செவ்வாய், 2 அக்டோபர், 2012

காதுகேளாதோருக்கான மார்பாய்வி: மாணவர் சாதனை - steth for deaf

காதுகேளாதோருக்கான மார்பாய்வி(ஸ்டெத்தாஸ்கோப்): கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர் சாதனை

First Published : 02 October 2012 11:04 AM IST
புதிய மற்றும் எளிய தொழில்நுட்பத்தில் காதுகேளாதோர் பயன்படுத்தும் ஸ்டெத்தாஸ்கோப் கருவியைக் விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர் கண்டுபிடித்துள்ளார்.
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.டெக். இறுதியாண்டு இ.சி.சி. படித்து வருபவர் ஷேக் அப்துல்லா. இவர் தம் இறுதியாண்டு புராஜெக்டை புதிய முறையில் செய்ய வேண்டி, பயனுள்ள கண்டுபிடிப்பில் இறங்கினார். அதன் பலனாக ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளார்.
காற்று அழுத்த இயக்கத்தில் தம் ஒலியை மாற்றி கிரகித்துக்கொள்ளும் கருவியைக் கண்டார். இதன் மூலம் காது கேளாதோர், இதனை ஸ்டெத்தாஸ்கோப், செல்போனில் பொருத்தி மருத்துவ பரிசோதனை செய்யலாம். செல்போனிலும் பேசலாம். இக் கருவியின் உற்பத்திச் செலவு சுமார் ரூ.300 ஆகும் என்றார் மாணவர்.
இந்த கருவியை கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ள சிறப்புப் பிரிவில் 6 ஆண்டு பி.டெக். படிக்கும் காதுகேளாதோர் மற்றும் வாய்பேச இயலாதோரிடம் மாணவர்களிடம் செய்முறையாக மாணவர் ஷேக் அப்துல்லா செய்து காட்டினார்.
மாணவரின் புதிய கண்டு பிடிப்பை பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் கன்னியப்பன், துறைத் தலைவர் துரைராஜ் உள்ளிட்டோர் பாராட்டினர்.
புதிய கருவியை செல்போனில் இணைத்து காதுகேளாத ஒரு மாணவி, பேராசிரியையுடன் பேசுகிறார். உடன் மாணவர் ஷேக் அப்துல்லா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக