சனி, 21 ஆகஸ்ட், 2010

கோவனின் கூட்டணிக் கூக்குரல்

நாளையே கூட்டணி மாறலாம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


சென்னை, ஆக. 20:  தமிழகத்தில் நாளையேகூட கூட்டணி மாறலாம் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.÷ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் கருத்துகள் கூட்டணியை "வலி'ப்படுத்துகின்றன என்று முதல்வர் கருணாநிதி கூறிய பிறகு, மீண்டும் இளங்கோவன் இந்தக் கருத்தைக் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயரை வைக்கக் கோரி, ""காங்கிரஸ் நட்பகம்'' என்ற அமைப்பு சார்பில் சென்னை காயிதே மில்லத் மணி மண்டபம் அருகே வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை வாழ்த்தி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியது:ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது அவரது உடல் சென்னை அரசு பொது மருத்துவமனையில்தான் வைக்கப்பட்டிருந்தது. எனவே அவரின் நினைவாக அந்த மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயரை வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாகப் போராடி வருகிறது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. இனியும் தாமதிக்காமல் உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயரைச் சூட்ட வேண்டும்.மத்திய அரசின் நலத் திட்டங்களை எல்லாம் தனது திட்டங்கள் என்று தமிழக அரசு பிரசாரம் செய்து வருகிறது. 108 ஆம்புலன்ஸ் திட்டம் மத்திய அரசின் திட்டமாகும்.மாநில அரசின் திட்டம் என்றால் அந்த வாகனங்களின் மீது முதல்வரின் படம் போட்டு விளம்பரப்படுத்தி இருப்பார்கள். அவ்வாறு இல்லாததைக் கொண்டே இது மத்திய அரசின் திட்டம் என்பதைப் புரிந்து  கொள்ளலாம்.இன்று காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. நாளைக்கே வேண்டுமானாலும் கூட்டணி மாறலாம். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.யாருடைய வருமானத்திலும் நாங்கள் பங்கு கேட்கவில்லை. ராஜீவ் காந்தியின் உடல் வைக்கப்பட்டிருந்த அரசு பொது மருத்துவமனைக்கு அவரின் பெயரை வைக்குமாறுதானே கேட்கிறோம்.நடிகர் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்ட அரசிடம் பணம் இல்லாவிட்டால் எங்களிடம் நன்கொடை கேளுங்கள், நாங்கள் தருகிறோம்' என்றார் இளங்கோவன்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் மெய்யப்பன், காங்கிரஸ் நட்பகத்தின் தலைவர் ராமலிங்க ஜோதி உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.காங்கிரஸ் தலைமை என்ன செய்யும்?தமிழகத்தில் மாநில அரசில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு தராமல் மத்திய அரசில் மட்டும் இலாகாக்களைக் கேட்டு வாங்கிக் கொள்கிறது திமுக என்ற ஆதங்கம் காங்கிரஸôரிடம் பரவலாகவே இருக்கிறது. பலமுறை வாய்விட்டு கேட்டும்கூட திமுக தலைமை அவர்களின் கோரிக்கைகளை மதிக்கவே இல்லை.  திமுகவை விலக்க காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைமை விரும்பவில்லை. அதே சமயம் திமுகவின் கூட்டணியால்தான் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் வலுப்படாமல் இருக்கிறது என்ற எண்ணம் தில்லியில் காங்கிரஸ் வட்டாரங்களில் நிலவுகிறது. இதனால்தான் கட்சியின் பொதுச் செயலாளரான ராகுல் காந்தி இளைஞர் காங்கிரûஸ வலுப்படுத்த தமிழ்நாட்டுக்கு வந்தாலும் தோழமைக் கட்சித் தலைவரான முதல்வர் கருணாநிதியை மரியாதை நிமித்தம்கூட சந்திக்காமல் தவிர்க்கிறார் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியை அதிமுக விரும்புகிறது. அதை அக்கட்சியின் தலைவர் ஜெயலலிதா பொதுக்கூட்டங்களிலேயே குறிப்பாகத் தெரிவித்திருக்கிறார். தமிழக மக்களிடமும் அதிமுகவுக்குச் சாதகமான போக்கு ஏற்பட்டு வருவதை கோவை, திருச்சி பொதுக்கூட்டங்கள் உணர்த்துகின்றன. இதையெல்லாம் கணித்தே மாநில காங்கிரஸ் தலைவர்களில் சிலர் திமுகவை வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.திமுகவைவிட்டு அதிமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி மாறும் என்று கூற முடியாவிட்டாலும், திமுகவுடன் கூட்டணி அப்படியே தொடரும் பட்சத்தில் அதிக எம்.எல்.ஏ. தொகுதிகள், ஆட்சிக்கு வந்தால் அரசில் பங்கு ஆகியவற்றைக் கேட்டு பேரம் பேச காங்கிரஸ் கட்சிக்கு பிடி கிடைத்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துக்கள்

1. காமராசர் ஆட்சியைக் கொண்டு வருவதாக நொடிக்கு முந்நூறு தடவை உளறும் காங்கிரசார் அனைத்து இந்தியக் காங்.தலைவராக இருந்த பெருந்தலைவர் கருமவீரர் காமராசர் பெயரை வடக்கே சூட்டி விட்டு இராசீவ் காந்தியின் பெயரைச் சூட்டுவதற்குக் கோரிக்கை வைப்பதுதான் முறை.மண்ணின் மைந்தர்கள் அல்லவாதவர்பெயர் சூட்டுவதற்காகப் போராடுபவர்கள யாராக இருந்தாலும் அவர்களைப் பிடித்து உள்ளே போடவேண்டும். 2. கூட்டணி முறிந்த செய்தி தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும். உடனே அந்தம்மாவும் இவர்களைக்கைவிட நடுத்தெருவில் இவர்கள் பைத்தியம் பிடித்து அலைவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அந்த நாள் எந்த நாளோ? கோவனே உன் உரிமைக் குரலை உரத்து எழுப்பி விரைவில் உறவை முறிப்பாயாக. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/21/2010 6:15:00 AM
thevadiya paiyan rajasji, is still eating the toilet of Jeya and Sasi? Where is he?
By ahamed
8/21/2010 4:24:00 AM
அம்மாகூட கூட்டணி வச்சிங்கன்னா, காங்கிரஸ்காரன் யாராவது ஏதும் பேசமுடியுமா? இதையெல்லாம் நல்லா யோசிச்சிட்டு, சீக்கிரம் தனியா நிக்கிறதுக்கு வழியை பாருங்க. (தமிழ்நாட்டில் காங்கிரசை மொத்தமா ஒழிக்கிறதுக்கு இதுதான் நல்ல வழி) . மதுரைக்காரன்.
By மதுரைக்காரன்.
8/21/2010 1:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இலக்குவனாரே! நீர் சொல்வது கேட்பதற்கு நல்லத்தான் இருக்கு. ஆனால் தமிழ்நாட்டின் துரதிருஷ்டம் ஒரு ... அதிமுக என்ற கம்பனியை வைத்துக்கொண்டு கணிசமான ஓட்டு வங்கியை வைத்துக்கொண்டு எப்போட காங்கிரஸ் கூட்டணி கிடைக்கும் என்று ... அலையுதுப்பா! அதான் இந்தா ...கோவன் பயல் வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டிக்கிட்டு இருக்கான். அதிமுக கதவு திறந்திருப்பதால் திமுக அடக்கி வாசிக்க வேண்டியுள்ளது.திமுக இல்லாவிட்டால் அதிமுக போயி சீட்டு வாங்கிடுவான்கள். எனவே காங்கிரஸ்கரானுங்க ஏதோ உளறுவாயன்கள். ஆனால் ஜெயா போன்ற தீயசக்திகள் வளர்வதைதான் முதலில் தடுக்க வேண்டும். எதிர்கால தமிழகத்தின் வளர்ச்சிக்கு அதிமுகவும் ஜெயாவும் நிரந்திர தடைகள்!
By தொல்காப்பியனார்
8/21/2010 7:45:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக