வெள்ளி, 4 நவம்பர், 2011

தமிழ் இளையோர் அமைப்பு நடாத்திய உயர் கல்வி- தொழில்துறை சார்ந்த ஒன்றுகூடல்!

தமிழ் இளையோர் அமைப்பினால் கடந்த ஏப்ரல் மாதம் வெற்றிகரமாக நடாத்தபட்ட உயர்கல்வி மற்றும் தொழில்துறை சார்ந்த ஒன்றுகூடலைத் தொடர்ந்து லெஸ்டர் மாநிலத்தில் வாழும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இவ் வாய்ப்பினை நீடிப்பதற்கு கல்விமற்றும் தொழில் அபிவிருத்தி சபை முடிவெடுத்து இவ் நிகழ்வினை ஒழுங்குபடுத்தியது.
29/10/11 சனிக்கிழமை மதியம் 1 மணி தொடங்கி 4 மணி வரை லெஸ்டர் பகுதியில் தமிழ் இளையோர் அமைப்பினரால் உயர் கல்வி திட்டமிடல் மற்றும் தொழில்துறை வாய்ப்புக்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. இளையோர் அமைப்பினால் இரண்டாம் முறையாக முன்னெடுக்கப்பட்ட இவ் நிகழ்வில் பல மாணவர்கள் மற்றும் தமிழ் மக்களும் வேற்றினத்தவர்களும் கலந்துகொன்டனர். Evingtonward ஐ சேர்ந்த கவுன்சிலர் பல்ஜீத் சிங் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வுகளை பார்வையிட்டதோடு தமிழ் இளையோர் அமைப்பு எடுத்துக்கொண்ட இவ் முயற்சிக்கும் பாராட்டுகள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன் நிகழ்வில் மாணவர்களுக்கு எதிர்கால கல்வி திட்டமிடலை பற்றி விளக்குவதற்காக பிரித்தானியவில் இருந்து 15 ற்கு மேற்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து அவர்களின் பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர்,முக்கியமாக பிரித்தானியாவில் பிரசித்தி பெற்ற Cambridge பல்கலைகழக பிரதிநிதிகளும் வருகை தந்தார்கள். அத்தோடு வேலை வாய்ப்பு பற்றி விளக்குவதற்காக பல தொழில்துறை திறமை சாலிகளும் வருகை தந்தார்கள். இத்தோடு பிரித்தானிய கடற்படையை சார்ந்த பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டு தமது தொழில்த்துறை பற்றி இளையோருக்கு விளக்கினார்கள்.
நேர அட்டவணைப்படி முதல் இரண்டு மணித்தியாலங்கள் பல்கலைக்கழக பிரதிநிதிகளின் சந்திப்பும் அதற்கு அப்புறம் பட்டறைகளில் CVwriting, Personal Statements & Interview, Revision Techniques ஆகிய வகுப்புகள் இடம்பெற்றன. இளையோர்களும் பெற்றோர்களும் இதில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெரும் பயன் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு வேற்று இன இளையோர்களும் இதில்கலந்து கொண்டமை தமிழ் இளையோர் அமைப்பிற்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றி எனவே கருதப்படவேண்டும். வேற்று இன மக்களோடு ஓர் நல்ல உறவை அமைப்பதற்கு இது வழிவகுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தமிழ் இளையோர் அமைப்பு இப்படியான சமூகத்திற்கு பயனுள்ள பல முயற்சிகளை தொடரும் என்பதயும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக