மழை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துயரீட்டுப் பொருட்களை வழங்கி
வரும் தன்னார்வலர்களுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு செய்தால்
உடனடியாகக்கட்சி மேலிடத்துக்குப் புகார் அளிக்கலாம் என அக்கட்சி
தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகத் தமிழ் இந்து நாளிதழுக்கு அதிமுக நிருவாகி ஒருவர் அளித்த பேட்டியில்,
“மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துயரீட்டுப் பொருட்களை
வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு
செய்தால் உடனடியாகக் கட்சி மேலிடத்துக்குப் புகார் அளிக்கலாம்.
044-28130787, 044-28132266, 044-28133510 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு
புகார் அளிக்கலாம்.
இதுதவிர info@aiadmk.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம். அல்லது @aiadmkofficial என்ற சுட்டுரை (துவிட்டர்) பக்கத்தின் வாயிலாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம்” என்றார்.
தன்னார்வலர்கள் கொண்டு வரும் துயரீட்டுப்
பொருட்களை அதிமுகவினரும், பாமகவினரும் பெற்றுக் கொண்டு அதை அவர்கள்
அளிக்கும் துயரீட்டுப் பொருட்களாக வழங்குவதாகச் சமூக வலைத்தளங்களில்
பரவலாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனையடுத்துத் துயரீட்டுப் பொருட்களை
வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு
செய்தால் உடனடியாக கட்சி மேலிடத்துக்கு புகார் அளிக்கலாம் என அக்கட்சி
தெரிவித்துள்ளது.
மேலும், “அதிமுகவினர் இடையூறு செய்யும்
கேட்பொலி, காணொளி பதிவு இருந்தால் அவற்றையும் கட்சி மேலிடத்துக்கு
அனுப்பலாம்; தொடர்பானவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிமுக
நிருவாகிகள் தெரிவித்துள்ளனர்.
கடலூரில் துயரீட்டுப் பொருட்களை வழங்கச்
சென்ற தன்னார்வலர் ஒருவரிடம் தமிழ் இந்து சார்பில் பேசினோம், அவர்
கூறும்போது, “உணவு, அடிப்படை மருந்துப் பொருட்களை நாங்கள் எடுத்துச்
சென்றோம். எங்கள் வாகனத்தை அதிமுகவினர் வழிமறித்தனர். பொருட்களை தங்களிடம்
ஒப்படைக்குமாறு கூறினார்கள். ஆனால், நாங்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில்
ஈடுபட்டதால் விட்டுச்சென்றனர். ஆனால், எங்களுடன் வந்த வேறு சில ஊர்திகளில்
இருந்த துயரீட்டுப் பொருட்களில் வலுக்கட்டாயமாக முதல்வர் செயலலிதா படத்தை
ஒட்டினர்” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக