வியாழன், 30 டிசம்பர், 2010

karuna informed wrong informations: கருணா தவறான கருத்துகளை வெளியிடுகிறார்: எரிக் சொல்‌கெய்ம்

கைக்கூலியின் இலக்கணததிற்கேற்ப நடந்து கொள்கிறார் கருணா. ஒரு காலத்தில் தான் நேசித்த தன் நாட்டு தன்  இன மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து வஞ்சகம் புரிவதையே வாழ்க்கையாகக் கொண்டு விட்டார்.கொள்கையில் சறுக்கல்  இருக்கலாம். ஆனால், நாட்டுப் பகைவனாக மாறும் அளவிற்குக் கொள்கை முரணை உண்டாக்கிக்  கொண்டு எச்சில் சோற்றுக்காக உயிர்வாழக்கூடாது என்பதைப் புரிந்து கொள்ளவில்லையே! ஒரு வேளை அவர் அதனைப் புரிந்து கொள்ளளும் பொழுது சிங்களர்களால் அவர் உயிர் பறிக்கபபடும்.  இவண் இலக்குவனார் திருவள்ளுவன்
கருணா தவறான கருத்துகளை வெளியிடுகிறார்: எரிக் சொல்ஹெய்ம்


கொழும்பு, டிச.29- அரசியல் காரணங்களுக்காக இலங்கை அமைச்சர் கருணா அடிக்கடி தவறான கருத்துகளை வெளியிடுகிறார் என்று நார்வே அமைச்சரும் முன்னாள் சமாதானத் தூதருமான எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கருணா அளித்துள்ள சாட்சியத்தில் தெரிவித்துள்ள கருத்துகள் அனைத்தும் முழுப்பொய் என்றும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருப்பதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது."விடுதலைப் புலிகளுக்கும் நார்வே அரசுக்கும் இடையிலான தொடர்பு குறித்து கருணா தெரிவித்துள்ள கருத்துகள் பொய்யானவை. அவர் கூறுவது போல் போர்நிறுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் வாங்குவதற்கு நார்வே அரசு நிதியுதவி எதுவும் செய்யவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கூறுவதெல்லாம் அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்துகளாக உள்ளன. அவற்றில் எள் அளவும் உண்மையில்லை." என்று எரி்க் சொல்ஹெய்ம் கூறியிருப்பதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 29 டிசம்பர், 2010

sanga palagai: ilakkuvanar 100 aandu : Thiruvalluvan and Thozhar Thiyagu



sangapalagai: thamizhe muula mudhan mozhi: Thiruvalluvan and thozhar thiyagu

which is true? which is drama?

இதில் எது உண்மை…? எது நாடகம்…?

indiaslmp003
[காணொளி&படங்கள்] இங்கே இருபதிவுகளை கீழே இணைத்துள்ளோம். இதில் எது உண்மை எது நாடகம் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்…







024
சிறீலங்காவுக்கு நீங்க எப்படியோ இந்தியாவுக்கு நான் அப்படி... உங்க கட்சிப்பேருல ஈழம்னு வைச்சி ஈழத்தை அழிச்சீங்க எங்க கட்சிப்பேருல விடுதலைனு வைச்சி விடுதலை இல்லாமல் செய்கிறேன்
பரிசுகளை வாங்கச்சொல்லி கட்டாயப்படுத்துறாங்க ஊருக்கு போனதும் என்ன நாடகம் போடலாம்னு தம்பிங்ககிட்ட கேட்கனும் கண்டிப்பா
வணக்கம் அய்யா உங்களை தமிழ்நாட்டு மேடைகளில் ரொம்ப திட்டி பேசிட்டேன், இனியும் அப்படி பேச வேண்டி இருக்கும். இதையெல்லாம் மனசுல வைச்சுக்காம பொறுத்துக்குங்க
தமிழகத்தமிழர்களை எழுச்சியடையாமல் தடுத்துவிட்டதற்கு அன்பளிப்புங்ககளா இது...?

விளங்காமல் முழிக்கும் ஈழத்தமிழன்

coastal guard: கடலோரக் காவல் படை

என்ன நினைத்துக கொண்டுள்ளார் தா.பா? தமிழக  மக்களைக் காப்பற்றவா கடலோரக் காவல்படை உள்ளது? தமிழக மீனவர்களைச் சிங்களப் படை எந்தத் தொந்தரவுமின்றிக் கொன்றொழிக்கப் பாதுகாப்பு தருவதற்குத்தானே உள்ளது! அவ்வாறிருக்க அதன் மீது குற்றம் சுமத்தலாமா? 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

மீட்புப் பணியில் ஈடுபடாத கடலோரக் காவல் படை: தா. பாண்டியன் புகார்

First Published : 28 Dec 2010 03:48:25 AM IST

Last Updated : 28 Dec 2010 05:41:50 AM IST

சென்னை, டிச. 27: ராமேஸ்வரம் பகுதியில் நடந்த படகு விபத்தில் சிக்கியவர்களை மீட்க கடலோரக் காவல் படை பயன்படுத்தப்படவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.  இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:  ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த சில குடும்பங்கள் அருகேயுள்ள தீவுக்குச் சுற்றுலா சென்றபோது, படகு கவிழ்ந்து 16 பேர் வரை உயிரிழந்ததாகத் தெரிகிறது. இதில் மீட்புப் பணிகளில் கடலோர காவல் படை பயன்படுத்தப்படவில்லை. இது மிகவும் வருத்தத்துக்குரியது. பொதுமக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், கட்சியின் பகுதி செயலாளர் முபாரக் தலைமையில் தனிப் படகில் சென்று 5 பேரைக் காப்பாற்றியுள்ளனர்.  கடலில் முழ்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு வந்தவுடன், கரையில் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு ஏற்பாடு செய்யப்படவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய  நிவாரணம் வழங்கவும், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கவும் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.  விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தா. பாண்டியன் கூறியுள்ளார்.


congress 126: காங்கிரசுக் கட்சி 126

நாட்டு மக்கள் நலனுக்காகப் பாடுபட்டு நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட காங்.கட்சி எப்போதோ அழிந்து விட்டது. மக்களை அழிக்கும் காங்.கட்சிதான் இப்போது உள்ளது. இப்போதைய காங்.கட்சி தொலைந்தால் மக்கள் வாழ்வில்  அமைதி ஏற்படும். ஊழல் பணம் திருப்பி விடப்பட்டு வளம் ஏற்படும். இதனை அக்கட்சிததலைவர்களே செய்து முடிப்பர். விரைவில் நாடு நலம் பெறும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

காங்கிரஸ் கட்சிக்கு வயது 126: சென்னையில் இன்று பொதுக்கூட்டம்

First Published : 28 Dec 2010 03:46:44 AM IST


சென்னை, டிச. 27: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 126-வது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது.1885-ம் ஆண்டு ஏ.ஓ. ஹியூம், டபிள்யூ.சி. பானர்ஜி ஆகியோரால் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, 2010 டிசம்பர் 29-ம் தேதி 126-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.அதனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி, நேரு உள்ளிட்ட தேசியத் தலைவர்களின் திருவுருவப் படங்களுக்கு மாநிலத் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.126-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தங்கபாலு கேக் வெட்டுகிறார். இந்நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர். மாலை 6 மணிக்கு தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று பேசவுள்ளனர்.
கருத்துகள்

கங்க்றேஸ் கட்சி அஹிமசிவாதிகள் முட்டை போட்ட கேக் வேட்டுரான்களா காந்தி பாதை இது dhaana
By சலம்
12/28/2010 10:37:00 AM
இந்தியாவை சுரண்டியது போதும்.. தமிழ்க்குடிகளை கெடுத்தது போதும்... ஓய்வுதியம் வாங்கி கொண்டு ஒதுங்கி இருக்கவேண்டிய வயது..
By தமிழினியன்
12/28/2010 10:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *







Defence sec.of India at Ilangai: இலங்கையில் இந்திய பாதுகாப்புச் செயலர்

சீனாவின் பக்கமும் பாக்கிசுதான் பக்கமும் சார்ந்துள்ள சிங்களத்தைத் தன் பக்கம்   சார்ந்திருக்கச் செய்ய இந்தியம் படாத பாடு படுகிறது. இந்த அடிமைத் தனத்தைப பயன்படுது்தி இந்தியத் துணையுடன் தமிழர்களைக் கொல்லும் பணியைத்தான் சிங்களம் செய்கிறது. எனவே, பாதுகாப்புப் பேச்சு என்ற பொருளில் மேலும் மேலும் இந்தியப் படைக்கருவிகளும் படைஞர்களின் உழைப்புகளும் உத்திகளும் சிங்களத்திற்குத் தாரை வார்க்கப்படுமே தவிர இந்தியாவிற்கு நன்மையுமில்லை; தமிழர்களின் அழிவு தடுக்கப்படப் போவதுமில்லை. காங்.ஒழிந்து வேறு அரசு அமைந்தால்தான் ஈழத் தமிழர்களின் பாதுகாப்பும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பும் இந்தியாவின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். அப்பொழுது இந்த நாடகமும் முடிவிற்கு வரும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கையில் இந்திய பாதுகாப்புச் செயலர்


கொழும்பு, டிச.28: இந்திய பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் 3 நாள் அரசு முறைப் பயணமாக இலங்கைக்கு  வந்திருக்கிறார். இந்தியா-இலங்கை பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவதற்கு பிரதீப் குமார் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவரின் பயணத்தை இரு நாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகின்றன. தலைநகர் கொழும்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபட்சவை பிரதீப் குமார் சந்தித்துப் பேசினார். அப்போது, இரு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை மேற்கொள்வதென முடிவெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இலங்கை வெளியுறவு அமைச்சர் பெய்ரீஸ சந்தித்துப் பேசினார் பிரதீப் குமார்.  இரு நாடுகளுக்கு இடையேயான வெளியுறவில் உள்ள பாதுகாப்பு சிக்கல்கள் குறித்தும், அதற்குத் தீர்வு காணுதல் குறித்தும் இருவரும் விவாதித்ததாக தெரியவருகிறது. செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள இந்திய அமைதிப் படை வீரர்களின் நினைவிடத்துக்கு சென்ற பிரதீப் குமார், மலரஞ்சலி செலுத்தினார். இலங்கையில் 1987-90 காலக்கட்டத்தில் புலிகளுடனான போரின் போது இந்திய அமைதிப்படை வீரர்கள் 1200 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு கொழும்பில் நாடாளுமன்றத்துக்கு அருகில் நினைவிடத்தை அமைத்துள்ளது இலங்கை அரசு.
கருத்துகள்

Please go through the website - Groundreport and please find out what India has done for the destruction of Sri Lankan Tamils. Pradip Kumar may finish the unfinished job.
By karunakaran
12/28/2010 7:47:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *




செவ்வாய், 28 டிசம்பர், 2010

கனடாவில் தமிழ் நிலைக்க வழி செய்வோம்!

கனடாவில் வாழும் தமிழர்கள் மட்டுமின்றித் தமிழகத் தமிழர்கள் உட்ப உலகத் தமிழர்கள் அனைவரும் பின் வரும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.
1. தமிழ் பேசுவோம்! தமிழில் பேசுகையில் தமிழிலேயே பேசுவோம்!
2. தமிழில் எழுதுவோம்! தமிழில் எழுதுகையில் தமிழிலேயே எழுதுவோம்!
3. தமிழ் அறிந்தவர்களுடன் தமிழிலேயே பேசுவோம்! தமிழ் அறியாதவர்களையும் தமிழ் அறியச் செய்வோம்!
4. எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்!
5. வணங்குவோம் தமிழில்! வாழ்த்துவோம் தமிழில்!
6. பேசுவோம் தமிழில்! பயிலுவோம் தமிழில்!
7. தமிழில் கையொப்பம் இடுவோம்!
8. பெயிடுவோம் தமிழில்! பெருமை கொள்வோம தமிழராய்!
9. கலையென்றால் தமிழ்க்கலையே!
10. தமிழ் வாழ்ந்தால் தமிழர் வாழ்வர்! தமிழ் வாழத் தமிழரே சிறந்திடுவீர்!
11. தமிழுக்கு முதன்மையும் தமிழர்க்குத் தலைமையும் அளிபபோம்!


கனடாவில் தமிழ் நிலைக்க வழி செய்வோம்!

tamil
இன்று, எமது நாட்டில் எமது மொழி, கலாச்சாரத்திற்கு நெருக்கடியான ஒரு சூழல் நிலவுவதால், அவற்றை பாதுகாக்கும் பொறுப்பு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களாகிய எமக்கு ஏற்பட்டிருக்கிறது. அதே வேளை, கனடாவில் தமிழ் எமது அடுத்த தலைமுறைக்கு தொடருமா என்று ஐயப்பாடும் உண்டு.
புலம் பெயர்ந்து வந்த முதல் தலைமுறையினராகிய நாமாவது தமிழை சுத்தமாக பேசுவதன் மூலம் கனடாவில் தமிழை நிலை பெறச் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கச் செய்யலாம் அல்லவா?.
ஆகவே, 2011 புது வருடத்தில், கனடா வாழ் தமிழர் அனைவரும் ஒரு சங்கல்பம் செய்து கொள்வோம்:
இன்று தொடக்கம்,
1.  சக தமிழருடன் தமிழில் மட்டும் பேசுவோம்;
2.  பேசும் தமிழை, அவசியமற்ற ஆங்கிலச் சொற்கள் தவிர்த்து, சுத்தமாகப் பேசுவோம்.
இந்தப் கையொப்ப பரப்புரையில் பங்கு கொள்ள, www.karublog.com என்னும் தளத்திற்குச் சென்று, பரப்புரை இதழில், உங்கள் பெயர், மின்னஞ்சல் விபரங்களை பதிவு செய்து கொள்ளும்படி கேட்கப்படுகிறீர்கள். மேலும், இந்த முயற்சியை பலனடையச் செய்ய, அனைவரினதும் ஒத்துழைப்பு தேவையாக இருப்பதால், தயவு செய்து கனடாவில் உள்ள உங்கள் அனைத்து தமிழ் தொடர்புகளுக்கும் இந்த மின்னஞ்சலை அனுப்பி வைக்கும்படி வேண்டப்படுகிறீர்கள்.
பி. கு. உங்கள் மின்னஞ்சல் விலாசம் கையொப்ப பட்டியலில் தோன்றாது. நீங்கள், உங்கள் கையொப்பத்தை மின்னஞ்சலில் வரும் பதிலில், மூன்று நாட்களுக்குள், உறுதி செய்தவுடன் உங்கள் மின்னஞ்சல் விலாசம் ‘பிரத்தியேக விபரப் பாதுகாப்பு’ இன் பொருட்டு கோப்பிலிருந்து (data base) நீக்கப்பட்டுவிடும்.

raghul gandhi and intellectuals: article in dinamani

எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத கல்வியாளராகவோ  மக்கள் நலத் தொண்டராகவோ இல்லாத இராகுல் வருகை அவர் கட்சிக்கு முதன்மையாகஇருக்கலாம். ஆனால் கல்விச்சாலைகளும் அரசு இயந்திரங்களும் அதற்காகப்பயன்படுத்தப்படுவது தவறல்லவா? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ராகுல் காந்தியும் தமிழக அறிவு ஜீவிகளும்


இளைஞர் காங்கிரஸôரிடமிருந்து ஓர் அலைபேசி கோரிக்கை வந்தது. தமிழகத்துக்கு இரண்டு நாள் சூறாவளிப்பயணமாக வரும் ராகுல் காந்தி, தமிழக அறிவுஜீவிகளுடன் கலந்துரையாட விரும்புகிறார்; இக் கூட்டத்தில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தலைக்குப்பின் உடனடியாக ஒரு ஒளிவட்டம் ஏற்பட்டது போலத் தோன்றியது. மார்கழி குளிரையும் மீறி உடலில் சுகமான வெப்பம். அண்ணா சாலையில் உள்ள கன்னிமாரா ஐந்து நட்சத்திர விடுதியில், அறிவுஜீவிகள் குவிந்தனர். ஊடகங்களுக்கு அனுமதி இல்லாத கூட்டமாயிருந்தாலும், கணிசமாக மூத்த பத்திரிகையாளர்கள், பல்வேறு சமூக  ஆர்வலர்கள், ஓவியர்கள், காந்தியவாதிகள் என்று சுமார் எழுபது எண்பது பேர் வந்தனர். ராகுல் 55 நிமிடங்கள் தாமதமாக வந்ததால், இரண்டு மணி நேர நிகழ்வு, ஒரு மணிநேரக் கலந்துரையாடலாகச் சுருங்கியது. ஒரு மணிநேரமும் நின்றபடியே  எளிமையுடனும், மிகுந்த மரியாதையுடனும் ராகுல் நடந்து கொண்டார். கலந்துரையாடல் நடக்கும் அறையில் சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தால், முன் வரிசைகளில் கிட்டத்தட்ட 30 திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், நடிகர், நடிகைகள். இவர்கள் நாட்டின் அடிப்படைப் பிரச்னைகள் பற்றி ராகுலுடன் அளவளாவ வந்திருப்பார்களோ என்ற நினைப்பு சற்று மகிழ்ச்சியளித்தது.அறிமுகவுரை முடிந்தவுடன் எடுத்த எடுப்பிலேயே, இந்தியாவில் விஸ்வரூபமாகி விட்ட சாராய சுனாமி பற்றி விவாதிக்கப்பட்டது. காங்கிரஸில் லட்சக்கணக்கான இளைஞர்களைச்   சேர்ப்பதில் அதிக ஆர்வம் எடுத்துக்கொண்டுவரும் வேளையில், இந்திய இளைஞர்களின் எதிர்காலம் சாராயத்தில் கரைந்துவிடும் ஆபத்து உள்ளது. 1947-ல் உள்ள நிலை வேறு, 21-ம்  நூற்றாண்டில், மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் வேறு. மலேரியா, காசநோய், ஊட்டச்சத்துக் குறைபாடு என்று காலங்காலமாக உள்ள ஆரோக்கியப் பிரச்னைகள் சிறிதும் குறையாத நிலையில் வாழ்க்கைமுறை நோய்கள் பெரிய அளவில் இந்திய இளைஞர்களைத் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் வரைமுறையில்லாமல் அதிகரித்து வரும் மதுநுகர்வு மிகமுக்கிய பங்காற்றுகிறது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதனால் மிகப்பெரிய  பின்னடைவு ஏற்பட்டு வருகிறது என்று எடுத்துச் சொல்லப்பட்டது.யாருடைய தீவிரவாதம் மிக அபாயகரமானது என்று பேசி சர்ச்சையில் மாட்டிக்கொண்ட நீங்கள், மது வியாபாரிகள் தான் இன்றைக்கு இந்திய மக்களுக்கு எதிரான உண்மையான  தீவிரவாதிகள். இவர்களது பிடி, சட்டமன்றங்கள் முதல் நாடாளுமன்றம் வரை இறுகியுள்ளது, இந்தச் சாராய தீவிரவாதத்தை வெளிநாட்டு, உள்நாட்டு நிறுவனங்களுடன், மாநில அரசுகளும் இணைந்து கட்டவிழ்த்து விட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது. வருவாயைப் பெருக்கும் நோக்கத்தில் மாநில அரசே நேரடியாக இலக்குவைத்து சாராய வியாபாரம் செய்வதை ஆதரிக்கிறீர்களா என்று ராகுல் காந்தியிடம் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது, ""ஆதரிக்கவில்லை'' என்று தெளிவாகவே பதில் கூறினார். உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாகத் திகழும் இந்தியாவில் வேகமான பொருளாதார வளர்ச்சியும் சேர்ந்து கொள்ளும்போது, அது சாராய வியாபாரிகளுக்கு நல்ல வேட்டைக்களமாக அமைகிறது. ஆனால், மக்களுக்கோ, நோயும், உடல் முடக்கமும், சாவும்தான் பிரதிபலனாகக் கிடைக்கிறது. இன்றைக்கு மதுநுகர்வை ஒழுக்க ரீதியாகப் பார்க்காமல், மிகப்பெரிய  சுகாதாரப் பிரச்னையாகப் பார்க்க வேண்டும். அதனால், எய்ட்ஸ், புகையிலை போன்றவற்றுக்கு எதிராகப் போர் தொடுத்திருப்பது போன்று, மத்திய, மாநில சுகாதாரத்துறையின் கீழ், ஒருங்கிணைந்த மதுக்கட்டுப்பாட்டுக் கொள்கையைக் கொண்டுவந்து, மதுவுக்கு எதிராகத் தீவிரமாகப் போர் தொடுக்க வேண்டும் என்று விளக்கியபோது, சொல்வதைக் கூர்ந்து கவனித்தார் ராகுல். மதுவை ஒரு சுகாதாரப் பிரச்னையாகப் பார்க்க வேண்டும் என்பதை ஆமோதித்த ராகுல், அதே வேளையில் தனிமனிதரைக் குடிக்காதே என்று அறிவுரை கூற முடியாது, இது அவரவர் விருப்பம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், இது எனது தனிப்பட்ட கருத்து என்றும் கூறினார். திருமணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என எடுத்துக்கொண்டாலும், குழந்தைத் திருமணத்தை மாவட்ட ஆட்சியரே முன்னின்று தடுத்து நிறுத்துகிறாரே, அப்படியிருக்க, தமிழகமெங்கும் பள்ளிகளுக்கு அருகிலேயே இருக்கும்  டாஸ்மாக் கடைகளில், 13 வயது மாணவர்கள்கூட சரக்கு அடிக்கும் நிலையில், இதை  அவரவர் விருப்பம் என்று விட்டுவிடலாமா என்று ராகுவிடம் விவாதிக்க நேரம் இடம் கொடுக்கவில்லை. 1993-ம் ஆண்டிலேயே  மனிதக்கழிவை மனிதன் அகற்றுவதைத் தடுக்கும் சட்டம் கொண்டு வந்திருந்தாலும், நடைமுறையில் பல்பிடுங்கிய பாம்பாகவே கடந்த 17 ஆண்டுகளாக இச்சட்டம் காட்சியளிக்கிறது. பாதாளச் சாக்கடை வேலை போன்ற அவலங்கள் அதிகரித்துள்ள நிலையில், 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு ஏற்ற, நடைமுறைப்படுத்தக்கூடிய புதிய சட்டம் ஒன்றை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே கொண்டு வர ராகுல் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அதேபோன்று, மத்திய அரசு நிதி ஒதுக்கி, மாநில அரசால் நடைமுறைப் படுத்தப்படும்  ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் என்பது இன்றைக்கு நகர்ப்புறத்தில் வசிக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் உதவும் வகையில் அமல்படுத்தப்படாமல், சேரி மக்களின் தலைக்கு மேலே தொங்கும் கூரிய கத்தியாகிவிட்டது. காண்ட்ராக்டர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெரிய ஆதாயமாகவும், நகர்ப்புற ஏழைகள், நகருக்கு வெளியே  உள்நாட்டு அகதிகளாய் தனிமைப்படுத்தப்பட்டு அழிந்தொழியும் திட்டமாகவும் மாறிவிட்டது. ஒரு பக்கம் கல்வி அடிப்படை உரிமை என்று பேசிக்கொண்டு, மறுபுறம் ஏழை தலித் குழந்தைகளுக்குக் கல்வி அறவே மறுக்கப்படும் நிலையை, இந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் உருவாக்கி வருகின்றன. ஆதலால், மத்திய அரசு, மாநில அரசுடன் இதுபற்றிக் கலந்து பேசி, இதை நன்மை பயக்கும் திட்டமாக மாற்றி அமைக்க வேண்டும் என்று அவரிடம் எடுத்துச் சொல்லப்பட்டது. மாற்றுப்பாலினத்தார், திருநங்கைகள் ஆகியோருக்காக, தமிழக அரசு வாரியம் ஒன்று அமைத்துள்ளது. இதனால் உடனடியாகப் பெரிய நன்மை விளையவில்லை என்றாலும், ஒரு நல்ல துவக்கம் ஏற்பட்டுள்ளது. அரசின் அங்கீகாரம் இந்த மக்களுக்குக் கிடைத்துள்ளது. இதைப்போன்று இந்தியா முழுவதுமே மற்ற மாநிலங்களிலும், கொண்டு வர வேண்டும் என்று ராகுலிடம் கூறப்பட்டது. மாற்றுப் பாலினத்தாரின் உரிமைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில், இந்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் முற்போக்காக நடந்து கொள்ள வேண்டும். இளம்வயதுடைய மாற்றுப் பாலினத்தாரின் முன்னேற்றத்திலும், உரிமைகளிலும், ராகுல் அதிக  ஆர்வம் காட்ட வேண்டும் என்று மாற்றுப்பாலினப் பிரதிநிதி கேட்டுக்கொண்டபோது, அதை ஏற்றுக்கொண்டார் ராகுல்.இந்தியா முழுவதும் விளைநிலங்கள், வேகமாக வீட்டுமனைகளாவும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், இன்னும் 20 ஆண்டுகளில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது. அதனால், விளைநிலங்கள் சூறையாடப்படுவதைத் தடுக்கும் வகையில்  சட்டம் இயற்றி, அவற்றைச் சீரழியாமல் பாதுகாப்பது மிக அவசர அவசியம். இல்லையென்றால், மாவோயிஸ்டுகள் போன்ற ஆயுதப்  போராளிகள் இந்தியா முழுவதும் பரவி விடுவார்கள் என்று ஒருவர் எச்சரிக்கை விடுத்தார்.விடுதலைப்புலிகளுக்காக நான் பரிந்து பேசவில்லை என்றாலும், இலங்கையில் போர்  உச்சகட்டத்தை நெருங்கிவிட்டிருந்த நிலையில், இந்திய அரசு, அப்பாவி இலங்கைத் தமிழ் மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்று ஒரு பெண்மணி மிக அழுத்தமாகக் கூறினார்.ஆனால், தானும், காங்கிரஸ் கட்சித் தலைவரும், மத்திய அரசும் போரின் போது இலங்கையில் நடந்த மனிதஉரிமை மீறல்களைப் பலமுறை கண்டனம் தெரிவித்துப் பேசியிருக்கிறோம். போருக்குப் பின்னர், தமிழ் மக்களை மறுகுடியமர்வு செய்வதற்கும், வீடுகள், ரயில்பாதைகள்  போன்றவற்றை ஏற்படுத்துவதற்கும் மத்திய அரசு தாராளமாக நிதிஉதவி செய்துள்ளது என்றும் ராகுல்காந்தி கூறினார்.இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும்  விதமாக, பலர் தங்கள் கருத்துகளை சரமாரியாகப் பதிவு செய்தனர். இலங்கையில் நடந்தவற்றை மனித உரிமை மீறல்கள் என்று கருதுவது சிறிதும் நியாயமற்ற கூற்று. அங்கு நடந்து முடிந்தது மிகப்பெரிய இனப்படுகொலை. அதற்கான பல ஆதாரங்கள் வெளி வந்துள்ளன என்று ஒருவர் குரலெழுப்பினார். குழுமியிருந்தவர்களின் உண்மையான உணர்வுகள் அழுத்தம் திருத்தமாகவே அவருக்குப் புரியவைக்கப்பட்டிருந்த நிலையில், இனிமேல், இலங்கைத் தமிழர்களின் பிரச்னையில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதாக உறுதியளித்துச் சென்றார் ராகுல். அவரது எளிமையான மனம் திறந்த நடவடிக்கைகளை உண்மையான ஒன்று என்று ஒரு சாராரும், நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்தும் முயற்சி அவ்வளவுதான் என்று மற்றொரு சாராரும் கருதுவதற்கு வாய்ப்பு உள்ளது.மக்கள் பிரச்னைகளைப் பேசப் போகிறார்கள்  என்று எண்ணியிருந்த நிலையில், திருட்டு விசிடி தொந்தரவாலும், காப்பிரைட் தொடர்பான பிரச்னையாலும், திரைப்படத் தொழிலுக்கு முழுக்குப் போடவேண்டிய  நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறித் தங்கள் கல்லாப்பெட்டிப் பிரச்னைக்கு மனுப்போடத் தொடங்கினர் திரைப்படத் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும். மனு அளித்தால், உரிய அமைச்சரிடம் கொண்டு சேர்க்கிறேன் என்று சமாதானம் கூறிய ராகுலிடம், மேலும் மேலும் திரைப்படத் துறையினர் அழுத்தம் கொடுத்ததால், சரி, தில்லியில் வந்து சந்தியுங்கள் என்று கூறினார் ராகுல்.இப்படியாக, விவாதத்துக்கான நேரம் ஒரு மணிநேரமாகக் குறைந்ததாலும், திரைப்படத்துறையினரின் குறுக்கீடுகளாலும், தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பெரும்பாலான அறிவுஜீவிகள்  ஏமாற்றமடைந்திருப்பார்கள் என்று யூகிக்க முடிகிறது. மாலை நேரம் வீட்டுக்கு வந்து, தொலைக்காட்சியைப் பார்க்க நகர்ந்தபோது, அண்மைச் செய்தி ஒன்று மீண்டும் மீண்டும் வந்து போனது.கோலிவுட்டுடன்  ராகுல் காந்தி  சந்திப்பு. திரைப்படத்துறையினர் மகிழ்ச்சி. அதுவரை, தலைக்குப் பின்னால் இருந்ததுபோலத் தோன்றிய ஒளிவட்டம், திடீரென்று மறையத் தொடங்கியது. அதோடு, ஜன்னலுக்கு வெளியே மக்கள் முகம் அலைமோதும் பொதுவெளியில் இருளும் வேகமாகக்  கவ்வத் தொடங்கியது.

dinamani editorial: 28.12.10: தலையங்கம்: சொல் செயலாக வேண்டும்

தண்ணீரை நம்பி வாழும் மீனவரகள் கண்ணீர் சிந்தியபடியே வாழக் கூடாது என உணர்த்தும் ந்ல்ல தலையங்கம். துயர வெளிப்பாடு என்பது சடங்காகிப் போவதை விட வரும் முன் காப்பதாக அமைய வேண்டும் என உணர்த்தியுள்ளமைக்குப் பாராட்டுகள்.


தலையங்கம்: சொல் செயலாக வேண்டும்!

ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களுக்காக உறவினர்களும் சுற்றமும் நட்பும் துக்கம் அனுசரித்த அதே வேளையில், ஒருங்கிணைந்த கடலோர மேலாண்மைத் திட்டத்தை  வேதாரண்யம் பகுதியில் தொடங்கி வைத்திருக்கிறார் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.இத் திட்டத்தின் ஒரு பகுதியாக, எம்.எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனத்தால் மேற்கொள்ளப்படவிருக்கும் ஒருங்கிணைந்த சுரபுன்னை மீனளப் பண்ணைத் திட்டத்தையும் தொடங்கிவைத்து, சுரபுன்னை மரக்கன்றுகளை வழங்கியிருக்கும் அமைச்சர், மீனவர் உரிமைச் சட்டம்  விரைவில் நடைமுறைக்கு வந்துவிடும் என்றும் உறுதி கூறியுள்ளார். இந்த இரு நடவடிக்கைகளுமே மீனவர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கும்.ஒருங்கிணைந்த கடலோர மேலாண்மைத் திட்டம் நான்கு அம்சங்களை உள்ளடக்கியது. கடலோரம் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைத்தல், கடலோர உயிர்கள் மற்றும் பொருளுடைமைகளைக் காத்தல், கடலோர மக்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துதல், நீடிக்கச் செய்தல் ஆகியவைதான். இவை கடல் மற்றும் கடல் சார்ந்த பல்லுயிர் இனப் பெருக்கத்துக்கு மட்டுமன்றி மீனவர் வாழ்வையும் நலனையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.இத் திட்டம் மேற்கு வங்கம், குஜராத், ஒரிசா ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டன. இப்போது தமிழ்நாடும் இத்திட்டத்திற்குள் வந்துள்ளது. தொடர்ந்து கடல்பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவதும், பேரலைகள் உண்டாவதும் அல்லது கடல் உள்வாங்குவதும் அடிக்கடி நடைபெறும் நிகழ்வுகளாக மாறிவிட்ட சூழ்நிலையில், கடலோரம் வாழ் மீனவர்களின் நலனுக்காகச் சுரபுன்னை என்கிற அலையாத்திக் காடுகள் பெருகுவது மிகமிக அவசியம். ஆழிப்பேரலையால் பல ஆயிரம் உயிர்களை இழந்த பின்னரும் நாம் போதுமான அளவு விழிப்புணர்வு இல்லாமலும், அலையாத்திக் காடுகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தாமலும் இருந்து வருகிறோம். ஆண்டுதோறும் கடலில் பால் ஊற்றி, கண்ணீர் விட்டு அழுது துக்கத்தை வெளிப்படுத்துவதோடு, இத்தகைய அலையாத்திக் காடுகளை உருவாக்கும் முயற்சியில் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமே ஈடுபட்டிருந்தாலும்கூட, இந்நேரம் போதுமான அளவுக்கு கடலோரக் காடுகள் உருவாகியிருக்கும் என்பது திண்ணம். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ம் தேதி நினைவுநாள் அனுசரிப்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நலஉதவிகள் கிடைக்கவில்லை என்பதுமான செய்திகள் அன்று மட்டும் வெளியாவதும் சடங்குபோல ஆகிவிட்டது. இனி இத்தகைய பேரிடர்களில் எத்தகைய பாதுகாப்பு பலன்தரும்? அதற்கான நடைமுறைகள் என்ன என்பது குறித்த விழிப்புணர்வை கடலோரம் வாழ்கின்ற மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவில்லை.ஆசிவாசிகளுக்காக வன உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டதைப்போலவே மீனவர் உரிமைச் சட்டமும் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் கூறியிருந்தாலும், அது குறித்து அவர் சரியான விளக்கம் தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்தச் சட்டத்தின் அடிப்படையாக, மீனவர்களுடைய குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும் என்பதற்கான வாய்ப்புகளை அமைச்சர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.மீனவர்களின் வாழ்க்கை கடல் சார்ந்தது. அவர்கள் கடற்கரையைவிட்டு வேறு எங்கும் போய் வாழ்தல் என்பது இயலாது. ஆனால், தற்போதைய நகர் விரிவாக்கம் என்பது, மீனவர் குடியிருப்புகளை மெல்லமெல்ல நகரத்துக்கு வெளியே நகர்த்திக் கொண்டுபோய் விடுவதிலேயே இருக்கிறது. கடற்கரையின் அழகு கருதி, அங்கே மீன்வலைகள் உலர்த்தக் கூடாது என்று மெல்ல ஆரம்பிக்கும் இத்தகைய ஆலோசனை போன்ற தடைகள், மீனவர் குடியிருப்பைக் காலி செய்யும் நடவடிக்கையாக மாறி, மீனவர்களின் வாழ்வுரிமையைப் பாதிக்கின்றன. மீனவர்கள் குடிசை கடல் அலைகளிலிருந்து 100 மீட்டருக்குள் இருக்கலாமா அல்லது 200 மீட்டருக்குள் இருக்கலாமா என்கிற வரையறைகளைக் காட்டிலும், மீனவர்களுக்கான நிரந்தரமான கான்கிரீட் வீடுகளை - அடுக்குமாடிகளாக இருந்தாலும் பரவாயில்லை-500 மீட்டருக்கு அப்பால் கட்டித்தரவும், தொழில் ரீதியான பயன்பாட்டுக்கு மட்டும் 100 மீட்டருக்குள் அரசின் தடைகள், கட்டுப்பாடுகள் இல்லாமல் இருக்கவும் செய்வதுதான் மீனவர்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்க முடியும். வெறுமனே 100 மீட்டருக்கு அப்பால் மீனவர்கள் குடிசைகளை அமைத்துக் கொள்ளலாம் என்று சலுகை அளித்தால், மீண்டும் ஆழிப்பேரலையால் உயிரிழப்புகளைச் சந்திப்பதும் அல்லது கடல்அரிப்புகளால் வீடுகளை இழப்பதும் மீனவர்களாகத்தான் இருப்பார்கள்.காடுகளில் வாழும் ஆதிவாசிகளுக்கு வன உரிமைச் சட்டத்தின்படி, அவர்கள் வசிக்கும் பகுதி மற்றும் அவர்கள் விவசாயம் செய்யும் வனப்பகுதியை அவர்கள் பெயருக்கே பட்டா வழங்க வேண்டும் என்று விதிமுறை இருந்தாலும், இதுவரை அந்தச் சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை, ஆதிவாசிகள் பயன்பெற முடியாத நிலைதான் இன்றளவும் காணக்கிடைக்கிறது. அதே நிலைமை மீனவர் உரிமைச் சட்டத்திலும் ஏற்பட்டு விடக்கூடாது.அதேபோன்று கடலோர ஒழுங்காற்று மண்டலச் சட்டம் தொடர்பாக எதிர்ப்பு ஏற்பட்டதையடுத்து, மறுஆய்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது அது தொடர்பான அறிக்கை விரைவில் வெளியாகும் என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார். ஒவ்வொரு வகைப் படகுக்கும் விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்தால் அதற்கான தண்டனை மற்றும் அபராதம் குறித்து ஆட்சேபணைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்த ஆட்சேபணைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் என்று நம்புவோமாக. இந்திய மீனவர்கள் இன்னமும்கூட, அமைப்புசாரா தொழிலாளர்களாகவும், அவர்கள் உழைப்பின் பலனை வியாபாரிகளே அனுபவிக்கும் நிலைமைதான் இருந்துவருகிறது. கவிஞர் வாலி பாடியதைப் போல, "ஒருநாள் போவார் மறுநாள் வருவார் ஒவ்வொருநாளும் துயரம்...' என்கிற அவர்களது நிலையற்ற வாழ்வுக்கு நிலையான பாதுகாப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது சமுதாயத்தின் கடமை. அரசின் கடமை.