செவ்வாய், 10 மே, 2011

Thamizh should be compulsory: தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்:இராமதாசு

சரியான கருத்து. அரசு  உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் தமிழைக் கட்டாயப் பாடமாகக்  கொண்ட கல்வி முறைக்கு மட்டுமே இசைவுஅளிக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும்: ராமதாஸ்

First Published : 10 May 2011 01:52:40 PM IST


சென்னை, மே 10- தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்தவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்படுவது வழக்கம். இம்முறையும் அதேபோன்றுதான் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.ஆனால், ஒவ்வொரு பாடத்திலும் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழை ஒரு பாடமாக படிக்காதவர்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்ப் படித்தவர்களுக்கு, பாடவாரியான தரவரிசைப் பட்டியலில் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தேர்வுத்துறை அதிகாரிகளின் இந்த நடைமுறை தமிழக அரசின் கொள்கைக்கு எதிரானதாக உள்ளது.இத்தகையப் போக்கு தொடர்ந்தால், தமிழ்நாட்டில் தமிழை ஒரு பாடமாக படிக்காமலேயே பள்ளி மற்றும் கல்லூரி முடித்து பட்டம் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும்.தமிழை ஒரு பாடமாக படித்தவர்களுக்கு மட்டுமே தரவரிசை வழங்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே மாநில அரசின் பரிசுகளும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.இதுபோன்ற சிக்கல்களை தடுப்பதற்கு ஒரே தீர்வு தமிழை கட்டாயப் பாடமாக்குவதுதான். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்

ராமதாஸ் லாம் ஒரு மனுஷன், ஊழல் கட்சியோட கூட்டணி வச்கிட்டு தமிழ் வளர்கிறாரம் தமிழ். கனிமொழி கேஸ் பத்தி பேச துப்பில்ல, தேர்தல் முடிவுக்கு அப்புறம் அ.தி.மு.க வுக்கு போக பிளான் பண்ணிட்டு இருக்குற ஆள் பேசுற பேச்சை பாரு.
By Chandru
5/10/2011 6:30:00 PM
தமிழை வைத்து பிழைப்பு நடத்துவது அண்ணா கலைஞர் அடுத்த வரிசையில் தமாசுதாஸ் (ராமதாஸ்) இவர்கள் தமிழர்களை அழிக்காமல் விடமாட்டார்கள் போல ? தமிழ் வாழ்க தமிழர்கள் நிலை மோசம்
By krishnasamy
5/10/2011 5:11:00 PM
அன்புமணியின் பிள்ளைகள் தில்லியில் உள்ள (mater dei) என்னும் பணக்காரர்கள் பயிலும் ஆங்கிலப்பள்ளியில் படிக்கின்றனர். அங்கு தமிழ் ஒரு மொழியககூட கற்று தரப்படுவதில்லை. DTE எனப்படும் தமிழ் வழிப்பள்ளிகள் பல இருந்தும் அதை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. ராமதாசு தமாசு பண்ணுகிறார். அவர் ஒரு பொய்யர்.
By farook
5/10/2011 3:17:00 PM
நம்ம பிரச்சனையே இதுதான். ராமதாஸ் சொல்வதில் தவறு ஏதும் இல்லை . தமிழ் வழி கல்வி முடியாவிட்டாலும் ஒரு பாடம் தமிழ் படித்தால் நல்லது.இது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. அரசியல் வாதியை பிடிக்க வில்லை என்பதற்காக தமிழை புறக்கணிப்பது நல்லதல்ல.
By senthamil
5/10/2011 2:33:00 PM
லூசு மாதிரி பேசாதீங்க . அறிக்கை விடுராறான் அறிக்கை .
By fajrudeen
5/10/2011 2:19:00 PM
அய்யா மருத்துவர் அவர்களே , உங்கள் வீட்டில் எத்தனை பேர் தமிழ் மொழி மூலமாக படித்தவர்கள் என்ற விவரங்களை வெளியிடுவீர்களா. தாங்கமுடியலடா சாமி!!! இவரோட அலப்பறை..
By சுவாமி
5/10/2011 2:04:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக