வியாழன், 8 அக்டோபர், 2009

பிரிட்டிஷ் எழுத்தாளர் ஹிலாரி மேன்டலுக்கு புக்கர் பரிசு



லண்டன், அக். 7: பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர் ஹிலாரி மேன்டல் (57) எழுதிய நாவலுக்கு 2009-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசு வழங்கப்பட்டது. கில்டு ஹாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் புக்கர் பரிசை பெற்றுக் கொண்ட ஹிலாரி மேன்டல் கூறியதாவது: இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசு, நான் எழுதிய வுல்ஃப் ஹால் என்ற நாவலுக்கு கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நாவல், 16-ம் நூற்றாண்டு இங்கிலாந்தில் வாழ்ந்த தாமஸ் கிராம்வெல் பற்றிய சரித்திர நாவல் ஆகும். இந்த நாவலை எழுதுவதற்கு 20 ஆண்டுகளாக திட்டமிட்டேன். அதன்பின்னர்தான் எழுதினேன் என்றார் ஹிலாரி மேன்டல். புக்கர் பரிசு, மிகச்சிறந்த ஆங்கில இலக்கியப் படைப்புகளுக்காக வழங்கப்படும் விருதாகும். இவ்விருதின் பரிசுத்தொகை (50 ஆயிரம் பவுண்டுகள்) ரூ. 35 லட்சம் ஆகும். கடந்த ஆண்டு "ஒயிட் டைகர்' என்ற நாவலுக்காக இந்தியாவைச் சேர்ந்த அரவிந்த் அதிகா புக்கர் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக