சனி, 14 மே, 2011

அன்பழகன் முதல் தமிழரசி வரை 18 தி.மு.க. அமைச்சர்கள் தோல்வி

இனமானப் பேராசிரியர் அவர்கள் கூர்த்த மதியும் செயல்திறனும் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மிக்கவர். தனது மூத்த நிலையை விட்டுக் கொடுத்து மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்ட பொழுது அதனை ஏற்றதால் மக்களால் தள்ளப்பட்டாரா எனத் தெரியவில்லை.வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு  என்றாலும் அவரது தோல்வி வருத்தத்திற்குரியதுதான். அதுபோல் உபயதுல்லா அவர்கள், எளிமையும் கொடை உணர்வும் மிக்க்வர்.எனினும்  பன்றியோடு சேர்ந்த கன்று நிலைக்குத் தி.மு.க. சென்றமையால், இவர்கள் தோல்வியைத் தழுவினர். எனவே, கட்சியின் தலைமைப் பொறுப்பிற்குப் பேராசிரியர் வர வேண்டும்.  கலைஞர் தன் குடும்பத்தினர்  கட்சியின் முதன்மைப் பொறுப்பு எதிலும்  வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். நாட்டு நலனுக்காகவும் தமிழியம் காக்கப்படவும் இவை தேவை. திருநாவுக்கரசர தனிப்பட்ட செல்வாக்கு உள்ளவராக இருப்பினும் சேராத இடம்  தனில் சேர்ந்து தமி்ழ்ப்பகைக்குத் துணை புரிந்துள்ளமையால் தோல்வியைத் தழுவி உள்ளார். இதனை அனைவரும் பாடமாகக் கொள்ள வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


அன்பழகன் முதல் தமிழரசி வரை 18 தி.மு.க. அமைச்சர்கள் தோல்வி

First Published : 14 May 2011 03:42:19 AM IST


சென்னை, மே 13: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. மூத்த அமைச்சர் க.அன்பழகன் உள்பட 18 அமைச்சர்கள் தோல்வியடைந்தனர்.முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் க.அன்பழகன் உள்பட மொத்தம் 28 அமைச்சர்கள் தி.மு.க. சார்பில் போட்டியிட்டனர். இவர்களில் 8 பேர் மட்டுமே வெற்றியடைந்துள்ளனர். மீதமுள்ள 2 தொகுதிகளில் முடிவு அறிவிக்கப்படவில்லை.முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, டி.பி.எம். மைதீன்கான், சுப.தங்கவேலன், கா.ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய தொகுதிகளின் முடிவுகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை அறிவிக்கப்படவில்லை. இந்தத் தொகுதிகளில் முறையே அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.ஆர்.பெரிய கருப்பன் ஆகியோர் முன்னிலையில் இருந்தனர்.வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் அதிக அளவாக 35,079 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தோல்வியடைந்த அமைச்சர்கள் விவரம் (தொகுதி, வெற்றிபெற்றவர், வாக்கு வித்தியாசம்):க.அன்பழகன் (வில்லிவாக்கம்) - ஜே.சி.டி. பிரபாகரன் (அ.தி.மு.க.) - 10,782.கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்) - கே.குப்பன் (அ.தி.மு.க.) - 27,318.பரிதிஇளம்வழுதி (எழும்பூர்) - நல்லதம்பி (தே.மு.தி.க.) - 202.தா.மோ.அன்பரசன் (பல்லாவரம்) - ப.தன்சிங் (அ.தி.மு.க.) - 17,374.க.பொன்முடி (விழுப்புரம்) - சி.வி.சண்முகம் (அ.தி.மு.க) - 12,097.எஸ்.வீரபாண்டி ஆறுமுகம்(சங்ககிரி) - விஜயலட்சுமி பழனிச்சாமி (அ.தி.மு.க.) - 35,079.கே.என்.நேரு (திருச்சி தெற்கு) - என்.மரியம்பிச்சை (அ.தி.மு.க.) - 7,179.என்.செல்வராஜ் (மணச்சநல்லூர்) - டி.பி.பூனாட்சி (அ.தி.மு.க.) - 19,190.எஸ்.என்.எம்.உபயதுல்லா (தஞ்சாவூர்) - எம்.ரெங்கசாமி (அ.தி.மு.க.) - 7,329.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை) - வைகைச்செல்வன் (அ.தி.மு.க.) - 11,538.கீதா ஜீவன் (தூத்துக்குடி) - சி.த.செல்லபாண்டியன் (அ.தி.மு.க.) - 26,193.பூங்கோதை ஆலடி அருணா (ஆலங்குளம்) - பி.ஜி. ராஜேந்திரன் (அ.தி.மு.க.) - 299.சுரேஷ்ராஜன் (கன்னியாகுமரி) - கே.டி.பச்சைமால் (அ.தி.மு.க.) - 17,804.பொங்கலூர் நா.பழனிச்சாமி (கோவை தெற்கு) - ஆர்.துரைசாமி (அ.தி.மு.க.) - 27,796.உ.மதிவாணன் (கீழ்வேளூர்) - பி.மகாலிங்கம் (சி.பி.எம்.) - 724.தமிழரசி (மானாமதுரை) - ம.குணசேகரன் (அ.தி.மு.க.) - 14,020.மு.பெ.சாமிநாதன் (மடத்துக்குளம்) - சி.சண்முகவேலு (அ.தி.மு.க.) - 19,669.எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் (குறிஞ்சிப்பாடி) - ஆர். ராஜேந்திரன்(அதிமுக) -23,848.முக்கியப் பிரமுகர்களின் வெற்றி, தோல்வி விவரம்: அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்ட பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், 24,609 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் இசக்கி சுப்பையாவிடம் தோல்வியடைந்தார்.அ.தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.லட்சுமணனைவிட 29,906 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.சிதம்பரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார் 2,879 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.காங்கிரஸ் சார்பில் அறந்தாங்கியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.ராஜநாயகத்திடம் 16,656 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.அ.தி.மு.க. கொறடா கே.ஏ. செங்கோட்டையன் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் 41,192 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கொறடா பீட்டர் அல்போன்ஸ், அ.தி.மு.க. வேட்பாளர் பி.செந்தூர் பாண்டியனிடம் 16,086 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

1 கருத்து: