கருநாடகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருநாடகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 செப்டம்பர், 2013

ஏரியில் குதித்து ஆறு பேரை மீட்டெடுத்த அமைச்சர்!

ஏரியில் குதித்து ஆறு பேரை மீட்டெடுத்த அமைச்சர்!

கர்நாடக மாநிலத்தின் தொடக்கக் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் கிம்மனே ரத்னாகர் (61) , ஏரி ஒன்றில் குதித்து, ஆறு உயிர்களைக் காப்பாற்றியுள்ளார்.
தனது சொந்த ஊரான  தீர்த்தஹள்ளியில் இருந்து பெங்களூர் சென்று கொண்டிருந்த அமைச்சர், பெகுவள்ளி ஏரியை அடைந்தபோது மாருதி ஸ்விப்ட் சிற்றுந்து ஒன்று ஏரியில் மூழ்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துள்ளார்.
உயிர்கள் தத்தளிப்பதைக் கண்ணுற்ற அமைச்சர் உடனடியாக  அவரது பாதுகாவலர் ஹல்ஸ்வாமி, ஓட்டுநர் சந்திரசேகர், பாதுகாப்பு வாகனத்தின் ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சகிதம் ஏரிக்குள் குதித்து 55 வயது பெண் உள்பட மூன்று பெரியவர்களையும் மேலும் மூன்று குழந்தைகளையும் மீட்டுள்ளனர்.பின்னர் உடனடியாக மருத்துவர் ஒருவரை அமைச்சர் அழைத்து முதலுதவி செய்யவும் பணித்துள்ளார்.
மருத்துவர் வந்து, அமைச்சர் மற்றும் ஊழியர்களால் காப்பாற்றப்பட்ட உதய்குமார்(40), அவரது மனைவி சுமா(35), 14 மற்றும் 8 வயது மகன்கள், உதயின் தாய் கீதா(55), உறவினரின் 3 வயது குழந்தை ஆகியோருக்கு சிகிச்சை அளித்துள்ளார். 
அதன் பிறகு உதய்குமார் குடும்பத்துக்கு உணவும் வாங்கிக் கொடுத்து, உதய்க்கு தனது உடைகளையும் அளித்து விட்டு அமைச்சர் பெங்களூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அமைச்சர் கிம்மனே ரத்னாகருக்கு உதய்குமார் குடும்பத்தினர் இதயம் நெகிழ்ந்து நன்றி தெரிவித்துள்ளனர்.

ஞாயிறு, 12 மே, 2013

தமிழ்க் கல்வெட்டுகளை அழிக்கும் கருநாடகா... கண்டு கொள்ளாத தமிழகம்!

தமிழ் க் கல்வெட்டுகளை அழிக்கும் கருநாடகா... கண்டு கொள்ளாத தமிழகம்!

-ஆர். ஷஃபி முன்னா

சுமார் நூறு வருடங்களாக பதிப்பிக்கப்படாமல் கர்நாடகாவில் சிக்கியுள்ள தமிழ் கல்வெட்டுகளுக்கு இன்னும் விடுதலை கிடைத்தபாடில்லை. கல்வெட்டு தலைமை அலுவலகம் புதிய கட்டடத்திற்கு மாறியதன் விளைவாக ஐம்பது சதவிகிதத்திற்கும் மேலான கல்வெட்டுகள் பதிப்பிக்கப்படாமலே அழிந்து போய் விட்டதாகப் புகார் கிளம்பி உள்ளது. இது குறித்து ‘காவிரியும் போச்சு... கல்வெட்டும் போச்சு?‘ என்ற தலைப்பில் கடந்த 18.06.06 தேதியிட்ட ஜுவி இதழில் வெளியான கட்டுரையின் ஃபாலோ அப் செய்தி...

நம் நாட்டை ஆண்ட மன்னர்கள் தம் கால நிகழ்வுகளை கல்லில் செதுக்கி வைப்பது வழக்கமாகக் கொண்டிருந்தனர். கோயில், குளக்கரை, மலைகள், குகைகள் போன்ற இடங்களில் எழுதப்பட்ட இந்த கல்வெட்டுகள், இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் (Archaeological Survey of India-ASI) மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு ‘படி எடுத்தல்‘ முறையில் காகிதத்தில் நகல் எடுக்கப்படுகிறது. இதை ஆய்வுக்கு பயனுள்ள வகையில் அவ்வப்போது பதிப்பித்து தொகுதிகளாக வெளியிடுகிறது ASI. இந்திய வரலாற்றுக்கு  முக்கிய ஆதாரங்களாக விளங்கும் இந்த பழங்கால கல்வெட்டுகளை ஆய்வு செய்யவும், நம் நாடு முழுவதிலும் உள்ள வரலாற்று சின்னங்களை பாதுகாக்கவும், 1860 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கண்ணிங்ஹாம் எனும் ஆங்கிலேயரால் ASI உருவாக்கப்பட்டது.
கண்டுபிடிக்கப்படும் கல்வெட்டுகளை படி எடுத்து பதிப்பிப்பதற்காக ASI  மைசூர் அலுவலகத்தில் தனியாக கல்வெட்டு தலைமையகம் ஒன்று இயங்குகிறது. இதில், பெரும்பாலான கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள் என்பதால், மாற்றான் தாய் மனப்பான்மையோடு மைசூர் அலுவலகம் நடந்து கொள்வதாகப் புகார் கிளம்பியது. ஜூ.வி கட்டுரையில் இதை தெரிவித்திருந்த உ.பி.யின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் உதவிப் பேராசிரயர் எஸ்.சாந்தினி பீ, ‘தமிழகத்திற்கு காவிரி நீரைத்தான் கொண்டு வர முடியவில்லை, கல்வெட்டுகளையாவது கொண்டு வரலாமே?’ என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

இந்தநிலையில், மைசூரில் சிக்கியுள்ள தமிழ் கல்வெட்டுகளின் தற்போதைய நிலை அறிய இந்திய கல்வெட்டியலாளர்கள் (Epigraphists) மற்றும் ஆய்வாளர்களை தொடர்பு கொள்ள முயன்றோம். இவர்களின் முக்கிய அமைப்பான இந்திய கல்வெட்டியல் பேரவையின் (Epigraphical Society of India-ESI) 38 ஆவது மாநாடு சமீபத்தில் அலகாபாத் பல்கலைகழகத்தில் நடந்தது. அங்கு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்க ஆஜராகி இருந்தவர்களை நாம் நேரில் சந்தித்து பேசினோம். 

'‘ஜூவியில் செய்தி வெளியானவுடன் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி இதற்கான சில முயற்சிகள் செய்தார். அதன்படி, சென்னையில் துவக்கப்பட்டு கர்நாடகாவிற்கு கொண்டுப் போகப்பட்ட கல்வெட்டியல் தலைமையகத்தை மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வருவது அல்லது சென்னையில் பெயரளவில் இருக்கும் கிளை அலுவலகத்தை ஆய்வுக்காக உயர்நிலைபடுத்துவது என்று முடிவெடுத்து அதற்கான முயற்சிகளில் தமிழக அரசு இறங்கியது.

இதற்காக அப்போது காங்கிரஸ் தலைவி சோனியா மற்றும் இந்த துறையின் மத்திய அமைச்சராக இருந்த அம்பிகா சோனிக்கும் மைசூரிலுள்ள கல்வெட்டியல் துறையை தமிழகத்திற்கு மாற்றும்படியும், தமிழ் கல்வெட்டுக்கு என தனியாக ஒரு மத்திய கல்வெட்டு அலுவலகத்தை சென்னையில் துவங்கும்படியும் தமிழக அரசு கடிதம் எழுதியது. ஆனால், இவர்களால் பரிந்துரைக் கப்பட்ட கடிதங்களை மைசூர் அலுவலகத்தின் அதிகாரிகள் சாக்கு, போக்கு சொல்லித் தட்டிக் கழித்து விட்டார்கள்.
அதேசமயம், மைசூர் அலுவலகத்தில் ஏற்கெனவே படிகளாக எடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளை படித்து தொகுக்க உதவும்படி தமிழ்நாடு தொல்லியல் ஆய்வகத்திற்கு (Tamilnadu State Dept of Archaeology -TNSDA) உத்தரவிட்டு சில லட்சங்களை ஒதுக்கியது தமிழக அரசு. அப்போது TNSDA . யின் கமிஷனராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதரின் சொந்த முயற்சியினால் ஒரு வருடத்திற்கான கல்வெட்டுக்கள் தொகுத்து கொடுக்கப்பட்டது. ஆனால், ஒரு வருடத்தில் தொகுக்கப்பட்டதை வெளியிட ASI, ஐந்து வருடம் எடுத்து கொண்டது. இதுவும் முடியாமல் அடுத்த கட்டமாக, ஏற்கனவே படி எடுக்கப்பட்ட சுமார் 50,000 தமிழ் கல்வெட்டுகளை டிஜிட்டல் (Digitalistion) ஒளிப்பதிவு செய்து பாதுகாக்கும் தமிழக அரசின்  திட்டத்திற்கு வேறு வழியின்றி மைசூர் அலுவலகம் சம்மதித்தது. இதற்காக தஞ்சை தமிழ் பல்கலைகழகத்துடன் மைசூர் கல்வெட்டியல் தலைமையகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. இதற்காக ஒதுக்கப்பட்ட ஒருவருட காலத்தில், கிழிந்த போன படிகளை ஒட்டுவதிலேயே எட்டு மாதமானது. இதனால், தமிழக அரசு ஒதுக்கிய 25 லட்சத்தில் ரூபாய் 22 லட்சங்களை தமிழ் பல்கலைகழகம் திருப்பி அளிக்க வேண்டியதாயிற்று.’ என நம்மிடம் வருந்திய தமிழரான டாக்டர்.எஸ்.சாந்தினி பீ மேலும், ஒரு அதிர்ச்சியான தகவல் அளித்தார்.
கல்வெட்டுக்களை படிக்க முறையான கல்வெட்டியலாளர்களின் பற்றாக்குறை பல வருடங்களாக இருந்தது. இதை முன்கூட்டியே அறிந்தும் மைசூர் அலுவலகம் குறிப்பிட்ட காலத்தில் அந்த குறைகளை நிவர்த்தி செய்யத் தவறி விட்டது. பணியில் இருந்த சில கல்வெட்டியலாளர்களுக்கும் பதவி உயர்வு, காலத்தே கிடைக்கவில்லை. தற்போது தமிழ் கல்வெட்டியலாளர்கள் மைசூரில் இருவர் மட்டுமே உள்ளனர். இதில் ஒருவர் விரைவில் ஓய்வு பெறப் போகிறார். இந்த தலைமையகத்திற்கு இயக்குநர் பதவியும் பல வருடங்களாக காலியாகவே உள்ளது. இதுவன்றி, இரண்டு துணை இயக்குநர் மற்றும் பல உதவி கல்வெட்டியலாளர்கள் பணியும் நிரப்பப்படாமலே உள்ளது.
சென்னையின் கிளை அலுவலகத்தில் உள்ள மூன்று தமிழ் கல்வெட்டியலாளர்கள் பதவியும் காலியாகவே உள்ளது. தெலுங்குக்கு ஒருவரும் கன்னடத்திற்கு ஒருவர் மட்டுமே தமிழக கிளை யில் உள்ளனர். சரி! இவர்கள் தான் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக புகார் கூறப்பட்டாலும் TNSDA விலும் இதேநிலை. இங்கும் சுமார் பத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டியலாளர்களுக்கான பதவிகள் பல வருடங்களாக காலியாக உள்ளது. இத்தனைக்கும் ASI மற்றும் TNSDA சார்பில் ஒரு வருட பி.ஜி டிப்ளமா பயிற்சி பெற்று ஒவ்வொரு வருடமும் கல்வெட்டியல் மாணவர்கள் தயாராகிறார்கள். இவர்களுக்கு உரிய காலத்தில் கல்வெட்டியலாளர் பணி கிடைக்காமையால் வேறு பல பணிகளுக்கு சென்று விடுவதால் தற்போது தமிழ் கல்வெட்டுக்கள் படிக்கவும் அனுபவசாலிகள் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.’ என்றார்.

இதே பிரச்சனை குறித்து நம்மிடம் பேசிய கல்வெட்டு ஆய்வாளர் நெல்லை நெடுமாறன், ‘மார்ச், 2008 ல் மைசூர் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட போது அங்கு படி எடுக்கபட்டு வைத்திருந்த பல நூறு தமிழ் கல்வெட்டுகள் வீணாகப் போய் விட்டன. இவை மீண்டும் படி எடுக்க வேண்டும் எனில் அதன் ஒரிஜினல் கல்வெட்டுகளை கோயில், குளம் என தேடுவது முடியாத காரியம். இந்த அஜாக்கிரதைக்கு முக்கியக் காரணம், தமிழர்களுக்கு எதிராக கன்னடர்களிடம் உள்ள இனவெறியே. இதே பிரச்னை தற்போது கேரளாவிலும் உருவாகி வருகிறது. இம்மாநிலத்தில் கிடைக்கும் கல்வெட்டுக்களில் பெரும்பாலானவை தமிழ் கல்வெட்டுக்களே. எனவே, அதை கேரளா அரசின் தொல்லியல் துறை பதிப்பிக்காமலும், அதை மத்திய அரசிடம் ஒப்படைக்காமலும் இருக்கிறது. இதற்காக நான் எனது சொந்த செலவில் சென்று வந்து போராடியும் பயன் எதுவும் இல்லை. இவைகளை தமிழக அரசு கேரளத்திடம் கேட்டு வாங்கி உடனடியாக பதிப்பித்தால் தென்னிந்திய வரலாறு குறித்த பல அரிய உண்மைகள் வெளியாகும்.’ எனத் தெரிவித்தார்.

அலகாபாத் வந்திருந்த மைசூரின் ASI அதிகாரிகளிடம் இந்த பிரச்னை குறித்து நாம் பேசியபோது அதிகாரப்பூர்வமாக பேச மறுத்த அவர்கள், ‘'இது ஒரு பெரும் குறைதான் என்பதை ஒத்துக் கொள்கிறோம். ஆனால், இந்தக் குறையை பெரிது படுத்தக்கூடாது.  நாம் இட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தஞ்சை தமிழ் பல்கலைகழகம் முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால்தான், டிஜிட்டல் பணியை ASI தற்போது தனியாரிடம் கொடுத்துள்ளது. கல்வெட்டுகள் பதிப்பிக்கப்படாமல் தாமதமாவதற்கு ஆள் பற்றாக்குறையே காரணம். நீங்கள் நினைப்பது போல் கல்வெட்டுகளை தொகுத்து பதிப்பது சாதாரண விஷயமல்ல.
இதற்கு அணுகுமுறை மிகவும் முக்கியம். இந்த துறையில் பழுத்த அனுபவம், சிறந்த அறிவுடன் பல்வேறு கோணங்களுடன் ஆராயும் நுண்ணறிவு அவசியம். (துவக்கத்தில் இதை ஆங்கிலேயர்கள் செய்தது எப்படி?) இடையில் ஒரு பத்து வருடங்களுக்கு கல்வெட்டியலாளர்கள் பதவிக்கு யாரும் எடுக்கப்படவில்லை என்பதால், திறமையும் அனுபவமும் கொண்டவர்கள் தற்போது பணியில் இல்லை. இதனால், ஓய்வு பெற்றவர்களை வைத்தே தொகுக்கும் பணி ஆமை வேகத்தில் தொடர்கிறது. இதற்கு முழு பொறுப்பு டெல்லியிலுள்ள எங்கள் தலைமை அலுவலகம்தானே தவிர நாங்கள் இல்லை. தற்போது அதன் தலைமை அதிகாரியான டைரக்டர் ஜெனரல் பதவியே நிரப்பப்படாமல் ஆக்டிங்காக ஒருவர் அமர்த்தப்பட்டுள்ளார்.'’ என்று தங்கள் பங்கிற்கு புலம்பினர்.

இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழே. மற்றவை சமஸ்கிருதம், பெர்ஷியன் (பாரசீக மொழி), அரபி, கன்னடம் மற்றும் மலையாளம். இதில், தமிழ் தவிர மற்ற அனைத்து மொழி கல்வெட்டுகள் பதிப்பிக்கும் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன. அதிகபட்சம் அடுத்த பத்து ஆண்டுகளில் அவை முடிந்து விடும். கடைசியில் தமிழ் கல்வெட்டுகள் தங்கி அவை, அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்டு விடும்!
   

புதன், 5 டிசம்பர், 2012

10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடக் கருநாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடக் கருநாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கர்நாடக அரசு காவிரியில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடக அரசு காவிரியில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்றிலிருந்து ஞாயிறு வரை பத்தாயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட வேண்டும்.
நாளை அல்லது நாளை மறுநாள் தமிழக கர்நாடக தரப்பு இணைந்த காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்.
தமிழகத்திலும் கர்நாடகத்திலும் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு எவ்வளவு நீர் தேவைப்படும் என்று கணக்கிட்டு இறுதி முடிவு எடுக்க வேண்டும்.
இந்த முடிவை திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவினை மத்திய அரசு, அரசிதழில் வெளியிட எத்தனை நாட்கள் ஆகும் என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும்
- இவ்வாறு உச்ச நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதன், 31 அக்டோபர், 2012

சென்னை - கன்னியாகுமரி இரட்டை இருப்புபபாதை த் திட்டம் கருநாடகத்தை ப் பின்பற்றி முன்னேறுமா தமிழகம்?

சென்னை - கன்னியாகுமரி இரட்டை  இருப்புபபாதை த்  திட்டம் கருநாடகத்தை ப் பின்பற்றி முன்னேறுமா தமிழகம்?

கர்நாடகா "பார்முலா'வை, தமிழகம் பின்பற்றினால் மட்டுமே, செசன்னை - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டம் போன்ற, பல்வேறு ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க முடியும்.கர்நாடகாவில், கடலோர பகுதிகளுக்கும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பகுதிகளுக்கும் இணைப்பு ரயில் பாதை அமைக்கும் திட்டங்களுக்கான செலவில், 50சதவீதத்தை மாநில அரசு ஏற்றுக் கொள்கிறது.

இதன்படி, நடப்பு நிதியாண்டில், கர்நாடகாவில், 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான, ரயில்வே திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில், 3,600 கோடி ரூபாயை அம்மாநில அரசு, ஏற்றுக் கொள்வதாகஅறிவித்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், கர்நாடகாவில் ரயில் கட்டமைப்பு பணிகளுக்காக, 15,623 கோடி ரூபாயை ரயில்வே அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. இதே "பார்முலா'வை தமிழக அரசும் பின்பற்றினால், மாநிலத்தில் பல்வேறு ரயில் பாதை திட்டங்கள் விரைந்து முடிக்கப்பட்டு, பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் எனலாம்.குறிப்பாக, தமிழக அரசு பாதி செலவை ஏற்றால், நத்தை வேகத்தில் நடைபெற்று வரும் கன்னியாகுமரி - செசன்னை இடையிலான இரட்டை ரயில் பாதை திட்டத்தை, விரைந்து முடிக்கலாம்.

இவ்வழி தடம், கன்னியாகுமரியில் துவங்கி, நாகர்கோவில், திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை எழும்பூரை வந்தடைகிறது. மாநில அளவிலான ரயில் போக்கு வரத்துக்கு முதுகெலும்பாகவும் விளங்குகிறது.சென்னையிலிருந்து, அரசு விரைவு பேருந்து மூலம் கன்னியாகுமரி செசல்வதற்கு கட்டணம், 530 ரூபாய். இது, தனியார் பேருந்தில், 670 ரூபாய். அதேசமயம்,ரயிலில் படுக்கை வசசதிக்கான கட்டணம், 305 ரூபாய் பேருந்துடன் ஒப்பிடும் போது, ரயில் பயணம் சுகமாகவும், கட்டணம் மிகவும் குறைவாகவும் உள்ளது. இதனால், ஏழை, பணக்காரர் என, வித்தியாசமின்றி அனைவரும் ரயிலில் பயணம் செய்யவே விரும்புகின்றனர்.
வட மாநிலங்கள்:


கன்னியாகுமரி - சென்னை இடையிலான 742 கி.மீ., தூரத்தை, ரயிலில் கடக்க, 13.30 மணி நேரமாகிறது. இது, இரு வழி பாதையாக மாற்றப்பட்டு, முழுவதும் மின்மயமாகும் பட்சசத்தில், பயண நேரம் கணிசமாக குறையும். நாகர்கோவில், கன்னியாகுமரி, மதுரை வழியாக வட மாநிலங்களுக்கு, அதிக ரயில்களை இயக்க முடியும்.இந்த வழி தடத்தில், தற்போது சென்னை - செங்கல்பட்டு (56 கி.மீ.,) மற்றும் மதுரை - திண்டுக்கல் (66 கி.மீ.,) ஆகியவை மட்டுமே, இரு வழி தடங்களாக மாற்றப்பட்டுள்ளன.

மீதமுள்ள வழி தடங்களையும், இரு வழி பாதையாக மாற்ற வேண்டும் என்பது, ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை. ரயில்வே நிர்வாகம் மூன்று கட்டங்களாக இத்திட்டத்தை, நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டுள்ளது.செங்கல்பட்டு - விழுப்புரம் செங்கல்பட்டு - விழுப்புரம் (103 கி.மீ.,), ரயில் தடத்தில், மதுராந்தகம், திண்டிவனம், மேல்மருவத்தூர் உட்பட, 14 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த பகுதியில், மீட்டர்கேஜ் மற்றும் பிராட்கேஜ் (அகல ரயில் பாதை) என, இரண்டு வகையான ரயில் வழி தடங்கள் உள்ளன.

விழுப்புரத்திலிருந்து, புதுச்சேரி, திருவண்ணாமலை, சிதம்பரம், தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களுக்கு ரயில்கள் பிரிந்து செசல்கின்றன.கடந்த 2006-07ல் ரயில்வே நிதிநிலை அறிக்கையில், செங்கல்பட்டு - விழுப்புரம் இடையே, 397 கோடி ரூபாய் திட்டச் செசலவில் அகல ரயில் பாதை அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதற்காக, 2011-12 மற்றும் 2012-13ம் ரயில்வே பட்ஜெட்டில், முறையே, 268 கோடி ரூபாய் மற்றும் 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.இதையடுத்து, மீட்டர்கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவுற்றதும், இரண்டு அகல ரயில் பாதைகளில் ரயில்கள் செல்லும்.

மேம்பால பணிகள்:


தற்போது, செங்கல்பட்டு - விழுப்புரம் வழி தடத்தில், விழுப்புரம் - முண்டியம்பாக்கம், மதுராந்தகம் - மேல்மருவத்தூர், இடையே மட்டும், இரு வழி பாதைக்கான பணிகள் முடிவுற்று, ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், முண்டியம்பாக்கம் - விக்கிரவாண்டி - பேரணி - மைலம் - திண்டிவனம் - ஒலக்கூர் - தொழுப்பேடு - அச்சிறுப்பாக்கம் - மேல்மருவத்தூர் - மதுராந்தகம் - கருங்குழி - படாளம் - ஒட்டிவாக்கம் - செங்கல்பட்டு ஆகிய ரயில் பாதைகளில், மேம்பால பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மேலும், ஆற்று பாலங்கள், மின் இணைப்பு, கடவு பாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு இறுதிக்குள், இந்த பணிகள் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
விழுப்புரம் - திண்டுக்கல்:


விழுப்புரம்-திண்டுக்கல் (273 கி.மீ.,) இடையே, இரு வழி அகல ரயில் பாதை அமைக்கப்படும் என, கடந்த 2008-09ம் ஆண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 822 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, இந்த இருவழி பாதை திட்டத்தை, ரயில்வே துறையின், "ரயில் விகாஸ் நிகாம்' என்ற துணை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்த வழி தடத்தில், விருத்தாசலம், திருச்சி உட்பட, 41 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த தடத்தில், விருத்தாசலத்திலிருந்து, ஆத்தூர் வழியாக, சேலம் ரயில் வழித்தடமும், திருச்சியிலிருந்து, கரூர், ராமேஸ்வரம், மதுரை, தஞ்சை, மார்க்கங்களில், ரயில் வழி தடங்கள் பிரிந்து செல்கின்றன.தற்போதைய நிலவரப்படி, இரு வழி பாதைக்கான ஆய்வு பணிகள்மட்டுமே முடிவடைந்துள்ளன. நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல், குறைவான நிதி ஒதுக்கீடு போன்ற காரணங்களால், இப்பணிகள் மந்த கதியிலேயே நடைபெற்று வருகின்றன.

கன்னியாகுமரி - மதுரை ரயில்வே அமைச்சகம், நடப்பு2012- 13ம் நிதியாண்டடிற்கான பட்ஜெட்டில், கன்னியாகுமரி - மதுரை (246 கி.மீ.,), வழித் தடங்களை, இரு வழி பாதையாக மாற்றுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தது.ஆனால், இதுநாள் வரை, இந்ததிட்டத்தை ஆய்வு செய்வதற்கான எந்த நடவடிக்கையையும் ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள், இந்த திட்டத்தை ஆய்வு செய்து, செயல்வடிவிற் கான அறிக்கையை, ரயில்வேவாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

கேரளா:


கேரளாவை சேசர்ந்த அனைத்து எம்.பி.க்களும் கட்சி பாகுபாடின்றி, ஒன்றிணைந்து, அம்மாநிலத்தின் ரயில்வே திட்டங்களுக்õக, பார்லிமென்டில் குரல் கொடுக்கின்றனர். ரயில்வே திட்ட அறிக்கையைதயார் செய்து, ரயில்வே அமைச்சர், பிரதமர் ஆகியோரிடம் நேரடியாக அளிக்கின்றனர்.மேலும், கேரளாவில் மேற்கொள்ளப்படும் ரயிவே திட்டங்களை, இவர்கள் தீவிரமாக கண்காணித்து, காலதாமதம் ஏற்பட்டால், பார்லிமென்டில் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கின்றனர். இதனால், தமிழகத்தை விட குறைந்த நிலப்பரப்பை கொண்ட, கேரளாவில், ரயில் திட்டங்கள் வேகமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இந்த "பார்முலா'வையும், தமிழக எம்.பி.,க்கள் பின்பற்றினால், மாநிலத்தில், மந்த கதியில் நடைபெற்று வரும் ரயில்வே திட்டங்கள் விறு விறுப்படையும். மக்கள் நலனுக்காக, கட்சி வேறுபாடுகளை மறந்து, தமிழக எம்.பி.,க்கள் ஓங்கி குரல் கொடுத்தால்,காரியம் நடக்கும்.செய்வார்களா?

எம்.பி.,க்கள் ஒன்றுபடுவரா? தமிழகத்தில், 39 லோக்சபா எம்.பி.,க்களும், 18 ராஜ்யசபா உறுப்பினர்கள் மற்றும் இரண்டு நியமன உறுப்பினர்கள் என,59 பார்லிமென்ட் உறுப்பினர்கள் மற்றும் புதுச்சேரியிலிருந்து,இரண்டு எம்.பி.,க்கள் உள்ளனர்.இவர்கள் அனைவரும், கட்சி பாகுபாடின்றி ஒன்றிணைந்து, ரயில்வே வாரிய தலைவர், திட்டக்குழு துணை தலைவர்,பிரதமர் ஆகியோரை நேரடியாக சிந்திக்க வேண்டும்.இந்த இரு வழி பாதை திட்டத்தின் அவசியத்தைவிளக்கி, அதிக நிதி ஒதுக்கீடு பெற்று தரவேண்டும் என்பதே ஓட்டளித்தரயில் பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.
அனுமதி மறுக்கலாமா?


நான் அமைச்சராக இருந்த போது, சென்னை சென்ட்ரல் - எழும்பூர் இணைப்பு வழித் தட திட்டத்திற்காக, 90 கோடி ரூபாய் ஒதுக்கினேன். ஆனால், மத்திய சிறைச்சசாலை, மெட்ரோ ரயில்என, காரணங்கள் காட்டி மாநில அரசு, திட்டத்திற்கு அனுமதி தர மறுத்தது. இதுபோன்ற முட்டுக்கட்டைகளால் தான், தமிழகத்தில்ரயில்வே திட்டங்கள் முடங்கி போயுள்ளன.

ஏ.கே.மூர்த்திமுன்னாள் ரயில்வே இணை அமைச்சசர்

மக்கள் குரல்

மக்கள் குரல்""ஆண்டுதோறும் ரயில்வே பட்ஜெட்டில், சென்னையிலிருந்து, புதிய ரயில்களை இயக்கும் அறிவிப்பு வெளியாகிறது.இதனால், வட மாநிலங்கள் மட்டுமே பயன் அடைகின்றன. கன்னியாகுமரியிலிருந்து, மதுரை வழியே மற்றமாநிலங்களுக்கு செசல்லும் வகையில், புதிய ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகமது ரபிமதுரை

""தினமும் திண்டிவனத்திலிருந்து, செசன்னைக்கு வந்து வேலை பார்த்து விட்டு செல்கிறேன். இதற்கு, போக, வர நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. செங்கல்பட்டு - விழுப்புரம் இரட்டை பாதை பணி நிறைவு பெற்றால், ஒரு மணி நேர பயணம் மிச்சசமாகும்.

தனசேசகர்திண்டிவனம்


தென் மாவட்டங்கள் தொழில்வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியுள்ளன.நாகர்கோவில் - திருநெல்வேலி -மதுரை வழித் தடங்களில் ஒரு வழிபாதையில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படுவதால், ரயில் பயணம்நெருக்கடியாக உள்ளது. தென்மாவட்ட ரயில் பாதைகள் இரு வழியாகமாற்றப்பட்டால், அதிக அளவில் ரயில்கள் இயக்கப்படும். இதனால்,தென் மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் உருவாகி, அப்பகுதிமக்களின் பொருளாதாரம் மேம்படும்.

எட்வர்ட் ஜெனி, செயலர்:ரயில் பயணிகள் கூட்டமைப்பு, கன்னியாகுமரி.

மதுரை - கன்னியாகுமரிமொத்தம் - 246 கி.மீ.,நடப்பு 2012-13ம்பட்ஜெட்டில்இரு வழி பாதை அமைக்கஆய்வு செய்யஅனுமதிவிழுப்புரம் - திண்டுக்கல்மொத்தம் 273 கி.மீ.,ஆய்வு பணிகள் நிறைவுநிலம் கையகப்படுத்தல்,மேம்பால பணிகள்நடைபெற்று வருகின்றனஇரு வழி பாதை அமைக்கும் பணியை ரயில்வே விகாஸ்செசய்து வருகிறது

-தினமலர் சிறப்பு ச் செய்தியாளர் -