ஞாயிறு, 30 அக்டோபர், 2011

உலகச் சிக்கன நாள்: ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

உலக சிக்கன நாள்: ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

First Published : 29 Oct 2011 03:42:19 PM IST


சென்னை, அக்.29: உலக சிக்கன நாள் நாளை கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,உலக சிக்கன நாள் தமிழகமெங்கும் கொண்டாடப்படுவது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் தங்கள் வாழ்நாளில் சிக்கனமாகச் செலவு செய்து, வருவாயில் ஒரு பகுதியைச் சேமிப்பாக்கி, நாளடைவில் பெரும் பயனடைவதை இந்நாள் உணர்த்துகிறது.பாடுபட்டுத் தேடிய நிதியைப் பாதுகாப்பு உணர்வோடு சேமிப்பதுதான் முறையாகும். அதற்கு அஞ்சலகச் சிறுசேமிப்பு உதவுகிறது. அஞ்சலகத்தில் சேமிப்பதன் மூலம் சேமிக்கும் தொகைக்கு முழுமையான பாதுகாப்பு கிடைப்பதுடன், பல்வேறு நன்மைகளும் கிடைக்கின்றன. அஞ்சலகத்தில் சிறுகச் சிறுக சேமிக்கும் தொகை பெருந்தொகையாகி முதலீட்டாளர்களுக்குப் பல்வேறு தேவைகளை நிறைவேற்றப் பயன்படும்.  குறிப்பாக கல்வி, திருமணம், வீடுகட்டுதல் போன்ற நற்செயல்களுக்கும், மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அவசியச் செலவுகளுக்கும் பயன்படுகிறது. மேலும், இளமையில் சேமிப்பு, முதுமையில் பாதுகாப்பினையும், நம்பிக்கையையும் அளிக்கிறது.ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேறவும், திட்டமிட்டு நிம்மதியாக வாழவும், ``ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்ஏனை இரண்டும் ஒருங்கு`` எனும் குறள் காட்டிய நெறியில், மக்கள் சிக்கனமாக வாழவும், தங்களின் வருவாயிலிருந்து இயன்ற அளவில் சேமித்து வாழ்வில் வளம்பெற வேண்டும் என்று ``உலக சிக்கன நாளில்`` அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக