மும்பையில் பாண்டுப்பு தமிழ்ச் சங்கம் சார்பில் இலவசத் தமிழ் வகுப்புகள்
தமிழ்ச் சங்கம் பாண்டுப்பு சார்பில் இலவசத் தமிழ் வகுப்பு அடுத்த மாதம்(செப்டம்பர்) 3-ந்தேதி முதல் தொடங்குகிறது. வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை பாண்டுப்பு மேற்கு, காவுதேவி சாலைப் பகுதியில் உள்ள அன்னை சிவகாமி தேசிய நினைவு மன்றத்தில் நடைபெறும்.
முதல் நாள் வகுப்பை அன்னை சிவகாமி தேசிய நினைவு மன்றத் தலைவர் மாயாண்டி தொடங்கி வைக்கிறார். தமிழ்ச் சங்கம் பாண்டுப்பு தலைவர் ச.சி.தாசன், மன்ற செயலாளர் எட்வர்ட்டு, பொருளாளர் வில்சன் முதலான பலர் முன்னிலை வகிக்கின்றனர். வகுப்பில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சேர்ந்து தமிழ் எழுத, படிக்கக் கற்றுக்கொள்ளலாம்.
வகுப்பில் சேரும் அனைவருக்கும் தேவையான புத்தகங்களும் ஏடுகளும் வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக