ilakkuvanar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ilakkuvanar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 ஜனவரி, 2012

Thani thamizh vizhaa - Pudthuvai thamizh kazhakam: தனித்தமிழ் விழா- புதுவைத் தமிழ்க்கழகம்

தனித்தமிழ் விழா- புதுவைத் தமிழ்க்கழகம்

பதிவு செய்த நாள் : 23/01/2012


தனித்தமிழ்இயக்கம் ஆண்டுதோறும் சுறவ(தை)த் திங்களில் தனித்தமிழ் விழாவை நடத்தி வருகிறது. இவ்வாண்டு 2043 சுறவம்(தை) 6ஆம் நாள் (20.1.2012) வெள்ளியன்று அவ்விழாவை முன்னாள் ஆணையர் தியாகராசன் தலைமையில் புதுவைத் தமிழ்க்கழக(சங்க)த்தில் நடத்தியது. கலைமாமணி மணிக்கண்ணன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட ஆசிரியை தமிழிசைவாணி வரவேற்றுப் பேசினார். தனித்தமிழ் இயக்கத்தின் 13 வகையான செயற்பாடுகளை அவர்தம் உரையில் எடுத்துக் கூறினார்.
தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகளாரின் படத்தைப் பாவலர் இலக்கியன் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற பாட்டரங்கில் வில்லியனூர் பழனி வடமொழியை நீக்கு என்னும் தலைப்பிலும் பாவலர்தமிழியக்கன் தனித்தமிழ்ப்பெயரிடு என்னும்தலைப்பிலும் பாவலர் மு.பாலசுப்பிரமணியன் பெயர்ப்பலகைத் தமிழாக்கு என்னும் தலைப்பிலும் பாவலர் அசோகா சுப்பிரமணியன் தனித்தமிழ் இதழ்படி என்னும் தலைப்பிலும் பாவலர் தமிழ் உலகன் ஆங்கிலத்தைப்போக்கு என்னும் தலைப்பிலும் பாடல்கள் வழங்கினர்.
 
உரையரங்கில் முனைவர் மறைமலை இலக்குவனார், இலக்குவனாரின் தனித்தமிழ்ப்பணி குறித்தும் முனைவர் அ.அறிவுநம்பி பாவாணரின் திருக்குறள் ஆய்வுகள் குறித்தும்
முனைவர் க.தமிழமல்லன் மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம் என்பது குறித்தும் உரைகளை நிகழ்த்தினர். க.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
தனித்தமிழ் விழாவில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. புயலாலும் மழையாலும் தீங்கடைந்த புதுச்சேரியை விரைந்து சீரமைத்து உதவித்தொகை வழங்கிய புதுச்சேரி முதல்வர் ந.அரங்கசாமியைத் தனித்தமிழியக்கம் பாராட்டுகிறது.
2. முப்பது ஆண்டுகளுக்குமேல் வலியுறுத்தப்பட்டு வரும் தமிழ் வளர்ச்சித் துறை ஒன்றைப் புதுச்சேரி அரசு உடனே அமைக்க வேண்டும்.
3. கலை,பண்பாட்டுத்துறை அளித்து வரும் சிறந்த நூல்களுக்கான பரிசுகளையும் தமிழ்மாமணி கலைமாமணி விருதுகளையும் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் திருவள்ளுவர் திருநாளில் விழா நடத்தி வழங்குமாறு தனித்தமிழ் இயக்கம் புதுச்சேரி முதல்வரைக் கேட்டுக்கொள்கிறது. மூன்றாண்டுகளாக வழங்கப்படாத அவற்றை உடனடியாக வழங்க முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும்.
4. காரைக்கால் புதுச்சேரிக் கிளை நூலகங்களுக்கு ஆண்டுதோறும் வழக்கம்போல் புதுச்சேரி எழுத்தாளர்களின் நூல்களில் 144 படிகள் வாங்கும் முறையைத் தவறாமல் செயற்படுத்த வேண்டும். வாங்கும் நூல்களின் எண்ணிக்கையைக் குறைப்பதும் வாங்காமல் தவிர்ப்பதும் மிகவும் வருந்தத் தக்கது.

5. வரும் ஆண்டுகளில் வாங்கும் நூல்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
நிரப்பப் படாத நூலகர் பணியிடங்களை நிரப்ப ஆவன செய்ய வேண்டும்.
6. புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் இயல்பாக இயங்குவதற்கான இடத்தை உடனடியாக வழங்க வேண்டும். விரைவில் அதற்காகத் தனி வளாகம் கட்ட ஆவன செய்ய வேண்டும்.
7. புதுச்சேரிப் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்கு வங்கக் கடலில் – குமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைப்போல், சிலைஅமைத்துப் படகுப் போக்குவரத்து நடத்திப் புதுச்சேரியை நாகரிகமான இலக்கியச் சுற்றுலா இடமாக்கி வருவாயைப் பெருக்க ஆவன செய்யுமாறு புதுச்சேரி அரசைத் தனித்தமிழ் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.


ஞாயிறு, 17 அக்டோபர், 2010

[login] 
 

>>அயலகத் தமிழர்கள்

natpu ரியாத், சவுதி அரேபிய வளைகுடா செந்தமிழ்ச் சங்கம் சார்பாக  இலக்குவனார் நூற்றாண்டு  விழா மற்றும் வ.உ.சி நினைவேந்தல், முருசேசன் தலைமையில், தேனி செயராமன்  முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலையில் மிகச் சரியாக‌ 10 மணிக்குத் துவ‌ங்கிய விழா இரவு 8 மணி வரை விறுவிறுப்பாக‌த் தொடர்ந்தது. ஆண்கள், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், தமிழ்ச்சொல் விளையாட்டுகள் - இவற்றில் அனைவரும் பெருமகிழ்வோடு பங்கு பெற்ற‌மை குறிப்பிட‌த்த‌க்க‌து.
வில்லுப்பாட்டு
நாட்டுப்புறப் பாடல்கள், பரத நாட்டியம், ராச ராச சோழன் கோவிலின் 1000 ஆண்டுகள்  பற்றிய உரை, 'தமிழ் மறுமலர்ச்சி' என்ற தலைப்பில் கி.வை.இராசா குழுவினரின் வில்லுப்பாட்டும் பார்வையாள‌ர்க‌ள் ர‌ச‌னைக்கு விருந்தாக‌ அமைந்திருந்த‌து.
natpu ருசிக‌ர‌மான‌ போட்டிக‌ள்
விழாவில் பெண்க‌ளுக்கான‌ கோல‌ப்போட்டி, உப்ப‌ல் ஊதி உடைத்த‌ல் (ப‌லூன் ஊதி உடைத்த‌ல்), ஆகுல‌ ம‌ங்கைய‌ர் யார்? போன்ற‌ போட்டிக‌ளும், த‌மிழ‌றிவை வ‌ளர்க்கும் வித‌மாக‌ குறுக்கும் நெடுக்கும், நாத்திரிபுச் சொற்க‌ள், ப‌ழ‌மொழி க‌ண்ட‌றித‌ல், சொற்ச‌மைத்த‌ல் போன்ற‌ த‌மிழார்வ‌ல‌ர்க‌ளுக்கான‌ ருசிக‌ர‌மான‌ போட்டிக‌ளும் பார்வையாள‌ர்க‌ளை வெகுவாக‌க் க‌வ‌ர்ந்த‌து.
பிரான்சிலிருந்து

இலக்குவனார் பற்றிய உரையை பிரான்சிலிருந்து  பேராசிரியர் பாவலர் பெஞ்சமின் லெபோ  அவர்கள், பேரா. இலக்குவனாரின் தமிழ்த் தொண்டுகள் குறித்தும், சமூகச் சிந்தனைகள் குறித்தும் மிக விளக்கமான உரையை மின்னூடகம் வழியாக வழங்கியது செவிக்கினிய சேதியாக அமைந்தது.  சென்னையிலிருந்து இலக்குவனார் திருவள்ளுவனும், வ.உ.சி. பற்றிய செய்திகளைத்  தஞ்சையிலிருந்து தாளாண்மை உழவர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்  கோ.திருநாவுக்கரசும் வழங்கிச் சிறப்பித்தனர்.
சிலம்புச் செல்வர் பொறிஞர்.நாக.இளங்கோவன், பொறிஞர்.சபாபதி, இரமேசு, கி.வை.இராசா, காமராசு, சீ.ந.இராசா உள்ளிட்ட வசந்தம் குழுவினர் இருவிழா ஏற்பாடுகளையும்  வெகுசிறப்பாக ஒருங்கிணைத்துச் செய்திருந்தனர்.
செய்தி: ஆல்ப‌ர்ட்,அமெரிக்கா
(within the last minute) Ilakkuvanar Thiruvalluvan said:
வளைகுடாச் செந்தமிழ்ச் சங்கத்தின் செய்திகளை அமெரிக்காவில் இருந்து தெரிவித்த திரு ஆல்பர்ட் அவர்களுக்கும் பாராட்டுகள். இத்தகைய தமிழுணர்வாளர்கள் இருக்கும் வரை தமிழுக்கு வீழ்ச்சியில்லை.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
(within the last minute) Ilakkuvanar Thiruvalluvan said:
பன்னாட்டுச் செய்திகளையும் - குறிப்பாக இலக்கிய விழாக்கள் பற்றிய செய்திகளை - உடனுக்குடன் வெளியிடும் நட்பூ இதழாளர்களுக்குப் பாராட்டுகள். தமிழர்கள் மறந்து போன தமிழ் மன்னர்கள் வழியில் கப்பலோட்டிய விடுதலைப் போராளி அறிஞர் வ.உ.சிதம்பரனாரை மறக்காமல் வளைகுடாச் செந்தமிழ்ச் சங்கத்தினர் நினைவு கூர்ந்தது போற்றுதற்குரியது. அதுபோல் தமிழ் எழுச்சியின் அடையாளமான தமிழ்க்காப்புத் தளபதி பேராசிரியர் சி.இலக்குவனாரின் நூற்றாண்டு விழாவினையும் சிறப்பாக நடத்தித் தாங்கள் இன்னும் தமிழர்களாகத்தான் வாழ்கிறோம் என வளைகுடாவினர் தெரிவித்துள்ளனர். இவற்றைப் பிறர் அறியச் செய்த நட்பு இணைய இதழுக்கும் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

வெள்ளி, 15 அக்டோபர், 2010

இலக்குவனார் நூற்றாண்டு விழா, வ.உ.சி. நினைவேந்தல்


Ads by Google
Post Your Resume Here  www.shine.com
Professionals With 2+ Yrs Exp. Get Top Paying Jobs on Shine.com. Apply
ரியாத்: சவுதி அரேபிய வளைகுடா செந்தமிழ்ச் சங்கம் சார்பாகக் கடந்த வெள்ளி 08.10.2010 அன்று இலக்குவனார் நூற்றாண்டு விழா மற்றும் வ.உ.சி நினைவேந்தல், முருசேசன் அவர்கள் தலைமையில், தேனி செயராமன் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

காலை 10 மணி தொடங்கிய இவ்விழா இரவு 8 மணி வரை தொடர்ந்தது. ஆண்கள், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், தமிழ்ச் சொல் விளையாட்டுகள்- இவற்றில் அனைவரும் பங்கு கொண்டனர்.

நாட்டுப்புறப்பாடல்கள், பரத நாட்டியம், ராச ராச சோழன் கோவிலின் 1000 ஆண்டுகள் பற்றிய உரை, 'தமிழ் மறுமலர்ச்சி' என்ற தலைப்பில் வில்லுப்பாட்டும் அரங்கேறின.

இலக்குவனார் பற்றிய உரையை பிரான்சிலிருந்து இணைய அரங்கத்தின் மூலம் பேராசிரியர் பெஞ்சமின் லெபோவும், சென்னையிலிருந்து இலக்குவனார் திருவள்ளுவனும் (வேளாண் இயக்குநர் [^], தமிழ்ப் பண்பாட்டுக் கலை [^] வளர்ச்சித்துறை), வ.உ.சி. பற்றிய செய்திகளைத் தஞ்சையிலிருந்து திருநாவுக்கரசும் (தாளாண்மை உழவர் இயக்கம்) வழங்கிச் சிறப்பித்தனர்.

திங்கள், 8 பிப்ரவரி, 2010

தமிழின உணர்வோடு தொண்டறத்திற்காக பாடுபடுகிற தமிழர்களை தோளில் தூக்கி வைத்து வெளிச்சம் போட்டு பாராட்ட வேண்டும்
தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற விழாவில் தமிழர் தலைவர் பேச்சு

சென்னை, பிப்.7_ தமி-ழின உணர்வோடு பாடு-பட்டு வருகின்ற-வர்களை தோளில் தூக்கி வைத்து அவர்களை வெளிச்சத்-திற்கு கொண்டு வர-வேண்டும். அவர்களைப் பாராட்டி வெளி உலகத்திற்கு காட்ட வேண்டும் என்று திராவி-டர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவு-ரையாற்றினார்.

நேற்று மாலை 6.2.2010 அன்று சென்னை பெரியார் திடலில் நடை-பெற்ற தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று சிறப்புரை-யாற்றினார். அவரது உரையில் குறிப்பிட்ட-தாவது:

தமிழர்களைப் பெருமைப்படுத்திட

தமிழினத்திற்காகப் பாடுபடுகின்ற தமிழர்-களை அடையாளம் கண்டு அவர்களை பெரி-யார் திடலில் இன்றைக்கு முத்தமிழ் மன்ற விழா மூலம் நாம் பாராட்டி-யிருப்பது பெரியார் வலைக் காட்சி மூலமாக, விடுதலை இதழ் வாயி-லாக உலகம் பூராவும் உள்ள தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்-பதற்காக இந்த நிகழ்ச்-சியை நாம் ஏற்பாடு செய்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களை-யும் முனைவர் மங்கள-முருகேசன் அவர்களையும் அழைத்து இந்த விழா-விலே பெரியார் விருது வழங்கி பாராட்டியிருக்-கின்றோம். தமிழர் தளபதி இலக்குவனார்

இங்கே பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்க-ளுடைய நூற்றாண்டை ஒட்டி அவரது படத்தைத் திறந்து வைத்திருக்-கின்-றோம். நம்மவர்களைப் பற்றிய பல செய்திகள் வெளியில் தெரிவதில்லை.

பேராசிரியர் சி. இலக்கு-வனார் அவர்களை தந்தை பெரியார் அவர்-கள் தமி-ழர் தளபதி என்று அழைத்து அந்தப் பட்டத்தை அவர்-களுக்கு சூட்டினார்கள். பலருக்கு இந்த செய்திகள் தெரியாது. காரணம் தந்தை பெரியார் அவர்-களுடைய கொள்கையை ஆரம்ப காலத்திலிருந்தே பின்பற்றியவர். இந்தி எதிர்ப்பு போராட்டத்-திலே கலந்து கொண்டு தண்டனை பெற்று சிறை சென்று வெளியே வந்தவர்.

நாடெங்கும் கொண்டாடவேண்டும்

நாடெங்கும் இலக்குவ-னாருடைய நூற்றாண்டு விழாவை தமிழர்களாகிய நாம் கொண்டாட வேண்-டும் என்ற நமதுஅன்பான விழைவை வேண்டு-கோளாக வைக்கின்றோம். (கை தட்டல்)

அதே போல சி.இலக்கு-வனாருடைய மகன், மறைமலை இலக்குவனா-ருக்கு இங்கே தந்தை பெரியார் விருது அளித்து பெருமைப்படுத்தப்பட்ட அவர் தனது தந்தையார் வழியிலே நின்று திரா-விட இயக்கப் புலவராக விளங்கி, நமது கொள்கை வழியிலே நின்று பாடு-பட்டு வருகின்றார்.

தோளிலே தூக்கி பெருமைப்படுத்த வேண்டும்

தமிழர்களை நல்ல இன உணர்வாளர்களை, பகுத்தறிவாளர்களை, சுயமரியாதை வழியிலே நின்றவர்களை நாம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு மட்டு-மல்ல, அவர்களைத் தோளிலே தூக்கிப் பெரு-மைப்படுத்த வேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கமாகும் (கை தட்டல்).

விழுது, - விருது என்-பதைப் பற்றி நாங்கள் அடிக்கடி சொல்வ-துண்டு. விழுதுகள் அடுத்த தலை முறையினர். விழுதுகள் இன்றைக்கு சிறப்பாக இருக்கின்றன.காரணம் வேர்கள் சரியாக இருந்த காரணத்தால்தான் விழுதுகளும் சரியாக இருக்கின்றன.

இலக்குவனாரை நான் நன்கு அறிந்தவன்

பேராசிரியர் இலக்கு-வனார் அவர்களை நேரில் கண்டு பேசிய பல வாய்ப்புகளை நான் பெற்-றவன். விடுதலையைப் புரட்டினால் ஏராள-மான செய்திகள் உண்டு.

விடுதலை தலையங்கத்தில்

இன்றைக்கு இலக்கு-வனார் அவர்களைப் பற்றி விடுதலையில் எழுதப்பட்டிருக்கின்ற தலையங்கம் மிகச் சிறப்-பானது. நேரம் இருந்தால் நானே படித்துக் காட்ட வேண்டும் என்று இருந்-தேன். இன்றைய விடு-தலை தலையங்கத்தைப் படித்து எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்-டும்.

இவர்கள் எல்லாம் சிறுவயது முதற்-கொண்டே மொழி உணர்வு, தந்தை பெரி-யார் அவர்களுடைய சுயமரியாதைக் கொள்கை உணர்வோடு ஆளான-வர்கள்.

இலக்குவனார் மாண-வர்; இவருக்கு ஆசிரியர் யார் என்றால் சாமி. சிதம்பரனார். அந்தக் காலத்து சுயமரியாதை உணர்வு கொண்ட புல-வர்கள்.

இலக்குவனாரிடம் கேள்வி

இராமாயணத்தைக் கண்டித்துப் பேசக் கூடியவர் புலவர் இலக்கு-வனார். அவரிடமே குதர்க்கமாகக் கேள்வி கேட்பார்கள். உங்களு-டைய பெயரே இலக்கு-வனார் ஆயிற்றே, நீங்கள் போய் இராமாய-ணத்-தைக் கண்டித்துப் பேச-லாமோ? என்று கேட்ட-துண்டு.

இது போன்று தந்தை பெரியார் அவர்களிட-மும் பலர் கேள்வி கேட்ட-துண்டு. உங்களுடைய பெயரே ராமசாமி, நீங்கள் இராமாயணத்-தைக் கண்டித்துப் பேச-லாமா? என்று கேட்ட-துண்டு. அதற்கு தந்தை பெரியார் அவர்கள் பதில் சொன்னார். நான் ராமனுக்கே சாமி போ! என்று சொல்லுவார். அது போல அந்தக் கேள்விக்கு இலக்கு-வனார் பதில் சொன்-னார். இலக்குவனார் என்றால், இலக்கு நோக்-கிச் செல்வது. இலட்சி-யத்தை நோக்கிச் செல்-வது என்று அவர் பதில் சொன்னார்.

சுயமரியாதைக் கொள்-கையை, தந்தை பெரியார் கொள்கையை ஏற்காத-வர்கள் கூட பல வகை-யில் பயன் பெற்றதுண்டு. ஆனால் இலக்குவனார் குடும்பமோ பல தொல்-லைகளுக்கு ஆளாகி ஏராளமான இழப்பு-களை சந்தித்த குடும்பம்.

துரத்தப்பட்டேன்

விருதுநகர் நாடார் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் சி. இலக்கு-வனாரை கல்லூரி நிரு-வாகம் வெளியேற்றியது. ஜாதி உணர்ச்சிப் போராட்-டத்தால் வெளியேற்றப்-பட்டார். அந்தக் கல்லூ-ரிக்கு தந்தை பெரியார் அவர்கள் இலக்குவ-னா-ருக்காக பரிந்துரை செய்தும் அந்த நிருவாகம் அதை ஏற்கவில்லை.

தந்தை பெரியார் அதைக் கண்டித்து அறிக்-கையே எழுதினார். கண்-ணீர் விடக்கூடிய அள-வுக்கு நிலைமைகள். இலக்-குவனார் அவர்கள் துரத்தப்பட்டேன் என்று ஒரு காவியத்தையே எழுதி-யிருக்கிறார்.அதைப் பற்றி அவருடைய-மகனார் மறைமலை இலக்குவ-னாரிடம் சொன்னேன். அந்த நூலைத் தேடித் தேடிப் பார்த்தேன், கிடைக்கவில்லை என்று சொன்னார்.

பெரியார் நூலகத்தில் இருக்கிறது. நான் தருகி-றேன் என்று அவருக்குச் சொல்லியிருக்கின்றேன்.

பெரியார் அடைக்கலம் கொடுத்தார்

தந்தை பெரியார் அவர்கள் இலக்குவ-னாரை அழைத்து திருச்சி பெரியார் மாளிகையில் அருகிலேயே தங்க வைத்-தார். தன்னுடன் சுற்றுப் பயணத்தில் அழைத்துச் சென்றார். அவருக்கு தந்தை பெரியார் மதிப்பூ-தியம் தர முன்வந்தார். ஆனால் அதை இலக்கு-வனார் ஏற்க மறுத்தார். தந்தை பெரியார் இலக்கு-வனாருக்கு வலுக்கட்-டாயப் படுத்திக் கொடுத்-தார்கள்.

தந்தை பெரியாரிடம் கொண்ட அன்பால், உணர்வால்தான் அவர்-1965 இல் இந்தி எதிர்ப்-புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை தண்டனை பெற்று வெளியே வந்தார்.

அவர் தந்தை பெரி-யார், அண்ணா, கலைஞர் ஆகியோருடைய நன்ம-திப்பைப் பெற்றவர். இறுதி வரையிலே அவர் கொண்ட திராவிடர் இயக்கக் கொள்கை உணர்-வோடு வாழ்ந்து மறைந்தார்கள். கஷ்ட நஷ்டங்களைப் பெற்றார்-களே தவிர, எந்தப் பல-னையும் அவர்கள் பெற-வில்லை.

மறைமலை இலக்குவனாரின் பெருமை

இலக்குவனார் அவர்க-ளு-டைய மகன் மறை-மலை இலக்குவனார் அவர்களை அமெரிக்-காவில் உள்ள கலிஃ-போர்னியா பல்கலைக் கழகம் அழைத்தது. ஹார்வர்டு பல்கலைக் கழகம், எம்.அய்.டி. பல்-கலைக் கழகங்கள் எல்-லாம் இருந்தது. அமெரிக்-கப் பல்கலைக் கழகம் ஒரு தமிழரை அழைத்து இதை எங்களுக்குச் சொல்லிக் கொடுங்கள் என்று அழைத்-தது என்றால், அப் பெருமை தமிழராகிய நமது மறைமலை இலக்-குவனார் அவர்களையே சாரும். அந்தப் பெருமை அவர்களுக்குத்தான் உண்டு. தான் ஒரு நாத்திகன் என்பதை அங்கே காட்டினார். நாத்திக நன்நெறியைப் பற்றி அவர் ஒரு நூல் எழுதுவேன் என்று சொன்னார். அதை அவர்-கள் சிறப்பாக செய்ய வேண்டும். அந்த சிறப்-பான நூல் வெளி வருவ-தற்கு நாங்கள் துணை-யாக இருப்போம். நாத்-திகன் என்று சொன்-னால் அவர்கள் நன் நெறியாளர்கள். அவரு-டைய குடும்பத்தாரையும், அவருடைய சேவைகளை-யும் இந்த நேரத்திலே பாராட்டி வாழ்த்து-கிறோம்.

அவர்களுக்கு நாங்கள் பெரியார் விருது கொடுத்-திருக்கிறோம் என்றால் அது தமிழர்களுடைய உள்ளத்தின் பிரதிபலிப்-பாகும்.

மங்கள முருகேசனின் சிறப்பான பணி

அதே போல பேராசி-ரியர் மங்கள முருகேசன் அவர்கள் மதுரை கல்-லூரியிலே இருந்து வந்தவர். அது பார்ப்பன ஆதிக்கக் கல்லூரி. அந்தக் கல்லூரியில் இருந்து வந்தவர் சுயமரியாதை உணர்வோடு இருக்-கிறார் என்றால் அவருக்கு இன்-னொரு விருதும் வழங்க-வேண்டும். அவர் ஓய்வு பெற்ற பிறகும் புது முறுக்கோடு பணியாற்றிக் கொண்டு வருகின்றார். சுயமரியாதை இயக்கத்-தைப் பற்றி எழுதி இருக்கின்றார். முத்தையா முதலியாரைப் பற்றி எழுதியிருக்கின்றார். உலகத் தலைவர் பெரி-யார் என்ற நூலை எழுதிக் கொண்டு வரு-கின்றார். அன்னை மணி-யம்மையாரைப் பற்றிய வரலாற்றையும் எழுதிக் கொண்டிருக்கின்றார். ஓய்வறியாத அவருடைய தொண்டறம் சிறப்பா-னது. இவர்கள் எல்லாம் மக்களுக்காகப் பாடு-பட்டுக் கொண்டிருக்கிற-வர்கள்.

அவருடைய வாழ்வி-ணையர் அவருக்கு எல்லா நிலையிலும் துணையாக இருந்து, அவர் படிப்-படியாக முன்னேற உறுதுணையாக இருந்து வருகின்றார். அவர்க-ளையும் இந்த நேரத்திலே பாராட்டி இரு குடும்பத்-தவர்களையும் பாராட்ட இந்த குடும்பங்கள் எல்-லாம் நம்முடைய சுயமரி-யாதைக் குடும்பங்கள்.

தமிழர்களுக்கு சங்கடம் என்றால்

தமிழர்களுக்கு எங்கோ ஒரு மூலையில் சங்கடம் ஏற்பட்டால் அதற்கு துடித்தெழக் கூடியவர்-களாக நாம் இருக்க வேண்டும். இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீர-மணி உரையாற்றினார்.

முத்தமிழ்மன்ற விழா

தந்தை பெரியார் முத்-தமிழ்மன்ற முதல் நாள் விழா இயல், நாடக விழாவாக (6.2.2010) சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது-. நடிகர் குமரிமுத்து பங்-கேற்றார். தந்தை பெரி-யார் முத்தமிழ் மன்றத்-தின் 14ஆம் ஆண்டு விழா (முதல் நாள் விழா) சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.-ஆர்.ராதா மன்றத்தில் 6.2.2010 அன்று இரவு 7 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கவிஞர் கலி.பூங்குன்றன்

தந்தை பெரியார் முத்தமிழ்மன்றம் தமிழர் தலைவர் தலைமையில் எப்படி சிறப்பாக இயங்கி தமிழர்களை அடை-யாளம் கண்டு சிறப்பித்து வருகிறது என்பதை கழகப்பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடக்கவுரை-யாற்றினார்.

பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வடசென்னை மாவட்ட தி.க தலைவர் கவிஞர் செ.-வை.ர.சிகாமணி அனை-வரையும் வரவேற்று உரையாற்றினார்.

முதல்நாள் விழா இயல், நாடக விழாவாகத் தொடங்கியது. வரியியல் அறிஞர் ச.ராசரத்தினம் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து முத்தமிழ்மன்ற விழாப் பெருமையையும், பாராட்டு பெறவிருக்-கின்ற பேராசிரியர் மறைமலை இலக்குவ-னாரையும் பேராசிரியர் மங்கள முருகேசன் அவர்களையும் பாராட்டி வாழ்த்திப் பேசினார்.

இலக்குவனார் படத்திறப்பு

பேராசிரியர் சி.இலக்கு-வனார் படத்தை திராவி-டர் கழக தலைவர் தமி-ழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்-தார்.

பெரியார் விருது முனைவர் மறைமலை இலக்குவனார், முனைவர் ந.க.மங்களமுருகேசன் ஆகியோருக்கு தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற விழா குழு சார்பாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீர-மணி அவர்கள் அனை-வருடைய கரவொலிக்-கிடையே பொன்னாடை அணிவித்து பெரியார் விருதினை வழங்கினார்.

வாழ்க்கை குறிப்புகள்

பேராசிரியர் முனை-வர் மறைமலை இலக்கு-வனார் வாழ்க்கைக் குறிப்பை பெரியார் நூலக வாசகர் வட்ட துணைச் செயலாளர் சுப்பிரம-ணியம் படித்தார். பேராசி-ரியர் முனைவர் ந.க.மங்-கள முருகேசன் வாழ்க்-கைக் குறிப்பை தலை-மைச் செயற்குழு உறுப்-பினர் க.பார்வதி படித்-தார்.

மங்கள முருகேசன்

பேராசிரியர் மங்கள-முருகேசன் தமது ஏற்பு-ரையில் திராவிடர் இயக்க உணர்வோடு நூல்-களை எழுதி வருவதையும், பேசி வருவதையும் குறிப்-பிட்டார். பெரியார் விருது வழங்கிய தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்ததோடு, உலகத் தலைவர் பெரியார், அன்னை மணியம்-மை-யார் வாழ்க்கை வரலாறு பற்றியும் நூலாக எழுதி வருவதை விவரித்தார்.

மறைமலை இலக்குவனார்

அடுத்து மறைமலை இலக்குவனார் தமது ஏற்புரையில், தமிழர் தலைவரால் பெரியார் விருது பெற்றதை பெரு-மையாகக் கூறினார். தமிழின உணர்வோடு தந்தை பெரியார் கொள்கை வழிநின்று தமது பாடு-பட்டு வருவதை எடுத்துக் கூறினார்.

நிறைவாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்-றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலைமாமணி நடிகர் குமரிமுத்து உடல்நிலை சரியில்லாத நிலையிலும் வந்து பங்கேற்றார். நாடகம்

அடுத்து அன்னை மணியம்மையார் கலைக் குழுவினர் சார்பில் கழக கலைத்துறை அமைப்-பாளர், பகுத்தறிவுக் கலைச்சுடர், இனமான நடிகர் மு.அ.கிரிதரன் இயக்கிய அகல்யா என்ற சமூக சீர்திருத்த நாடகம் நடைபெற்றது. நாடகத்தின் இடை-வேளை நேரத்தில் நா-டகத்தில் நடித்த கலைக் குழுவினரை பாராட்டி பேசினார். அதில் பங்-கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசினை தமிழர்தலைவர் கி.வீர-மணி அவர்கள் வழங்கி-னார்.

மீண்டும் நாடகம் தொடர்ந்து நடந்து இரவு 10 மணிக்கு முடி-வுற்றது. நாடகத்தைப் பார்த்த அனைவரும் இடையிடையே கர-வொலி எழுப்பி நாட-கத்தை மகிழ்ந்து பார்த்-தனர். தி.பெரியார் சாக்-ரட்டீஸ் நன்றி கூறினார்

ஞாயிறு, 22 நவம்பர், 2009

பேராசிரியர் இலக்குவனார் நூற்றாண்டு விழா



திருப்பரங்குன்றம், நவ. 21: திருப்பரங்குன்றத்தில் தமிழ் அறிஞர் பேராசிரியர் இலக்குவனார் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இலக்குவனார் ஏராளமான இலக்கிய, இலக்கண நூல்களை எழுதியவர். அவரது தமிழ்ப்பணி அளப்பரியது. அவரது நூற்றாண்டு விழா முற்போக்குக் கவிஞர் பேரவை சார்பில் நடைபெற்றது. இதற்கு நா. நாகசுந்தரம் தலைமை வகித்தார். பாவேந்தர் பேரவைச் செயலர் க. முருகேசன் முன்னிலை வகித்தார். வாசகர் வட்ட துணைச்செயலர் பொன். மனோகரன் வரவேற்றார். புலவர் ரா. இளங்குமரனார், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ரா. மோகன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். விழாவை முன்னிட்டு நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் அளிக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கவிஞர் பேரவை நிறுவனர் மு. தமிழ்கூத்தனார் செய்திருந்தார்.