ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

பிரசுரித்த திகதி : 22 Aug 2009

இடைத்தங்கல் முகாம்களில் 8000 மாணவர்கள் பாடசாலை செல்ல முடியாத நிலையில் அவதியுறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. வடக்கு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள சுமார் 8000 சிறுவர் சிறுமியர் தரம் ஒன்றுக்கு செல்வதற்கான வயதெல்லையில் காணப்படுவதாக கட்சி தெரிவித்துள்ளது.

வடக்கில் உள்ள 300 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினா சொலமன் சிறில் தெரிவித்துள்ளார். பல்வேறு காரணிகளினால் முகாம்களில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கில் உள்ள 17 பாடசாலைகள் விரைவில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் எனவும், பெரும்பாலும் மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக