சனி, 23 அக்டோபர், 2010

காஷ்மீர் விவகாரத்தில் தலையிடமாட்டோம்: அமெரிக்கா திட்டவட்டம்


வாஷிங்டன், அக்.22: காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமெரிக்கா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வுகாண அமெரிக்கா உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் புதிதாக விடுத்த கோரிக்கையையும் நிராகரித்துவிட்டது.அமெரிக்க-பாகிஸ்தான் இருதரப்பு உறவு குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மொஹமத் குரேஷி, காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்பட அமெரிக்கா தீவிரமாகப் பாடுபட்டு வருகிறது. காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என்பதிலும் முனைப்பாக உள்ளது என்று குரேஷி கூறியிருந்தார்.காஷ்மீர் பிரச்னையில் அமெரிக்கா தலையிட்டு வருவது போல் குரேஷியின் பேச்சு அமைந்திருந்தது.இது, இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. குரேஷியின் கருத்து குறித்து அமெரிக்கா என்ன சொல்கிறது என்பதை அறிய விரும்பியது.இந்நிலையில், வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் பி.ஜே.குரோவ்லே, குரேஷி சொல்வது போல் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடவில்லை. தலையிடவும் விரும்பவில்லை. காஷ்மீர் பிரச்னை என்பது இந்திய-பாகிஸ்தான் இடையேயான பிரச்னையாகவே ஆரம்பத்தில் இருந்து அமெரிக்கா கருதுகிறது. இதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.காஷ்மீர் பிரச்னையை இரு நாடுகளும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புகிறது. காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இணைந்து கோரிக்கையை முன்வைக்கவில்லை. இதனால் அந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடும் பேச்சுக்கு இடமில்லை என்றார்.இதன் மூலம் காஷ்மீர் விவகாரத்தில் தங்களது நிலைப்பாடு என்ன என்பதை அமெரிக்கா மீண்டும் தெளிவுபடுத்திவிட்டது. இனிமேலும் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுங்கள், தலையிடுங்கள் என்று பாகிஸ்தான் வலியுறுத்தக்கூடாது என்பதை உணர்த்திவிட்டது.காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதும், அதன் கோரிக்கையை  அமெரிக்கா தொடர்ந்து நிராகரிப்பதும் தொடர்கதையாய் உள்ளது.
கருத்துக்கள்

காசுமீரில் 46.54 % பகுதிதான் இந்தியக்கட்டுப்பாட்டில் உள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 1) பாக். கட்டுப்பாட்டுப் பகுதியில் நாட்டு நிலைமை எவ்வாறு உள்ளது? 2) வன்முறைகளும் விடுதலைப் போராட்டங்களும் உள்ளனவா? 3) அந்தப் பகுதியில் இந்திய அரசின் பணி என்ன? 4) அந்தப் பகுதியை இந்தியாவின் ஆளுகைக்குள் கொண்டு வர இந்தியா என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது? 5) தேசிய இனங்களை ஒடுக்கும் காங்.கின் போக்கு இந்தியாவிற்கு விளைவிக்கப் போகும் தீமைகள் யாவை? முதலான கருத்துகளை விளக்கித் தினமணி ஆசிரியருரையில் தெரிவித்தால் நன்று. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/23/2010 4:29:00 AM
கஷ்மீர் இந்தியாவின் பிரிக்கமுடியாத பகுதி அல்ல. கஷ்மீர் ஒரு சர்ச்சைக்குரிய பகுதி என்பதை ஐ.நாவில் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. 68 ஆயிரம் கஷ்மீரி முஸ்லிம்களை கொன்ற ஒரு நாட்டிற்கு ஜனநாயக நாடு என்றுக் கூற உரிமையில்லை. குஜராத்தில் 2500 முஸ்லிம்களை இனப்படுகொலைச் செய்த ஒரு நாட்டிற்கும் மதசார்பற்ற நாடு என்றுக்கூற தகுதியில்லை. வலுவான ராணுவத்தினருக்கு எதிராக கல்வீச்சில் ஈடுபடும் கஷ்மீரி இளைஞர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பார்த்து சல்யூட் செய்யாமலிருக்க முடியவில்லை என அருந்ததிராய் உரை நிகழ்த்தினார்.
By thoodu
10/23/2010 12:21:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தேர்தலில் திமுக போட்டி ஏன்? - கருணாநிதி விளக்கம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பேசுகிறார் அக்கட்சியின் தலைவரும், முத
சென்னை, அக்.22: பெரியார், அண்ணா தந்த திராவிடக் கொள்கைகளைக்  காப்பாற்றுவதற்காகத்தான் தேர்தலில் வெற்றி பெற விரும்புகிறோமே தவிர, நாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல என்று தி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதி தெரிவித்தார்.   சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக மாவட்ட வாரியாக தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட தி.மு.க.வினருடனான கலந்துரையாடல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியது:  இந்த ஆய்வுக் கூட்டம் நிர்வாகிகளைப் பேசச் செய்து வேடிக்கைப் பார்ப்பதற்காக நடைபெறவில்லை. தி.மு.கவை வலுப்படுத்துவதற்காகவே இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது;   தேர்தல் ஓட்டுகளுக்காக அல்ல. பெரியாரும், அண்ணாவும் இந்த இயக்கத்தை உருவாக்கி எங்கள் கைகளிலே ஒப்படைத்திருக்கிறார்கள் என்றால், இந்தக் கைகளிலே ஓட்டுகளைப் பெற்று, தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதற்காக அல்ல. இந்தக் கட்சியின் கொள்கையை விட்டுவிட்டு, லட்சியத்தை விட்டுவிட்டு ஆட்சியிலே உட்கார வேண்டும் என்று நினைக்கும் யாரும் தி.மு.க.வில் இருக்கும் தகுதி படைத்தவர்கள் அல்ல. இந்த லட்சியம் காப்பாற்றப்பட, கொள்கை உறுதிபட இந்த இயக்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். அதற்கு இந்த ஆட்சி பயன்படுமேயானால், முடிந்த வரையில் பயன்படுத்திக்கொள்கிறோம். ஒருவேளை ஆட்சிக்கே வர முடியாவிட்டால், தெருவிலே நின்று போராடுவோம்.  இயக்கத்தை எப்படி நடத்துவது என்பதில் வேறுபாடுகளைப் பொருட்படுத்திக் கொண்டிருந்தால் தி.மு.க. வரும் தேர்தலிலே வெற்றி பெற முடியாது. தி.மு.க.வினுடைய வெற்றியில் திராவிட இயக்கத்தினுடைய கொள்கை வெற்றி இருக்கிறது. பெரியார், அண்ணாவின் கொள்கைகள் தி.மு.க. வெற்றி பெற்றால்தான் நிலைக்கும். இல்லாவிட்டால், அந்த லட்சியங்கள் எல்லாம் பறிபோய்விடும். தி.மு.க. ஆட்சி போய் வேறொரு ஆட்சி வந்தால், அப்படி வருகிற ஆட்சி ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியாக இருந்தால் தமிழகத்திலே மூட நம்பிக்கை படர்ந்துவிடும். தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்று கருதுவதற்குக் காரணம், நாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல.  இந்த இயக்கத்தைக் காப்பாற்றினால்தான், இதனுடைய மூலாதாரக் கொள்கைகள் காப்பாற்றப்படும். பெரியார் விழா, அண்ணா நூற்றாண்டு விழா,  நூற்றாண்டு நூலகம் ஆகியவை ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தால் நடைபெற்றிருக்க முடியுமா? நாளைக்கு ஒரு வேளை - அது நடக்காது, நடக்கக் கூடாது - தி.மு.க. மாற்றப்பட்டு, அதிமுக ஆட்சிக்கு வந்தால், அந்த நூலகத்தை இடித்து தள்ளமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா? அப்படிப்பட்ட ஒரு நிலை இந்த நாட்டிற்கு, தமிழனுக்கு ஏற்பட வேண்டும் என்று எண்ணலாமா? கோவை தமிழ்ச் செம்மொழி மாநாடு, தஞ்சையில் ராஜராஜ சோழனுக்கு விழா ஆகியவை தி.மு.க. ஆட்சி நடைபெறுவதால்தான் நடைபெற்றன. இந்த ஆட்சி போய்விட்டால், இன்னொரு ஆட்சி வருமேயானால், நிச்சயமாக அண்ணா கனவாகிவிடுவார். பெரியார் கடந்த காலமாகிவிடுவார் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. நாம் ஒன்றுபட்டு செயல்படுவோம் என்றார் கருணாநிதி.
கருத்துக்கள்

2 / 2 ) பெரியாரின் தமிழ்நாடு தமிழர்க்கே கொள்கை கைவிடப்பட்ட பின்பு அறிஞர் அண்ணாவின் மொழிக் கொள்கையும் குடும்ப ஆட்சி எதிர்ப்பும் கைவிடப்பட்ட பின்பு அவர்களின் பெயர்களைச் சொல்லிப் பயனில்லை. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது இடைத் தேர்தலில் பரப்புரை செய்த பெருந்தலைவர் காமராசரைச் சாடியவர் அறிஞர் அண்ணா. ஈழத்தில் இனப் படுகொலை நடைபெற்ற பொழுதும் கொலைகாரர்களுடன் கூட்டணி வைத்து பதவி அறுவடை செய்து கொண்டு அவர்களின் இலட்சியத்தைக் காப்பாற்றத்தான் ஆட்சி என்றால் எள்ளி நகையாட மாடடார்களா? ஆட்சிச் சுவையை இழக்க ஆயத்தமாக இல்லை ; எனவேதான் தேர்தலில் போட்டியிடுகிறோம் என ஒத்துக் கொள்ளலாமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் (முன் தொடர்ச்சி 1/2 காண்க)
By Ilakkuvanar Thiruvalluvan
10/23/2010 4:15:00 AM
1 / 2 ) தமிழ் என்னும் சொல்லின் சிதைவுரு திராவிடம் என்னும் பொருளில் திராவிடம் கையாளப்படவில்லை. தமிழ்க்குடும்ப இனம் என்னும் பொருளில் திராவிடம் எனத் தமிழ் நாட்டில் மட்டும் குறிக்கப்படுகிறது. அந்த வகையில் பிற தென் மாநிலங்களில் திராவிட உணர்வு ஊட்டப்படவில்லை. அவர்கள் அயல் மொழியான ஆரியத்தைப் போற்றுகிறார்கள். மூலத்தாய் மொழியான தமிழைப் பகை மொழியாகக் கருதுகிறார்கள். தமிழினத்தையும் பகை இனமாகவே கருதுகிறார்கள. அவ்வாறிருக்க திராவிடக் கொள்கையைக் காப்பாற்றத் தேவையில்லை. தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை தமிழர்க்கே தலைமை என்னும் கொள்கையை நிறைவேற்றும் கட்சிதான் ஆட்சியில் அமர வேண்டும். அதற்கேற்ப தி.மு.க. தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் (தொடர்ச்சி 2/2 காண்க)
By Ilakkuvanar Thiruvalluvan
10/23/2010 4:14:00 AM
தமிழ் என்னும் சொல்லின் சிதைவுரு திராவிடம் என்னும் பொருளில் திராவிடம் கையாளப்படவில்லை. தமிழ்க்குடும்ப இனம் என்னும் பொருளில் திராவிடம் எனத் தமிழ் நாட்டில் மட்டும் குறிக்கப்படுகிறது. அந்த வகையில் பிற தென் மாநிலங்களில் திராவிட உணர்வு ஊட்டப்படவில்லை. அவர்கள் அயல் மொழியான ஆரியத்தைப் போற்றுகிறார்கள். மூலத்தாய் மொழியான தமிழைப் பகை மொழியாகக் கருதுகிறார்கள். தமிழினத்தையும் பகை இனமாகவே கருதுகிறார்கள. அவ்வாறிருக்க திராவிடக் கொள்கையைக் காப்பாற்றத் தேவையில்லை. தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை தமிழர்க்கே தலைமை என்னும் கொள்கையை நிறைவேற்றும் கட்சிதான் ஆட்சியில் அமர வேண்டும். அதற்கேற்ப தி.மு.க. தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். பெரியாரின் தமிழ்நாடு தமிழர்க்கே கொள்கை கைவிடப்பட்ட பின்பு அறிஞர் அண்ணாவின் மொழிக் கொள்கையும் குடும்ப ஆட்சி எதிர்ப்பும் கைவிடப்பட்ட பின்பு அவர்களின் பெயர்களைச் சொல்லிப் பயனில்லை. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது இடைத் தேர்தலில் பரப்புரை செய்த பெருந்தலைவர் காமராசரைச் சாடியவர் அறிஞர் அண்ணா. ஈழத்தில் இனப் படுகொலை நடைபெற்ற பொழுதும் கொலைகாரர்களுடன் கூட்டணி வைத்து
By Ilakkuvanar Thiruvalluvan
10/23/2010 4:11:00 AM
Please Karuna, stop your noncence talking, How many year still keep taking same thing, You can not further defend your bad politics in the mane of graet Periyar & Anana Are you tamilan, Just think youreslf, where yuu wend hide our own tamil people when they have been dying in EElam We know your ugly politics,when your comfortable in place of Cheife mnister you will forhget everthing except your famiy but when you are come to crticalthen sart think about Anans, Periayar, Tamilan Sory this is enough, we are counting your life to be end
By Anbu
10/23/2010 4:07:00 AM
என்ன இது முக கொள்கை அது இது என்று பேசுகிரார். முகவின் திராவிடம், தமிழ், தீண்டாமை போராட்டம் எல்லாம் தன் குடும்பத்திர்க்கு தமிழ் நாட்டிர்க்கு அல்ல.
By Appan
10/23/2010 4:01:00 AM
In terms of corruption Karuna is way, way better than Jeya. Atleast his family is enjoying and also facing the public in elections. What about the human waste eating pigs Mahadevan, Venkatesh, Divakaran, Kaliyaperumal, Sasi, Ravanan,Ilavarashi, etc, etc. What did they do either for TN or ADMK party, except born in Sasi's family. rajasji you can go and eat these pigs waste, but do not try to make other people to eat it.
By PA Valarmathi
10/23/2010 3:18:00 AM
யோவ் ...என்னைய்யா உளறுற !....என்ன ஒரு கால் ஜெயலலிதா வந்து விட்டால் !...புரட்சித் தலைவி முதல் அடி வெற்றிகரமாக கோவையில் எடுத்துவைத்தார்கள்! உனக்கு நுரையீரல் அவுட் ஆயிடுச்சு ! திருச்சியிலே இரண்டாவது அடி எடுத்து வைத்தார்கள் ! உனது கல்லீரல் காணாமல் போய் விட்டது ! மதுரையிலே மூன்றாவது அடி எடுத்து வைத்தார்கள் ! உனது கிட்னி சட்னியாயிருச்சு ! வரும் தேர்தலோடு உனது இதயம்.....இல்லை நீ பேரறிஞர் அண்ணாவிடமிருந்து ஏமாற்றி திருடிய இதயம் விடை பெற்றுக்கொள்ளும் ! தமிழ் தமிழ் இனம் என்று இனி எந்த தமிழனையும் நீ ஏமாற்ற முடியாது ! அண்ணா ...பெரியார் என்று சொல்லும் தகுதியினை நீ என்றோ இழந்து விட்டாய் ! தமிழ் இனத்தை அடிமைப் படுத்தி சுரண்டிக் கொண்டிருக்கும் உன்னை....கட்சியினரை வஞ்சித்து உன் குடும்பத்தினர்கள் அனைவரையும் ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைத்து தமிழர்களின் ரத்தத்தை உறிஞ்ச வாய்ப்பளித்த உன்னை.... அண்ணாவின் ஆன்மா ..பெரியாரின் ஆன்மா மன்னிக்காது ! இதனை ஒவ்வொரு தமிழர்களும் நன்கு அறிவர் ! உனது அரசியல் மோசடி இனி எடுபடாது ! குடும்பத்துடன்..கொள்ளைக் கூட்டத்துடன் நேரத்தோடு விடைபெறு !!! @ rajasji
By tamilatchi
10/23/2010 2:39:00 AM
Shut up your mouth. Just tell the people of Tamil Nadu why the hell you went to Delhi, immediately after the two parilament elections? To get posting for Anna and Periyar family people? All the political parties now a days contesting the elections to win it and then loot the people. Nobody today is working for people. Just for themselves and for their family. Just accept that fact and shut up.
By PA Valarmathi
10/23/2010 2:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
600 போலீஸார் கொல்லப்பட்ட சம்பவம்: மன்னிப்பு கேட்க கருணா மறுப்பு

கொழும்பு, அக்.22- இலங்கை கிழக்குப் பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் 600 போலீஸார் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று அமைச்சரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியுமான கருணா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் உத்தரவின் பேரில், நியூட்டன் என்பவரே 600 போலீஸார் கொல்லப்பட்ட சம்பவத்தை மேற்கொண்டார் என்றும், அதனால் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கருணா கூறியிருப்பதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.ஆனாலும், அச்சம்பவம் நடைபெற்ற போது கிழக்குப் பகுதிக்கான புலிகளின் தளபதியாக இருந்தவர் கருணா தான் என்பதால் அச்சம்பவத்துக்கு அவரே பொறுப்பு என்று கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் என்னும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றம்சாட்டியுள்ளார் என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

தமிழர்க்கு வஞ்சகம் இழைத்ததே, துரோகம் செய்ததே மன்னிப்பு கேட்டதற்குச் சமம்தான். எனினும் இதன்மூலம் பிள்ளையான் கருணா மோதல் வலுக்கலாம். இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/23/2010 3:23:00 AM
ரிஜி.கரியாப்பட்டினம், Post it again,thanks.
By sinha
10/22/2010 11:33:00 PM
ஏன் என் கருத்தை நீக்கினிர்கள் நான் என்னா தவறாக எழுதிணன் அன்று நடந்த உண்மையை சொன்னதூ தவறா 600போலீசாரையும் ஒரு வயல்வரப்பில் வைத்து கழுத்துஅறுத்து கொலை செய்தது நடக்கவில்லைய அதை செய்தது யார் ,நான் ஒன்னும் சிங்களவனுக்கு ஆதரவாக கருத்து பதியவில்லை நடந்த சம்பவத்தைதான் பதின்தேன்
By ரிஜி.கரியாப்பட்டினம்
10/22/2010 11:30:00 PM
you will face the consequences soon.
By phizo
10/22/2010 11:05:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 22 அக்டோபர், 2010

குமரி மாவட்டத்தில் ராஜராஜன் கால கல்வெட்டுகள்


நாகர்கோவில், அக். 21: கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பெரியகுளம் எழுத்திட்டான் பாறையில் கி.பி. 1012 ஆம் ஆண்டை சேர்ந்த ராஜராஜ சோழன் கால கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.  இவற்றைப் பராமரிக்க வேண்டும் என்று இன்டாக் அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது.  இந்த கல்வெட்டுகளை ஆராய்ந்த குழுவுக்கு தலைமை வகித்த இன்டாக் அறக்கட்டளைத் தலைவர் ஆர்.எஸ். லால்மோகன் கூறியதாவது:  கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி ஊராட்சியிலுள்ள பெரியகுளத்தின் அருகே எழுத்திட்டான் பாறை உள்ளது.  இந்த பாறையில் 3 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று கி.பி. 1012-ம் ஆண்டு சோழமன்னர் ராஜராஜ சோழனால் எழுதப்பட்டது.  இக் கல்வெட்டு, பெரியகுளக்கரை உடைப்பு எடுத்தால் அதை தடுத்து அணை கட்டி பராமரிப்பதற்காக முதலாம் ராஜராஜ சோழன் 1012-ம் ஆண்டில் நிலக்கொடை வழங்கியதை குறிக்கிறது.  குளத்தைப் பராமரிக்க தவறினால் 85 களஞ்சியம் பொன் தண்டனையாக கொடுக்க வேண்டும். இந்த பணமும் பெரியகுளம் பராமரிப்புக்கு செலவழிக்கப்பட வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.  மற்றொரு கல்வெட்டு அதன் அருகே 50 அடி தொலைவில் காணப்படுகிறது. இதில் 1597 சித்திரை 14-ம் தேதி எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு குறித்து இதுவரை அறியப்படவில்லை. ஏடுகளில் குறிப்பிடப்படவும் இல்லை.  குலசேகரப்பெருமாள் ரவிவர்மன் காலத்தில் இது எழுதப்பட்டுள்ளது. அங்குள்ள கோயிலுக்கு குரு பூஜைக்கு அரசனால் நிலம் கொடுக்கப்பட்டதை இந்த கல்வெட்டு கூறுகிறது.  இக் கல்வெட்டு மண்ணுக்கு அடியில் பல ஆண்டுகள் புதைந்து இருந்ததால் எழுத்துகள் மங்கிவிட்டன.  இந்த கல்வெட்டில் காணப்படும் எழுத்துகளுக்கும், ராஜராஜ சோழன் கல்வெட்டில் காணப்படும் எழுத்துகளுக்கும் மிகவும் வேறுபாடுகள் உள்ளன.  மேலும் ஒரு கல்வெட்டு இங்கு காணப்படுகிறது. இந்த கல்வெட்டின் எழுத்துகளுக்கும் 2-வது கல்வெட்டின் எழுத்துகளுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. இது 400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகத் தெரிகிறது.  இந்த பழமையான 3 கல்வெட்டுகளும் எந்த பராமரிப்பும், பாதுகாப்பும் இல்லாமல் இருக்கின்றன.  இவை அழியும் தருவாயில் இருப்பதால் இவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கல்வெட்டுகளை சுற்றிலும் சிமென்ட் தூண்கள் அமைத்து கம்பி வேலியிட வேண்டும் என்றார் லால்மோகன்.  இன்டாக் அங்கத்தினர்கள் கல்வெட்டு அறிஞர் செந்தீ நடராசன், ஆசிரியர் ஆப்ரகாம் லிங்கன், ஜெபர்சன், சந்திராசிங், ஜார்ஜ், வார்டு உறுப்பினர் எஸ். ஸ்ரீகுமார், அருள் அமலன், ஆதிகேசவன், ஏ. ராஜாமணி உள்ளிட்டோர் ஆய்வு குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
தலாய் லாமாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க தடை?

புதுதில்லி, அக்.22- திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு தில்லியில் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகமான ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு வெளியுறவு அமைச்சகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.தற்போது அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவது சீனாவுடனான உறவில் சிக்கல் ஏற்படுத்தலாம் என்ற கருத்தின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தலாய் லாமாவுக்கு ஏற்கெனவே, பல சர்வதேச கல்வி நிறுவனங்கள் சார்பில் 10க்கும் மேற்பட்ட கெளரவ டாக்டர் பட்டங்கள்  வழங்கப்பட்டுள்ளன. எனினும், இந்தியாவில் உயர்கல்வி நிறுவனம் ஒன்று அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க முன்வந்துள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த முடிவு குறித்து கடந்த மாதம் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் சார்பில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், அக்கடிதம் பின்னர் வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.இந்நிலையில், டாக்டர் பட்டம் வழங்கும் முடிவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, "தலாய் லாமா மீதான நமது மதிப்பும், மரியாதையும் என்றும் மாறாதது." என்றும் மத்திய அரசின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.  
கருத்துக்கள்

இராசபக்சேவிற்குப் பட்டம் வழங்குவதாக இருந்தால் உடனே சரி என்று சொல்லி இருப்பார்கள். திபேத்தியருக்கு எலலாச் சலுகைகளும் அளித்துக் கொண்டு தலாய்இலாமாவிற்குச் சீனாவை மீறி உரிய தகுதியையும் மதிப்பையும் அளித்துக் கொண்டு சீனாவின் நல்லுறவு பாதிக்கப்படும் என்பதற்காக மறுப்பதாகக் கூறுவது கட்டு்க்கதை . இந்த ஏமாற்றுவேலையைப் புரிந்து கொள்ளாதிருக்க சீனா ஒன்றும் இந்தியா இல்லை. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/22/2010 6:14:00 PM
It is correct raju. Thalai should be honoured just only for his courage.
By b.yani
10/22/2010 4:21:00 PM
பாகிஸ்த்தானைவிட நமக்கு அதிம் தொந்தரவு தருவது சீனா என்பது நம் அனைவருக்கும் தெரியும். டாக்டர் பட்டம் வழங்கவில்லையெனில், சீனா நம்மை நன்றியுடன் பார்க்கபோவதில்லை. யாருக்கு பட்டம் வழங்குவது/கூடாது என்பது நமது உள் நாட்டு விவகாரம். ஆட்சியாளர்கள் தைரியத்துடன் முடிவேடுக்கவேண்டும்.
By தஞ்சை ராஜு
10/22/2010 3:47:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
மாணவர்களுக்கும் இச் செய்தியை வெளியிட்ட தினமலருக்கும் பாராட்டுகள். உடனடியாக அரசு முழு உதவியும் அளிக்க வேண்டும். மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


மதுரை : மதுரையில் சாலை விபத்தில் சிக்கி, மூளையில் அடிபட்டு, தீவிர சிகிச்சையில் உள்ள கல்லூரி மாணவரை காப்பாற்ற, அனைத்து கல்லூரி மாணவர்களும் நிதி திரட்டுகின்றனர்.

மதுரை மாவட்டம் குமாரம் அருகே வடுகபட்டி விவசாயி திருமால் மகன் கவுதம்(20). வேலம்மாள் பொறியியற் கல்லூரியில் மூன்றாமாண்டு எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படிக்கிறார். இவரது சக மாணவர் மற்றொரு கவுதம்(20). இவரும் வடுகபட்டி பகுதியைச் சேர்ந்தவர். தினமும் இருவரும் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வந்தனர். அக்.,11ல் கல்லூரி செல்ல ரிசர்வ்லைன் பகுதியில் (ஹெல்மெட் அணியவில்லை) வந்தனர். அப்போது அரசு டவுன் பஸ் மோதியதில், மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த கவுதம் பலியானார்.

காயமடைந்த திருமால் மகன் கவுதம், மூளையில் அடிபட்டு வடமலையான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். தொடர் சிகிச்சைக்கு 9 லட்சம் ரூபாய் செலவாகும் என்பதால், சக கல்லூரி மாணவர்கள் இருநாட்களில் 1.48 லட்சம் ரூபாய் வசூலித்து கொடுத்தனர். இதை கேள்விபட்ட மற்ற கல்லூரி மாணவர்களும் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்களிடம் கிடைத்ததை "பறிக்கும்' இக்காலத்தில், ஒரு உயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட் டுள்ள மாணவர்களின் செயல் பாராட்டுக்குரியது. பொதுமக்களும் உதவ விரும்பினால், மேலும் விவரங்கள் அறிய 97860 88818, 99445 90405ல் தொடர்பு கொள்ளலாம்



அமெரிக்கா, நார்வேயிலுள்ள புலிகள் மீண்டும் ஒருங்கிணைய முயற்சி

கொழும்பு, அக்.20: அமெரிக்கா, நார்வேயிலுள்ள புலிகள் மீண்டும் ஒருங்கிணைய முயற்சி செய்து வருகின்றனர் என்று இலங்கை பிரதமர் டி.எம். ஜெயரத்ன கூறினார்.இலங்கை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு ஜெயரத்ன பேசியதாவது:கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரில் ராணுவம் வெற்றி பெற்றது. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் நார்வேயில் உள்ள புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீண்டும் ஒருங்கிணைய முயற்சித்து வருகின்றனர்.அமெரிக்கா, நார்வேயிலுள்ள புலிகள் படை தலைவர்கள், புலிகள் புலனாய்வுப் பிரிவை மீண்டும் ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஆயுதப் பிரிவையும் ஏற்படுத்த அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.இலங்கையில் தனியாக ஒரு மாநிலத்தை அமைக்கும் அவர்களது திட்டத்துக்காக இதைச் செய்து வருகின்றனர்.நார்வே, அமெரிக்காவிலுள்ள புலிகள் பிரிவின் 2 தலைவர்களும் இந்த காரியத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் புலிகள் பயன்படுத்தி வந்த வெடிபொருட்கள் அடங்கிய ஜாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சாதாரணமாக புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்கள் இந்த ஜாக்கெட்டுகளை அணிந்துகொண்டு மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்துவர்.இந்த வெடிகுண்டு ஜாக்கெட்டுகளை சமீபத்தில் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து செயலிழக்கச் செய்துள்ளனர். தோற்கடிக்கப்பட்ட புலிகளின் தலைவர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் அவர்.ஆனால் புலிகள் அமைப்பை ஒருங்கிணைக்க முயற்சித்து வரும் தலைவர்களின் பெயர்களை அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிடவில்லை.கடந்த ஆண்டு நடந்த போருக்குப் பின்னர் புலிகள் எந்தவிதத் தாக்குதலையும் நடத்தவில்லை. இந்த நிலையில் புலிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை இலங்கை ராணுவத்தினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.அவசர நிலை பிரகடன சட்டத்தை இலங்கை அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த சட்டத்துக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு இருந்தும்கூட அதை அரசு அமல்படுத்தி வருகிறது.எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களை பயமுறுத்துவதற்காக இதை ஆளும் கட்சி பயன்படுத்தி வருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
கருத்துக்கள்

பிற நாட்டு விடுதலைகளை விடத் தமிழ் ஈழ விடுதலை மிகுதியான இழப்பையும் காலத்தையும் சந்தித்தாலும் ஈழம் ஒரு நாள் விடியும். அது காலத்தின் கட்டாயம். உலக மனித நேயர்கள் உதவியுடன் தமிழ் ஈழம் மலரும்! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/22/2010 5:15:00 AM
YES, SURE, WE MUST DO THIS. THINK TWICE, THRICE WELL. PLAN WELL. WE MUST WIN. INDEPENDENT TAMIL NATION IS THE ONE AND ONLY SOLUTION.AT ANY COST WE MUST ACHIEVE THIS.
By S.GNANASEKARAN
10/21/2010 5:31:00 PM
Ilankai IS NOT READING HISTORY. MASS KILLINGS NEVER WENT WITH OUT REVENGE. At least allow now Tamils to have freedom.
By vis
10/21/2010 5:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
ஜீவனாம்சம் கோர என்ன தகுதி வேண்டும்? - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


புதுதில்லி,அக்.21: கணவன் -மனைவி போல சேர்ந்து வாழ்ந்தோம் என்று கூறி, அதற்காக ஜீவனாம்சம் கோரி வழக்கு தொடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.தமிழ்நாட்டின் கோயமுத்தூரைச் சேர்ந்த டி. பச்சையம்மாள் என்பவர் டி. வேலுசாமி என்பவருடன் கணவன் - மனைவி போல வாழ்ந்ததாகவும், வேலுசாமி இப்போது தன்னைப் புறக்கணிப்பதால் தனக்கு மாதம்தோறும் ஜீவனாம்சம் தருமாறு அவருக்கு உத்தரவிடவேண்டும் என்றும் வழக்கு தொடுத்தார்.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, டி.எஸ். தாக்கூர் அடங்கிய பெஞ்ச் மனுவை விசாரித்தது.வீட்டுக்குள் நடக்கும் கொடுமைகளிலிருந்து பெண்களை அதிலும் குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களைப் பாதுகாக்கும் 2005-வது சட்டத்தின் அடிப்படையில் பச்சையம்மாள் வழக்கு தொடுத்திருந்தார்.பச்சையம்மாள் தனக்கு மனைவி அல்ல என்றும் லட்சுமி என்பவரே தன்னுடைய மனைவி என்றும் எதிர் வழக்காடிய வேலுசாமி வாதாடினார்.வார விடுமுறைகளில் சேர்ந்து வாழ்வதோ, வாரத்துக்கு ஒரு நாள் ஒரே வீட்டில் தங்கியிருப்பதோ, கணவன் - மனைவிக்கு இடையிலான தாம்பத்ய உறவுக்கு ஈடாகக் கருதப்பட மாட்டாது என்று கூறிய நீதிபதிகள் , கணவனிடமிருந்து ஜீவனாம்சம் கோரும் மனைவியர் 4 அம்சங்களைப் பூர்த்தி செய்தவர்களாக இருக்க வேண்டும் என்றனர்.1. ஒரு ஆணும் பெண்ணும் வாழ்க்கைத் துணைவர்கள் என்று சமூகம் ஏற்க வேண்டும்.2. இருவரும் திருமண வயதை எட்டியிருக்க வேண்டும்.3. இருவரும் திருமணம் செய்துகொள்வதற்கேற்ற தகுதிகளுடன் இருக்க வேண்டும்.4. இருவரும் விருப்பப்பட்டே சில காலம் ஒன்றாகத் தங்கியிருக்க வேண்டும்; அதன் மூலம் அவர்களை கணவன், மனைவியராக சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.இந்த நாலும் இல்லாமல் ஒரு ஆடவனின் அழைப்பை ஏற்று அவருடன் கூடி வாழ்ந்தோம் என்று கூறுவதையெல்லாம் ஏற்று அவர்களுக்கு ஜீவனாம்சம் தர உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் உறுதிபடத் தெரிவித்தனர்.இந்த வழக்கில் வேலுசாமி கூறுகிறார்போல அவருக்கு லட்சுமி என்ற முதல் மனைவி இருந்தாரா என்றும் விசாரிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருத்துக்கள்

முரண்பாடான தீர்ப்பு. ஆண், பெண் இணைவைத் தவிர, திருமணத்திற்குரிய தகுதி என எதை உச்ச நீதிமன்றம் கருதுகிறது. விருப்பப்பட்டே சில காலம் ஒன்றாகத் தங்கியிருக்க வேண்டும் என்றால் விருப்பப்படுவது போல் நடித்துச் சேர்ந்திருந்து பின் கை கழுவுவோரை எப்பட்டியலில் சேர்ப்பது? இன்றைய சமூகத்தில் யார் யார் சேரந்து வாழ்கிறார்கள் எனப் பார்த்து ஏற்பு வழங்குவது வேலையல்ல. திருமண நம்பிக்கையில் சேர்ந்துவாழ்ந்து பின்னர் ஏமாற்றப்படுவோருக்கு வாழ்ககைப் படிச் செலவு உதவுவது தவறல்ல. நீதிபதிகள் எதையும் ஆராய்ந்து தீர்ப்பு வழங்குதல் வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/22/2010 5:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்