நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீதிமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 ஜூலை, 2013

நீதிமன்றத்தில் தமிழில் வாதாட இசைவு : மதுரைக் கிளை நீதிபதி

காரணம் என்னவாக இருந்தாலும், தவற்றினைத் திருத்திக் கொண்ட நீதிபதிக்குப் பாராட்டு. உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட நிலையான ஆணையே பிறப்பிக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/



நீதிமன்றத்தில் தமிழில் வாதாட இசைவு : மதுரைக் கிளை நீதிபதி

நீதிமன்றத்தில் தமிழில் வாதாட விதிக்கப்பட்டிருந்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதி மணிக்குமார் தெரிவித்துள்ளார்.
எனவே, நீதிமன்றத்தில் இனி தமிழில் வாதாட அனுமதிக்கப்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பை திரும்பப் பெறுவதாக, கிளை நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் இன்று கூறினார்.
வழக்குறைஞர் ராமசாமியின் 2 வழக்குகளை தமிழில் வாதாட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பகுதியில் மேலும்

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

உயர்கல்விச் சீரழிவுக்கு நீதிமன்றமும் காரணம்: நீதிபதி சந்துரு

உயர்கல்வி ச் சீரழிவுக்கு நீதிமன்றமும் ஒரு காரணம்: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வருத்தம்
திருச்சி: ""கல்வியில் மாற்றம் கொண்டு வர, நீதிமன்றம் தான் காரணம் என்றாலும், உயர்கல்வி தரமற்று இருப்பதற்கு நீதிமன்றமும் ஒரு காரணம் என்பது வருத்தமளிக்கிறது,'' என, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கூறினார்.

திருச்சி தேசிய கல்லூரியின், 94வது ஆண்டு விழா நேற்று நடந்தது. கல்லூரி செயலாளர் ரகுநாதன் வரவேற்றார். சென்னை உயர்நீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பேசியதாவது:இந்திய அரசியல் சாசனத்தில் தொழில், வியாபாரம் போன்றவை ஒரு தனி மனிதனுக்கு அடிப்படை உரிமை சட்டமாக்கப்பட்டது. ஆனால், கல்வி அடிப்படை உரிமை சட்டமாக ஆக்கப்படவில்லை. 1991ம் ஆண்டில் ஒரு வழக்கின் தீர்ப்பில், "கல்வி தனி மனித உரிமை' என, உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இந்த தீர்ப்பின் மீது நடந்த விவாதங்களை தொடர்ந்து தான், ஆறு வயது முதல், 14 வயது வரை, கல்வி அடிப்படை உரிமையானது.

"பள்ளி கல்விக்கு மட்டுமே அரசு பொறுப்பு, உயர்கல்வியை பெறுவது தனிப்பட்ட மனிதனின் உரிமை இல்லை' என, நீதிமன்றம் கூறியது. "உயர்கல்வி நிறுவனங்களை தனியார் துவங்கி, அதற்கு அரசு ஆதரவும், அங்கிகாரமும் வழங்கலாம்' என, உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.இதன் விளைவாக தான், தற்போது வீதிக்கு வீதி, தனியார் பொறியியல் கல்லூரிகள், தொழிற் கல்வி கூடங்கள் முளைத்து தரமற்ற கல்வியை அளிக்கும் சூழல் உள்ளது. அரசும் கைகழுவி விட்டதால், உயர்கல்வியை பணம் கொடுத்து தான் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில், 44 ஆண்டுக்கு பிறகு, "கல்வி உரிமை' சட்டமும், 50 ஆண்டு கழித்து, "கட்டாய இலவச கல்வி' சட்டமும், வர நீதிமன்றம் தான் காரணமாக இருந்தது. ஆனால், உயர்கல்வி தற்போது தரமற்ற நிலையில் இருப்பதற்கு நீதிமன்றமும் ஒரு பொறுப்பு என்பது வருத்தமாக உள்ளது.இந்தியாவில் கல்வியில் உள்ள ஏழை, பணக்காரர் என்ற தடுப்பு சுவர் உடைக்க நீதிமன்றம் எடுத்த முயற்சியால் தான், தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது.கல்வியில் உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகு தான், மத்திய அரசு அதன் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது. குழந்தை தொழிலாளர் முறை இன்னமும் நீடிப்பதற்கு, எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் இப்பிரச்னையை எழுப்பாதது தான் காரணம்.படிக்காத ஏழை மக்களுக்கு நூறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தியிருப்பது போல், படித்தவர்களுக்கு வேலை வழங்குவதும் அடிப்படை உரிமையாக்க வேண்டும்.இவ்வாறு சந்துரு பேசினார்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

இந்து என்றால் திருடன்: கருணாநிதி விளக்கம் தர நீதிமன்றம் உத்தரவு

ஒரு சொல் காலமாற்றத்தில் மேம்பட்ட பொருளையோ கீழான பொருளையோ அடைவதே  உலக மொழிகளின் இயற்கை. தாசி என்றால் தொண்டு புரியும் பெண்ணைக்குறித்து, அடுத்துப் பணிமகளைக் குறித்தது. இன்று விலை மகளைக் குறிக்கிறது. இன்று, பழம் பொருள் அடிப்படையில் ஒருவர், தன் வீட்டுப்  பணிப்பெண்ணைத் தாசி என்று கூறிவிட முடியாது. இந்து என்பதற்குக் கரி, கரடி, சந்திரன் ; கருப்பூரமரம் ; மிருகசீரிடம் ; இந்துப்பு ; சிந்துநதி ; இந்து மதத்தான், கௌரி பாடாணம் ; எட்டி  எனப் பல பொருள்கள் இன்றும் உள்ளன. ஆனால், இந்து என்ற பெயர்க்காரணம் திருடன் என்ற பொருளில் வந்ததாகவே பழம் நூல்கள் கூறுகின்றன. கழக வெளியீட்டின் வினா-விடை நூல் ஒன்றிலும் அவ்வாறுதான் குறிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று உண்மையைக் கலைஞர் சொல்லியிருந்தால் தப்பில்லை. ஆனால், இதன் அடிப்படையில் இந்துக்கள் அனைவரும் திருடர்கள் என்று சொல்லியிருந்தால் குற்றம்தான். இந்துக்களிடையே வாழ்ந்து கொண்டு அவ்வாறு சொல்லியிருக்க மாட்டார் என எண்ணுகிறேன்..

இந்து என்றால் திருடன் என்று இழிவாகப் பேசிய கருணாநிதி 4 நாட்களுக்குள் விளக்கம் தர நீதிமன்றம் உத்தரவு

இந்து என்றால் திருடன் என்று இந்துக்களை இழிவாகப் பேசிய திமுக தலைவர் இன்னும் 4 நாட்களுக்கு உரிய விளக்கம் தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு தனிப்பட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் வேத அறிவியல் மையத்தின் சார்பில் பி.ஆர்.கௌதமன் ஒரு மனுவை தாக்கல் செய்தார். கடந்த 24.10.2002 அன்று சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இந்து என்றால் திருடன் என்று கருணாநிதி பேசியிருந்தார். இது இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் படி இருக்கிறது என்று, இதற்கு தகுந்த நடவடிக்கை கோரி மறுநாள் 25.10.2002 அன்று மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. மேலும், இது குறித்து மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகியபோது, உயர் நீதிமன்ற உத்தரவின் படி 6.1.2006இல் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரின் அடிப்படையில் அவரை அழைத்து விசாரிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ காவல் துறையினர் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
எனவே உயர்நீதிமன்ற உத்தரவின்படி பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரின் படி கருணாநிதியிடம் விளக்கம் கேட்கவும், அவர் மீதான விசாரணை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் தனது மறு மனுவில் கௌதமன் கூறியிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீது இன்று காவல் துறைக்கு (காவல்துறை ஆணையர், மாம்பலம் காவல் துறை ஆய்வாளர் ஆகியோருக்கும்)நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்த நீதிபதி, கருணாநிதிக்கு தனிப்பட்ட முறையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கலாம் என்றும் உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பான அடுத்த விசாரணையை வரும் செவ்வாய்க் கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால், வரும் 4 நாட்களுக்குள் கருணாநிதி உரிய விளக்கம் தர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

வியாழன், 7 பிப்ரவரி, 2013

இராசபட்ச வருகை : திருவில்லி. வழக்குரைஞர்கள் நீதிமன்றப்புறக்கணிப்பு

இராசபட்ச வருகையை க் கண்டித்து த் திருவில்லி. வழக்குரைஞர்கள் சங்கம் இருநாட்கள் நீதிமன்ற ப் புறக்கணிப்பு

First Published : 07 February 2013 03:32 PM IST
மனித படுகொலையில் ஹிட்லரை மிஞ்சிய ராஜபட்ச இந்தியாவில் கால் வைக்கக் கூடாது என்றும், அவரது வருகைக்கு கண்டனம் தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணிக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் பணிகள் முழுவதும் பாதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் த.கதிரேசன் தலைமையில், செயலாளர் ஆர்.ராஜையா முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வழக்குரைஞர்கள் பேசுகையில் கூறியதாவது:
சம தர்மத்தை போதித்த நமது பாரத தேசத்தின், அண்டை நாடான இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் ஈழம் அமைவதற்கும் போராடி கொண்டு இருந்த தமிழர்களின் மீது இறுதி கட்ட போரில் நடந்த பேரிழப்புகள், துன்பங்கள் கணக்கில் அடங்காதவை. தமிழர்களுக்கு உரிமைகளை கொடுப்பதற்குப் பதிலாக அவர்களிடம் இவர்கள் பறித்தது 1.50 லட்டத்திற்கு மேலான தமிழர்களின் உயிர்கள்.
தமிழர்கள் இருந்தால் தானே அவர்கள் உரிமைகள் கேட்பதற்கு என்ற குறிக்கோளோடு செயல்பட்டு கொண்டு இருக்கும் ராஜபட்ச, தனது சொந்த மக்கள் மீது போர் தொடுத்து, நரபலியில் ஹிட்லரை பின்னுக்கு தள்ளி உள்ளார்.
இப்படிப்பட்ட ஒரு மனித மிருகம் வருவது நமது நாட்டிற்கே கேடு. எனவே ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள் சங்கம் ராஜபட்ச வருகையைக் கண்டித்து வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றப் பணிகளை புறக்கணிப்பது என்று பேசினர். பின்னர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள் சங்கத்தில் 330 வழக்குரைஞர்கள் உள்ளனர். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட முதன்மை நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டது.

புதன், 14 நவம்பர், 2012

தீவரவாதி என அவதூறு செய்தி: இளைஞருக்கு க் , கூகுள் நிறுவனம் உரூ. 1 கோடி வழங்க உத்தரவு

தீவரவாதி என அவதூறு செய்தி: இளைஞருக்கு க் , கூகுள் நிறுவனம் உரூ. 1 கோடி வழங்க உத்தரவு
தீவரவாதி என அவதூறு செய்தி: வாலிபருக்கு, கூகுள் நிறுவனம்
ரூ. 1 கோடி வழங்க உத்தரவு
சிட்னி, நவ. 14-

தீவிரவாதி என அவதூறாக செய்தி வெளியிட்டதால் வாலிபருக்கு 'கூகுள்' நிறுவனம் ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் மிலோரத் டிரிகுல்ஜா. இவர் கேளிக்கை மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இவருக்கு மெல்போர்ன் நகரில் உள்ள தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த 2004-ம் ஆண்டு 'கூகுள்' இணைய தள நிறுவனம் செய்தி வெளியிட்டது. இதனால் அவரது தொழில் முடங்கியது.

இதை எதிர்த்து அவர் விக்டோரியாவில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடைபெற்றபோது, ஏதோ தவறுதலாக இது போன்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது. வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இது வெளியிடப்படவில்லை என கூகுள் நிறுவனம் தெரிவித்தது.

ஆனால் அதை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மறுத்து விட்டார். அவதூறு செய்தி வெளியிட்டதற்காக மிலோரட் டிரிகுல் ஜாவுக்கு கூகுள் நிறுவனம் ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க உத்தர விட்டார்.