செவ்வாய், 10 மே, 2011

Germany P.M. selected for nehru award: நேரு விருதுக்கு ஜெர்மன் பிரதமர் தேர்வு

என்ன செய்வது? இராசபக்சேவைத்தான் தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். பின்னர், அனைத்துத் தேர்தல் முடிவுகளும் வந்தபின் வழங்கும் ஏதேனும் விருதை அளிக்கலாம் என முடிவு எடுத்ததால் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. எனவே, இராசபக்சே சினம் கொள்ளாமல் தொடர்ந்து தொடர்ந்து இன அழிப்புப் பணிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இப்படிக்கு இன அழிப்பு மன்னர்களான காங்.தலைவர்கள். >>இப்படி ஒரு மடல் இராசபக்சேவிற்கு அனுப்பியிருப்பார்களோ! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


நேரு விருதுக்கு ஜெர்மன் பிரதமர் தேர்வு

First Published : 10 May 2011 05:17:06 AM IST


புதுதில்லி, மே 9: ஜவஹர்லால் நேரு விருதுக்கு ஜெர்மன் நாட்டுப் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009-ம் ஆண்டிற்கான இந்த விருதுக்கு உரியவரைத் தேர்வு செய்ய துணை குடியரசுத் தலைவர் முகமது ஹமீது அன்சாரி தலைமையிலான குழு தில்லியில் கூடி ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெலைத் தேர்ந்தெடுத்துள்ளதாக வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விருதில் ரூ.1 கோடி ரொக்கம், கேடயம் மற்றும் பாராட்டுப் பத்திரமும் அடங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக