சனி, 21 ஆகஸ்ட், 2010

சின்னஞ் சிறு இலங்கைக்காரன் விரட்டுகிறானே !- பெரியார்

logo3
பக்கத்திலே இருக்கிற சிலோன், இலங்கைக்காரன் நம்மை உதைத்து விரட்டுகிறானே. அதை ஏன் என்று கேட்க நாதியில்லை. ஆனால் வட நாட்டில் கொலை, கொள்ளைகளில்  ஈடுபட்டு ஓடி வந்த வடநாட்டுப்பசங்களுக்கெல்லாம் ‘அகதிகள்’     என்ற பெயரில் கோடி கோடியாய் பணம்செலவழித்துக் கொண்டிருக்கிறார்களே !
அவர்களுக்கு வீடு ;
வியாபாரத்திற்குப் பணம் உதவியெல்லாம்!
நம்மவன் கதி?
கஞ்சிக்கு இல்லாமல் சாகும் நிலை.
தற்கொலை பண்ணிக் கொள்ளூம் அவல நிலை.
இதற்கெல்லாம் நமது நாடு நம்மிடம் இருந்தால் நடக்குமா?
சிலோனுக்கு இங்கிருந்து கள்ளத்தோணி ஏறிப்போகிறான்.
அவன் நம்மைப் பார்த்துக் கள்ளத்தோணி என்கிறான்.
குடி உரிமை இல்லாத மக்களாக இலட்சக்கணக்கில் அங்கே நம்மநாட்டு மக்கள் அவதிப் படுகிறார்கள்.
எது தேசத்துரோகம்?
இதைக் கேட்க- கண்டிக்க-இதை உணர்ந்த தக்க முறையில்பரிகாரம் தேடுவதற்கு ஒருவரும் இல்லையே!
இதையெல்லாம் எடுத்துச் சொல்லி இந்த அக்கிரமங்களைஒழிக்க, நம் நாடு நமக்கு ஆகவேண்டும் என்று கேட்டால், அது தேசத்துரோகம்என்கிறார்கள்.
நான் கேட்கிறேன் எது தேசத்துரோகம்?
யார் தேசத்துரோகிகள்?
(தந்தைப் பெரியார்-மே1960- (அபாயச் சங்கு -பெரியார்அச்சிடுவோர் வெளியிடுவோர் குழுமம் பதிப்பு -1983 )
(இது தந்தைப் பெரியாரியாரின் 1960ல் பேசிய பேச்சு. இப்போதுள்ள ஈழச்சூழலுக்கு அப்படியேபொருந்துகிறது )
}

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக