சனி, 6 அக்டோபர், 2012

சுவிட்சர்லாந்தில் மாவீரர் நினைவு நாளுக்கு விடுதலைப்புலிகள் அழைப்பு

சுவிட்சர்லாந்தில் மாவீரர் நினைவு  நாளுக்கு விடுதலைப்புலிகள் அழைப்பு
  
பாரீஸ், அக். 6-

சுவிட்சர்லாந்தில் மாவீரர் நினைவு தினம் கடைப்பிடிக்க விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சுவிஸ் கிளை அழைப்பு விடுத்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உயிரிலும் உயர்வான தமிழீழ தாய்த் திருநாட்டின் மலர்விற்காய் செங்களமாடி கந்தகக்காற்றிலே விதையாகி வீழ்ந்து தமிழர் எம் வரலாற்றில் கருவாகி நிற்கும் உத்தமர்களின் நினைவு சுமந்து அந்த கல்லறைத் தெய்வங்களுக்கு மாலை சாத்தி மலர் தூவிசுடர் ஏற்றி விடியலுக்காய் வரம் கேட்கும் புனித நாளாம் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 இவ்வாண்டும் அதற்கே உரிய தனித்துவத்துடன் உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழதேச மக்களாலும் தமிழன் உணர்வாளர்களாலும் நினைவு கூறப்படவுள்ளது.

அந்த வகையில் தமிழீழ விடுதலைப்புலிகள், சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் வழமை போல் 27.11.2012 செவ்வாய்க்கிழமை மதியம் 12.30 மணிக்கு நடை பெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2012 நினைவெழுச்சி நாளில் தமிழர் நினைவேந்தல் அகவம் - சுவிஸ் தன் பணியை ஆற்றுவதற்காக மாவீரர் குடும்ப உறவுகளாகிய தங்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம்.

கடந்த காலங்களில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் திருவுருவப்படங்களை எமக்கு இதுவரை அனுப்பி வைக்காதவர்களும் தங்களால் கடந்த காலங்களில் விவரங்கள் தரப்பட்ட போதும் உரிய தொடர்புகள் மேற்கொள்ளப்படாதிருப்பின் தயவு செய்து உங்களுடனான மாவீரர் குடும்ப உறவுத் தொடர்பை பேணுவதற்கு விவரங்களை 31.10.2012க்கு முன் தந்துதவுமாறு பணி வன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக