ஞாயிறு, 30 அக்டோபர், 2011

கண்டுபிடிப்பிற்குபடிப்பு அவசியமில்லை!'

 
 
காற்று வீசாத போதும் கொடி பறக்கும் விதமாக கருவியை கண்டுபிடித்துள்ள இந்திய பாரதிதாசன்: சிவகங்கை அருகில் உள்ள தஞ்சாக்கூர் கிராமம் தான் என் சொந்த ஊர். நான் சிறுவனாக இருந்த போதே என் அம்மா இறந்துவிட்டதால், படிக்க வைக்க ஆளில்லை. அதனால், ஏழாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டேன். பள்ளிக்குப் போகாவிட்டாலும், தினமும் செய்தித்தாள், புத்தகங்களை அதிகமாக வாசிக்க ஆரம்பித்தேன். அப்படிப் படிக்கும் போது தான், எனக்கு கண்டுபிடிப்புகளின் மீதான ஆர்வம் அதிகமானது. அதன் பின், தீவிரமாக கண்டுபிடிப்பு முயற்சியில் இறங்கினேன்.கண்டுபிடிப்பிற்கு படிப்பு அவசியமில்லை. அது சார்ந்த புரிதலும், ஆர்வமும் இருந்தால் மட்டும் போதும். மின்சாரம் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் தான் என் வழிகாட்டியாக எடுத்துக் கொண்டேன். இந்தக் கருவியைக் கண்டுபிடிப்பதற்காக பல நாட்கள், இரவில் தூங்காமல், பல மாடல்களில் படம் வரைந்து பார்ப்பேன். பின், வரைந்த படத்திற்கு மரம், இரும்பு, பித்தளை பொருட்களைக் கொண்டு இரும்புப் பட்டறையில், வடிவம் கொடுப்பேன். டிசைனை கொடிக் கம்பத்தில் பொருத்தி, பரிசோதனை செய்வேன்.என் பல முயற்சிகளுக்குப் பின், இரண்டு ஆண்டுகள் கழித்து, நான் நினைத்தது போலவே, கருவி அமைந்தது. கொடி ஏற்றுவதற்கு முன், இந்தக் கருவியை கொடியுடன் கயிற்றில் பொருத்த வேண்டும். இந்தக் கருவி வளைந்து கொடுக்கும் தன்மையுடையது. கருவியின் உள்ளே உள்ள பிளேட் அசைந்து கொடுக்கும் தன்மையுடையது. இதனால், கொடியானது காற்றில்லாவிட்டாலும் கம்பீரமாக எப்பொழுதும் பறந்து கொண்டே இருக்கும்.இந்தக் கருவியை இரும்பில் செய்ய, 500 ரூபாயும், பிளாஸ்டிக்கில் செய்ய, 400 ரூபாயும் செலவாகும். என்னுடைய கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்தி, அரசு இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை. என் எதிர்கால லட்சியம் நோபல் பரிசு வாங்குவது தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக