வியாழன், 21 ஜூலை, 2011

Mano programme cancelled: இலங்கையில் பாடகர் மனோவின் நிகழ்ச்சி நீக்கம்

மனோ குழுவினர்க்குப் பாடவும் மட்டுமல்ல, நன்றாக நடிக்கவும் தெரிந்திருக்கிறது. எனினும் நடிப்பிற்குப் பரிசாக ஓர் ஐந்தாண்டுக் காலம் தமிழ்த்திரையுலகம் இவர்களைப் புறக்கணித்தால் பிறருக்கும் பாடமாக  இருக்கும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

வைகோ, நெடுமாறன் எதிர்ப்பு: 
இலங்கையில் பாடகர் மனோவின் நிகழ்ச்சி ரத்து

First Published : 20 Jul 2011 04:47:01 PM IST


கொழும்பு, ஜூலா.20: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கிளிநொச்சியில் நடக்க இருந்த இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பாடகர் மனோ குழுவினர் உடனடியாக நிகழ்ச்சியை ரத்துச்செய்ததாக இலங்கைத் தமிழ் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.இலங்கையில் கிளிநொச்சியில் உள்ளாட்சி மன்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் அந்த நாட்டின் அதிபர் ராஜபட்ச பங்கேற்கிறார். அந்த பிரச்சாரத்தில் இசை நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த இசை நிகழ்ச்சியில் ராஜபட்சவுடன் பங்கேற்பதற்காக தமிழ் திரைப்பட பின்னணி பாடகர்கள் மனோ, கிரிஷ், சுசித்ரா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.இதனை ஏற்று இன்று காலை மூன்று பேரும் சென்னையில் இருந்து கொழும்பு சென்றடைந்தனர். இந்த நிலையில் மனோ உள்ளிட்ட மூன்று பேரின் பயணத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து மனோ உள்ளிட்ட மூன்று பேரும், ராஜபட்சவுடன் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்ததாக அந்த செய்தி தெரிவிக்கிறது.மேலும், கிளிநொச்சியில் ஒரு ஸ்டேடிய திறப்பு விழாவுக்காக, இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று எங்களைக் கேட்டார்கள். தமிழ் மக்கள் முன்பு தமிழ் பாட்டுகளை பாடலாம் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆனால் இங்கு வந்து பார்க்கும்போது, அந்த நிகழ்ச்சியில் ராஜபட்ச கலந்து கொள்கிறார் என்று தெரிந்தது.நாங்கள் கொழும்பில்தான் இருந்தோம். கிளிநொச்சி போகவில்லை. ஏனென்றால் தமிழ் நெஞ்சங்களுக்கு கஷ்டம் வருவதுபோல் நடந்து கொள்ள மாட்டோம். தெரியாமல் வந்ததால் எங்களை மன்னிக்க வேண்டும் என பாடகர் மனோ தெரிவித்ததாக அந்த இணையதளச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கருத்துகள்

மனோ அவர்கள் செய்தியை அறிந்ததும் எடுத்த முடிவே அவரின் நியாயமான தமிழ் மக்கள் ஆதரவு நிலைப்பாட்டினை காட்டுகிறது. மனோ அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் வாழ்த்துக்கள்...!
By அய்யன்பேட்டை தனசேகரன்
7/20/2011 8:46:00 PM
இப்படியெல்லாம் செய்வதால் ஈழத்தமிழர்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படாது. இலங்கையிலுள்ள எல்லா இனத்தவரோடும் பகைமையின்றி சேர்ந்து வாழ்வதுதான் அங்குள்ள தமிழர்களுக்கு நல்லது. அதை அவர்கள் உணர்ந்துவிட்டார்கள். இலங்கைத் தமிழர்களுகாக தமிழ்நாட்டில் ஒரு வேலையற்ற கும்பல் கூச்சலிடுவது அவர்களுக்கு கேடு விளைவிக்கும்.
By Jevee
7/20/2011 8:18:00 PM
இந்த பயம் எல்லாருக்கும் வேணும் .
By செந்தில்
7/20/2011 7:43:00 PM
நன்றி மனோ குழுவினர்களுக்கு. நிகழ்ச்சியை இரத்து செய்து நாடு திரும்பியதற்கு. தமிழ் மக்களின் உணர்வை மதிபதாக நாம் உங்களை கருதுகிறோம்.
By சுதாகர்
7/20/2011 6:55:00 PM
உண்மையில் திரும்பி வந்தால் உணர்வுள்ளவர்களே!
By பாஞ்சை வேந்தன்
7/20/2011 5:56:00 PM
நல்லது பாடகர் மனோ குழுவுக்கு எங்கள் வாழ்த்துக்கள் பிரித்தானிய தமிழர்கள்
By RATHAN
7/20/2011 5:54:00 PM

புதன், 20 ஜூலை, 2011

Article about kalaignar by nellai kannan: தாத்தாவுக்குத் தெரியாதா?

தாத்தாவுக்குத் தெரியாதா?

First Published : 20 Jul 2011 02:34:14 AM IST


கடைசிவரை மன்மோகன் சிங்கின் முன்னர் பணிந்து தனது மத்திய அமைச்சர் பதவியைவிடாமல் இருப்பதற்கு சகல முயற்சிகளையும் செய்து இறுதியில் அமைச்சர் பதவியிலிருந்து விலகி இருக்கிறார் கருணாநிதியின் பேரன் தயாநிதி மாறன்.  தலித் ராசா இந்த விஷயத்தில் எத்தனை சரியாக நடந்து கொண்டார். பிரதமர் சொன்னவுடனே பதவியை விட்டு விட்டாரே. கருணாநிதி கூறுவதுபோல, தாழ்த்தப்பட்டவர் என்பதால்தான் திமுக தலைமை அவருக்கு ஒரு நீதி, பேரனுக்கு ஒரு நீதி என்று செயல்படுகிறதோ என்று யாரும் கேட்டுவிடக் கூடாது. திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு குடும்பம். அந்தக் குடும்ப விவகாரங்களில் தலையிடும் உரிமை அந்நியருக்குக் கிடையாது என்று கருணாநிதி வகையறாக்கள் வீரவசனம் பேசுவார்கள்.  தயாநிதியை ஊடகங்கள் பழிவாங்கி விட்டனவாம்! கருணாநிதி சொல்லுகிறார். அது மட்டுமல்ல, தயாநிதி மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு இருப்பதே நேற்றுத்தான் அவருக்குத் தெரியுமாம். பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் அண்டப்புளுகன் என்றெல்லாம் அவரைப் பற்றி யாரும் கூறிவிடக் கூடாது. அது தமிழினத் துரோகம் என்று வியாக்யானம் செய்வார் கருணாநிதி.  திமுக அவரோடு நிற்குமாம். கருணாநிதி கூறி இருக்கிறார். தலித் ராசா இன்னும் திமுகவின் கொள்கை பரப்புச் செயலர். அவரோடு திமுக இன்னும் நின்று கொண்டிருப்பதை இந்தியா பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய வழக்கறிஞர்கள் எல்லாம் அவருக்காக நீதிமன்றத்தில் வாதிட்டனரே. கருணாநிதியே நேரில் சென்று தில்லியில் இருந்தல்லவா அந்த தலித்துக்காகக் கண்ணீர் வடித்தார்.  கருணாநிதியின் மனசாட்சியாக இருந்தவர் அவரது மருமகன் முரசொலி மாறன். ""முரசொலி மாறனைப் பார்த்தவுடன் இந்திரா காந்தி அம்மையார் நினைப்பாராம், இப்படி ஒரு அழகான வாலிபனுக்கு கட்டிக்கொடுக்க தனக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே என்று''. இப்படிச் சொன்னவர் மறைந்த நாஞ்சில் மனோகரன். "கருவின் குற்றம் பற்றி நாஞ்சில் மனோகரன் பின்னாளில் சொன்னது தனிக்கதை.  அந்த முரசொலி மாறன் தமிழ் வார இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒரு சைக்கிள் வாங்க எத்தனை கஷ்டப்பட்டார் என்று. மாமா கருணாநிதி மிகவும் சங்கடப்பட்டு ஒரு ஹெர்குலிஸ் சைக்கிள் அறுநூறு ரூபாய்க்கு வாங்கித் தந்தார் என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் மருமகன் முரசொலி மாறன்.  இன்று மாறன் சகோதரர்கள் இருபது தொலைக்காட்சிக்கு சொந்தக்காரர்கள். நாற்பத்தைந்து பண்பலை வானொலிக்குச் சொந்தக்காரர்கள். ஒரு விமான நிறுவனத்துக்கே சொந்தக்காரர்கள். ஒரு டிடிஹெச் நிறுவனத்துக்குச் சொந்தக்காரர்கள். ஆனால், இவர்களிடம் வேலை பார்க்கும் எந்த ஊழியர்க்கும் நல்ல சம்பளம் கிடையாது. அவர்கள் சுயமரியாதையுடன் நடத்தப்படுகிறார்களா என்று நானும் பலரிடம் கேட்டுப் பார்த்துவிட்டேன். பதில் கிடையாது.  ஊடகங்கள் இத்தனை வைத்துக்கொண்டு இவர்கள் மக்களுக்கா சேவை செய்தார்கள். ஜெயலலிதாவையும் அவரது இயக்கத்தையும் அவதூறு செய்வதையே வேலையாகச் செய்தார்களா இல்லையா? அதெல்லாம் கருணாநிதிக்கு நினைவுக்கு வராது.  கே.பி.கந்தசாமி உருவாக்கி வளர்த்த செய்தி ஊடகத்தை அவரது மகனிடம் இருந்து எப்படி மாறன் சகோதரர்கள் வாங்கினார்கள் என்பது இன்றுவரை மர்மம்தான். அந்தத் தினகரன் செய்தித் தாளினாலேதானே கருணாநிதி குடும்பத்திலேயே குழப்பம் வந்தது.  அதிலேதானே இந்தியாவிலேயே மக்கள் மத்தியில் பெரும்பான்மை மதிப்பைப் பெற்றுள்ள அமைச்சர் தயாநிதி மாறன் என்று செய்தி போட்டார்கள். சிதம்பரத்துக்கெல்லாம் வாக்குக் குறைவாக இருந்தது. அழகிரியோ மிக மிகக் கீழே இருந்தார்.  அந்த ஊடகத்தினாலேதானே மதுரையில் மூன்று இளைஞர்கள் எரிக்கப்பட்டார்கள். அந்தக் கருணாநிதியாரின் பேரன் ஊடகம் தமிழகத்தில் ஒரு பெரிய கொலைக் குற்றத்துக்கான காரணமாய் இருந்ததே, அது அவருக்கு வயோதிகம் காரணமாக நினைவுக்கே வராது.  அதன் விளைவுதானே அழகிரி கருணாநிதி குடும்பத்துக்கென்று ஒரு தனி தொலைக்காட்சி ஊடகத்தையே கலைஞர் தொலைக்காட்சி என்ற பெயரில் தொடங்கினர். அந்தத் தொலைக்காட்சிக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்கு வந்தது என்றும் அதற்குக் காரணம் கனிமொழி என்றும் அவரும் இயக்குநர் சரத்குமாரும் சிறையில் இருக்கின்றனர் என்பதாவது நினைவில் இருந்தால் சரி.  அந்தக் கலைஞர் தொலைக்காட்சியிலேதானே தேர்தல் முடிவுகள் அன்று விமர்சனத்துக்காக உட்கார்ந்திருந்தவர்கள் எல்லாம் பத்தே நிமிடத்தில் வெளியேறி மானாட மயிலாட நிகழ்ச்சி ஒளிபரப்பாயிற்று. அதற்கெல்லாம் ஊடகங்கள்தான் காரணமென்றால் அது நியாயமான வார்த்தை.  தமிழ்நாட்டின் தலைசிறந்த ஊடகங்களெல்லாம் இந்தக் குடும்ப அட்டூழியத்தை இந்தக் குடும்பச் சண்டையினால் ஏழை இளைஞர்கள் மூவர் கொடுமையாகக் கொல்லப்பட்டதைக்கூட மறந்துவிட்டு அதே பேரனை மீண்டும் மத்திய அமைச்சராகிய அவலத்தை எழுதின.  கருணாநிதிக்குச் சொந்தமான குங்குமம் வார இதழையும் மாறன் சகோதரர்களே வாங்கிக் கொண்டனர். சன் தொலைக் காட்சியில் பங்கைக் கொடுத்துக் கலைஞர் குடும்பத்தைக் கழற்றியும் விட்டனர் மாறன் சகோதரர்கள்.  அரசுத் தொலைபேசித் துறையின் எத்தனை தொடர்புகள் மாறன் சொந்த நிறுவனத்துக்குப் பயன்பட்டுள்ளன என்பது இப்போது சிபிஐயின் விசாரணையிலிருந்து தெரியவந்திருக்கிறது.  ஏர்செல் நிறுவனம் மிரட்டப்பட்டிருக்கிறது. பதவியையும், அதிகாரத்தையும் காட்டி மிரட்டி, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்த மலேசிய நிறுவனத்துக்கு வலுக்கட்டாயமாக ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மிரட்டி வாங்கிய விவகாரம் இப்போது நீதிமன்றம்வரை வந்துவிட்டது.  பாவிகள் அத்துடன் விட்டார்களா? காந்தி மண்டபத்தை "ஏர்செல்' விளம்பரத்துக்குப் பயன்படுத்திய அநியாயத்தை ஏன் அன்றைய திமுக அரசு தடுக்காமல் வேடிக்கை பார்த்தது என்பது இப்போதல்லவா தெரிகிறது.  சென்னை கிண்டியிலுள்ள காந்தி மண்டபம் "ஏர்செல்' விளம்பர மண்டபமான மர்மத்தின் முடிச்சு மாறன் சகோதரர்களின் முற்றத்தில் அல்லவா போய் முடிகிறது.  கோடிக்கணக்கான பணத்தை வைத்து திருமங்கலம் பார்முலாத் தேர்தலை நடத்தி விடலாம் என்று எல்லாத் தவறுகளையும் மிக மிகத் தைரியமாகச் செய்து விட்டு தேர்தல் ஆணையத்தின் சிறந்த முயற்சியாலும் நல்ல காவல் துறை அதிகாரிகள் சிலராலும் மக்கள் தீர்ப்பின் வேகத்தில் துவண்டு கிடக்கும் இவர்களுக்குச் சட்டம்தான் கடமையைச் செய்யத் தொடங்கியவுடனே கோபம் வருகிறது.  கருணாநிதியார் குடும்பத்தினரைவிட அதிகம் அரசியலை வைத்துச் சம்பாதித்தது மாறன் குடும்பம்தான். இது உலகறிந்த உண்மை.  ஊடகங்களைக் குற்றம் சொல்கிறாரே கருணாநிதி இவரது முரசொலிதான் பெருந்தலைவர் காமராஜர் வாடகைக்குக் குடியிருந்த வீட்டை அவரது சொந்த வீடு என்று போட்டு ஏழைப் பங்காளர் காமராஜரின் வீட்டைப் பாருங்கள் என்று செய்தி போட்டது. பெரியவர் காமராஜர் ஆந்திர வங்கியில் ஒரு கோடிரூபாய் போட்டு வைத்திருக்கிறார் என்று ஓர் உலகப் புளுகைச் செய்தியாகப் போட்டது.  செய்தியாளர்கள் கேட்டபோது காமராஜர் சொன்னார்: ""அவர்கிட்ட அதற்கான செக் புக் இருந்தா வாங்க்கிட்டு வாங்கண்ணே, கையெழுத்துப் போட்டுத் தாரேன் அவரையே வாங்கிக்கிடச் சொல்லுங்க'' என்றார்.  ஊழல் அனைத்தையும் செய்துவிட்டு ஊடகங்களைக் குற்றம் சொல்லிப் பேரனைக் காப்பாற்ற தாத்தா முயற்சி செய்கிறார்.  எத்தனை மாதங்களாக தயாநிதியை பாஜக, கம்யூனிஸ்ட்கள், அஇஅதிமுக, தேமுதிக என்று எல்லா கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மன்மோகன் சிங் கேட்கவில்லை.  இன்று உச்ச நீதிமன்றத்திலேயே குற்றச்சாட்டு பதிவான பிறகு பிரதமர் கட்டாயப்படுத்தித்தானே விலகல் கடிதத்தை வாங்க முடிந்திருக்கிறது.  ஊடகங்கள்தான் தீர்மானிக்கின்றன என்கிறார் கருணாநிதி. இத்தனைநாள் கருணாநிதியின் பேரன்கள் நடத்திய ஊடகங்கள் தீர்மானித்தது உண்மை. இப்போது உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கிறது. ஊடகங்கள் பிரதிபலிக்கின்றன. தாத்தாவுக்கு வயதாகிவிட்டது. பாவம், தெரியவில்லையோ என்னவோ?  எது தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், மறந்தாலும் மறக்காவிட்டாலும் "குறளோவியம்' எழுதிய கருணாநிதிக்குத் "திருக்குறள்' தெரியாமல் இருக்க வழியில்லை. காமத்துப் பால் மட்டுமல்லாமல், அவர் அறத்துப்பாலும், பொருட்பாலும்கூடப் படித்திருக்கிறார்.  ""தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்'' என்பது குறள்.  வள்ளுவருக்குக் கோட்டமும் வள்ளுவருக்குச் சிலைகளும் வைத்த கருணாநிதிக்கு இது எப்படித் தெரியாமல் போகும்?  

இலங்கையைக் கூறுபோட ஒருபோதும் உடன்பட மாட்டேன்: இராச ட்ச

எதை ஒற்றுமை என்கிறார். கல்வி, வேலை வாய்ப்பு, ஆளும் உரிமை முதலான பலவற்றிலும் தொடர்ந்து புறக்கணித்ததையா? அவ்வாறு புறக்கணித்தற்கு எதிராக அமைதி வழிக் குரல் கொடுத்தவர்களைக் கொன்றொழித்ததையா? மண்ணின்  மைந்தர்களான தமிழர்களை  வஞ்சகமாகவும் வன்முறையாகவும் கொன்றொழித்ததையா? அதற்கு எதிராகத் தற்காப்பிற்காக ஆயுதத்தை ஏந்தியவர்களை வன்முறையாளர்களாகக் காட்டிஅவர்களது குடும்பத்தினரை ஈவு இரக்கமின்றி அழித்ததையா?
கொத்துக் குண்டுகளாலும் எரிகணைகளாலும் தமிழ் மக்களை அழித்ததையா?  அழிவில் தப்பியவர்களை மிகவும் கொடூரமான முறையில் வதை செய்து உயிர் பறித்ததையா? இந்தப் போலி ஒற்றுமை வன்முறை ஆட்சியாளர்களின் வெற்றுரை என்பதை உலகம் புரிந்து கொண்டு வருகிறது. விரைவில்  தமிழ் மக்கள் தமிழ் ஈழத்தில் ஒற்றுமையுடன் தனியாட்சி செய்வர். அப்பொழுது பக்சேக்கள் சிறையில் பிற கொலைகாரர்களுடன் ஒற்றுமையாக வாழட்டும்! வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கையை கூறுபோட ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்: ராஜபட்ச

First Published : 19 Jul 2011 04:42:32 PM IST

Last Updated : 19 Jul 2011 05:03:50 PM IST

கொழும்பு, ஜூலை.19: இலங்கையை துண்டு துண்டாக கூறு போடுவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். இது எங்கள் நாடு. நாங்கள் பிறந்த நாடு. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழும் நாடு என்று அந்த நாட்டின் அதிபர் ராஜபட்ச தெரிவித்தார்.யாழ்ப்பாணம், கோப்பாய், நாவலர் மகா வித்யாலய மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு, ராஜபட்ச தமிழில் உரையாற்றியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவரது உரையில் மேலும் தெரிவித்ததாவது, 'நான் அதிக பணம் செலவு செய்வது வட மாகாணத்துக்கே. எனது ஒரே இலக்கு வட மாகாணத்தின் அபிவிருத்தியே. உங்கள் பிரதேசம் முக்கியமாக கல்வியில் மீண்டும் சிறப்பாக வருவதற்காக நாங்கள் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.இனவாத அரசியல் இனி வேண்டாம். இனம், குலம் பார்த்து நான் வேலை செய்வதில்லை. ஏன் என்றால் நான் இந்த நாட்டின் தலைவன். நீங்கள் தவறான வழியில் வழிநடத்தப்படுகிறீர்கள் என நான் அறிகிறேன்.இனிமேல் இந்த நாட்டில் பயங்கரவாதம் வேண்டாம். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி இனி நீங்கள் யோசியுங்கள். நாம் அனைவரும் ஒரு கொடியின் கீழ் ஒன்றிணைவதன் மூலம் வளமான எதிர்காலத்தை அனுபவிக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.
கருத்துகள்

புலி இல்லை என்றவுடன் நாய்கள் நரிகள் எல்லாம் சென்று யாழ்ப்பாணத்தில் வீரவசனம் பேசி வருகிறது. எவளவு நாளைக்கு என்று பார்போம்.
By சுதாகர்
7/19/2011 9:31:00 PM
நாடு என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல,அதில் வாழும் மக்களும் சேர்ந்து தான்,அம்மக்களின் உரிமைகளை பற்றி கவலைப்படாமல் வெறு நிலப்பரப்பை துணடாட அனுமதிக்கமாட்டேன் என்று முழங்குவது மடமை,இலங்கையில் வாழும் இருப்பெரும் இனங்கள் சிங்களம்,தமிழ்,உண்மையில் இலங்கை நாட்டை பற்றி ராஜபக்சே கவலைபடுகிறவர் என்றால் இலங்கையில் வாழும் தமிழ்ர்,சிங்களவருக்கு இணையாக எல்லா உரிமைகளையும் பெற்று வாழ வகை செய்யவேண்டும்,அப்போது தான் அவர் ஒரு ஒன்றுபட்ட இலங்கையின் அதிபராக சிந்திக்கிறார் என்று அர்த்தம்,ஆனால் ராஜபக்சே வெறும் சிங்கள அதிபராக இருக்கிறார்,நாடு என்பது நிலம் அல்ல,அதில் வாழும் உயர்கள் சம்பந்தப்பட்டது என்பதை அவர் உணரவேண்டும்,
By venkatesh
7/19/2011 9:17:00 PM
1.lanka gave fuel to pak war ships during 1971 war to attack india/indian. 2. lanka killed many civilian in the name of war
By krishna
7/19/2011 6:11:00 PM
ஒரு விதத்தில் ராஜபக்ஷே வை பாராட்ட வேண்டும் போல இருக்கிறது. இந்த துணிவு மட்டும் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் காரர்களிடம் இருந்து இருந்தால், காஷ்மீரில் இருந்து பண்டிட் இன மக்கள் சொந்த நாட்டில் அகதியாக வாழும் நிலை வந்து இருக்காது. காஷ்மீருக்கு ஒரு விடிவு காலம் மட்டும் அல்ல, பாகிஸ்தானின் தீவிரவாத அட்டகாசத்திற்கும் ஒரு முடிவு கட்ட பட்டி இருக்கும்..
By Shriram
7/19/2011 5:47:00 PM
ஒரு விதத்தில் ராஜபக்ஷே வை பாராட்ட வேண்டும் போல இருக்கிறது. இந்த துணிவு மட்டும் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் காரர்களிடம் இருந்து இருந்தால், காஷ்மீரில் இருந்து பண்டிட் இன மக்கள் சொந்த நாட்டில் அகதியாக வாழும் நிலை வந்து இருக்காது. காஷ்மீருக்கு ஒரு விடிவு காலம் மட்டும் அல்ல, பாகிஸ்தானின் தீவிரவாத அட்டகாசத்திற்கும் ஒரு முடிவு கட்ட பட்டி இருக்கும்..
By Shriram
7/19/2011 5:47:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 19 ஜூலை, 2011

சமச்சீர் கல்வி தீர்ப்பு: கல்வியாளர்கள் வரவேற்பு

சமச்சீர் கல்வி தீர்ப்பு: கல்வியாளர்கள் வரவேற்பு

First Published : 19 Jul 2011 03:53:55 AM IST


சென்னை, ஜூலை 18: சமச்சீர் கல்வியை இந்த ஆண்டிலிருந்தே அமல்படுத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.  கல்வியாளர் எஸ்.ராஜகோபாலன்: இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்க தீர்ப்பு. அரசு உடனடியாக இதைச் செயல்படுத்த வேண்டும். சமச்சீர் கல்வியில் பொதுப்பாடத்திட்டம் ஒரு பகுதிதான்.  தொடக்கப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர், ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புதல், அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பரிந்துரைகள் சமச்சீர் கல்விக்காக செய்யப்பட்டுள்ளன. இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, பிற பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.  பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளரும், கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு: இந்தத் தீர்ப்பு மாணவர்களை மகிழ்விக்கும் தீர்ப்பு. பொதுப்பாடத்திட்டத்தை உருவாக்கிய ஆசிரியர்கள், வல்லுநர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் தீர்ப்பு. இது அனைத்து மாணவர்களும் உயர்வு, தாழ்வு இல்லாமல் சமநிலையில் கல்வி கற்கக் கூடிய சூழலை ஏற்படுத்தும்.  தமிழ்நாடு மாணவர், பெற்றோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் அருமைநாதன்: தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் இந்தத் தீர்ப்பை கொண்டாடுகின்றனர். மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.  கல்வியாளர் மற்றும் முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன்: சமச்சீர் கல்வி தொடர்பாக அரசுக்கு எங்கள் குழு 109 பரிந்துரைகளைச் செய்திருந்தது. அந்தப் பரிந்துரைகள் மீது இப்போதைய அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும். மேலும் இந்தப் பரிந்துரைகள் தொடர்பாக செயல்திட்டம் வகுத்துச் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்.  தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி சத்தியமூர்த்தி: சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும். கடந்த 45 நாள்களாக பாடப்புத்தகங்கள் இல்லாததால், ஆசிரியர்கள், மாணவர்களிடம் மனச்சோர்வு இருக்கிறது. பெற்றோர்களுக்கு மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. இனியும் தாமதம் செய்யாமல் சமச்சீர் கல்வியை அமல் செய்ய வேண்டும்.  பாடத்திட்டம் முடிவு ஆகாமல் இருந்ததால், கல்வித் துறை சார்பான பதவி உயர்வு, இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் தேக்கமடைந்துள்ளன. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளன.  தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் விஜயன்: இந்தத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. தரமான கல்வி வழங்குவதற்காகவே மெட்ரிக் பாடத்திட்டத்தை தனியார் பள்ளிகள் நடத்திவருகின்றன என்றார் அவர்.

நீதிக்குத் தலை வணங்க வேண்டும்: அரசுக்குத் தங்கபாலு வலியுறுத்தல்

நீதிக்குத் தலை வணங்க வேண்டும்: அரசுக்குத் தங்கபாலு வலியுறுத்தல்

First Published : 19 Jul 2011 04:44:13 AM IST

Last Updated : 19 Jul 2011 05:33:32 AM IST

சென்னை, ஜூலை 18: சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்குத் தமிழக அரசு தலை வணங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு வலியுறுத்தியுள்ளார்.  இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல் செய்ய வேண்டும், அதற்கான புத்தகங்களை இந்த மாதம் 22-ம் தேதிக்குள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற தீர்ப்பு மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மகிழ்ச்சி தருவதாக உள்ளது. சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்யவில்லை என்றும் குறைகளை நீக்கி அடுத்த ஆண்டு அமல் செய்வோம் என்றும்தான் உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு கூறியுள்ளது.  எனவே உயர் நீதிமன்றத்தின் இத் தீர்ப்பு அரசுக்கு வெற்றியோ தோல்வியோ அல்ல. எனவே, கெüரவம் பார்க்காமல் சமச்சீர் கல்வித் திட்டத்தை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தங்கபாலு கூறியுள்ளார்.  மேல்முறையீடு கூடாது - ராமதாஸ்: சமச்சீர் கல்வி வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  அவரது அறிக்கை: சமச்சீர் கல்விக்குத் தடை விதிக்க முடியாது என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. மீண்டும் மேல்முறையீடு செய்வதால் எந்தப் பயனும் இல்லை.  அரசின் பிடிவாதப் போக்கால் கடந்த 2 மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்குச் சென்றும் பாடம் படிக்க முடியாமல் உள்ளனர். முதல் பருவத் தேர்வும் நடக்கவில்லை.  செப்டம்பரில் காலாண்டுத் தேர்வு நடத்த வேண்டுமானால் இனியும் தாமதமில்லாமல் பாடங்களைத் தொடங்கியாக வேண்டும்.  எனவே, உயர் நீதிமன்ற அறிவுரைப்படி சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக அரசு செயல்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.  திருமாவளவன்: சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் வலியுறுத்தியுள்ளார்.  மேல்முறையீடு செய்யத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது மாணவர்களின் கல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்படும் பிடிவாதப் போக்கை வெளிப்படுத்துகிறது.  மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பெருந்தன்மையோடு இப் பிரச்னையை அணுக வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேல்முறையீடு வேண்டாம்: இடதுசாரிகள் கோரிக்கை

மேல்முறையீடு வேண்டாம்: இடதுசாரிகள் கோரிக்கை

First Published : 19 Jul 2011 04:41:06 AM IST


சென்னை, ஜூலை 18: சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என மார்க்சிஸ்ட் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.  இதுதொடர்பாக தமிழ்நாடு மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:  சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதேசமயம் தீர்ப்பு குறித்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவிக்கையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று கூறியுள்ளதாகத் தெரிகிறது. பள்ளிகள் திறந்து ஒரு மாத காலம் கடந்துவிட்ட நிலையில், மேலும் காலம் தாழ்த்துவது மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும், நடைமுறைச் சிக்கலையும் ஏற்படுத்தும்.  எனவே மேல்முறையீடு செய்யும் எண்ணத்தைக் கைவிட்டு உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று சமச்சீர் கல்வித் திட்டத்தின் முக்கிய அம்சமான பொதுப்பாடத் திட்டத்தை இந்தக் கல்வி ஆண்டிலேயே அமல் படுத்த வேண்டும் என ராமகிருஷ்ணன் கோரியுள்ளார்.  இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா. பாண்டியன்: சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது. தமிழக அரசும், அரசு வழக்கறிஞர்கள் மூலமாக சமச்சீர் கல்விக் கொள்கைதான் தங்கள் நிலை என நீதிமன்றத்தில் உறுதிப் படுத்தியுள்ளது.  இந்த தீர்ப்பு தமிழக அரசின் நடவடிக்கைகளைத் தடுப்பதாகவோ, குறை காண்பதாகவோ எந்த வாசகமும் இல்லாத நிலையில் மேல் முறையீடு தவிர்க்கப்பட வேண்டும் என்ற மக்களின் உணர்வை நாங்கள் வற்புறுத்துகிறோம் என பாண்டியன் கூறியுள்ளார். 

சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்: வைகோ

சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்: வைகோ

First Published : 19 Jul 2011 11:24:05 AM IST


சென்னை, ஜூலை.19: தவறுக்கு மேல் தவறு செய்து நாட்களை வீணடித்து மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளிவிடாமல், உடனடியாக சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று மதிமுக பொதுச்செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திருத்த சட்டத்தை ரத்துசெய்து, சமச்சீர் கல்வி முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வரவேற்கத்தக்க சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. தமிழக அரசின் வீண் பிடிவாதத்தால் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்க வேண்டிய தேதியில் திறக்கப்படாமல்  பதினைந்து நாட்கள் தள்ளிப்போனது. பின்னர் திறந்து ஒன்றரை மாதங்கள் ஆகியும் பள்ளி மாணவர்கள் எந்தப் பாடங்களைப் படிப்பது என்ற தவிப்பும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. தமிழக வரலாற்றிலேயே இதுபோன்ற ஒரு சூழல் கல்வித் துறையில் இதுவரை ஏற்பட்டதில்லை. எனவேதான், உயர்நீதிமன்றம் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வரும் 22 ஆம் தேதிக்குள் சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும், ஆசிரியர்கள் பாடங்களை தொடங்க வேண்டும் என்றும் குறைபாடுகளை களைந்து புதிய பாடங்களை கூடுதல் புத்தகங்களாக அச்சிட்டு மூன்று மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது.ஆனால், இதனை ஏற்காமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ள தமிழக அரசின் போக்கை வன்மையாக கண்டிப்பதுடன் தவறுக்கு மேல் தவறு செய்து நாட்களை வீணடித்து மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளிவிடாமல், உடனடியாக சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேல்முறையீடு வேண்டாம்: நெடுமாறன் வேண்டுகோள்

மேல்முறையீடு வேண்டாம்: நெடுமாறன் வேண்டுகோள்

First Published : 19 Jul 2011 01:06:19 PM IST


சென்னை, ஜூலை.19: சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வதால் ஏற்படும் காலதாமதம் மாணவர்களின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 10- ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டிலிருந்தே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய தமிழக அரசு செய்துள்ள முடிவு தவறானது மட்டுமல்ல, பின்னோக்கி அடி  எடுத்து வைப்பதாகும். ஏற்கெனவே 1 மற்றும் 6 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவதின் மூலம் ஏற்படும் காலதாமதம் மாணவர்களின் எதிர்காலத்தைப் பெரிதும் பாதிக்கும்.2006- ம் ஆண்டிலிருந்து முனைவர் முத்துக்குமரன் குழு சமச்சீர் கல்வியை அமல்படுத்த கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், நான்காண்டு காலத்திற்குப் பிறகே சமச்சீர் கல்வி முறை அமலுக்கு வந்துள்ளது. எனவே அவசர கதியில் இது அறிமுகப்படுத்தப்பட்டது என்று மெட்ரிக் பள்ளிகள் கூறுவது உண்மைக்கு மாறானதாகும்.பாடப்புத்தகங்களில் உள்ள ஆட்சேபனைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டு சேர்க்க வேண்டிய பகுதிகளைச் சேர்த்து அவற்றை கூடுதல் தொகுப்பாக மாணவர்களுக்கு விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதில் எவ்விதத் தாமதமும் கூடாது. பெற்றோரும் கல்வியாளர்களும் நீண்ட காலமாக நடத்திய போராட்டத்தின் விளைவாகவே சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டுவரப்பட்டது என்பதை நினைவில் கொண்டு செயல்படுமாறு தமிழக அரசை வேண்டிக்கொள்வதாக நெடுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கேட்பது குதிரை; கிடைத்தது கழுதை: விசயகாந்த்

கேட்பது குதிரை; கிடைத்தது கழுதை: விஜயகாந்த்

First Published : 19 Jul 2011 12:56:00 PM IST


சென்னை, ஜூலை.19: நாம் கேட்பது குதிரையானாலும் கிடைத்திருப்பது கழுதைதான் என்றாலும், குதிரை கிடைக்கும் வரை கழுதையை பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்வது தவறல்ல என்று தற்போதைய சமச்சீர் கல்வி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு ஏற்கனவே கொண்டு வந்த பொதுப்பாடத் திட்டத்தை அப்படியே செயல்படுத்த வேண்டுமென்றும், அதை இன்றைய அரசு திருத்தம் கொண்டு வந்ததை ஏற்க மறுத்தும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் பாடத்திட்டத்தில் நீக்க வேண்டியவற்றை நீக்கியும், சேர்க்க வேண்டியவற்றை சேர்த்தும் மூன்று மாத காலத்திற்குள் ஒரு துணை பாடப் புத்தகத்தை உருவாக்கவும் இந்தத் தீர்ப்பு வழி வகை செய்துள்ளது. இந்த கல்வி ஆண்டு தொடங்கி ஏற்கனவே இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இன்னும் பாடப் புத்தகங்கள் கிடைக்கவில்லையே என்ற கவலையால் பீடிக்கப்பட்டுள்ளனர். எந்த பாடப் புத்தகத்தையாவது வைத்தால் போதும் என்ற நிலையே அவர்களிடம் உள்ளது. இந்த சூழ்நிலையில் முந்தைய தி.மு.க அரசு கொண்டு வந்த பாடத் திட்டத்தில் உள்ள கருணாநிதி குடும்பத்தின் சுய புராணம் பாடும் பகுதிகளை நீக்கி, தரமுள்ள புதிய பாடத் திட்டங்களை கல்வி நிபுணர்களின் குழுவின் மூலம் சேர்த்து பாடத் திட்டத்தின் தரத்தை தமிழக அரசு உயர்த்த வேண்டும்.தமிழகத்தில் தற்போதைய கல்வியின் தரம் வெகுவாக குறைந்துள்ளது என்பதும், முந்தைய தி.மு.க அரசு கொண்டு வந்த பொதுப் பாடத்திட்ட சட்டம் இந்த தரத்தை மேலும் குறைக்கவே வகை செய்துள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இன்றைய மாணவர்கள்தான் நாளைய நாட்டின் எதிர்காலம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஆனால் அந்த மாணவர்களுக்கு சரியான கல்வி கிடைக்க தமிழக அரசு ஏற்கனவே நிறைவேற்றிய பொதுப் பாடத்திட்ட சட்டம் தீர்வாகாது. கல்வித் துறையில் கடந்த ஆட்சியால் ஏற்பட்டுள்ள சீர்கேட்டினை நிரந்தரமாகக் களைய வேண்டுமானால், அது குறித்து அனைத்து தரப்பினரும், குறிப்பாக கல்வி நிபுணர்களும், கலந்து கருத்தாய்வு செய்வது அவசியம். ஆகவே கல்வி சம்பந்தமாக அனைத்து விவரங்களையும் திரட்டி ஒரு வெள்ளை அறிக்கை கொண்டு வரவேண்டும் என்றும், அதில் அனைத்து தரப்பினரின் கருத்துகளை திரட்டி சட்டப் பேரவையில் அனைத்து கட்சியினர்களையும் கலந்து ஒரு விரிவான கல்வி சீர்திருத்த சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.இதற்கிடையில் நாம் கேட்பது குதிரையானாலும் கிடைத்திருப்பது கழுதைதான் என்றாலும், குதிரை கிடைக்கும் வரை கழுதையை பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்வது தவறல்ல. தேவை மற்றும் உடனடித் தேவை என்று இருப்பதைப் போல, நமக்கு தேவை சமச்சீர் கல்வி என்றாலும் உடனடித் தேவையாக இருப்பது தற்போது திறந்துள்ள பள்ளிக் கூடங்களை பாடப் புத்தகங்கள் தந்து நடத்துவதுதான். ஆகவே உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று உடனடியாக பள்ளிக் கூடங்கள் இயங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆடைகளைக் களைந்து மக்களைக் கொன்றவர்கள் இன்று வேட்டி, சேலை தருகிறார்கள்: மாவை சேனாதிராசா

ஈழத்தமிழர்களுக்கான இந்த உரையைச் சிங்களத்திற்கு வால் பிடிப்பவர்களும் உணர வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


ஆடைகளை களைந்து மக்களை கொன்றவர்கள் இன்று வேட்டி, சேலை தருகிறார்கள்: மாவை சேனாதிராசா

First Published : 19 Jul 2011 11:45:07 AM IST

Last Updated : 19 Jul 2011 11:50:54 AM IST

கொழும்பு, ஜூலை.19: இலங்கை வன்னியில் எமது இளைஞர்களின், யுவதிகளின் ஆடைகளைக் களைந்து கண்களையும் கைகளையும் கட்டிச் சுட்டுக்கொன்றவர்களே இன்று தேர்தலுக்காக வந்து எம்மக்களுக்கு இலவச வேட்டியும் சேலையும் கொடுக்கிறார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கூறினார்.உள்ளாட்சி தேர்தலை ஒட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டம் கிளிநொச்சியில் நடைபெற்றது.ராணுவத்தினரின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் கடுமையாக இருப்பதாகக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்து வந்த நிலையில், அந்த பிரசாரக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான வன்னி மக்கள் கலந்துகொண்டனர்.தன் கணவனைக் கொன்றவன் மீது கோபமாகி நின்ற கண்ணகி சினங்கொண்டு மதுரையை எரித்தாள் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அதேபோன்று இங்கும் தமது உறவுகளைப் பறிகொடுத்த தாய்மார்களும் பெண்களும் கண்ணீரும் கம்பலையுமாக நிற்கிறார்கள். காணாமல் போனவர்களின் உறவினர்கள் செய்வதறியாது நிற்கிறார்கள். அவர்கள் தமக்கு நீதி கேட்டு இந்த அரசுக்கு இந்தத் தேர்தலில் தக்க பதிலடியை வழங்குவார்கள் என்று அந்தக் கூட்டத்தில் பேசிய மாவை சேனாதிராசா தெரிவித்தார்.போரில் வெற்றி பெற்றதாகக் கூறும் அரசு இந்தத் தேர்தலின் மூலம் ஜனநாயகத்திலும் தான் வெற்றி பெற்றதாகக் காட்ட முயற்சிக்கிறது என்று கூறிய அவர், "தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள் என்பதை உலகமே இன்று ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், அரசுக்கு ஆலவட்டம் பிடிக்கும் அமைச்சர் மட்டும் இறுதிப் போரில் எவரும் கொல்லப்படவில்லை என்று கூறிக்கொண்டு உங்கள் முன் வாக்குக் கேட்டு வந்திருக்கிறார். இவ்வாறானவர்களை தூக்கி எறிய வேண்டிய வரலாற்றுக் கடமையை நாம் சொல்லாமலேயே நீங்கள் செய்வீர்கள் என்பது எமக்குத் தெரியும்'' என்றும் கூறினார்.