திங்கள், 16 ஆகஸ்ட், 2010

சமமாகவே இருக்க வேண்டும் கூட்டணி: கார்த்தி ப. சிதம்பரம்


திருவாரூர், ஆக. 15: தமிழகத்தில் வருங்காலத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாகவும், சமமாகவும் இருக்க வேண்டும் என்றார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்.திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் காங்கிரஸôர் காமராஜர் ஆட்சி அமைப்போம் எனக் கூறிவருவது ஏதோ காமராஜரே மீண்டும் வந்து ஆட்சி செய்வார் என்பதல்ல. காமராஜர் எளிமையாகவும், சிறப்பாகவும் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வந்ததைத்தான் அவ்வாறு குறிப்பிடுகின்றனர். இந்த ஆட்சியை அளிக்க காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும்.வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் 15 மாவட்டங்களில் காங்கிரஸýக்கு சட்டப்பேரவைத் தொகுதியே ஒதுக்கப்படவில்லை.  ஒரு தேசிய கட்சி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும்.அதற்காகத்தான் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் தலா 2 சட்டப்பேரவை உறுப்பினர் போட்டியிடும் வகையில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இதன்படி 78 சட்டப்பேரவை தொகுதிகள் காங்கிரஸýக்கு கிடைக்கும்.தற்போதுள்ள காங்கிரஸ் - திமுக கூட்டணி வலுவாக உள்ளது. இது எதிர்காலத்தில் இன்னும் பலமாகவும், சமமாகவும் இருக்க வேண்டும்.காங்கிரஸில் கோஷ்டி என்பதெல்லாம் பத்திரிகைகள், ஊடகங்கள் பெரிதுபடுத்துவதுதான். உண்மையில் தேர்தல் வந்துவிட்டால், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு உழைப்பர் என்றார் கார்த்தி சிதம்பரம்.
கருத்துக்கள்


ஐந்து விரல்களும் சம அளவில் இருந்தால் கையால் இயங்க இயலுமா? ஒரு வேளை காங்கிரசில் தன் அணி போதிய பதவி அதிகாரத்தைப் பெற முடியாமல் தவிப்பதால் காங்கிரசில் எல்லாக் குழுக்களுக்கும் சம வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்ல முடியாமல் இப்படிச் சொல்லுகிறார் போலும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
8/16/2010 7:53:00 AM

நான் காங்கிரஸ் கட்சியில் நிறைய இளிச்சவாயன்களை ...அடிமைகளைக் கண்டிருக்கிறேன் ! ஆனால் காலத்திற்கு ஏற்றார்போல தொலைநோக்கு கொண்ட புத்திசாலி அரசியல் வாதி எவரையும் கண்டேன் இல்லை ! தேச நன்மை என்றால் கிலோ என்ன விலை ? என்று கேட்கும் காங்கிரஸ் காரர்களைக் கண்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை !!! @ rajasji
By rajasji
8/16/2010 2:32:00 AM
ஒங்கப்பன் எப்படி ஜெயிச்சான்னு தமிழ்நாட்டுக்கே தெரியுமே.
By Jawahar
8/16/2010 2:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக