சனி, 23 அக்டோபர், 2010

காஷ்மீர் விவகாரத்தில் தலையிடமாட்டோம்: அமெரிக்கா திட்டவட்டம்


வாஷிங்டன், அக்.22: காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமெரிக்கா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வுகாண அமெரிக்கா உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் புதிதாக விடுத்த கோரிக்கையையும் நிராகரித்துவிட்டது.அமெரிக்க-பாகிஸ்தான் இருதரப்பு உறவு குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மொஹமத் குரேஷி, காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்பட அமெரிக்கா தீவிரமாகப் பாடுபட்டு வருகிறது. காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என்பதிலும் முனைப்பாக உள்ளது என்று குரேஷி கூறியிருந்தார்.காஷ்மீர் பிரச்னையில் அமெரிக்கா தலையிட்டு வருவது போல் குரேஷியின் பேச்சு அமைந்திருந்தது.இது, இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. குரேஷியின் கருத்து குறித்து அமெரிக்கா என்ன சொல்கிறது என்பதை அறிய விரும்பியது.இந்நிலையில், வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் பி.ஜே.குரோவ்லே, குரேஷி சொல்வது போல் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடவில்லை. தலையிடவும் விரும்பவில்லை. காஷ்மீர் பிரச்னை என்பது இந்திய-பாகிஸ்தான் இடையேயான பிரச்னையாகவே ஆரம்பத்தில் இருந்து அமெரிக்கா கருதுகிறது. இதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.காஷ்மீர் பிரச்னையை இரு நாடுகளும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புகிறது. காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இணைந்து கோரிக்கையை முன்வைக்கவில்லை. இதனால் அந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடும் பேச்சுக்கு இடமில்லை என்றார்.இதன் மூலம் காஷ்மீர் விவகாரத்தில் தங்களது நிலைப்பாடு என்ன என்பதை அமெரிக்கா மீண்டும் தெளிவுபடுத்திவிட்டது. இனிமேலும் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுங்கள், தலையிடுங்கள் என்று பாகிஸ்தான் வலியுறுத்தக்கூடாது என்பதை உணர்த்திவிட்டது.காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதும், அதன் கோரிக்கையை  அமெரிக்கா தொடர்ந்து நிராகரிப்பதும் தொடர்கதையாய் உள்ளது.
கருத்துக்கள்

காசுமீரில் 46.54 % பகுதிதான் இந்தியக்கட்டுப்பாட்டில் உள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 1) பாக். கட்டுப்பாட்டுப் பகுதியில் நாட்டு நிலைமை எவ்வாறு உள்ளது? 2) வன்முறைகளும் விடுதலைப் போராட்டங்களும் உள்ளனவா? 3) அந்தப் பகுதியில் இந்திய அரசின் பணி என்ன? 4) அந்தப் பகுதியை இந்தியாவின் ஆளுகைக்குள் கொண்டு வர இந்தியா என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது? 5) தேசிய இனங்களை ஒடுக்கும் காங்.கின் போக்கு இந்தியாவிற்கு விளைவிக்கப் போகும் தீமைகள் யாவை? முதலான கருத்துகளை விளக்கித் தினமணி ஆசிரியருரையில் தெரிவித்தால் நன்று. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/23/2010 4:29:00 AM
கஷ்மீர் இந்தியாவின் பிரிக்கமுடியாத பகுதி அல்ல. கஷ்மீர் ஒரு சர்ச்சைக்குரிய பகுதி என்பதை ஐ.நாவில் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. 68 ஆயிரம் கஷ்மீரி முஸ்லிம்களை கொன்ற ஒரு நாட்டிற்கு ஜனநாயக நாடு என்றுக் கூற உரிமையில்லை. குஜராத்தில் 2500 முஸ்லிம்களை இனப்படுகொலைச் செய்த ஒரு நாட்டிற்கும் மதசார்பற்ற நாடு என்றுக்கூற தகுதியில்லை. வலுவான ராணுவத்தினருக்கு எதிராக கல்வீச்சில் ஈடுபடும் கஷ்மீரி இளைஞர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பார்த்து சல்யூட் செய்யாமலிருக்க முடியவில்லை என அருந்ததிராய் உரை நிகழ்த்தினார்.
By thoodu
10/23/2010 12:21:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக