ediorial லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ediorial லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 ஜூன், 2011

From delhi also: dinamani editorial about delhi edition: இனித் தில்லியிலிருந்தும்...

அருமையான நோக்கங்கள். சிறப்பாக  இவற்றை நிறைவேற்ற வாழ்த்துகள். நல்ல தமிழில் தில்லிப் பதிப்பு வெளி வரவேண்டும்; அங்குள்ளவர்களின் செய்திகளுக்கும் படைப்புகளுக்கும் முதன்மை அளிக்க வேண்டும்.  இணையப் பதிப்பிலும் இடம்பெற வேண்டும். 
பாராட்டுகளுடனும் வாழ்த்துகளுடனும் அன்புடனும் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இனி தில்லியிலிருந்தும்...

First Published : 03 Jun 2011 12:40:33 AM IST

Last Updated : 03 Jun 2011 05:20:36 AM IST

தலைநகர் தில்லியிலிருந்து "தினமணி'யின் எட்டாவது பதிப்பு இன்று வெளியாகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாகக் கனவாக இருந்த முயற்சி இன்று நனவாகி இருக்கிறது.தலைநகர் புது தில்லியில் பத்திரிகை அலுவலகங்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட பகதூர் ஷா சஃபர் மார்க் சாலையில், தமிழில் தினமணியின் பெயர்ப் பலகையுடன் ஓர் அலுவலகம் இயங்குவதை, சாலையில் வாகனங்களில் போவோரும் வருவோரும் அதிசயத்துடனும், ஆச்சரியத்துடனும் பார்த்துக் கொண்டு போகிறார்கள். அவர்களது விழிகளில் தெரியும் வியப்பு, நம்மை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கிறது.தலைநகர் புது தில்லியில் தமிழில் பெயர்ப் பலகையுடன் தனது அலுவலகத்தை நிறுவியிருக்கும் முதல் தமிழ் நாளிதழ் என்கிற பெருமையையும் உங்கள் தினமணி அடைந்திருக்கிறது. அந்தப் பெயர்ப் பலகையைப் பார்க்கும் போதெல்லாம் உள்ளத்தில் ஏற்படும் பூரிப்புக்கு அளவே இல்லை.தினமணி தனது தில்லி பதிப்பைத் தொடங்க இருக்கிறது என்கிற செய்தியை இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாமிடம் தெரிவித்தபோது, அவர் கேட்ட கேள்வி இதுதான்- ""தில்லியில் "தினமணி' நாளிதழின் பதிப்பை வெளிக்கொணர்வதன் நோக்கம் என்ன? இதன் மூலம் நீங்கள் அடைய இருக்கும் குறிக்கோள்தான் என்ன?''அந்தக் கேள்விக்கு பதில் தயாராகவே இருந்தது. தில்லி பதிப்பைத் தொடங்குவதற்கு எங்களுக்கு நான்கு காரணங்கள் இருந்தன. தில்லியில் தினமணியின் பதிப்பைத் தொடங்குவதன் நோக்கம் நிச்சயமாக விளம்பரங்களை வாங்கிக் குவித்து வருமானத்தைப் பெருக்குவதற்காக அல்ல என்பதில் ஆசிரியர் குழு மட்டுமல்ல, நிர்வாகமும் தெளிவான கருத்துடன்தான் இருந்து வந்தது. தில்லியில் மட்டும் ஏறத்தாழ 15 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால், இந்தத் தமிழ்க் குடும்பங்களில் பல தங்கள் குழந்தைகளுடன் தமிழில் பேசும் வழக்கத்தையே கைவிட்டு விட்டனர். பெருவாரியான குடும்பங்களில், பள்ளியில் இந்தியையோ, ஆங்கிலத்தையோ பாடமொழியாக எடுத்துக் குழந்தைகள் படிப்பதால் அவர்கள் தங்கள் தாய்மொழியில் பேசுவதைக்கூட விட்டுவிட்ட நிலைமை.ஆரம்பத்தில், தமது குழந்தைகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசுவதையும் படிப்பதையும் பெருமையாகக் கருதும் பல பெற்றோர்கள், அவர்கள் பெரியவர்களான பிறகுதான் தாங்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்மொழியாம் தமிழில் பயிற்சி அளிக்காமல் விட்டுவிட்டதை எண்ணி வருந்துகிறார்கள். இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே வழி தில்லிவாழ் தமிழர்களின் இல்லங்களில் "தினமணி' போன்ற தரமான தமிழ் நாளிதழ் ஒன்று இருப்பதுதான் என்று நாங்கள் கருதினோம்."தினமணி' நாளிதழை தினந்தோறும் பார்க்கும் குழந்தைகள் தங்களது பெற்றோரிடம் இது என்ன மொழி என்று கேட்டுத் தெரிந்து கொள்ளாதா, எழுத்துக் கூட்டித் தமிழ் படிக்கக் கற்றுக் கொள்ளாதா, தேமதுரத் தமிழில் பேசும், படிக்கும் இன்பத்தை அனுபவிக்காதா எனும் எதிர்பார்ப்பு பொய்த்துவிடாது என்கிற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே இருக்கிறது. "தினமணி'யின் தில்லி பதிப்பு வெளிக்கொணர்வதற்கான முதல் காரணம் இதுதான்.இரண்டாவதாக, தில்லிவாழ் தமிழர்கள் பல்வேறு பகுதிகளில் பிரிந்து கிடக்கிறார்கள். தில்லியில் மட்டும் ஏறத்தாழ 14 தமிழ்ச் சங்கங்கள் வெவ்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இந்த தில்லிவாழ் தமிழர்களின் பிரச்னைகளை முன்னிறுத்த, இவர்களுக்காகக் குரல் கொடுக்க நிச்சயமாக தேசிய நாளிதழ்களோ, தொலைக்காட்சிச் சேனல்களோ முன்வரப் போவதில்லை. அந்த நிலையில், தில்லியின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் தமிழர் தம் பிரச்னைகளை முன்னிறுத்தித் தீர்வு காண, தில்லிவாழ் தமிழர்களை இணைக்கும் ஒரு பாலமாக, இவர்கள் ஒருவருக்கொருவர் தங்களது நிகழ்வுகளை, தனிப்பட்ட சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் தளமாக "தினமணி' பணியாற்ற வேண்டும் என்பதுதான் தில்லி பதிப்புக்கான இரண்டாவது காரணம்.தமிழகத்தின் குரலை தலைநகர் தில்லியில் எதிரொலிக்கவும்,தமிழர்தம் உணர்வுகளை தேசியத் தலைநகரில் பிரதிபலிக்கவும் புது தில்லி அரசியல் நிகழ்வுகளை மட்டுமல்லாமல், மத்திய அரசிடமிருந்து பெறக்கூடிய சலுகைகளையும், வாய்ப்புகளையும் தமிழக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வழிகோலுவதும்தான் "தினமணி' நாளிதழின் தில்லி பதிப்புக்கான மூன்றாவது நோக்கம்.செய்தி ஆசிரியர், தலைமை நிருபர் உள்ளிட்ட ஒரு முழுநேர ஆசிரியர் குழுவே "தினமணி'யின் தில்லி பதிப்பு அலுவலகத்திலிருந்து செயல்படுவதால், தேசிய ஆங்கில நாளிதழ்களுக்கு இணையாகத் தலைநகர் நிகழ்வுகள் தினமணியின் எல்லா பதிப்புகளிலும் வெளியாகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல, தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகள் இனிமேல் தலைநகரில் பிரதிபலிக்கும். பொறுப்பான பதவிகளில் இருக்கும் தலைநகர்த் தமிழர்கள் நமது பிரச்னைகளுக்குத் தீர்வு காண "தினமணி' நாளிதழின் செய்திகள் காரணமாக இருக்கும்.நாடாளுமன்றம் செயல்படும் நாள்களில், தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகளுக்கு "தினமணி' தில்லி பதிப்பு முன்னுரிமை கொடுத்து வெளியிடும்போது, நமது மக்களவை உறுப்பினர்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும் அந்தப் பிரச்னைகளுக்காகக் குரலெழுப்ப வாய்ப்பு ஏற்படும். அதுமட்டுமல்ல, நாம் தேர்ந்தெடுத்து அனுப்பும் பிரதிநிதிகளும், மத்திய அமைச்சரவையில் உள்ள தமிழக அமைச்சர்களும் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனித்து, நல்லது செய்தால் அதைப் பாராட்டி மகிழ்ந்து, தவறுகள் செய்தால் அதை வெளிச்சம் போட்டுக் காட்டி தனது கடமையைச் செய்து, தமிழ்ப் பணியுடன் சமுதாயப் பணியையும் "தினமணி' இந்தப் பதிப்பின் மூலம் தமிழகத்திற்குச் செய்யும் என்பதையும் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறோம். இதுதான் தில்லி பதிப்புக்கான நான்காவது காரணம்.இன்னும் இரண்டு ஆண்டுகளில் பத்திரிகைப் பணியில் தனது 80-வது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கும் "தினமணி' இன்று தனது 8-வது பதிப்பைத் தொடங்குகிறது. அன்றும் இன்றும் என்றும் "தினமணி' என்பது வாசகர்களின் நாளேடாகத்தான் தொடர்ந்து வந்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியான வேளையில் உங்களுடன் "தினமணி' ஆசிரியர் குழுவும் "தினமணி' நாளிதழின் அடுத்த கட்ட வளர்ச்சியில் பெருமையும் பெருமிதமும் கொள்கிறது.மகாகவி பாரதி கூறுவார், "வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்... வாழிய பாரத மணித்திரு நாடு'' என்று. பாரதியின் 13-வது நினைவு நாளன்று அந்த மகாகவியின் சுதந்திர தாகத்தையும் சமத்துவக் கொள்கைகளையும் பரப்பும் நோக்கத்துடன் பிறந்த நாளிதழ் "தினமணி'. அந்தப் பாதையில் பீடு நடை போட்டு இந்தியத் தலைநகரில் தடம் பதிக்கும் இந்த வேளையில், "தினமணி' நாளிதழுக்கு அடித்தளமிட்ட நிறுவன ஆசிரியர் "பேனா மன்னன்' டி.எஸ். சொக்கலிங்கத்தையும், நீண்டநாள் ஆசிரியர் - 44 ஆண்டுகள் - ஏ.என். சிவராமனையும் நாம் நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறோம்.மகாகவி பாரதி வகுத்த பாதையில், அண்ணல் காந்தியடிகளின் அடிச்சுவட்டையொட்டி தேசியச் சிந்தனையுடனும், தமிழின உணர்வுடனும் "தினமணி' நாளிதழின் அடுத்த கட்டப் பயணம் உங்கள் வாழ்த்துகளுடனும் நல்லாதரவுடனும் தொடர்கிறது...

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

dinamani editorial about the judgement of circus children

நல்ல உரை. பாராட்டுகள். நீதிமன்றங்கள் ஒரே நோக்கில் ஆராயமல் பன்முக  நோக்கில் ஆய்ந்து, ஒத்த சூழலில் உள்ள நடைமுறைகளையும் ஆராய்ந்து
தீர்ப்பு வழங்கினால் தவறு நேர்வது மிகவும் குறையும். வட்டரங்காட்டப் பள்ளிகள் அமைத்துச் சிறு அகவையில் இருந்தே கல்வியும் பயிற்சியும் ஒழுக்கமும் கற்பிக்கலாம். விலங்குகளையும் குட்டிப் பருவத்திலிருந்தே வதைபுரியாமல் பயிற்சி அளிக்கச் செய்யலாம். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 




தலையங்கம்: சர்க்கசாடப்படும் சர்க்கஸ்!

சர்க்கஸில் குழந்தைகள் வேலை செய்யத் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். தற்போது நிகழும் சர்க்கஸ்களில் ஆய்வு நடத்தி, 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்க வேண்டும் என்று நீதிபதி தல்வீர் பண்டாரி தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.  இந்தத் தீர்ப்பை குழந்தைகளுக்கான தன்னார்வ அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் பாராட்டும் அதேவேளையில், ஏற்கெனவே தொழில் செய்ய முடியாமல் நொடித்துப்போய்க் கிடக்கும் சர்க்கஸ் நிறுவனங்களுக்கு இந்தத் தீர்ப்பு மேலும் ஒரு பேரிடியாக அமைந்திருக்கிறது.  "விலங்குகளைத் துன்புறுத்துகிறார்கள்; அதன் இயல்புக்கு மீறிய செயல்களைச் செய்ய வைக்கிறார்கள் என்று சர்க்கஸ் நிறுவனங்கள் மீது புகார் வந்தபோது, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல ஆய்வுகள், பல சான்றிதழ்கள் பெறவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இப்போது குழந்தைகளைப் பணியமர்த்தக்கூடாது என்கிற பிரச்னை.  இதற்கு சர்க்கஸ் நிறுவனங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கின்றன. ""அக்ரோபேடிக் செய்வதற்குக் குழந்தைகளை இளம் வயதில் மட்டுமே பயிற்றுவிக்க முடியும். உடலை "ங' போல் வளைக்க வேண்டுமானால் இளம் வயதிலேயே பயிற்சி தொடங்கப்பட வேண்டும். இவ்வாறு 14 வயதுக்குள்பட்ட குழந்தைகள் சர்க்கஸில் இருக்கவே கூடாது என்றால், பிறகு எப்படி அக்ரோபேடிக்-குகளை உருவாக்குவது?'' என்று கேட்கின்றனர் சர்க்கஸ் தொழில் நடத்துவோர். இது நியாயமான கேள்வியும்கூட.  14 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் திரைப்படங்களில் நடித்து - தொழில்புரிந்து - சம்பளம் வாங்குகிறார்கள் என்பதற்காக, அந்தத் திரைப்படத் தயாரிப்பாளர் மீதும், இயக்குநர் மீதும் குழந்தைத் தொழிலாளர்கள் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றால், திரைப்படங்களில் குழந்தை வேடங்களில் யார்தான் நடிக்க முடியும்? சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதை யாருக்குத்தான் கொடுப்பது?  திரைத்துறையில் நடிக்கும் (அல்லது பணியாற்றும்) குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுவதில்லை, நல்ல சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பதற்காக அதை ஏற்க முடியும் என்றால், அக்ரோபேடிக் போன்ற சர்க்கஸ் விளையாட்டுகளில் மட்டும் ஏன் இதே நியாயங்களை ஏற்கக்கூடாது?  ஐரோப்பிய நாடுகளில், சர்க்கஸில் குழந்தைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால், அக்குழந்தையின் தாய் அல்லது தந்தை உடனுறைபவராக இருக்கவும், அக்குழந்தையின் கல்விக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் சர்க்கஸ் நிறுவனம் உறுதி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கிறது.  ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நடைபெறும் போர் மற்றும் வன்முறைகளால் குழந்தைகள் மனம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகக் குழந்தைகள் நடத்தும் சர்க்கஸ் (ஆப்கன் மொபைல் மினி சர்க்கஸ் ஃபார் சில்ரன்) உருவாக்கப்பட்டு, தற்போது ஐரோப்பா, ஜப்பான் நாடுகளில் இந்த சர்க்கஸ் குழு தனது நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதில் அங்கம் வகிப்போர் 6 வயது சிறார் முதல் 18 வயதுக்குள்பட்டவர்கள். இதில் இடம்பெறும் குழந்தைகள் உடல்வளைத்தல், நடனமாடுதல், பஃபூன் என எல்லாவற்றையும் செய்கின்றனர்.  ரஷியாவில் உடல்வளைக்கும் பயிற்சிகளை 7 வயதிலேயே தொடங்கி விடுகிறார்கள். அப்போதுதான் அவர்களால் இதில் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும். அவ்வாறு மிக இளம் வயதிலேயே உடல்வளைப்புப் பயிற்சியில் ஈடுபட்ட குழந்தைகள் மட்டுமே ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்றுள்ளன. ரஷியாவில் அது விளையாட்டு; ஆனால், சர்க்கஸ் ஒரு தொழில் என்று வேறுபாடு காணலாம்தான். ஏன் நாம் இதையே ஒரு விளையாட்டுப் பயிற்சியாகப் பார்க்கக்கூடாது? சம்பளம் என்றில்லாமல் இந்தப் பயிற்சிக்கான ஊக்கத்தொகையாக ஏன் அந்த சர்க்கஸ் நிறுவனம் தரும்படி செய்யக்கூடாது?  இதைச் செய்ய வேண்டுமானால், இத்தகைய அக்ரோபேடிக் பயிற்சிகளில் ஈடுபடும் குழந்தைகள் அனைவரையும் விளையாட்டு ஆணையத்தின் கீழ் பதிவு செய்யவும், மாதந்தோறும் இவர்களை ஆய்வு செய்யவும், சிறப்புக் கவனம் செலுத்தி கூடுதல் பயிற்சி, பயிற்சிக்கான உபகரணங்கள், உணவு, ஆகியவை சரியாக வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும் வேண்டும். இக்குழந்தைகளின் படிப்பு தடைபடாமலும், அதேவேளையில் இவர்களின் மற்ற பொழுதுபோக்குகள் பாதிக்கப்படாமலும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு விளையாட்டு ஆணையத்துக்கு அளிக்கப்பட வேண்டும். விளையாட்டு ஆணையம் இதை முறையாகவும், நேர்மையாகவும் செயல்படுத்தினால், இந்தியாவும் ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் பதக்கங்களைவென்று வரும் வாய்ப்புகளை உருவாக்கலாம்.  பதினான்கு வயதுக்குள்பட்ட குழந்தைகள் யாரும் பணியமர்த்தப்படக்கூடாது என்பது இந்தியச் சட்டம். சட்டத்தின் அடிப்படையான நோக்கம்- குழந்தைகளின் கல்வி கற்கும் உரிமை பாதிக்கப்படக்கூடாது என்பதும், குழந்தைகள் தங்கள் வயதுக்கான விளையாட்டு உள்ளிட்ட மகிழ்ச்சியான தருணங்களைப் பறிப்பதாக இத்தொழில் அமையக்கூடாது என்பதும்தான்.  இச்சட்டத்தை அமலாக்கிய நாள் முதலாக, தொழில்துறையின் பல பிரிவுகளிலும் சிக்கியிருந்த குழந்தைகள் மீட்கப்பட்டு, தன்னார்வ அமைப்புகள் மூலம் இவர்களுக்குக் கல்வி அளிக்கவும் பெரும்நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த நிதி எந்த அளவுக்குக் குழந்தைகளுக்குப் பயன்பட்டது? அடிப்படையான நோக்கம் எட்டப்பட்டதா என்பது கேள்விக்குறிதான்.  சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற முடியும் எனும் வாய்ப்புகள் உள்ள, ஆபத்து இல்லாத, தவிர்க்க முடியாத இடங்களில் குழந்தைகள் தொழில்புரிய, சட்டத்தில் சில விதிவிலக்குகளையும் நிபந்தனைகளையும் ஏற்படுத்துவது அவசியம்.  உச்ச நீதிமன்றம் இதைவிட சர்க்கஸ் தொழிலுக்கே தடைவிதிக்கக் கோரியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. மிருகங்களும் கூடாது, உடல் சாகச வித்தைகளும் சாத்தியமில்லை என்றால் அது என்ன சர்க்கஸ்? யார் அதைப் பார்ப்பார்கள்? 

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

dinamani concerned about innocents like Roy Varghees :தலையங்கம்: இப்படியும் நடக்கிறது...

செய்தியைப் படித்த பொழுது ஏற்பட்ட வருத்தத்தை விட ஆசிரிய உரையைப் படிக்கும் பொழுது சோகம் உள்ளத்தைத் தைக்கிறது. மரணத்தண்டனைக்கு உரிய செல்வாக்கு உள்ள குற்றவாளிகள் பாதுகாப்பாக வெளியே  உலா வரும் பொழுது அப்பாவிகள் கொட்டடியில் சாகடிக்கப்படுகிறார்கள் என்பது  நாட்டின் இழிதகைமையை உணர்த்தி உள்ளத்தைச் சுடுகிறது. உயிரோவியன் குறிப்பிட்டாற்போன்று பேரறிவாளன் குறித்தும் தனியே ஓர் ஆசிரிய உரை எழுத வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற பொய்யான நிலைப்பாடு அகல  ஆட்சிப் பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோர்   பணிக் குற்றங்களுக்குத் தனித் தண்டனை என்னும் நிலை வந்தால்தான் உண்மையிலேயே சட்டத்தின்  முன் யாவரும் சமம் என்ற நிலை வரும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் <தமிழே விழி! தமிழா விழி!>செய்தியைப் படித்த பொழுது ஏற்பட்ட வருத்தத்தை விட ஆசிரிய உரையைப் படிக்கும் பொழுது சோகம் உள்ளத்தைத் தைக்கிறது. மரணத்தண்டனைக்கு உரிய செல்வாக்கு உள்ள குற்றவாளிகள் பாதுகாப்பாக வெளியே  உலா வரும் பொழுது அப்பாவிகள் கொட்டடியில் சாகடிக்கப்படுகிறார்கள் என்பது  நாட்டின் இழிதகைமையை உணர்த்தி உள்ளத்தைச் சுடுகிறது. உயிரோவியன் குறிப்பிட்டாற்போன்று பேரறிவாளன் குறித்தும் தனியே ஓர் ஆசிரிய உரை எழுத வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற பொய்யான நிலைப்பாடு அகல  ஆட்சிப் பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோர்   பணிக் குற்றங்களுக்குத் தனித் தண்டனை என்னும் நிலை வந்தால்தான் உண்மையிலேயே சட்டத்தின்  முன் யாவரும் சமம் என்ற நிலை வரும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் <தமிழே விழி! தமிழா விழி!>


தலையங்கம்: இப்படியும் நடக்கிறது...

கேரளத்தைச் சேர்ந்த ராய் வர்கீஸ் என்பவர் எதற்காக ராஜஸ்தான் போனார், அவர் ஏன் ஜெய்ப்பூர் சிறைச்சாலையில் இத்தனை ஆண்டுகளாக முறையான விசாரணை இல்லாமல் அடைபட்டுக் கிடந்தார் என்பதெல்லாம் புதிராக இருக்கின்றன. ஜெய்ப்பூர் சிறைச்சாலை ஆவணங்களின்படி அவரது பெயர் ஹிட்லர் பாபாகான் என்று காணப்படுகிறது. கைது செய்யப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஏதாவது பெயர் தரப்பட வேண்டும் என்பதற்காகக் காவல்துறையில் வைக்கப்பட்ட கற்பனைப் பெயராகக்கூட இருக்கலாம் ஹிட்லர் பாபாகான் என்பது.  18 ஆண்டுகளும் நான்கு மாதங்களும் ராய் வர்கீஸ் என்கிற ஹிட்லர் பாபாகான் ஜெய்ப்பூர் சிறைச்சாலையில் ஒரு விசாரணைக் கைதியாகத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுத் தனது வாழ்க்கையைக் கழித்திருக்கிறார். அவர் என்ன குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருக்கிறார் என்பதே கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்புதான் தெரிவிக்கப்பட்டது. அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது கொலைக்குற்றம். வேடிக்கை என்னவென்றால் அப்படி ஒரு கொலை நடந்தது பற்றியேகூட அவருக்குத் தெரியாது என்பதுதான்.  ராய் வர்கீஸ் எப்போது புத்தி சுவாதீனத்தை இழந்தார் என்று யாருக்குமே தெளிவாகத் தெரியவில்லை. சித்தப்பிரமையுடையவர்களை மனநோய் மருத்துவமனைக்குச் சிறைச்சாலை நிர்வாகம் அனுப்ப வேண்டும் என்பதுதான் விதி, சட்டம். ஆனால், ஹிட்லர் பாபாகான் என்கிற ராய் வர்கீஸ் பல ஆண்டுகளாக ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையிலுள்ள தனிமைச் சிறையில்தான் அடைபட்டுக் கிடந்திருக்கிறார். தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் என்ன என்பதுகூடத் தெரியாத நிலையிலுள்ள ஒருவரை ஏன், எதற்காக இப்படித் தனிமைச் சிறையில் அடைத்து, சித்திரவதை செய்தது சிறைச்சாலை நிர்வாகம் என்பதற்குப் பதில் கிடையாது.  ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரிலுள்ள ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக உள்ள சகோதரி மரியோலா, ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்குப் போதனை செய்வதற்காகவும், மனசாந்திக்காகப் பிரார்த்தனை செய்வதற்காகவும் சென்றிருந்தபோது, ஹிட்லர் பாபாகான் பற்றிய தகவல்களைக் கேட்டறிந்திருக்கிறார். இந்த வழக்கைப் பற்றியும், ஒரு மனநோய் பாதிக்கப்பட்ட மனிதர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவலத்தைப் பற்றியும் வெளியுலகுக்குத் தெரிவித்தவர் சகோதரி மரியோலாதான்.  கடந்த ஜனவரி 25-ம் தேதி ஜெய்ப்பூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் ஹிட்லர் பாபாகான் என்கிற ராய் வர்கீஸýக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதுவும் எப்படி? ரூ. 50,000-க்கு உத்தரவாதமும், அவரைப் பாதுகாப்பதாக வாக்குறுதியும் எழுதி வாங்கிய பிறகுதான் 18 ஆண்டுகளாகத் தனிமைச் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்த ராய் வர்கீஸ் ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையிலிருந்து அனுப்பப்பட்டார்.  இப்போது ராய் வர்கீஸ் கேரளத்திலுள்ள தனது சகோதரியின் பாதுகாப்பில் ஒரு மனநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 18 ஆண்டுகள் சிறைவாழ்வில் முழுமையாகப் பார்வையை இழந்துவிட்டிருக்கும் அந்த மனிதருக்குத் தன்னைப் பற்றியோ, தான் சிறையில் கழித்த நாள்களைப் பற்றியோ, இப்போது விடுதலையாகித் தனது சகோதரியுடன் இணைந்திருப்பது பற்றியோ எதுவுமே தெரியவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமையான விஷயம்.  யார் ஹிட்லர் பாபாகான்? அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் கொலை வழக்குதான் என்ன? இனிமேல் அதைப்பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை. உண்மையான கொலைகாரன் தப்பிவிட்டான். அப்பாவி நிரபராதி ஒருவர் செய்யாத குற்றத்துக்காகத் தண்டனை அனுபவித்து இப்போது மனநோயாளியாக ஊருக்கு அனுப்பப்பட்டு விட்டார். இதுபோல மேலும் 82 விசாரணைக் கைதிகள் ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையில் இருப்பதாகவும், அவர்களுக்கும், தான் உதவப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார் சகோதரி மரியோலா.  இது ஏதோ ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையில் மட்டும்தான் நடக்கிறது என்று நினைக்காதீர்கள். இந்தியாவிலுள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலும் ராய் வர்கீஸ் போன்ற ஆயிரக்கணக்கான அப்பாவிகள் முறையான விசாரணைக்கு ஆண்டுக்கணக்காகக் காத்திருந்து தங்களது வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். சுமத்தப்பட்ட குற்றத்துக்கான அதிகபட்சத் தண்டனையில் பாதி நாள்களை சிறையில் கழித்திருந்தால், விசாரணைக் கைதியை சொந்த ஜாமீனில்விட வேண்டும் என்பது விதி. இந்திய சிறைச்சாலைகளில் உள்ள 80% கைதிகள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களும், கல்வியறிவு இல்லாதவர்களும் என்பதால், இப்படி ஒரு விதி இருப்பதே பல விசாரணைக் கைதிகளுக்குத் தெரியவே நியாயமில்லை.  இந்திய சிறைச்சாலைகளின் நிலைமையை எடுத்துக்கொண்டால், மனித உரிமை மீறலின் உச்சகட்டமே அதுவாகத்தான் இருக்கும். போக்குவரத்து நெரிசலைவிட மோசமான நெரிசல் இந்திய சிறைச்சாலைகளில்தான் காணப்படுகிறது. 2008 புள்ளிவிவரப்படி, இந்தியாவிலுள்ள மொத்தம் 1,356 சிறைச்சாலைகளில், 3,84,753 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறைச்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை 2,97,777. ஏறத்தாழ 88 ஆயிரம் பேர் அதிகமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.  கைதிகள் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருக்கின்றன என்பது ஒருபுறம். சிறைச்சாலை ஊழியர்களின் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட 68,920-க்குப் பதிலாக 49,250தான் காணப்படுகிறது என்கிறது தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம்.  நீதிமன்றங்களின் நிலைமை அதைவிட மோசம். மூன்று கோடிக்கும் அதிகமான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. பத்து லட்சம் மக்கள்தொகைக்குக் குறைந்தது 50 நீதிபதிகள்கூட இல்லாத நிலைமையில் வழக்குகளை விரைந்து முடித்து, விசாரணைக் கைதிகளுக்கு இறுதித் தீர்ப்பு வழங்குவது எப்படி?  ராய் வர்கீஸýக்கு ஏற்பட்ட நிலைமை நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் நேரலாம். ஏதாவது வெளியூரில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சந்தேக வழக்கில் அழைத்துச் செல்லப்பட்டு ஏதாவது பெயரில் விசாரணைக் கைதியாக்கப்படலாம்.  இதைப் பற்றி மக்கள் மன்றம் கவலைப்பட மறுக்கிறதே, அதுதான் கவலையளிக்கிறது!
கருத்துகள்

காங்கிரஸை இந்தியாவின் அனைத்து மாநிலத்தில் இருந்தும் ஒழிக்கப்பட வேண்டும்,அப்போது தான் இந்தியா உருப்படும், இன்னும் அதை விடுதலைகாக போராடிய கட்சி என்ற நோக்கில் பார்ப்பது மடமை,
By வெங்கடேஷ்
2/21/2011 9:48:00 PM
இலவசம் மட்டும் கொடுக்க முடியும், நாடே அழிந்தாலும் பரவாயில்லை. நம் நாட்டிம் கேடு எப்போது முடியுமோ?
By rajarajan99
2/21/2011 9:07:00 PM
அப்படியென்றால் அந்தகொலையை செய்தது யார் என்று தானே முன் வந்து நீதிமன்றம் கேள்வி எழுப்பவேண்டும் என்பது என் அவா. தவறுக்கு காரணர்கள் தண்டிக்கப்படவேண்டும் .
By எ.ஜோசப் செல்வராஜ்
2/21/2011 9:01:00 PM
வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கும் வர்கீஸ் நமது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் ஓட்டைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். நீதி பாலிக்க வேண்டியவர்களும், நீதியை நடப்பிலாக்க வேண்டியவர்களும் செய்யும் தவறுகள். கோடிக்கணக்கில் வழக்குகள் தேங்கி கிடந்தாலும் கோர்ட் புறக்கணிப்பு நடத்தும் வக்கீல்களும் இதற்கு காரணம். நல்ல மனதுடைய சகோதரி யாருக்கோ உதவி செய்யபோய் அது தனது சொந்த சகொதரனகிவிட்டது ஆண்டவனின் செயல். நவாஸ்.
By Nawaz
2/21/2011 8:44:00 PM
மாந்தநேயம் தழுவிய தலையங்கத்துக்கு பாராட்டுகள். இந்த மாந்தநேய வீச்சு இரண்டு மின்கலம்(பேட்டரி) வங்கி கொடுத்ததற்காக தூக்கு கொட்டரையில் சுமார் இருபது வருடங்களாக போராடிகொண்டிருக்கும் பேரறிவாளன் மீதும் விழட்டும்.
By உயிரோவியன்
2/21/2011 7:52:00 PM
இது மாதிரி அப்பாவி மனிதர்களை jail -லில் தள்ளுவதால் அவன் வேளிய வந்து திவிரவாத செயலில் ஈடுபட காரணமாக அமைந்து விடுகிறது.
By jinnah
2/21/2011 6:48:00 PM

Things are ok. But the last para about courts, I encounted one case for self two years back - general issues. Most of the Judges, Lawyers are relative. All the Lawyers companyes are one umberla. They want to make money out of it. None of the judges are interested to enquire the case throughly. Everytime they sows to postpone the hiring (just I experienced). Even the Genuine case they try to prolong. Then only they can make money out of it. Lawer. General people will get one stage fed-up. You can not pay other charges every time (not lawyer fees) which itself goes thousnads of rupees. If you keep Number One Lawyers on your case day, they the Judge will see his face, ask some questions. If you keep any secondary / third grade Lawyers, the available Judge will see him and ask him funny questions. This is practical I have seen in Delhi High Court and Delhi Supreme Court. If they act like this, how will cases will get final verdict. How Judges, sons/daughters, relatives, friends their compa
By psk
2/21/2011 6:28:00 PM
தலையங்கம் எழுதியும், இவர்கள் திருந்துவது இல்லை. இவர்களுக்கு நல்ல மருந்து பொது மக்கள் வீதிக்கு வந்து போராடவேண்டும்
By பிள்ளை
2/21/2011 6:26:00 PM
அரசை விட்டுவிடுங்கள் அது உழல் அமைப்பின் ஒரு அங்கம். உச்ச நீதிமன்றம் என்ன செய்துகொண்டிருக்கின்றது? இங்கே ராஜபக்ஷ செய்யும் கொடுமைக்கு ஒரு காரணம் உண்டு. இனவெறி. ஆனால் இந்திய அப்பாவி மக்கள் அனுபவிக்கும் கொடுமைக்கு யார் மீது பழி போடுவது? உச்ச நீதிமன்றம் நிமிர்ந்து இயங்காத வரை எந்தவொரு உழல் அரசை யாரும் தட்டிக்கேட்க முன்வரப் போவதில்லை.
By கருப்புசாமி
2/21/2011 4:42:00 PM
It is true that prisons are overcrowded.If you look at statistical data most of them may be remand prisoners without being charge sheeted.This can be looked into to analyze reasons for in filing charge sheets.The habitual offenders form a significant part of prisoners.More over process of reformation by keeping them engaged in labour takes a back seat for want of a vision and budgetary support.By lodging under trials without any trial,or speeding up process in courts costs a burden to exchequer and liberty of individual gets lost forever. The CAG report has pointed out deficiencies in Prison control few years back.This may be senn
By SIVAN
2/21/2011 4:34:00 PM
ippadi thanimai siraiyil adaikka padavendiya namathu arasiyalvaathigal police paathukaapudan kaaril valam varugiraargal. aanal appavigal siraiyil vaadugiraargal. namathu naadu alivu paathaiyil sendru kondirukkirathu.
By saravanan
2/21/2011 3:15:00 PM
தங்களின் தலையங்கம் நெற்றியில் அடித்தால் போல் உள்ளது. உண்மையில் தாங்கள் எதிர் கட்சியாக செயல்பட்டு மக்கள் சார்பாக கேள்வி கேட்க உரிமை உண்டு. பத்திரிகை என்பது நாட்டின் முதுகெலும்பு என்பதற்கு இதுவே எடுத்துகாட்டு. மேலும் வேறு ஒரு பத்திரிகையில் நான் இன்று ஒரு தலையங்கம் கண்டேன். ஐயோ கொடுமை. இதற்கு பத்திரிகை நடத்துவதற்கு தெருவில் பிச்சை எடுக்கலாம்.
By உண்மை
2/21/2011 2:33:00 PM
இந்திய சுயநலம் பேணும் இடமாகிவிட்டது. எப்படி சுதந்திர போராட்டம் நடந்தது? ஆச்சரியமா இருக்கு.
By Moorthy
2/21/2011 11:34:00 AM
இது ஒரு கொடுமையான நிகழ்வாகும். சந்தேகத்தின் பெயரில் பிடித்து ஒரு நிரபராதியை குற்றவாளியாக்கிய அந்த காவலர்களுக்கும் சரியான தண்டனையை வழங்கவேண்டும்.
By கிருஷ்ணா - தேனி
2/21/2011 11:16:00 AM
இங்கு யாருக்கும் பொது நலன் பற்றி எந்த கவலையும் கிடையாது.. தன் நலன் தன் குடும்பம் தன் தொப்பை... பற்றி எல்லோருக்கும் கவலை. இந்தியா எனும் நாடு மிக மோசமான சுய நலத்தின் ஓரு பண்பாட்டு அடையாளமாக மாறிவருகிறது. காரணம் அதன் கேடுகெட்ட தலைவர்கள் சோனியா குடும்பம், கருணாநிதி குடும்பம் போன்றவர்கள் அதற்கு உதாரணம்.
By தேவன்
2/21/2011 10:40:00 AM
இந்த மாதிரி அநியாயம் பண்ண போலீசாருக்கு என்ன தண்டனை ? இவர்களை பிடித்து சாகும் வரை சிறைச்சாலையில் போட வேண்டும்.
By சுகுமார் மங்களூர்
2/21/2011 10:14:00 AM

அரசு அதிகாரிகளும் தன கடமையிலிருந்து தவறினால் அவர்களின் வேலையை பறித்து அவர்களையும் SIRAIYIL தள்ள வேண்டும். அதே போல், காவதுரை ADHIKARIKALAIYUM சும்மா விடக் கூடாது. இது போன்ற சம்பவங்களுக்கு அவர்களே முற்றிலும் PORUPPU. அரசியல் வியாதிகள் தவறு செய்யுM பொழுது அவர்களின் எதிகாலம் கேள்விக்குறியாக மாறும் அளவிற்கு தண்டிக்கப் படவேண்டும். குற்றம் செய்தால் தண்டனை நிச்சயம் என்ற பயம் இருந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்.
By THANGAMANI
2/21/2011 10:08:00 AM

அப்பாவி மனிதர்கள் துருப்பிடித்த ஜெயில் கம்பிகளுக்கு பின்னால், ஒட்டிய கன்னங்களும், உலர்ந்த உதடுகளோடும் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருக்கும் பரிதாபமான காட்சி தான், கண்ணுக்கு தெரிகிறது. அப்பாவி மனிதர்களின் இந்த அவலத்துக்கு, முழு பொறுப்பும் காவல் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளையே சேரும். ஆவணங்கள் முறைப்படி சரி பார்க்கப்பட்டிருந்தால், இப்படி நடந்திருக்காது. மக்களுக்கு, நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை குறைவது அவ்வளவு நல்லது இல்லை.
By பி.டி.முருகன் திருச்சி
2/21/2011 9:44:00 AM

இப்படி இந்தியாவில் மட்டும்தான் நடக்கிறது. இந்த புண்ணிய பூமியில் எல்லா கொடுமைகளும் சாத்தியம். நாமவர்களுக்கு கோவில் கும்பாபிஷஹங்களும் செவ்வாய் வெள்ளி உம்தான் எல்லாம். மனித உரிமை மீறல் என்பதற்கு அர்த்தம் கூட தெரியாத வெகுளி ஜனங்கள்!!!!!
By Rathnasingh
2/21/2011 9:17:00 AM
நினைத்தாலே பயமாக இருக்கிறது
By நலம் விரும்பி
2/21/2011 8:40:00 AM
இதற்க்குக் காரணம் என்ன என்றால் மேல் அதிகாரிகளுக்கு ஒரு கணக்குக் காட்ட அல்லது பெரிய இடத்திலிரிந்து வரும் ஆணைக்கு இணங்க காவலர்கள் யாரையாவது பிடித்து இவர்களே பணத்தையும் போட்டு இவர்தான் திருடினார் என்று காட்டி வருவதாலேயேதான் இது போன்ற தவறுகள் மிக மிக அதிக அளவில் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. தற்போது இந்த நிகழ்வுகளை வெளிக்கொணர்ந்த அந்த சகோதரிக்கு என்ன நடக்கப்போகிறதோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். வந்தே மாதரம் Lion Dr S Sekar India
By Lion Dr S Sekar
2/21/2011 8:19:00 AM
" ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது " என்று நமது குற்றவியல் சட்டங்கள் சொல்வதாக கூறுவார்கள் . நெருக்கடிநிலைக்காலத்தில் மிசா கைதியாக சிறைவைக்கப்பட்ட ,சிட்டிபாபு சிறையில் கொடூரமாக தாக்கப்பட்டதில் இறந்து போனார். ஸ்டாலினுக்கும் தாக்குதலினால் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது . அதற்கு காரணமான சிறை வார்டன் வித்யாசாகர் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டார் ,தண்டிக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை . அரசியலில் தமக்கு வேண்டாதவர்களை பழி வாங்கும் ஒரு அங்கமாகவே சிறைச்சாலை பயன்படுத்தப்படுகிறது .
By மூர்த்தி
2/21/2011 7:42:00 AM

ஆசிரியர் அவர்களது கருத்து சுய உணர்வு கொண்ட அனைவரையும் உலுக்கும் என்பது உண்மையே! ஆனால், இன்று ஆளுக்கு இரண்டு ‘அலை பேசிகள்’; முடிந்தால் சட்ட ரீதியான துணையோடு ,’அவசரத்துக்கு’ இன்னொன்று; ஆடம்பரப் பொருட்களைத் தேடித்தேடிச் சேர்ப்பது, இவைகள்தாம் ‘மானுடத் தேவைகள்’ என்னும் மனோபாவம்........அதிகரித்துக் கொண்டிருக்கையில்...... நீதியையும், அடைப்படை மனித விழுமியங்களையும் பற்றிச் சிந்திப்பதற்கு நேரம் எங்கே கிடைக்கிறது? உலகமயமாதலில்...... மானுடம் சிறுகச்சிறுகத் தன் இயல்பை இழந்து செத்துக்கொண்டிருகிறது . இதனை மாற்ற மீண்டும் ஓர் ‘யுகப் புரட்சி’ ஏற்படவேண்டும். இல்லையேல், இவ்வாறு மனம் வருந்தித் ‘தலையங்கங்கள்’ எழுதுவதைத் தவிர வேறென்ன செயதுவிட முடியும்?[www.sarvachitthan.wordpress.com]
By சர்வசித்தன்
2/21/2011 5:17:00 AM
unmai orubodhum dhandikapadakudadhu.
By ramkumar
2/21/2011 1:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *