புதன், 18 ஆகஸ்ட், 2010

தமிழில் பேசினால்தான் மரியாதை!: ஐ.ஜி.​ பி.சிவனாண்டி பேச்சு



தருமபுரி, ​​ ஆக.​ 17: தமிழ் தெரிந்தவர்களிடம் தமிழில் பேசுங்கள்.​ அதுதான் தமிழர்களுக்கு மரியாதை என கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.​ பி.​ சிவனான்டி கூறினார்.​ தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில்,​​ அவர் பேசியது:​ மேடை கலாசாரத்தை மாற்ற வேண்டும்.​ மேடையில் பேசுபவர்கள் யாராக இருந்தாலும்,​​ அவர்களுக்கு தமிழ் தெரிந்தால்,​​ தமிழில் பேசுங்கள்.​ சிறப்பு விருந்தினர்களுக்கு மாலை,​​ சால்வை அணிவித்து மரியாதை செலுத்துவதைவிட அவர்களுக்கு நல்ல புத்தகங்களை வழங்கும் கலாசாரத்தை மாணவர்கள் எதிர்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டும்.​ மாணவர்களுக்கு எதிர்கால லட்சியம் இருக்க வேண்டும்.​ படித்துவிட்டு வெளிநாடு செல்லும் கலாசாரத்தை மாற்றி,​​ இந்தியாவிலே நாம் கற்ற கல்வியை சமுதாய முன்னேற்றத்துக்காக அர்ப்பணிக்க வேண்டும்.​ மாணவர்கள் தாங்கள் எந்த நிலைக்கு சென்றாலும் பெற்றோர்களை மறக்காமல் பாதுகாக்க வேண்டும்.​ ஆசிரியர்கள் மாணவர்களை சமூக சேவகர்களாக்கப் பாடுபட வேண்டும்.​ ​​ பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு ஏழை மாணவர்களின் கல்விக்காக உதவ வேண்டும்.​ காவல் துறை சார்பில் 450 ஏழை மாணவர்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர்.​ பிள்ளைகளால் கைவிடப்பட்ட ​ பெற்றோர்கள் குறித்து 99400-65555 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என்றார்.​ மாநில தகவல் உரிமை ஆணையர் ஆர்.​ பெருமாள்சாமி,​​ பள்ளித் தாளாளர் சி.​ கந்தசாமி,​​ மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.​ கலைச்செல்வி,​​ பள்ளி அறக்கட்டளை செயலர் கே.​ தனசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துக்கள்

திரு பி.சிவனாண்டி இ.கா.ப. அவர்கள் கூறுவதை அனைவரும் பின்பற்றித் தமிழ் அறிந்தவர்களிடம் தமிழிலேயே பேச வேண்டும்! தமிழ் அறியாதவர்களைத் தமிழ் அறியச் செய்ய வேண்டும்!தமிழர்களுக்கான மரியாதையை வலியுறுத்துவதன் மூலம் காவல்துறைக்கு மரியாதை ஏற்படுத்தியமைக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/18/2010 1:14:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக