோடும், உறுப்பினர்களோடும் நல்ல உயிரோட்டமான உறவு வைத்துக் கொண்டிருந்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்துப் புயல்போல் செயல்பட்டார். அக்காலத்தில், கட்சி எல்லை கடந்து இன உணர்வோடு ஈழ விடுதலைக்கான போராட்டங்கள், மாநாடுகள், கூட்டங்களில் பங்கேற்றார்.
கடந்த இரண்டாண்டுகளுக்கு மேல் கடுமையாக நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுப் பல்வேறு மருத்துவம் பார்த்தும் குணமாகாமல் வீட்டிலேயே முடங்கிப் போயுள்ளார். குடல் நோய் தீராமல் மிகவும் துன்பப்பட்டு வருகிறார். சொந்தத் தொழில், வீடு, கார் என வாழ்ந்த ஐயா பெரியசாமி அவர்கள், நோய் பாதிப்பால் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார். மிகக் கடுமையான பொருளாதாரச் சிக்கலில் உழல்கிறார். மருத்துவத்திற்கும் பணமில்லாமல் துன்புறுகிறார்.
ஈகி பெரியசாமி அவர்களைத் தாங்கிப் பிடிக்கும் பொறுப்பு தமிழர்களுக்கு இருக்கிறது! தமிழ் உணர்வாளர்கள் ஈகி ப. பெரியசாமி அவர்களுடைய வங்கிக் கணக்கில் நிதியளித்து, பேருதவி செய்ய வேண்டுமெனத் தமிழ்ப் பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஐயாவின் சேமிப்புக் கணக்கில் உரூபாய் ஐயாயிரம் செலுத்தியுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
to kmohan.livewire, praba.alagar, bcc: tamil_araichchi
மும்பையில்
புலம்பெயர்ந்து வாழும் , தமிழ் வழி கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவுங்கள்
!! இது சம்பந்தமான தகவல்கள் இணைக்க பட்டிருக்கு .படிப்பிற்கு உதவிடுங்கள்
- தமிழர் நட்பு கழகம் (பதிவு ) மும்பை .
AN APPEAL
“ACTION”- is the best possible word .- H.M.cuba THAMIZHAR NATPU
KAZHAGAM, MUMBAI, was formed in 1999 to address the issues of Tamils
living in Mumbai slums. M.khathiravan who is the founder president of
the organization, Since, majority of the tamils are migrants, among the
local population, they have been neglected and facing discrimination.
Through the organization we have been addressing the issues concerning
to the slum dwellers, such as insufficient drinking clean water, quality
education and other basic amenities. We have been actively
participating and mobilizing people to voice against the nuclear power
plants and also against the “Genocide of Tamils in Eelam”. & protect
and save tamizh language
For the last 5 years we have been organizing programmes to encourage and
support the Tamil students from the slums to continue their education.
As part of the programme we distribute notebooks, uniforms, geometry box
and other educational materials for about 500 students.
This year also we are planning to organize the same programme at
cheetacamp Mumbai on dated 28 th july 2013. and we appeal to all of you
to come forward to contribute money for the cause. WE APPEAL TO ALL OF YOU TO CONTRIBUTE TO THIS NOBLE CAUSE GENEROUSLY.
Thanks & please contact further details M.KHATHIRAVAN PRESIDENT: THAMIZHAR NATPU KAZHAGAM [REGD] PROJECTcordinator: SLUM [SOCIAL LEAGE FOR URBAN MISSION] CELL: +919321454425 EMAIL: TNKMUMBAI@GMAIL.COM
பொது இடங்களில் நடக்கும் விபத்துகளின் போது, பல நூறு பேர்
அங்கிருந்தாலும், விபத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிரை காப்பாற்ற
முடிவதில்லை. விபத்தில் காயம்பட்டவருக்கு, உடனடியாக அளிக்க வேண்டிய
முதலுதவியை செய்தால் தான், தொடர் மருத்துவ சிகிச்சை அளித்து உயிரை காப்பற்ற
முடியும்.
விபத்தில் காயமடைந்த நேரத்தில்இருந்து, முதலுதவி
அளிக்கும் நேரம் வரை உள்ள காலத்தை "கோல்டன் ஹவர்' என, குறிப்பிடுகின்றனர்.
இந்த நேரத்தை வீணாக்காமல், முதல் உதவி அளிக்க வேண்டும். இல்லையென்றால்,
விபத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிரை காப்பாற்ற முடியாது. ஆனால், விபத்து
நடக்கும் இடத்தில், பல நூறு பேர் இருந்தாலும், "கோல்டன் ஹவரில்',
பாதிக்கப்பட்டவருக்கு அளிக்க வேண்டிய முதலுதவியை அளிப்பதில்லை. இதனால்,
தான் பல உயிர்களை இழக்க நேரிடுகிறது.இதற்கு, சென்னை "எக்ஸ்பிரஸ் அவென்யூ'
வணிக வளாகத்தில்,சமீபத்தில் நடந்த தற்கொலையை குறிப்பிடலாம். "எக்ஸ்பிரஸ்
அவென்யூவின்' மூன்றாவது மாடியிலிருந்து குதித்து, ஐ.டி., ஊழியர்
ஒருவர்தற்கொலை செய்து கொண்டார்.
பல்வேறு தடைகள்
அவர்
மாடியிலிருந்து கீழே குதித்தபோது, அங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர்
இருந்தனர். மாடியிலிருந்து குதித்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞருக்கு
உதவ, பல தடைகள் அங்கு நிலவியுள்ளது.ரத்த வெள்ளத்தில் மிதக்கும் இளைஞரை
நெருங்க, யாரும் அனுமதிக்கப்படவில்லை. போலீஸ் வரட்டும் என, வணிக வளாக
ஊழியர்கள், பொதுமக்களை தடுத்து விட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட
இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால்,
காப்பாற்றியிருக்கலாம் என, அங்கிருந்த பெண் ஒருவர், போலீசாரிடம்
வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதுபோன்ற சூழல்களில், பொதுமக்கள் மனதில்
பல்வேறு தயக்கங்கள் ஏற்படுகின்றன."போலீஸ் கேஸ் ஆகிவிடும். இதில்,
தலையிட்டால் கோர்ட்டுக்கு போய் சாட்சி சொல்லணும். போலீசார் தொடர்ந்து
விசாரிப்பர். இதற்கு, வேலையை விட்டுவிட்டு, மெனக்கெடணும்' என, வேடிக்கை
பார்த்து சென்றதாகவும் சொல்லப்படுகிறது. விபத்து நேரத்தில்,
பாதிக்கப்பட்டவருக்கு உதவுவதால், சட்டரீதியான நெருக்கடிக்கு உள்ளாகி
விடுவோமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருப்பதே இதற்கு காரணம் என, கருத்து
நிலவுகிறது.
விலகி செல்ல வேண்டாம்:
இதுகுறித்து,
தமிழக கூடுதல் டி.ஜி.பி., கே.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:இந்திய கிரிமினல்
சட்டம், 100சதவீதம் மக்களை நம்பி தான் உள்ளது. ஒரு குற்ற நிகழ்வு குறித்து,
போலீசுக்கு மக்கள் உதவினால் தான், குற்றத்துக்கான உண்மையான காரணத்தையும்,
குற்றவாளியையும் கண்டுபிடிக்க முடியும்.சட்டத்தை கண்டு மக்கள் பயந்தால்,
உண்மையை வெளிக்கொணர்வது சாத்தியமில்லை. இதற்காக தான், சமுதாய காவல் என்ற
அமைப்பை உருவாக்கினோம். இந்த அமைப்பு செயல்படும் பகுதிகளில், குற்றம்
தொடர்பான முழு உண்மைகள் வெளிவருகின்றன. விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு
முதலுதவி அளிக்க வேண்டியது, அந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் கடமை.
பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்ப்பவர்களை, போலீசார் விசாரிப்பர்.
விசாரணை நடத்தினால் தான், அங்கு என்ன நடந்தது என்பது தெரியும். போலீசார்
விசாரிப்பரே என, பயந்து பாராமுகமாக செல்லும் மனோபாவமே மக்கள் மத்தியில்
உள்ளது. இதனால், தங்களின் கடமையில்இருந்து பொதுமக்கள் விலகி செல்கின்றனர்.
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவுவதை சுமையாகக்கருதாமல், சுகமான சுமையாக
கருத வேண்டும்.மக்களுக்கான சட்டத்தில், மக்களின் பங்களிப்பே முக்கியம்.
இதை, பொதுமக்கள் புரிந்து கொண்டால், பல வழக்குகளில் உண்மையான குற்றவாளிகள்
தண்டிக்கப்படுவர். தொடர் குற்றங்கள் நடப்பதும் தடுக்கப்படும்.இவ்வாறு,
ராதாகிருஷ்ணன் கூறினார்.இதுபோன்ற வழக்குகளில், சட்ட ரீதியான பாதுகாப்பும்,
முதலுதவி செய்பவருக்கு உள்ளது என,கூறுகின்றனர்.
சட்ட பாதுகாப்பு உண்டு:
இதுபற்றி,
தமிழகம் மற்றும் புதுவை கீழமை நீதிமன்ற வழக்கறிஞர் கூட்டமைப்பின் முன்னாள்
தலைவர் பி.திருமலைராஜன் கூறியதாவது:விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு,
முதலுதவி செய்ய மருத்துவமனைக்கு அழைத்து செல்வோர், மருத்துவமனையில் அவரை
சேர்த்துவிட்டு சென்று விடலாம். மருத்துவமனை போலீசுக்கு தவகல்
கொடுத்துவிடும்.சம்பவம் குறித்து போலீசுக்குதகவல்கள் சொல்ல விரும்பினால்,
மருத்துவ மனையில் முகவரியை கொடுக்கலாம். தானே முன்வந்தும் போலீசுக்கு தகவலை
சொல்லலாம். கோர்ட்டுக்கு சென்று சாட்சி சொல்ல நேரிடும்போது, "எனக்கு வேலை
அதிகம் இருக்கிறது. எனவே, என் சாட்சியத்தை முதலில் பதிவு
செய்துகொள்ளுங்கள்' என, எழுத்துமூலம், சாட்சியம் அளிக்கலாம்.இதன்மூலம்,
வழக்கு முடியும் வரை கோர்ட்டுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. பொது
இடங்களில் நடக்கும் சம்பவங்கள் குறித்து, அஞ்சாமல் தகவல் சொல்லலாம்.
இதற்கு, போதிய சட்ட பாதுகாப்பு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு,
திருமலைராஜன் கூறினார்.