வந்தவாசியில்
வட்டக்கோட்டைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில்
நிலவேம்பு மருத்துவநீர் வழங்கப்பட்டது.
கார்த்திகை 13, 2046 / நவம்பர் 29, 2015:
வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எலும்பு முறிவுக்
காய்ச்சல் (Dengue fever)பற்றிய விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் நில
வேம்புக்கருக்கு (கசாயம்) வழங்கும் விழா வந்தவாசி தேரடியில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன்
தலைமையேற்றார். சங்கச் செயலாளர் பா.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.
சங்க அறிவுரைஞர் கவிஞர் மு.முருகேசு, சங்கப் பொருளாளர் எ.தேவா, கிளை நூலகர் கு.இரா.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்க அறிவுரைஞர் கவிஞர் மு.முருகேசு, சங்கப் பொருளாளர் எ.தேவா, கிளை நூலகர் கு.இரா.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தெள்ளாறு வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர்
என்.செல்வமுத்துகுமாரசாமி, மருத்துவர் அன்னபூரணி இருவரும் நிலவேம்பு
கருக்கினை(கசாயத்தை) வழங்கி, என்புமுறிவுக்காய்ச்சல்(டெங்கு) விழிப்புணர்வு
நிகழ்வைத் தொடங்கி வைத்தனர்.
விழாவில், வந்தவாசி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மோகன், முன்னாள் வட்டார
வளர்ச்சி அலுவலர் கம்பீரம், தமிழாசிரியர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வளர்ச்சி அலுவலர் கம்பீரம், தமிழாசிரியர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில், முந்நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகளுக்கும்,
பொது மக்களுக்கும் நிலவேம்புக் கருக்கு(கசாயம்) வழங்கப்பட்டது.
பொது மக்களுக்கும் நிலவேம்புக் கருக்கு(கசாயம்) வழங்கப்பட்டது.
நிறைவில், சங்கத் துணைத்தலைவர் மா.சுரேசுபாபு நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக