வெள்ளி, 9 அக்டோபர், 2009

மனிதப் புதைகுழிகள் காரணமாக வெளிநாட்டு உதவியை தவிர்க்கும் இலங்கை

08 October, 2009 by admin

வன்னிப் பரப்பில் மனிதப் புதைகுழிகள் காணப்படுவதால் வெளிநாடுகள் கண்ணிவெடிகளை அகற்ற முன்வருவதை இலங்கை விரும்பவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போதும் மற்றும் கடந்த 3 வருட யுத்தத்தின்போதும் கொல்லப்பட்ட மக்களின் புதைகுழிகள் காணப்படுவதால், வெளிநாடுகள் அங்கு வருவதை இலங்கை அரசு விரும்பவில்லை, எனவும் இதனால் உள்ளூர் உதவிகளுடன் மிகவும் மந்தகதியாக கண்ணிவெடி அகற்றும் வேலை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

கண்ணிவெடிகளை அகற்றிய பின்னரே மக்களை மீள் குடியமர்த்த முடியும் என அறிவித்து வரும் இலங்கை அரசு, இதில் வெளிநாடுகளின் உதவிகளையும் புறக்கணித்து வருகிறது.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 885

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக