புதுமையான குளிர்சாதனம்!
சுற்றுச்சூழலுக்கு ப் பாதிப்பில்லாத, குறைந்த மின்சாரத்தில் இயங்கும், "ஏசி' யை கண்டுபிடித்த, நம்பு பிரியதர்ஷிணி: நான், சிவகங்கையில் உள்ள, பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரியில், மின்னணு மற்றும் தொலைத் தொடர்பியலில், இறுதியாண்டு படிக்கிறேன். "ஏசி'யிலிருந்து வெளியேறும், "குளோரோ - புளோரோ கார்பன், நியான்' போன்ற நச்சுவாயுக்கள், ஓசோனில் ஓட்டையை ஏற்படுத்தி, புவி வெப்பமடைவதை அதிகரிக்கின்றன.எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும், இயற்கை முறையிலான "ஏசி'யை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். வெப்ப மாறுபாட்டால், வெயில் காலங்களில் பூமிக்கு அடியில் குளிர்ச்சியாகவும், குளிர் காலங்களில் வெப்பமாகவும் இருக்கும் அறிவியல் உண்மையை, நண்பர்கள் மூலம் அறிந்தேன்.எனவே, ஓர் அறையில் உள்ள, 30 டிகிரி செல்சியஸ் வெப்பக் காற்றை, "எக்சாஸ்டர்' மின்விசிறி மூலம் உறிஞ்சி, தாமிர உலோகத்திலான குழாய் வழியாக, பூமிக்கு அடியில் குளிர்ச்சியான பகுதிக்கு அனுப்பினால், வெப்பத்தின் அளவு,25 டிகிரி செல்சியசாக குறைக்கப்பட்டு,மீண்டும் அறைக்கே திருப்பி விடப்படுகிறது. இச்சுழற்சி பல முறை நடைபெற்ற பின், வெப்பம் படிப்படியாக குறைந்து, குளிர்ந்த காற்றாக மாறிவிடும்.வர்த்தக ரீதியிலான, "ஏசி'யை இயக்க, 1.49 கிலோ வாட்மின்சாரம் தேவை. ஆனால் இதற்கு, 0.2 கி.வா., மின்சாரம்மட்டுமே தேவை.இதனால், மின்சாரம் சேமிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறது.இந்தியா மற்றும் டென்மார்க் நாடுகள் உதவியுடன், "டேனிஷ் பண்பாட்டு மையம்' நடத்திய, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத, "எதிர்காலத்திற்கான நிரந்தரத் தீர்வுகள்' என்ற போட்டியில், என் கண்டுபிடிப்பு முதல் இடம் பிடித்தது. கடந்த, பிப்ரவரி 1ம் தேதி, இந்திய பிரதமர் தலைமையில், டில்லியில் நடைப்பெற்றவிழாவில், முதல்பரிசுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்புக்கு: 80569 44989.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக