First Published : 31 Oct 2011 02:31:10 PM IST
சென்னை, அக்.31: இலங்கையில் 2013-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் மாநாடு நடத்துவதற்கான உரிமையை இந்தியா வாங்கித் தந்திருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:போர்க்குற்றத்தை இழைத்த ஒரு நாட்டில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்று இங்கிலாந்து பிரதமரும், கனடா பிரதமரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்தியா தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி அடுத்த காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில்தான் நடத்த வேண்டும் என்று அறிவிக்க வைத்துள்ளது.இதிலிருந்து இலங்கை தொடர்பான அணுகுமுறையை மத்திய அரசு இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு இலங்கைக்கு ஆதரவான போக்கை கைவிடுவதுடன், அந்த நாட்டு அரசுக்கு எதிராக போர்க்குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக