செவ்வாய், 10 மே, 2011

kanimozhi under court arrest: அலைக்கற்றை வழக்கு: நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை

மா.உ. கனிமொழியை ஒவ்வொரு நாளும் நீதிமன்றம் கலையும் வரையிலான நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர். ஒன்று, அவருக்குப் பிணை வழங்கியிருக்கலாம். அல்லது சிறையில் அடைத்துப் பிணை கோர  இசைந்திருக்கலாம். அன்றாடச் சிறை என்பது நன்றாக  இல்லை. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

2ஜி அலைக்கற்றை வழக்கு: நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை- பல்வா மனுவுக்கு சிபிஐ எதிர்ப்பு

First Published : 10 May 2011 05:01:44 AM IST


புதுதில்லி, மே 9: 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ விசாரணையை சிறப்பு நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று கோரி ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் சாஹித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மனுவுக்கு நீதிமன்றத்தில் சிபிஐ எதிர்ப்புத் தெரிவித்தது.  2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு வழக்கில் சாஹித் பல்வா, குசேகாவோன் பழம் மற்றும் காய்கறி நிறுவன இயக்குநர்கள் ஆசிப் பல்வா,ராஜீவ் அகர்வால் உள்ளிட்டோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  2ஜி வழக்கு தொடர்பாக சிபிஐ நடத்திவரும் புலனாய்வை சிறப்பு நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் இவர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். இதற்கு சிபிஐ சார்பில் திங்கள்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  "மனுதாரர்கள் ஏற்கெனவே நீதிமன்ற விசாரணையில் இருக்கின்றனர். அதனால் குற்றவியல் சட்டப் பிரிவு 156(3)-ன்படி உத்தரவிட முடியாது. தங்களது எதிர்ப்புகள் அனைத்தையும் நீதிமன்றத்திலேயே தெரிவிப்பதற்கு வேண்டுமானால் உத்தரவிடலாம்' என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.  மனுதாரர்கள் கூறியிருக்கும் புகார்கள் அனைத்தும் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. அதற்குப் பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றச்சாட்டுகள் பற்றிய முழுவிவரங்களும் மனுதாரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. புலனாய்வின் போது பெறப்பட்ட வாய்மொழி, ஆவணங்கள் சார்ந்த ஆதாரங்கள் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப் போதுமானவையாக இருக்கின்றன இப்போதும் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் புகார் தெரிவிப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்று சிபிஐ கூறியுள்ளது.  இதேபோல், சட்ட ஆலோசனை பெறுவதற்காக சிபிஐ வசமுள்ள சில ஆவணங்களைக் கோரி டி.பி.ரியால்டி இயக்குநர் வினோத் கோயங்கா தாக்கல் செய்த மனுவுக்கும் சிபிஐ எதிர்ப்புத் தெரிவித்தது.  ஆவணங்கள் சார்ந்த பிரதிவாதங்கள் தொடங்குவதற்கான நிலையை வழக்கு இன்னும் எட்டாத நிலையில், மனுதாரரின் கோரிக்கையை ஏற்கக்கூடியதல்ல என்று சிபிஐ கூறியது.  கனிமொழி ஆஜர்: அலைக்கற்றை வழக்கில் கூட்டுச் சதியாளர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள மாநிலங்களவை திமுக உறுப்பினரும் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார். அவரது கணவர் அரவிந்தனும் உடன் வந்தார்.  முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட வேறு பலரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, கனிமொழி புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது அருகிலிருந்த ஆ.ராசாவுடனும் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக