புதுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 மே, 2013

ஒளிப்படம் எடுப்பதில் புதுமையை ச் செய்யவிரும்பும் கார்த்திகேயன்..

ஒளிப்படம் எடுப்பதில் புதுமையை ச் செய்யவிரும்பும் கார்த்திகேயன்..

http://www.dinamalar.com/more_picture_html.asp?Nid=716554



செய்தி பத்திரிகை நிறுவனத்தில் நியூஸ் மற்றும் இன்போகிராபிக் டிசைனராக வேலை பார்ப்பவர்.
வேலையின் போது இவர் கவனத்திற்கு வரும் பத்திரிகை புகைப்படங்களை அடிக்கடி பார்த்ததில் இவருக்கு புகைப்படக்கலை மீதும் ஒரு கண் விழுந்தது.
இதன் காரணமாக நேரம் கிடைக்கும் போது பத்திரிகை புகைப்படக்கலைஞர்களுடன் சென்று, அவர்கள் படமெடுக்கும் பாங்கினை மனதில் வாங்கி பதியவைத்துக்கொண்டே வந்தார்.
இதே போல தானும் ஒரு சொந்தமாக ஒரு கேமிரா வாங்கி நிறைய படங்கள் எடுக்கவேண்டும் என்று எண்ணியிருந்தார்
சமீபத்தில் சொந்தமாக நிக்கான் டி.90 கேமிரா வாங்கினார், கேமிரா வாங்கிய அதிர்ஷ்டம் உ.பி., மாநிலம் அலகாபாத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவைக் காண செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளாவில் நீராட உலகம் முழுவதிலும் இருந்து மூன்று கோடி பேர் வருவார்கள் என்பதும், அவர்களில் வெளி உலகத்திற்கு தங்களை காட்டாமல் இருந்து வரும் நாகா சாமியார்கள் எனப்படும் நிர்வாண சாமியார்களும் இருப்பார்கள் என்பதும் விசேஷமாகும்.
இது சம்பந்தமான படங்களை எடுத்துக்கொண்டு," நான் எடுத்த படங்களை பாருங்கள், நன்றாக இருக்கிறதா என சொல்லுங்கள் என தயக்கத்துடன் காண்பித்தார்.,உண்மையிலேயே படங்கள் அனைத்தும் நன்றாக இருந்தன்.,ஒரு வித்தியாசமான கோணத்தில் படம் பிடிக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்து தேர்வு செய்த படங்களை நமது பொக்கிஷம் பகுதியில் முதல் முறையாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கார்த்திகேயேனின் கும்பமேளா அனுபவங்கள் என்ற தலைப்பில் பிரசுரம் செய்திருந்தோம். கார்த்திகேயனுக்கு கடல் கடந்த பகுதிகளில் இருந்தெல்லாம் நல்ல வரவேற்பும், பாராட்டுக்களும் கிடைத்தது.
இதில் கார்த்திகேயேனுக்கு ரொம்பவே உற்சாகம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த வாரம் மீண்டும் அவருடனான சந்திப்பு நிகழ்ந்தது,
அதே தயக்கத்துடன் இப்போது ஒரு முயற்சி எடுத்துள்ளேன், பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார்.
பலரும் அறியாத பழங்கால இசைகளில் ஒன்று கைலாய இசை., சிவன் கோயில்களில் இரவு நேர சுவாமி புறப்பாட்டினை அறிவிக்கும் விதமாக, இந்த இசை முழங்கப்படும். இந்த இசை, இசைக்கும் போது சத்தமும், சந்தோஷமும் அதிகமாகவே இருக்கும்.
உரல், பிரம்மதாளம், தாரை, நெடுந்தாளை, திருச்சின்னம், எக்காளம், சங்கு, கொம்பு, கொக்கரை என்பது போன்ற பல்வேறு வாத்திய கருவிகளைக் கொண்டு இசைக்கப்படும் இந்த இசையை எந்த காரணம் கொண்டும் பணம் வாங்கிக்கொண்டு கற்றுக்கொடுக்கக்கூடாது என்பது இதன் முக்கிய விதியாகும். இதயபூர்வமாக இந்த இசையை கற்றுக்கொள்ள ஆசைப்படும் யார் வேண்டுமானாலும், தங்களுக்கு பிடித்த வாத்திய கருவிகளை இசைக்க கற்றுக் கொள்ளலாம்.
திருக்காரணி திருக்கைலாய வாத்ய குழு என்ற இந்த இசைக்குழுவைச் சேர்ந்தவர்களுக்கு முழு நேர தொழில் என்பது வேறாகும். வியாபாரமோ, வேலையோ பார்த்து வருவார்கள், கோயில் விழா நேரங்களில் ஒருங்கிணைந்து இசைத்துவிட்டு சென்று விடுவார்கள்.
இப்படிப்பட்ட அபூர்வ கலைஞர்களை சென்னை சைதாப்பேட்டை கோயில் ஒன்றில் சந்தித்த போட்டோகிராபர் கார்த்திகேயன், உங்களை "பிளாஷ் லைட் 'உபயோகிக்காமல் படம் எடுக்கப் போகிறேன், அதுவம் கறுப்பு, வெள்ளையில். ஆகவே நீங்கள் பாட்டுக்கு உங்கள் இசைத் தொழிலை பாருங்கள், நான் என் வேலையை பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு இரவு 11 மணிக்கு ஆரம்பித்து அதிகாலை நான்கு மணிவரை அவர்கள் கூடவே இருந்து எடுத்த படங்களில் சிலவற்றை தேர்ந்து எடுத்து இந்த வார பொக்கிஷத்தில் பிரசுரித்துள்ளோம்.
படங்களை சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரியில் பார்க்கலாம்.
அப்பரேச்சர், மற்றும் ஷட்டரில் முடியாத விஷயங்களை கடைசியில் ஐஎஸ்ஒ கொண்டுதான் எடுக்கமுடியும். அந்த முயற்சியே இந்த படங்களாகும்.
இந்த கைலாய இசையைக் கற்றுக் கொள்ளவோ, மேலும் அறிந்து கொள்ளவோ விரும்புபவர்கள் யுவராஜ் என்பவருடன் தொடர்பு கொள்ளவும் அவரது எண்: 9940341564.
படங்கள் குறித்து கார்த்திகேயனுடன் பேச விரும்புபவர்களுக்கு அவரது போன் எண்: 8754481047.
-எல்.முருகராசு


வியாழன், 4 ஏப்ரல், 2013

புதுமையான குளிர்சாதனம்!



புதுமையான குளிர்சாதனம்!

சுற்றுச்சூழலுக்கு ப் பாதிப்பில்லாத, குறைந்த மின்சாரத்தில் இயங்கும், "ஏசி' யை கண்டுபிடித்த, நம்பு பிரியதர்ஷிணி: நான், சிவகங்கையில் உள்ள, பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரியில், மின்னணு மற்றும் தொலைத் தொடர்பியலில், இறுதியாண்டு படிக்கிறேன். "ஏசி'யிலிருந்து வெளியேறும், "குளோரோ - புளோரோ கார்பன், நியான்' போன்ற நச்சுவாயுக்கள், ஓசோனில் ஓட்டையை ஏற்படுத்தி, புவி வெப்பமடைவதை அதிகரிக்கின்றன.எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும், இயற்கை முறையிலான "ஏசி'யை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். வெப்ப மாறுபாட்டால், வெயில் காலங்களில் பூமிக்கு அடியில் குளிர்ச்சியாகவும், குளிர் காலங்களில் வெப்பமாகவும் இருக்கும் அறிவியல் உண்மையை, நண்பர்கள் மூலம் அறிந்தேன்.எனவே, ஓர் அறையில் உள்ள, 30 டிகிரி செல்சியஸ் வெப்பக் காற்றை, "எக்சாஸ்டர்' மின்விசிறி மூலம் உறிஞ்சி, தாமிர உலோகத்திலான குழாய் வழியாக, பூமிக்கு அடியில் குளிர்ச்சியான பகுதிக்கு அனுப்பினால், வெப்பத்தின் அளவு,25 டிகிரி செல்சியசாக குறைக்கப்பட்டு,மீண்டும் அறைக்கே திருப்பி விடப்படுகிறது. இச்சுழற்சி பல முறை நடைபெற்ற பின், வெப்பம் படிப்படியாக குறைந்து, குளிர்ந்த காற்றாக மாறிவிடும்.வர்த்தக ரீதியிலான, "ஏசி'யை இயக்க, 1.49 கிலோ வாட்மின்சாரம் தேவை. ஆனால் இதற்கு, 0.2 கி.வா., மின்சாரம்மட்டுமே தேவை.இதனால், மின்சாரம் சேமிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறது.இந்தியா மற்றும் டென்மார்க் நாடுகள் உதவியுடன், "டேனிஷ் பண்பாட்டு மையம்' நடத்திய, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத, "எதிர்காலத்திற்கான நிரந்தரத் தீர்வுகள்' என்ற போட்டியில், என் கண்டுபிடிப்பு முதல் இடம் பிடித்தது. கடந்த, பிப்ரவரி 1ம் தேதி, இந்திய பிரதமர் தலைமையில், டில்லியில் நடைப்பெற்றவிழாவில், முதல்பரிசுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்புக்கு: 80569 44989.



புதன், 20 மார்ச், 2013

நாய் கழுத்தில் இராசபக்சே எதிரான வாசகங்கள்: இலங்கைக்கு எதிராகப் புதுமைப் போராட்டம்

நாய் கழுத்தில் ராஜபக்சே எதிரான வாசகங்கள்: இலங்கைக்கு எதிராக நூதன போராட்டம்





நாய் கழுத்தில் இராசபக்சே எதிரான வாசகங்கள்: இலங்கைக்கு எதிராக நூதன ப் போராட்டம்
 
 
குசிலியம்பாறை, மார்ச்.20-

குஜிலியம்பாறை அருகே இலங்கை அதிபர் ராஜபச்சேவுக்கு எதிராக வர்த்தகர்கள் நூதன எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இலங்கை அரசை கண்டித்தும், இலங்கை அதிபரை கண்டித்தும் பல்வேறு தரப்பினர், தமிழ் ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் பல வித போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

உண்ணாவிரத போராட்டம், பேரணி, மறியல் போன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள பாளையம் பகுதியில் அனைத்து கடைகள் முன்பும் தமிழீன துரோகி ராஜபச்சே ஒழிக என்ற வாசகங்களும் மேலும் ராஜபச்சேவுக்கு எதிரான வாசகங்களும் அதற்கு துணை போகும் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்களும் ஒட்டப்பட்டுள்ளன.

இது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மற்றொரு சுவாரசிய போராட்டமாக சாலைகளில் சுற்றி திரியும் நாய்களின் கழுத்துகளில் ராஜபச்சேவுக்கு எதிரான வாசகங்களை தொங்க விட்டுள்ளனர்.

சாலையை கடந்து செல்பவர்களும், பஸ்சில் பயணம் செய்பவர்களும் ஒரு நிமிடம் இறங்கி இந்த வினோத போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து செல்கின்றனர்.



புதன், 18 ஜனவரி, 2012

இதிலும் புதுமையா?

இதிலும் புதுமையா?

First Published : 15 Jan 2012 12:00:00 AM IST


ஆப்பிரிக்காவிலுள்ள கானா நாட்டைச் சேர்ந்த சவப்பெட்டி செய்யும் கலைஞர் அண்மையில் இங்கிலாந்தில் நடத்திய கண்காட்சி உலகப் புகழ் பெற்றுவிட்டது. சவப்பெட்டியில் அப்படி என்ன புகழ் என்று கேட்கிறீர்களா? நமக்கு அதிகம் விருப்பமான விமானம், செல்போன், அன்னாசிப்பழம், திமிங்கலம், கார், குளிர்பான பாட்டில்கள் உள்ளிட்ட பல்வேறு உருவங்களைப் போன்று சவப்பெட்டியை இவர் தயாரித்து காட்சிக்கு வைத்திருந்தார். ""1950-ம் ஆண்டில் இருந்து இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளேன். நான் இதுபோன்று பல உருவங்களில் சவப்பெட்டியைச் செய்வதால், எங்கள் பழங்குடியின இனத்தில் இறப்பு, பண்டிகை போன்று கொண்டாடப்படுகிறது. விமானம்தான் நான் முதலில் செய்த உருவம். அதை வாங்கிச் சென்றவர் "இதுவரைக்கும் விமானப்பயணம் எனக்கு வாய்க்கவில்லை. நான் இறந்த பின்பாவது இந்த விமானத்தில் பயணிக்கிறேன்' என்று சொல்லி வாங்கிச் சென்றார்'' என்கிறார் அந்தக் கலைஞர். இங்கிலாந்தில் நடைபெற்ற கண்காட்சியில் இவருக்கு எக்கச்சக்க ஆர்டர்கள் குவிந்துவிட்டனவாம். வாழைப்பழம், ரோபோ போன்ற உருவங்களுக்கான ஆர்டர்கள்தான் அதிகமாக குவிகிறதாம் இவருக்கு.