காரைக்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காரைக்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 அக்டோபர், 2013

ஒரே மேடையில் தோன்றிய ஒன்பது திருக்குறள் செல்வர்கள்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_828284.jpg

ஒரே மேடையில் தோன்றிய
 ஒன்பது திருக்குறள் செல்வர்கள்



காரைக்குடி:காரைக்குடியில்,வள்ளுவர் பேரவை நடத்திய நிகழ்ச்சியில், ஒன்பது திருக்குறள் செல்வர்களுக்கு விருது வழங்கப்பட்டது. தமிழ் வளர்ச்சிதுறை சார்பில், திருக்குறளின் 1330 குறள்களையும், எப்படி கேட்டாலும், அடி பிறழாமல், ஒப்பிப்பவர் "திருக்குறள் செல்வர்' விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களுக்கு, தமிழக அரசால் விருதும், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு விருது பெற்ற, 10 பேருக்கு, வள்ளுவர் பேரவை சார்பில், விருது வழங்கும் விழா, காரைக்குடி கண்ண தாசன் மணிமண்டபத்தில் நடந்தது. இதில், தற்போது லயோலா கல்லூரியில் படிக்கும் மாணவர் திலீபன், கலைவாணி பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் நாச்சாள், சுவாதி, சிவரஞ்சனி, ஒன்பதாம் வகுப்பு மாணவி பானுப்பிரியா,10ம் வகுப்பு ஸ்ரீவர்ஷா, ஐந்தாம் வகுப்பு மாணவி சரோஜா, ராஜராஜன் இன்ஜி., கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவி ராம அபிராமி, மதுரை சட்டக்கல்லூரியில் படிக்கும் மணிமேகலை ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி விருதுகளை பெற்றனர். திருச்சியில் பிளஸ் 1 படிக்கும், நிவேதினி கென்சியா மட்டும் பங்கேற்கவில்லை. எழுத்தாளர் சங்க மாவட்ட தலைவர் அய்க்கண், கிட் அண்ட் கிம் டெக்னிக்கல் இயக்குனர் ராமகிருஷ்ணன் விருதுகளை வழங்கினர். முன்னதாக அதன் தலைவர் செயம்கொண்டான் வரவேற்றார். வள்ளுவர் பேரவை கவுரவ ஆலோசகர் சேவு முத்துக்குமார், ரோட்டரி ஹெரிடேஜ் சங்க தலைவர் முத்துக்குமார், வள்ளுவர் பேரவை செயலாளர் பிரகாஷ் மணிமாறன்,துணை தலைவர் ஸ்டீபன் மைக்கேல்ராஜ் பங்கேற்றனர்.

திங்கள், 14 அக்டோபர், 2013

"பகிர்தலில் இன்பம்' :தொடக்கப்பள்ளி மாணவர்களின் "ஈகை'

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_826092.jpg

 "பகிர்தலில் இன்பம்' : ஆரம்பப்பள்ளி மாணவர்களின் "ஈகை'
காரைக்குடி: இரத்த அணுக்கள் குறைவால் சிகிச்சை பெறும் சக மாணவருக்கு, 30 ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளனர், காரைக்குடி முத்துப்பட்டணம் நகராட்சி ஆரம்பப்பள்ளி மாணவர்கள்.

ஈகை மற்றும் அடுத்தவருக்கு கொடுத்து உதவும் மனப்போக்கை மாணவர்களிடையே உருவாக்கும் வகையில், அக்., 2 முதல் 8 ம் தேதி வரை, பள்ளிகளில் "பகிர்தலில் இன்பம் வாரம்' கொண்டாடப்பட்டது.வழக்கமாக, இதுபோன்ற உத்தரவுகள், பள்ளிகளில் சம்பிரதாயமான நிகழ்வாகவே இருக்கும். ஆனால், "நாங்கள் இளகிய மனம் கொண்டவர்கள். உதவும் குணத்துக்கா பஞ்சம்' என, முன்னுதாரணமாக திகழ்கின்றனர், காரைக்குடி முத்துப்பட்டணம் நகராட்சி ஆரம்பப் பள்ளி மாணவர்கள்.இங்கு, நான்காம் வகுப்பு படிக்கும் விக்ரம், 9, இரண்டு மாதமாக, ரத்த அணுக்கள் பற்றாக்குறையால், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இவனது தந்தை, சுப்பிரமணியன், எலக்ட்ரீஷியனாக உள்ளார். விக்ரமின் சிகிச்சைக்காக, இப்பள்ளியில் 340 மாணவர்கள், 15 ஆசிரியர்கள் சார்பில், 30 ஆயிரம் ரூபாய் உதவி வழங்கினர்.

இதுகுறித்து, தலைமை ஆசிரியர் ஹேமலதா கூறியதாவது: "பகிர்தலில் இன்பம் வாரம்' கொண்டாட தீர்மானித்தபோது, விக்ரம் அவதிப்படுவது குறித்து, சக மாணவர்கள் கூறினர். அவனுக்கு உதவ நினைத்து, அனைத்து மாணவர்களிடமும் கூறினோம். மாணவர்கள், 100 முதல் 2,000 ரூபாய் வரை, வழங்க முன் வந்தனர்; ஆசிரியர்களும், உதவி செய்தனர். மொத்தம், 30 ஆயிரம் ரூபாய் வசூலானது.இதை, விக்ரமின் தாய் லட்சுமியிடம், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ஜெயக்குமார், மூர்த்தி முன்னிலையில் மாணவர்களே வழங்கினர். தொடர்ந்து அந்த மாணவருக்கு மருத்துவ உதவி கேட்டு, பல்வேறு அமைப்புகளுக்கு, மாணவர்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இவ்வாறு கூறினார்அந்த  
மாணவருக்கு உதவ, 77089 57181 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

புதன், 24 ஜூலை, 2013

காரைக்குடியில் நூல் ஆலயம்



காரைக்குடியில் நூல் ஆலயம் மற்றும் பழைய பொருட்கள் சேகரிப்பு.

 
 
 
 
 
Karuannam Annam
Jul 21 (3 days ago)

to mintamil, vallamai, தமிழ், muththamiz, houstontamil
இரண்டு நாட்களுக்கு முன் காரைக்குடி சிரீ வித்யா இராசகோபாலன் அவர்களது தனிநபர் நூல்சேகரிப்பு வீட்டிற்குச் சென்றேன்.
இரண்டு தள வீடு கட்டி வீடு முழுவதும் நூல்கள். 40 ஆண்டு சேகரிப்பு.
ஏறத்தாழ இருபதினாயிரம் நூல்கள்.அடுக்கிவைத்துள்ளார்.

செட்டி நாட்டு மரபு பழைய பொருட்கள், மற்ற பழைய பொருட்கள் சேகரிப்பில் ஆர்வம் பணி நிறைவுக்குப் பின் ஏற்பட்டு  Hall, இரண்டு அறைகள் முழுக்க அரிய பொருட்கள் சேகரித்துவைத்துள்ளார்..
தான் அடுத்துள்ள சிறிய வீட்டில் வசித்துவருகிறார். CECRI யில் இணை இயக்குநராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர். வைணவப் பெருந்தகை. சிகை வளர்த்து அம்சமாகத் திகழ்கிறார். குழந்தை போன்ற ஆர்வத்துடன் நூல்களையும், பொருட்களையும் காட்டுகிறார்.

நூலகத்தில் 1812ல் பதிப்பக்கப்பட்ட திருக்குறள், நாலடியார், சங்க இலக்கியம் முழுத்தொகுதி, மகாபாரதமும் வால்மீகி இராமாயணமும் வடமொழி மூலம் - அடி நேர் தமிழ் உரையுடன்  பலதொகுதிகள், உவேசா நூல்கள், சித்திரம்,சிற்பம் கலைநயத்தைச் சித்தரிக்கும் நூல்கள், விஞ்ஞானம் மருத்துவம், தலபுராணம் என்று அரிய சேகரிப்புக்கள் உள்ளன.
அச்சில்லாமல் பெயிண்டால் வரையப்பட்ட தாவரம், விலங்கின் வரலாறு புத்தகமும் 3D டைனோசர் புத்தகமும் வெறெங்கும் காணமுடியாதவை.
பழம்பொருட்களில் பாக்குவெட்டிகள், செய்கோன் சித்திர வேலைப்பாடு மரவைகள், மரப்பாச்சிப் பொம்மைகள், எழுத்தாணிகள், தந்தம் கொம்புகளால் உருவான பொருட்கள், சிறுவர் விளையாட்டுப் பொருட்கள், உலோகம்,மரம்,பளிங்குப் பொருட்கள், ஜப்பானிய மரஉறை வாள் என விரிகிறது.
நான் கூறியுள்ளது நூறில் ஒன்றுதான்.
வேறொரு சிறப்பு அம்சம் நூல்கள் அகில உலக தசமப் பகுப்பாய்வின்படி அடுக்கப்பட்டுள்ளன, எந்தத் துறை சார்ந்த புத்தகத்தையும் இரண்டு நிமிடத்தில் எடுத்துவிடலாமென்றார்.

காரைக்குடிக்கு வருபவர்கள் பார்க்க வேண்டிய இடங்களில் அவரது இல்லமும் குறிப்பிட்ட இடமாக அமையுமென்பது உறுதி.

முகவரி:
சிரீ வித்யா இராசகோபாலன்,
38, சிதம்பர அக்ரகாரம், முத்துப்பட்டிணம்
காரைக்குடி 1
தொடர்பு எண்ணுக்குத் தனி மடலில் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மிக்க அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
 
நண்பர் திருசிரீ வித்யா இராசகோபாலன் பற்றிய மேலும் விவரங்களுக்கு நண்பர்கள் கீழ்க்கண்ட சுட்டிகளைச் சொடுக்கி அறியலாம்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
 (தமிழ் மன்றச் செய்தி)
 

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

கணினி வழிக் கல்வி; "கைப்பணத்தில்' ஆசிரியர் தொண்டு

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_693830.jpg

கணினி வழிக் கல்வி; "கைப்பணத்தில்' ஆசிரியர்  ்டு

காரைக்குடி: காரைக்குடி அருகே புதுக்குடியிருப்பு, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவர்கள், கணினி வழிக் கல்வியில் கலக்கி வருகின்றனர்.

புதுக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளில், 66 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் கூலி வேலை செய்வோரின் குழந்தைகள் அதிகம். தலைமை ஆசிரியர் லாரன்ஸ் முயற்சியால், கணினி மூலம் கல்வி கற்கின்றனர். அவரது செலவில், பொது அறிவு, பாட சம்பந்தமான "சிடி' க்களை வாங்கி வைத்துள்ளார். ஒவ்வொரு பாடத்துக்கும் முன்பு, அது குறித்த தகவல்களை "சிடி' மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கிறார்; பொது அறிவு "சிடி' க்களும் காட்டப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு, கணினியில், "மவுஸ்' கையாளுதல், கூட்டல், கழித்தல் கணக்கு போடுதல் உள்ளிட்டவை கற்றுத்தரப்படுகிறது. உணவு நேரத்திற்குப் பின், "டிவி' மூலம் "டிஸ்கவரி சேனல்' ஒளிபரப்பப்படுகிறது. மாணவர்கள் வனங்கள், வன உயிரினங்கள், கடல் வாழ் உயிரினங்களை பற்றியும் அறிந்து கொள்கின்றனர். "ஸ்போக்கன் இங்கிலீஸ்' கற்று கொடுக்கப்படுகிறது. தலைமை ஆசிரியர் கூறுகையில், ""அறிவியலின் வளர்ச்சி, நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. புத்தகப் படிப்போடு, உலகம் பற்றிய அறிவை, மாணவர்களுக்கு வளர்க்க வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் கொடுக்கப்பட்ட "சிடி' க்களும் உள்ளன. மாணவர்களே "சிடி' யை போட்டு, பாடத்தை அறிந்து கொள்ள கற்றுக் கொடுக்கிறோம்,'' என்றார்.