புதன், 20 ஜூலை, 2011

இலங்கையைக் கூறுபோட ஒருபோதும் உடன்பட மாட்டேன்: இராச ட்ச

எதை ஒற்றுமை என்கிறார். கல்வி, வேலை வாய்ப்பு, ஆளும் உரிமை முதலான பலவற்றிலும் தொடர்ந்து புறக்கணித்ததையா? அவ்வாறு புறக்கணித்தற்கு எதிராக அமைதி வழிக் குரல் கொடுத்தவர்களைக் கொன்றொழித்ததையா? மண்ணின்  மைந்தர்களான தமிழர்களை  வஞ்சகமாகவும் வன்முறையாகவும் கொன்றொழித்ததையா? அதற்கு எதிராகத் தற்காப்பிற்காக ஆயுதத்தை ஏந்தியவர்களை வன்முறையாளர்களாகக் காட்டிஅவர்களது குடும்பத்தினரை ஈவு இரக்கமின்றி அழித்ததையா?
கொத்துக் குண்டுகளாலும் எரிகணைகளாலும் தமிழ் மக்களை அழித்ததையா?  அழிவில் தப்பியவர்களை மிகவும் கொடூரமான முறையில் வதை செய்து உயிர் பறித்ததையா? இந்தப் போலி ஒற்றுமை வன்முறை ஆட்சியாளர்களின் வெற்றுரை என்பதை உலகம் புரிந்து கொண்டு வருகிறது. விரைவில்  தமிழ் மக்கள் தமிழ் ஈழத்தில் ஒற்றுமையுடன் தனியாட்சி செய்வர். அப்பொழுது பக்சேக்கள் சிறையில் பிற கொலைகாரர்களுடன் ஒற்றுமையாக வாழட்டும்! வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கையை கூறுபோட ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்: ராஜபட்ச

First Published : 19 Jul 2011 04:42:32 PM IST

Last Updated : 19 Jul 2011 05:03:50 PM IST

கொழும்பு, ஜூலை.19: இலங்கையை துண்டு துண்டாக கூறு போடுவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். இது எங்கள் நாடு. நாங்கள் பிறந்த நாடு. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழும் நாடு என்று அந்த நாட்டின் அதிபர் ராஜபட்ச தெரிவித்தார்.யாழ்ப்பாணம், கோப்பாய், நாவலர் மகா வித்யாலய மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு, ராஜபட்ச தமிழில் உரையாற்றியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவரது உரையில் மேலும் தெரிவித்ததாவது, 'நான் அதிக பணம் செலவு செய்வது வட மாகாணத்துக்கே. எனது ஒரே இலக்கு வட மாகாணத்தின் அபிவிருத்தியே. உங்கள் பிரதேசம் முக்கியமாக கல்வியில் மீண்டும் சிறப்பாக வருவதற்காக நாங்கள் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.இனவாத அரசியல் இனி வேண்டாம். இனம், குலம் பார்த்து நான் வேலை செய்வதில்லை. ஏன் என்றால் நான் இந்த நாட்டின் தலைவன். நீங்கள் தவறான வழியில் வழிநடத்தப்படுகிறீர்கள் என நான் அறிகிறேன்.இனிமேல் இந்த நாட்டில் பயங்கரவாதம் வேண்டாம். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி இனி நீங்கள் யோசியுங்கள். நாம் அனைவரும் ஒரு கொடியின் கீழ் ஒன்றிணைவதன் மூலம் வளமான எதிர்காலத்தை அனுபவிக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.
கருத்துகள்

புலி இல்லை என்றவுடன் நாய்கள் நரிகள் எல்லாம் சென்று யாழ்ப்பாணத்தில் வீரவசனம் பேசி வருகிறது. எவளவு நாளைக்கு என்று பார்போம்.
By சுதாகர்
7/19/2011 9:31:00 PM
நாடு என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல,அதில் வாழும் மக்களும் சேர்ந்து தான்,அம்மக்களின் உரிமைகளை பற்றி கவலைப்படாமல் வெறு நிலப்பரப்பை துணடாட அனுமதிக்கமாட்டேன் என்று முழங்குவது மடமை,இலங்கையில் வாழும் இருப்பெரும் இனங்கள் சிங்களம்,தமிழ்,உண்மையில் இலங்கை நாட்டை பற்றி ராஜபக்சே கவலைபடுகிறவர் என்றால் இலங்கையில் வாழும் தமிழ்ர்,சிங்களவருக்கு இணையாக எல்லா உரிமைகளையும் பெற்று வாழ வகை செய்யவேண்டும்,அப்போது தான் அவர் ஒரு ஒன்றுபட்ட இலங்கையின் அதிபராக சிந்திக்கிறார் என்று அர்த்தம்,ஆனால் ராஜபக்சே வெறும் சிங்கள அதிபராக இருக்கிறார்,நாடு என்பது நிலம் அல்ல,அதில் வாழும் உயர்கள் சம்பந்தப்பட்டது என்பதை அவர் உணரவேண்டும்,
By venkatesh
7/19/2011 9:17:00 PM
1.lanka gave fuel to pak war ships during 1971 war to attack india/indian. 2. lanka killed many civilian in the name of war
By krishna
7/19/2011 6:11:00 PM
ஒரு விதத்தில் ராஜபக்ஷே வை பாராட்ட வேண்டும் போல இருக்கிறது. இந்த துணிவு மட்டும் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் காரர்களிடம் இருந்து இருந்தால், காஷ்மீரில் இருந்து பண்டிட் இன மக்கள் சொந்த நாட்டில் அகதியாக வாழும் நிலை வந்து இருக்காது. காஷ்மீருக்கு ஒரு விடிவு காலம் மட்டும் அல்ல, பாகிஸ்தானின் தீவிரவாத அட்டகாசத்திற்கும் ஒரு முடிவு கட்ட பட்டி இருக்கும்..
By Shriram
7/19/2011 5:47:00 PM
ஒரு விதத்தில் ராஜபக்ஷே வை பாராட்ட வேண்டும் போல இருக்கிறது. இந்த துணிவு மட்டும் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் காரர்களிடம் இருந்து இருந்தால், காஷ்மீரில் இருந்து பண்டிட் இன மக்கள் சொந்த நாட்டில் அகதியாக வாழும் நிலை வந்து இருக்காது. காஷ்மீருக்கு ஒரு விடிவு காலம் மட்டும் அல்ல, பாகிஸ்தானின் தீவிரவாத அட்டகாசத்திற்கும் ஒரு முடிவு கட்ட பட்டி இருக்கும்..
By Shriram
7/19/2011 5:47:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக