வியாழன், 27 ஆகஸ்ட், 2009

கைது செய்யப்பட்டு சிறிலங்கா நாட்டின் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நான்கு மருத்துவர்களும் அடுத்த விசாரணைக்காக நவம்பர் மாதம் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இவர்கள் நால்வரும் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வவுனியாவில் உள்ள புலனாய்வு பிரிவில் சென்று கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

பிணையில் விடுதலையாகியுள்ள இந்த வைத்தியர்கள் இன்று சிறிலங்கா சுகாதார அமைச்சிற்குச் செல்வார்கள் என்றும், சுகாதார அமைச்சு இவர்கள் பணி செய்வதற்கான இடங்கள் குறித்து உரிய பணிப்புரையை வழங்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே வன்னிப் பிரதேசத்தில் இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்றபோது, அரசாங்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் சர்வதேச ஊடகங்களுக்குத் தகவல்களை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் இந்த நால்வரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

எனினும் இவர்களுடன் கைது செய்யப்பட்ட சிவபாலன் என்ற மருத்தவர் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மருத்துவர் வரதராஜா கடந்த 19 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நியுரோ பிளாஸ்டிக் சேர்ஜரிக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது வலது கரத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தன என்பது குறி்ப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக