வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

தமிழகத்தில் கருத்துரிமை?

karunanidhi_cartoon
கருவிப்பட்டை 
PathivuToolbar ©2010thamizmanam.com
 
தமிழ்நாடு அரசு வழங்கிய இலவச வண்ணத்தொலைகாட்சி மூலம் மானாட, மயிலாட நிகழ்ச்சி, சினிமா நிகழ்ச்சிகள், நெடுந்தொடர்கள் ஆகியவற்றை பார்த்து நாம் மகிழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் நமது கருத்துரிமை சத்தமின்றி களவாடப்படுவது உங்களுக்குத் தெரியுமா? ஆதிக்க சக்திகளுக்கு எதிராக பெரியார் தலைமையில் கருத்துப் புரட்சியை தோற்றுவித்த திராவிட இயக்கத்தின் இன்றைய வாரிசான திராவிட முன்னேற்றக் கழகம்தான் மக்களின் கருத்துரிமைக்கு பெரும் சவாலாக விளங்குகிறது.
எந்த ஒரு ஆட்சியிலும் புறக்கணிக்கப்படும் மக்கள் பிரிவு, தங்கள் கோரிக்கைகளை ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்களுக்கு நினைவுறுத்துவதற்காக போராட்டங்களை நடத்துவதும், மக்கள் பிரசினைகள் குறித்து ஊடகங்களில் எழுதுவதும் தொன்று தொட்டு நடந்து வரும் நிகழ்வுகளே. இவை காமராஜர், அண்ணாதுரை ஆகியோர் ஆட்சிக்காலத்திலும் நடந்தவையே. இன்று அரசு இயந்திரத்தால் புறக்கணிக்கப்படும் மக்கள், தங்கள் குறைகளை அரசின் கவனத்துக்கு கொண்டுவருவதற்காக நடத்தப்படும் சாதாரண நிகழ்வுகளைக்கூட அரசு அமைப்பின் கவனத்தைக் கவரும் அம்சமாக கருதுவதற்கு பதிலாக, ஆட்சியை கலைக்க நடக்கும் பயங்கரவாத சதித் திட்டமாக அரசும், ஆட்சியில் இருப்போரும் கருதுகின்றனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற ஜனநாயக நாடுகளில் நாடாளுமன்றத்திற்கு எதிரிலும், பிரதமர் இல்லத்தின் அருகிலும்கூட போராட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதை நாமும் தொலைக்காட்சிகள் மூலமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டிலோ ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஆளரவமே இல்லாத இடம் ஒதுக்கப்படுகிறது. அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தவும் அனுமதி மறுப்பதற்கு ஆயிரம் காரணங்களை கூறுகிறது காவல்துறை. பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை எடுத்துக்கூறும் சுவரொட்டிகளை அச்சடிக்கும் அச்சகங்கள் மிரட்டப்படுகின்றன. இரவு நேரத்தில் சுவற்றில் ஒட்டப்படும் சுவரொட்டிகளை காவல்துறையும், உளவுத்துறையும் விடிவதற்குள் அகற்றுகிறது. சுவரொட்டி ஒட்டும் தொழிலாளர்களை மிரட்டியும், தாக்கியும் ஒடுக்குகிறது தமிழக காவல்துறை!
அரங்குகளுக்குள் நடத்தப்படும் கருத்தரங்குகளுக்கு காவல்துறையின் அனுமதி தேவையில்லை என்று சட்டம் அனுமதித்தாலும், அரங்கு உரிமையாளர்களை மிரட்டி அச்சுறுத்துவதன் மூலம் மக்களின் கருத்து சுதந்திரத்தை கட்டுப்பாட்டில் வைக்கிறது அரசு! செம்மொழி மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்பேசி மூலம் குறுந்தகவல் அனுப்பியவர்களைக்கூட பொய்வழக்கு மூலம் சிறையில் அடைத்தது தமிழக காவல்துறை.
அரசின், அதிகாரிகளின் ஊழல் முகத்தை வெளிக்கொணரும் பத்திரிகை ஆசிரியர்கள் கைது செய்யப்படுகின்றனர். வலைப்பதிவுகளில் எழுதும் வலைபதிவர்களையும் பொய்வழக்கில் சிக்கவைக்க காவல்துறை தயங்குவதில்லை. மிகப்பெரிய தொழிற் சாலைகளை அமைக்கும்போது மக்களின் கருத்தறியும் சட்டரீதியான கூட்டங்களில்கூட மக்கள் தத்தம் கருத்துகளை வெளிப்படையாக கூறமுடியாமல் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலுவின் குடும்பத்தினருக்கு சொந்தமான வடசேரி எரிசாராய ஆலையில் நடந்ததுபோல குண்டர்களைக் கொண்டும், காவல்துறையினரைக் கொண்டும் கொடூரமாக ஒடுக்குகிறது தமிழக அரசு.
ஈழத்தமிழர்களின் இன்றைய அவலம் பற்றி யார் பேசினாலும் அவர்களை தேசத்துரோகிகள் என்று பட்டம் சூட்டும் தமிழக அரசு, சிங்கள பேரினவாத ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படும் இந்திய-தமிழ் மீனவர்கள் குறித்து பேசிய சீமானை தேசப்பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் பூட்டுகிறது.
சுமார் 500க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் நடுக்கடலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் சாவுக்கு இலங்கை கடற்படையே காரணம் என்று தமிழக காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. ஆயினும் இந்த பிரசினையை தீர்ப்பதற்கு மாநில அரசோ, மத்திய அரசோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மீனவர்களின் இந்த அவல நிலை குறித்து கேள்வி எழுப்புபவர்களை இந்திய இறையாண்மைக்கு எதிரானவாகளாக சித்தரிக்கின்றன மத்திய, மாநில அரசுகள். இது எந்த வகையில் நியாயம்?
சென்னை உயர்நீதிமன்றத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண் எதிரிலேயே திமுக குண்டர்கள் வழக்கறிஞர்களை தாக்கியதையும், அதை படம்பிடித்த செய்தியாளர்கள் தாக்கப்பட்டதையும் ஒரு செய்தியாகக் கூட பதிவு செய்ய முடியாமல் ஊடகங்கள் விலை பேசப்படுகின்றன: அதற்கு மசியாத ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. திராவிட முன்னேற்றக் கழகமே ஆதரித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழ்! என்ற கோரிக்கையை வலியுறுத்தி அறவழிப்போராட்டத்தைக்கூட ஆட்சியை கவிழ்க்க முனையும் சதியாக நினைத்து ஒடுக்க முனைகிறது அரசு.
செய்தியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக இயக்கத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரின் தொலைபேசிகளையும், பிற தகவல் தொடர்புகளையும் ஒட்டுக்கேட்பது போன்ற கண்காணித்தல் நடவடிக்கைகளால் அவர்களது இயல்பான, சுதந்திரமான நடவடிக்கைகளை முடக்கி தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
போபால் விஷவாயு விபத்து குறித்து விவரணப்படங்களை மக்கள் கூடும் இடங்களில் திரையிடுவது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைக்கூட காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகிறது. முதல்வரையும், அவரது செயல்பாடுகளையும் போற்றிப்பாடும் கருத்துகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அரசு அமைப்புகளுக்கு எதிரான கருத்துகள் அனைத்தும் திட்டமிட்டு நசுக்கப்படுகின்றன.
குறளோவியம் படைத்தும், கன்னியாகுமரி கடற்கரையில் அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடி உயர உருவச்சிலை அமைத்தும் திருக்குறளின் புகழ் வளர்க்க முனையும் முதலமைச்சர் திரு. கருணாநிதி, அதே அய்யன் திருவள்ளுவரின்
“இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்”
என்ற திருக்குறளை மறந்து மக்களின் கருத்துரிமைக்கு வாய்ப்பூட்டு போடும் செயலை தொடர்ந்து செய்து வருகிறார்.
தமிழக அரசின் இந்தப்போக்கு எதிர் கட்சிகளுக்கும்,செய்தியாளர்களுக்கும், பேச்சாளர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்களுக்கு மட்டுமே எதிரான செயலல்ல! இது பொது மக்களின் கருத்துரிமைக்கு எதிராக அரசு தொடுக்கும் யுத்தம். அரசின் இந்த ஒடுக்குமுறைகளை சமூக ஒழுக்கம் நீங்கள் நினைத்தால், நாளை உங்களுக்கு ஏற்படும் பிரசினைக்காக நீங்கள் வீதியில் இறங்கி போராடத்துணியும்போது இதே ஒடுக்குமுறை உங்கள்மீதும் பாயும்.
தமிழக அரசின் இந்த மக்கள் விரோத போக்குக்கு எதிராக கருத்துரிமையின் அவசியத்தை விளக்கும் கருத்தரங்கத்தினை நடத்த கருத்துரிமைக்கான கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.
வருங்கால சந்ததியினருக்கு இருண்ட சுதந்திரத்திற்கு பதிலாக, உண்மையான சுதந்திரத்தை அளிக்க விரும்பும் அனைவரும் இந்த நிகழ்விற்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.
கருத்துரை
திரு.கோவிந்தன்குட்டி, ஆசிரியர்-பீப்பிள்ஸ் மார்ச்
திரு.தமிழருவிமணியன், காந்திய இயக்கம்
திரு.தியாகு, தமிழ்தேச விடுதலை இயக்கம்
திரு.திருமலைராஜன், தமிழ்நாடு-புதுவை வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பு
திரு.பாரதிதமிழன், சென்னை பத்திரிகையாளர் மன்றம்
07-08-2010 மாலை 5மணி, கேரளா சமாஜம் (பூந்தமல்லி நெடுஞ்சாலை )
கருத்துரிமைக்கான கூட்டமைப்பு
எண் 5, 4வது தெரு, சுங்குராமன் தெரு, சென்னை.600 001
}

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையு் ம் என்பதை நன்றாகவே உணர்த்தியுள்ளார். பேச்சு அருமையாக உள்ளது. இருப்பினும் மறு பக்கத்தையும் பார்க்க வேண்டும். கடந்த வாரத்தில் உறவினர் ஒருவர்  சுவாமி மலை செல்லும் பேருந்தில் தன் வளையல்களைப் பறி கொடுத்தார்.  வழக்கினைப் பதிவு செய்யாமல் ஒவ்வொரு காவல்நிலையமாக அலைக்கழிக்க வேறு வழியின்றி வழக்கினைப் பதிவு செய்யாமேலேயே ஊர் திரும்பினார் அவர். அப்படியானால், குற்றம எங்கு நடந்திருந்தாலும் பதிவு செய்ய அறிவுறுத்தும் காவல் துறை ஆணைக்கு மதிப்பு எதுவும்  உண்டா? இது போன்ற பாதிப்புகளைத் திரைஉலகம் வெளிப்படுத்தும் பொழுது  காவல்துறையினரிடமாவது விழிப்புணர்வு ஏற்படும்  அல்லவா? காவல்துறை தூய்மையான துறை அல்ல! அதே நேரம் காவல்துறை மட்டும்தான்  ஊழல் துறை என்று பொருளல்ல!  காவல்துறை, நீதித்துறை, ஆட்சித்துறை, சிறைத்துறை, வரித்துறை முதலியன நேர்மையாக நடைபெற்றால் நாடே நேர் வழிக்கு மாறும். எனவே,. திரைத்துறை இதற்கு வழி வகுத்தால் பாராட்ட வேண்டும். திரு சிவனாண்டி  கூறுவதுபோல் ஒவ்வொரு காவலரும் மக்கள் காவலராக மாற வேண்டும். இதற்கான திட்டங்களைப் பிற மாவ்டத்தினரும்  பின்பற்ற வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++++++
சினிமாக்காரர்களால் போலீஸ் பற்றி தவறான "இமேஜ்' : ஐ.ஜி., சிவனாண்டி ஆதங்கம்







எழுத்தின் அளவு:   A+  A-
print e-mail   Buzz  Share  
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2010,23:18 IST

பொள்ளாச்சி : ""சினிமாக்காரர்களால் மக்களிடையே போலீஸ் பற்றி தவறான "இமேஜ்' ஏற்பட்டுள்ளது'' என, கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சிவனாண்டி ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா, பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது. நகராட்சி தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். இலக்கிய மன்றத்தை துவக்கி வைத்து கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சிவனாண்டி பேசியதாவது: வாழ்க்கை என்பது எதிரொலி போன்றது. வாழும் காலத்தில் எதை பேசுகிறோமோ, செய்கிறோமோ அவை தான் நமக்கு திரும்ப வந்து சேரும். நல்லது செய்திருந்தால், நமக்கும் நல்லதே நடக்கும். மற்றவர்களுக்கு தீங்கு செய்து, தவறுகள் செய்திருந்தால் அதற்கான பலனை நிச்சயம் அனுபவிக்க நேரிடும். அதனால் வாழும் காலத்தில் நல்லது செய்தல், உண்மை பேசுதல் போன்றவற்றை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும்.

போலீஸ் அதிகாரிகள் பள்ளி, கல்லூரி விழாக்களில் அதிகம் கலந்து கொள்ளாமல் இருந்தனர். சினிமாக்காரர்கள் போலீஸ் பற்றி தவறான காட்சிகளை காண்பித்து மக்களிடையே போலீஸ் பற்றி பயத்தையும், தவறான இமேஜையும் ஏற்படுத்தியுள்ளனர். மக்களிடமும், மாணவர்களிடமும், குறிப்பாக மாணவிகளிடம் ஏற்பட்டுள்ள போலீஸ் பற்றிய தவறான இமேஜை உடைக்க பள்ளி, கல்லூரி விழாக்களில் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு பேசுகிறோம். போலீஸ் ஸ்டேஷன் போனால் அடிப்பார்கள், மிரட்டுவார்கள் என்ற நிலை மாற வேண்டும் என்பதற்காக வீடு தேடி "எப்.ஐ.ஆர்.,' வழங்கும் திட்டத்தை துவங்கியுள்ளோம். அடிதடி, தகராறு, குடும்ப பிரச்னைகள் பற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தால், சப்-இன்ஸ்பெக்டர்கள் "எப்.ஐ.ஆர்.,' நகலை வீடு தேடி வந்து கொடுக்கும் திட்டம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

பெற்றோர்களை சொத்துக்காகவும், சாதாரண விஷயத்திற்காகவும் வீட்டை விட்டு விரட்டி விடும் பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாகரீக வளர்ச்சி காரணமாக கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மறந்து, குழந்தைகள் திருமணமானதும் தனிக்குடும்பம் சென்று விடுகின்றனர். அப்போது, பெற்றோர்களை சுமையாக நினைத்து விரட்டி விடுகின்றனர். இந்த நிகழ்வுகளை தவிர்க்க "சீனியர் சிட்டிசன் ஹெல்ப் லைன்' திட்டத்தை போலீஸ் துறை துவங்கியுள்ளது.

மாணவிகளுக்கு எதிரான பிரச்னைகள், தொந்தரவு இருந்தாலும் தைரியமாக "ஹெல்ப் லைன்' திட்டத்தில் புகார் தெரிவிக்கலாம். சொந்த விருப்பு, வெறுப்பு, சொத்து பிரச்னைக்காக போலீசுக்கு தவறான தகவல் கொடுத்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, ஐ.ஜி., சிவனாண்டி பேசினார். பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் சங்கரவடிவேல் ஏற்புரையாற்றினார். பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் ரவி, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜூ, லயன்ஸ் மாவட்ட துணை நிலை ஆளுனர் பரமசிவம், பி.ஏ., கல்வி நிறுவனங்களின் தலைவர் அப்புக்குட்டி, உடுமலை ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, சரஸ்வதி தியாகராஜா கல்லூரி தலைவர் விஜயமோகன், ராமு கலை அறிவியல் கல்லூரி இயக்குனர் நித்தியானந்தன், தலைமை ஆசிரியர் ருக்மணி உட்பட பலர் பங்கேற்றனர்.

மறக்க முடியாத அந்த நாள்


1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் நாள் உலக வரலாற்றில் ஒரு கருப்பு நாள். ஆயிரமாயிரம் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலக மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதே விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி ஒரு நகரத்தையே கொலைக்களமாக்கிய கோரச் சம்பவம் இன்னும் கேட்போர் நெஞ்சங்களை உறைய வைத்துக் கொண்டிருக்கிறது.உலகத்தில் செல்வச் சிறப்புமிக்க நகரங்களில் ஒன்றாக ஜப்பான் நாட்டு ஹிரோஷிமா நகரமும் வளர்ந்து கொண்டிருந்த நேரம். இரண்டாவது உலகப் போரின் முஸ்தீபுகளும் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆகஸ்ட் 6-ம் தேதி காலைப்பொழுதில் ஹிரோஷிமா நகர வானில் மூன்று விமானங்கள் அணிவகுத்து வந்து கொண்டிருந்தன. அந்த விமானங்களைக் கண்காணித்து நடவடிக்கைகளில் இறங்கும் முன்பே அந்த அமெரிக்கப் போர் விமானம் பி-29 எனோல கோய் தன் வயிற்றில் சுமந்து வந்த "சின்னப் பையன்' என்ற அணுகுண்டை ஹிரோஷிமா நகரத்தில் காலை 8.15 மணிக்கு வீசியது. இந்தக் குண்டு தரைக்கு மேலே 600 மீட்டர் உயரத்தில் வெடித்தது. ஆயிரம் சூரியன் ஒன்றாய் உதித்தது போன்ற ஒரு பிரம்மாண்ட வெளிச்சம். சில நொடிகளில் ஒரு ராட்சசக் குடைக்காளான் போன்ற நெருப்புப் பந்து மேலே எழும்பியது. மேலெழுந்த தீப்பந்தின் மைய வெப்பம் 10 மில்லியன் டிகிரி செல்சியஸ். அந்தத் தீப்பந்து பூமியை அடைந்தபொழுது 4,000 டிகிரி செல்சியஸ். இவ்வளவு வெப்பத்தை யாரும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. 100 டிகிரி வெப்பத்தில் தண்ணீர் ஆவியாகும். இந்த நீர் நம்மீது ஊற்றப்பட்டால் என்ன ஆகும் என்பது நமக்குத் தெரியும். 1,400 டிகிரி வெப்பத்தில் இரும்பே உருகிப் போகும். 3,200 டிகிரி வெப்பத்தில் டங்ஸ்டன் உருகிப் போகும். அப்படியானால் 4,000 டிகிரி வெப்பத்தில் என்ன நடக்கும்? நம்மால் நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால், இது ஹிரோஷிமா நகரில் நடந்தது. அருகில் இருந்த அனைத்தும் ஆவியாகிப் போனது. 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த கட்டடங்கள் தவிடுபொடியாகின. அங்கிருந்த அனைவரும் இறந்து போனார்கள். பலர் குற்றுயிரும் குலைஉயிருமாய் ரண வேதனைகளோடு உடல் சிதறிக் கிடந்தனர். ஹிரோஷிமா நகரக் குளங்களில், ஆறுகளில் பிணங்கள் மிதந்தன. ஆறுகளில் ஓடிய நீர் சுடுநீராக மாறியது. அணுகுண்டு வெடித்த பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பாலுள்ள மனிதர்களின் ஆடைகள் பிய்த்தெறியப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டனர்.ஆகஸ்ட் 9: ஹிரோஷிமா நகரின் பேரழிவைக் கண்ட ஜப்பானிய படைத்தலைவர்கள் நேச நாடுகளிடம் சரணடைவது பற்றி விவாதித்தனர். ஜப்பானிய இளவரசர் ஹிரோ ஹிட்டோவும் போரை நிறுத்த முடிவு செய்தார். ஆனால், போர்க்குழுவின் நடவடிக்கைகள் சற்று தாமதமாகவே ஆகஸ்ட் 9-ம் தேதி காலை 11 மணிக்கு நாகசாகி மீது மற்றோர் அணுகுண்டை அமெரிக்கா வீசியது. இந்த அணுகுண்டுக்கு "குண்டு பையன்' என்று பெயர். இந்தக் குண்டை வீசுவதற்கு முதலில் ஜப்பானிய "கோகுரா' என்ற நகரமே இலக்காக இருந்தது. காலநிலை மோசமாகி மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் கோகுராவின் இலக்கைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. அதனால் அந்த விமானம் தனது இலக்கை மாற்றி நாகசாகி நகரத்தில் அந்தக் குண்டை வீசியது. இந்தக் குண்டு பூமிக்கு மேலே 470 மீட்டர் உயரத்தில் வெடித்தது. இந்தக் குண்டு 21 டன் டிஎன்டி வெடிமருந்துக்குச் சமம். வெடித்தவுடன் 4,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் வெளியானது. இதைத் தொடர்ந்து மணிக்கு 1,005 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இது மிகவும் மோசமான ஐந்தாம் ரக புயலுக்கும் மேல் என்று ஒப்பிடப்படுகிறது. 40,000 முதல் - 75,000 வரையில் மக்கள் உடனடியாக இறந்தனர். 1945-ம் ஆண்டு இறுதியில் 80,000 மக்கள் இறந்திருந்தனர். ஹிரோஷிமா நகரத்தைக் காட்டிலும் நாகசாகியில் மக்கள்தொகை குறைவானதால் இறப்புக் குறைவாகவே இருந்தது. 1945-ம் ஆண்டு நியூ மெக்சிகோ நகரில் "அல்மோலிர்டர்' என்ற இடத்தில் ஓர் உருக்குக் கோபுரம் உருவாக்கப்பட்டது. இந்தக் கோபுரத்தின் உச்சிக்கு மேலே அமெரிக்காவால் வடிவமைத்து உருவாக்கப்பட்ட அணுகுண்டை ஜூலை 16-ம் தேதி வெடித்துச் சோதனை செய்து வெற்றி கண்டது. அதன்பிறகுதான் 20 நாள்களில் ஆகஸ்ட் 6-ம் தேதி ஹிரோஷிமா நகரைக் குறிவைத்து சின்னப் பையன் என்ற அணுகுண்டை வெடித்தது. இந்தக் குண்டு 120 அங்குல உயரமும் 28 அங்குல விட்டமும் கொண்ட 9,000 பவுண்டு எடையுள்ளதாக இருந்தது. நாகசாகியில் ஆகஸ்ட் 9-ம் தேதி வெடித்த அணுகுண்டு 128 அங்குல நீளமும் 60 அங்குல விட்டமும் 10,000 பவுண்டு எடையுள்ள புளுட்டோனியத்திலானதாகவும் இருந்தது. இந்த வெடிப்பின்போது 15-லிருந்து 22 கிலோ டன் எடையுள்ள வெடிமருந்துகளிலிருந்து கிடைக்கும் சக்தி வெளிப்பட்டது. அமெரிக்கா இந்த அணுகுண்டை வெடிக்கும்போது யுத்தம் ஒரு முடிவுக்கு வந்திருந்தது. இதில் வெற்றி யாருக்கு என தீர்மானிக்கப்பட இருந்தது. நிலைமைகள் இவ்வாறிருந்தும் அமெரிக்கா வெறித்தனமாக அணுகுண்டைப் போட்டது. இதற்குக் காரணம் அமெரிக்க ராணுவத்தின் இழப்பைக் குறைப்பதற்கும், ஜப்பான் ராணுவத்தைச் சரணடையச் செய்வதற்கும் சோவியத் யூனியனுக்கு எதிரான தனது வல்லமையை உணர்த்துவதற்கும்தான் என்று மேஜர் ஜெனரல் லெஸ்ஸி ஆர். குரோவ் "இப்பொழுது சொல்ல முடியும்' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். இந்த அணுகுண்டை வெடிப்பதன் மூலம் அதில் வெளிப்படும்   சக்தியை அளப்பதற்கும், அதன் நாசகாரத்தன்மையைத் தெரிந்து கொள்வதும்கூட அமெரிக்காவின் நோக்கமாக இருந்தது. ஹிரோஷிமாவின் மையப் பகுதியை அணுகுண்டு தாக்கியவுடன் மையத்திலிருந்து 0.8 கி.மீ.  வரையிலான 55,000 கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. 24 கி.மீ. தொலைவு வரையிலான அனைத்துக் கட்டடங்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாயின. 132 கி.மீ. பரப்பளவுள்ள பகுதிகள் எரிந்து தீக்கிரையாகின. அந்த நகரத்திலிருந்த 76,000 கட்டடங்களில் 6,000 மட்டுமே தப்பின. ஒட்டுமொத்தமாக நகரின் 302 கி.மீ. பரப்பளவு நாசத்துக்கு ஆளாகின. இக்குண்டு வெடிப்பால் 78,500 மக்கள் உடனடியாக மாண்டனர். 70,000 மக்கள் பலத்த காயங்களுக்கு ஆளாகினர். இதில் பலர் உடல் உறுப்புகளை இழந்து தவித்தனர். ஹிரோஷிமா நகர் முழுவதும் அணுக்கதிர் வீச்சு பரவியது. இந்தக் கதிர் வீச்சுக்கு ஆளான மக்களின் மரபணுக்கள் பாதிப்புக்குள்ளாகின. இப்படி மரபணு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பல்வேறு அங்ககீன சிதைவுகளுடன் பிறந்தன. இன்றுவரை இந்தப் பாதிப்புகள் தொடர்ந்து வருகின்றன.ஹிபாகுஷாக்கள்: இந்தப் பெயர் ஜப்பான் முழுவதும் தெரிந்த ஒரு பெயர். ஜப்பானிய மொழியில் இதற்கு "குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டோர்' என்று பெயர். 2005-ம் ஆண்டு மார்ச் வரைக்கும் 2,66,598 பேருக்கு ஹிபாகுஷாக்கள் சான்றிதழை ஜப்பானிய அரசு வழங்கியிருக்கிறது. இவர்களில் பெரும்பாலோர் அணுக்கதிர் வீச்சுக்கு ஆளானவர்கள். இன்றும் ஆயிரக்கணக்கானோர் கொரியாவின் பல பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஹிபாகுஷாக்களுக்கு ஜப்பானிய அரசின் உதவித்தொகை மாதாமாதம் அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வோராண்டும் அணுக்கதிர் வீச்சால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த ஹிபாகுஷாக்கள் தொடர்வார்கள் என்பது தெரியவில்லை. இன்றைக்கும் பேரழிவு ஆயுதங்கள் 5 அணு வல்லரசுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, சீனா ஆகிய நாடுகளில் இருக்கின்றன. இவைகள் ஏதாவது ஓர் அரசியல் காரணத்துக்காக ஒரு நாடு உபயோகப்படுத்தினாலும் அது அந்த நாட்டோடு நின்றுவிடாது. அது உலகப் பேரழிவுக்குக் கொண்டு செல்லும். அணு ஆயுதப் பரவல் தடை மாநாடு 2005-ல் கூடியது. இதில் அணு ஆயுதங்கள் உற்பத்தி முறை மற்றும் விஞ்ஞானத் தொழில் நுட்பம் இதர நாடுகளுக்குப் பரவக் கூடாது என்பதும், அணு வல்லரசுகளான ஐந்து நாடுகளும் படிப்படியாக அணுகுண்டுகளை அழித்துவிட வேண்டும் என்பதும் அடிப்படைக் கோட்பாடுகள். இப்பொழுது இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா, ஈரான் போன்ற நாடுகளிடமும் அணுகுண்டு செய்யத் தேவையான தொழில்நுட்பம் இருப்பதாகத் தெரிய வருகிறது. இம்மாதிரியான அணு ஆயுதப் போட்டிகள் உலகை விட்டு அகல வேண்டும். இல்லையேல் மனித சமுதாயத்தை அழிக்கும் அபாயம் நம் தலையில் அமர்ந்துகொண்டுதான் இருக்கும்.கட்டுரையாளர்: (தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் பொதுச் செயலர்).
கருத்துக்கள்

உலகில் பலநாடுகளில் வல்லரசு நாடுகள் குண்டு மழை பொழிந்துள்ளன; பொழிந்துவருகின்றன. ஈழத்தில் அழிவுக் குண்டுகளை வீசியே தமிழினப் படு கொலை நடந்தது. இதற்கு அணுக்குண்டால் பெரிதும் பாதிப்புற்ற சப்பானும் உடந்தைதான். வல்லரசுகளின் வல்லாண்மை வீழ்த்தப்பட்டால்தான் குண்டு மழை பொழியாத அன்பு மணம் வீசும் உலகத்தை நாம் காண இயலும். உலகக் குடிமக்கள் ஒன்றிணைந்து உயிரினங்களைக் காப்பாற்ற முன் வரவேண்டும்.வல்லாண்மை வெறிபிடித்த்தவர்களை ஆளும்பொறுப்பில் இருந்து தூக்கி எறியவும் மீண்டும் அவர்களைத் தலையெடுக்காமல் செய்யும் மக்களை ஆயத்தப்படுத்த வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/6/2010 4:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
கல்லெறிதலுக்கு முற்றுப்புள்ளி எப்போது?

காஸ்யப முனிவரின் பெயரால் காஷ்மீர் என பெயர் பெற்று, ஆதிசங்கரர் விஜயம் செய்த சாரதா பீடத்தின் அதிதேவதையாக உள்ள  சரஸ்வதி தேவியின் இருப்பிடமாகத் திகழும் ஜம்மு - காஷ்மீர் இன்று இந்தியாவுக்கு பெருத்த சவாலாக எழுந்துள்ளது.1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோதே, காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொண்டுவிட வேண்டும் என நினைத்த பாகிஸ்தான், பழங்குடியினரைத் தூண்டிவிட்டு உள்ளே நுழையவைத்தது.ஆனால், அந்த முயற்சியை இந்தியா முறியடித்தபோதும், அதன் பின்னர் 1965-லும், 1999-லும் மீண்டும் இந்தியாவுடன் போர் தொடுத்தது.நமது வரைபடத்தில் நாம் பார்க்கும் காஷ்மீரில் 1,01,338 சதுர கி.மீ. பரப்பளவு மட்டுமே நம் வசம் உள்ளது. 85,846 சதுர கி.மீ. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராகவும், 37,555 சதுர கி.மீ. பரப்பளவு சீனா வசமும் உள்ளது.இப்போது நம் வசம் உள்ள காஷ்மீரிலும் கடும் சவால் எழுந்துள்ளது."சிரித்துக் கொண்டே பாகிஸ்தானைப் பெற்றோம்; போராடி ஹிந்துஸ்தானத்தைக் கைப்பற்றுவோம்' என தேசத்தைப் பிரித்தபோது பாகிஸ்தான் தலைவர்கள் கூறினார்கள். அந்தத் தலைவர்களின் கனவை மெய்ப்பிக்கும் வகையில் அவர்களது வழித்தோன்றல்கள் இந்தியாவில் கலவரத்தைத் தூண்டி வருகின்றனர்.நேரடிப் போரில் வெல்ல முடியாது என்பதைப் புரிந்து கொண்ட பாகிஸ்தான், தனது உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் மூலம் கடந்த பல ஆண்டுகளாக காஷ்மீரில் பிரிவினைவாத சக்திகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்துவருகிறது.தொடர்ந்து மாநிலத்தில் நிலவி வரும் பிரச்னை காரணமாக லட்சக்கணக்கான பண்டிட்டுகள் மாநிலத்தில் இருந்து அகதிகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர்.இப்போது, புதிய உத்தியாக மக்களைத் தூண்டிவிட்டு பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிய வைக்கின்றனர். முதலில் இளைஞர்கள் மட்டும்தான் கல்லெறிதலில் ஈடுபட்டனர். அடுத்து பெண்களும், முதியவர்களும் கூட இந்த கல்லெறிதலில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.மக்களுக்கு இடையே பயங்கரவாதிகள் சிலர் புகுந்து கொண்டு பாதுகாப்புப் படையினரை நோக்கிச் சுடுகின்றனர். தற்காப்புக்காக பாதுகாப்புப் படையினர் சுடுவதில் சிலர் உயிரிழக்கும்போது நிலைமை இன்னும் உணர்ச்சிகரமானதாக ஆகிவிடுகிறது.இதுபோதாதென்று பாதுகாப்புப் படையினரின் முகாம்களைத் தாக்கி தீவைத்துக் கொளுத்துவதிலும் இவர்கள் ஈடுபடுகின்றனர்.நிலைமை எந்த அளவுக்கு விபரீதமாகி இருக்கிறது என்றால் சையத் அலி ஷா ஜீலானி தலைமையிலான ஹுரியத் அமைப்பு, ஞாயிற்றுக்கிழமையை வேலைநாளாகவும், வெள்ளிக்கிழமையை விடுமுறை நாளாகவும் அறிவித்துள்ளது.அத்துடன், இந்திய அரசாங்கத்துக்கு ஒத்துழைக்காதவண்ணம் ஜூலை 28 முதல் பொதுமக்கள் யாரும் மின் கட்டணம், விற்பனை வரி, தண்ணீர் வரி ஆகியவற்றை கட்ட மறுக்க வேண்டும் என ஹுரியத் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.காஷ்மீர் பல்கலைக்கழகமும், பாரத ஸ்டேட் வங்கியும் ஜூன் 25-ம் தேதி செயல்பட்டுள்ளன என்பதைப் பார்க்கும்போது அங்கு அரசாங்கம் என்று ஒன்று உள்ளதா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.ஏன் இந்த நிலை? எந்தவொரு போராட்டமுமே திடீரென ஒரே நாளில் உருவாவதில்லை.  அதுவும் காஷ்மீர் பிரச்னை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.ஆனால், மக்கள் இந்த அளவுக்கு இந்திய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவார்கள் என்பதைக் கணிக்க உளவு அமைப்பு தவறிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.ஏழ்மையின் காரணமாகவும், வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணமாகவும்தான் மக்கள் இதுபோன்ற வன்முறையில் இறங்கியுள்ளனர் என்றும் அதனால் அதற்குரிய சில திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.இப் பிரச்னைக்கு வேலையில்லாத் திண்டாட்டம் என்ற காரணத்தில் முழு உண்மையில்லை. அதுதான் உண்மையென்றால் நமது நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் சுமார் 50 கோடி பேர் தினசரி கல்லெறிதலிலோ, துப்பாக்கியைத் தூக்குவதிலோ ஈடுபட்டிருக்க வேண்டும்.அது காஷ்மீராக இருந்தாலும் சரி, மாவோயிஸ்டுகளாக இருந்தாலும் சரி, மக்களை சிலர் தூண்டி விடுகிறார்கள். எல்லாப் பகுதிகளிலும் சீரான வளர்ச்சிப் பணிக்கு திட்டமிடும் அதே நேரத்தில் தூண்டிவிடுபவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவது அவசியம்.பிரிவினையின்போது பாகிஸ்தான் சென்றவர்கள் படும் துன்பங்களையும், இந்தியாவுடன் இருப்பதே நன்மை பயக்கும் என்பதையும், இந்தியப் பற்று உள்ள உள்ளூர் தலைவர்கள் மூலம் மக்களுக்குப் புரியவைக்கும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.எந்த விலை கொடுத்தும் காஷ்மீரை நாம் தக்கவைத்துக் கொள்வோம் என்பதை பிரிவினைவாதத் தலைவர்களுக்கு அரசு உணர்த்த வேண்டும். பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுத்ததால் பிரச்னை தீரும் என நினைத்தே தேசம் பிரிக்கப்பட்டது. அதனால், கடந்த 63 ஆண்டுகளாக காஷ்மீரில் கலவரம், மும்பைத் தாக்குதல், நாட்டின் பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் என தொடர் பிரச்னைகளை சந்தித்து வருகிறோம்.காஷ்மீர் நம் கையை விட்டுப் போனால், அடுத்து மேற்கு வங்கத்துக்கும், அசாமுக்கும் குறிவைக்கப்படும். அதற்கான பணிகளை ஏற்கெனவே பாகிஸ்தானும், வங்கதேசமும் தொடங்கிவிட்டன.மேற்கு வங்கத்திலும், அசாமிலும் லட்சக்கணக்கானோர் இரு தேசங்களிலும் இருந்து ஊடுருவியுள்ளனர். அவர்களை வெளியேற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் கூட அவர்களை வெளியேற்ற முடியவில்லை. காரணம் இரு மாநிலங்களிலும் ஊடுருவியவர்களை ஓட்டு வங்கியாகக் கருதி, அவர்களுக்கு ரேஷன் அட்டை உள்பட சகல வசதிகளையும் இரு மாநில அரசுகளும் செய்து கொடுத்துவிட்டன. 1947-ல் ஆந்திர மாநிலம், ஹைதராபாதில் ரசாக்கர்கள் எனப்படுவோர் பாகிஸ்தானுடன் சேரப் போவதாக முரண்டு பிடித்தபோது, ராணுவத்தை அனுப்பி தனது உறுதியான நடவடிக்கை மூலம் அவர்களை அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேல் பணியவைத்தார்.அதுபோன்ற துணிவான, சாதுர்யமான நடவடிக்கையால் காஷ்மீரைக் காப்பாற்றுவதன் மூலம்தான் பாகிஸ்தானுக்கு உரிய பதிலை நாம் தர முடியும். செய்யுமா மத்திய அரசு?
கருத்துக்கள்

பாகிசுத்தான் கட்டுப்பாட்டு காசுமீர் நிலையையும் சீனாக் கட்டுப்பாட்டுக் காசுமீர் நிலையையும் தினமணி விளக்கினால் நன்று. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/6/2010 3:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
அணு ஆயுதங்களை அழிக்க ஐ.நா. பொதுச் செயலர் வேண்டுகோள்


நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் உயிர் தப்பிய சுமித்ரூ தானிக்சியை சந்தித்துப் பேசுகிறார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன்.
நாகசாகி, ஆக. 5: அணு ஆயுதங்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டு வீசப்பட்டதன் 65-வது ஆண்டு நினைவு தினம் ஹிரோசிமாவில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பான் கி- மூன் ஜப்பான் சென்றுள்ளார். நாகசாகி நகரில் உள்ள அணு குண்டு தாக்குதல் நினைவு அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், 1945-ம் ஆண்டு தாக்குதலில் உயிர் தப்பியவர்களை சந்தித்துப் பேசினார்.  அப்போது பேசிய அவர், உலகில் எந்தப் பகுதியிலும் மீண்டும் அணுகுண்டு தாக்குதல் நடைபெறக்கூடாது, அதற்கு அணு ஆயுதங்களே இல்லை என்ற நிலை உருவாக வேண்டும் என்றார்.  உலக நாடுகள் அனைத்தும் அணு ஆயுதங்களை முழுமையாக அழிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கருத்துக்கள்

ஈழத்தில் கொத்தணிக் குண்டுகளை வீசிப் பேரினப் படுகொலை நடந்தததை வேடிக்கை பார்த்தவருக்கு அணுக்குண்டு ஒழிப்பு பற்றிப் பேச அருகதை உள்ளதா? 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/6/2010 3:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
We should not blame only America. They will not attack without any reason, do you know this IRAQ and AFGHAN has been attacked by America. Because twin tower attacked by 9 persons from Iraq,5 persons from Afghanistan and 3 from Pakistan. Financial supported from Iraq.(17 guys went there for higher studies, you have to know americans have conscience and good heart - they are helping more than 50% orphange center all over the world). Japan also attacked because of Pearl harbour attacked by Japan. With out reason they will not do anything.
By binu
8/7/2010 10:26:00 AM
உலகின் ஜனநாயகத்தின் பாதுகாவலன் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் அமெரிக்காவின் கடந்துவந்த பாதைகளை கண்ணுற்றால் அவை அந்நாட்டின் கோரமுகத்தை காட்டும் கண்ணாடியாக விளங்குவதை காணமுடியும். இராண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணு ஆயுத குண்டுகளை வீசி அழித்தது. அமெரிக்காவின் இந்த அணுஆயுத தாக்குதலில் முதலில் ஹிரோஷிமா மீது வீசப்பட்ட 'லிட்டில் பாய்' என்ற குண்டின் மூலம் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் உயிரிழந்தனர். பல்லாயிரம் பேர் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டனர். இரண்டாவதாக நாகசாகி மீது 'பேட்மேன்' என்ற அணுகுண்டை அமெரிக்கா வீசியதில் அந்த நகர் நிர்மூலமாக்கப்பட்டதோடு, கதிர்வீச்சால் சுமார் இரண்டு லட்சத்து முப்பதாயிரம் பேர் மாண்டதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் அத்தகைய மோசமான மனிதப்படுகொலையின் நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று அமெரிக்காவுக்கு ஒரு ஹிரோஷிமா- நாகசாகி; இன்று ஒரு ஈராக்-ஆப்கானிஸ்தான். அமெரிக்க பயங்கரவாதத்தின் முடிவு நாள் எப்போது....? வேண்டாம் அணு ஆயுதம்; வேண்டும் அன்பு எனும் ஆயுதம்.
By nilal
8/7/2010 12:05:00 AM
வணக்கம் இலக்குவனாரே...... பான் கீ மூனை அருகதையற்றவர் என்று தாக்குகிரீரே... சரி...... இலங்கையில் மனித உரிமை மீறலை விசாரிக்க அமைத்த குழுவை உங்களது மாஆஆஆஆஆஆஆன்புமிகு கருணாநிதி ஆதரிக்கவில்லையே அது உங்களுக்கு நியாயமாக ப்டுகிறதா?
By மானங்கெட்ட தமிழன்
8/6/2010 7:08:00 AM

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி


புதுதில்லி, அக. 5: மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி முதல்முறையாக நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை பதிலளித்தார்.கேள்வி நேரத்தின்போது பிரதான கேள்வி ஒன்றுக்கு, முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பதிலை அவர் ஆங்கிலத்தில் வாசித்தார்.அவர் அமைச்சராக பதவியேற்று ஓராண்டுப் பின் இப்போதுதான் நாடாளுமன்றத்தில் பதிலளித்து உள்ளார்.பிரதான கேள்வியைத் தொடர்ந்து உறுப்பினர்கள் எழுப்பிய துணைக் கேள்விகளுக்கு   இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜேனா பதிலளித்தார்."இன்றைய தினம் கேள்விப் பட்டியலில் எனது கேள்வி, முதலில் இடம் பெற்றதும் அமைச்சர் அழகிரி அதற்கு முதன்முதலில் பதிலளித்ததும் நான் செய்த பாக்கியமாகக் கருதுகிறேன்' என்று நெகிழ்ந்தார் காங்கிரஸ் உறுப்பினர் சரண் தாஸ் மகந்த்.அழகிரி கேபினட் அமைச்சராக இருந்தபோதும் நாடாளுமன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். ஆங்கிலத்தில் சரளமாக பேச வராது, ஹிந்தி தெரியாது என்ற காரணத்தால் அவை நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவில்லை.கேள்வி நேரத்தில் கூட அவருக்குப் பதிலாக இணை அமைச்சசர் ஸ்ரீகாந்த் ஜேனாவே பதிலளித்து வந்தார்.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. அமைச்சர் அழகிரிதான் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தின. இதனால் அவை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அவர் தவிர்த்து வந்தார். இதைத் தொடர்ந்து அமைச்சர் அழகிரி அவைக்கு வருவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உள்பட  விமர்சித்தார்.அமெரிக்கா சென்றுள்ளதால் பட்ஜெட் கூட்டத் தொடரில் அவர் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது.இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழில் பதிலளிக்க அனுமதிக்குமாறு மக்களவைத் தலைவர் மீராகுமாரிடம் அழகிரி அனுமதி கோரினார். ஆனால் நாடாளுமன்ற செயலகம் இதற்கு அனுமதி மறுத்துவிட்டது. விதிகளின்படி ஆங்கிலம் அல்லது ஹிந்தியில்தான் அமைச்சர்கள் பேச முடியும் என்று உறுதியாக தெரிவித்துவிட்டது.இந்த நிலையில் அவை நிகழ்வுகளில் கலந்து கொள்வது குறித்து அவைத் தலைவர் மீராகுமாரிடம் ஆலோசனை செய்தார் அழகிரி. எழுத்து மூலம் கேட்கப்படும் பிரதான கேள்விகளுக்கு அமைச்சர் அழகிரி ஏற்கெனவே ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட பதிலை அவையில் படிக்குமாறு யோசனை தெரிவிக்கப்பட்டது.அந்த யோசனையை ஏற்று முதன்முதலாக மக்களவையில் அமைச்சர் அழகிரி வியாழக்கிழமை பேசினார்.
கருத்துக்கள்

முதல் உரை தமிழ் உரையாக இல்லாத பொழுது இதை முன்பே வாசித்திருக்கலாமே. பொறுத்ததுதான் பொறுத்தார், தமிழில் பேசும்வரை பொறுத்திருக்கக் கூடாதா?அரசர் வீட்டுக் கன்றுக்குட்டியின் சிக்கலைத் தீர்க்கவாவது அரச மொழியாகத் தமிழ் வரும் என எதிர்பார்த்தோம். மாநிலத் தன்னாட்சி கோருவோரால் மொழியுரிமையைக்கூடப்பெற இயலவில்லையே என வரலாறு பழிக்காதா? பிற நாட்டுத்தலைவர்கள் சந்திக்கும் பொழுது தங்களுக்கு அயல்மொழி தெரிந்தும் தத்தம் தாய்மொழியில்தான் பேசுகின்றனர். இங்கோ தாய்மொழியை மறந்தால்தான் நாட்டுப்பற்று மிக்க தேசத்தலைவர்கள் என்ற பட்டம் கிட்டும் அவல நிலை. மத்திய அரசின் ஆட்சிமொழியாகத் தமிழை ஆக்கவதுடன் பாராளுமன்ற மொழியாக உடனடியாகத்தமிழை ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/6/2010 3:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
மக்களவையில் அழகிரியின் முதல் பதில்


புதுதில்லி, ஆக. 5: மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி மக்களவையில் இன்று முதல் முறையாக ஒரு கேள்விக்குப் பதிலளித்தார்.மத்திய அமைச்சராக அழகிரி பதவியேற்றது முதல் இதுவரை நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்த நிலையில் மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் சரண் தாஸ் மஹந்த் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு அழகிரி ஆங்கிலத்தில் பதிலளித்தார். "ஏ முதல் ஈ வரையிலான அறிக்கை அவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது" என்பதே அவர் அளித்த பதிலாகும்.இதைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட துணைக் கேள்விகளுக்கு அழகிரியின் அனுமதியோடு துணையமைச்சர் ஸ்ரீகாந்த் ஜேனா பதிலளித்தார்.
கருத்துக்கள்

முதல் உரை தமிழ் உரையாக இல்லாத பொழுது இதை முன்பே வாசித்திருக்கலாமே. பொறுத்ததுதான் பொறுத்தார், தமிழில் பேசும்வரை பொறுத்திருக்கக் கூடாதா? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/5/2010 9:45:00 PM 


கூட்டணிக்கு வலி: ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கருணாநிதி பதில்


சென்னை, ஆக.5: தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திமுக - காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்துவதற்குப் பதிலாக "வலிப்படுத்துகிறார்' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:கான்கிரீட் வீடு திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.45 ஆயிரம் வழங்குவதாகவும், மாநில அரசு ரூ.15 ஆயிரம் மட்டுமே வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ள இளங்கோவன், இத் திட்டத்துக்கு கருணாநிதியின் பெயர் சூட்டியுள்ளதாகப் பேசியிருக்கிறார்.இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகவும், மத்திய அரசின் அமைச்சராகவும் இருந்தவர். அவர் சொல்லுகின்ற திட்டம் வேறு - தமிழக அரசு அறிவித்துள்ள திட்டம் வேறு. இந்த இரண்டு திட்டங்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியாமல், மத்திய அரசின் நிதி உதவியோடு செய்யப்படும் திட்டத்திற்கு  கலைஞர் பெயரா அது என்ன நியாயம் என்றெல்லாம் இளங்கோவன் கேட்பது -  கூட்டணியை வலுப் படுத்துகின்ற  செயல் அல்ல, வலிப்படுத்துகின்ற  காரியமாகும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
கருத்துக்கள்

மத்திய அரசிற்குப் பணம் எங்கிருந்து வந்தது என்பதைக் கோவன் சொன்னால் நன்றாக இருக்கும். நமது பணத்தில் ஒரு பகுதியைத்தான் அது திருப்பி்த் தருகிறது. அவ்வாறிருக்க அதற்கு என்ன பெயர் சூட்ட உரிமைஉள்ளது? இந்தி பேசாத மக்களின் பெரும்பான்மை வரியைக் கொண்டு தனது திட்டங்களுக்கும் அமைப்புகளுக்கும் இந்தி அல்லது சமற்கிருதப் பெயர் சூட்டும் மத்திய அரசைக் கண்டிக்காத கோவன் வீராவேசமாகப் பேசிப்பயனில்லை. ஆனால், இவரின் பேச்சு கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்திக் காங்.ஐ அடியோடு தொலைக்கும் என்றால் மகிழ்ச்சிதான். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/5/2010 9:39:00 PM
பார்வதியின் மடிமீது இருந்து கொண்டு பாம்பு சீறுகிறது. எனவே, கலைஞர் கோவனைச் சினந்து பயனில்லை. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/5/2010 9:37:00 PM
கலைஞர் வாழ்க மீண்டும் உங்கள் அட்சியே மலரும் வாழ்க வளமுடன் கலைஞர் வாழ்க மீண்டும் உங்கள் அட்சியே மலரும் வாழ்க வளமுடன் கலைஞர் வாழ்க மீண்டும் உங்கள் அட்சியே மலரும் வாழ்க வளமுடன் கலைஞர் வாழ்க மீண்டும் உங்கள் அட்சியே மலரும் வாழ்க வளமுடன்
By rahman
8/5/2010 8:54:00 PM
tamilnadu is very good deveolp compare the other southinda state why TAMIL RULE FOR THALIVAR கருணாநிதி
By tamil
8/5/2010 8:10:00 PM
மத்திய அரசு நேரு குடும்பத்திற்கு சொந்தம், தமிழக அரசு முக குடும்பத்திற்கு சொந்தம் என்னும் அடிமை புத்தியின் வெளிப்பாடு இது.இது மக்களாட்சி நடக்கும் நாடு என்பதை மறந்த இந்த அரசியல்வாதிகள், மத்திய அரசை பேரரசாகவும், தமிழக அரசை சிற்றரசாகவும் எண்ணுவதை நிறுத்த வேண்டும். தங்களின் பிழைப்பிற்காக இந்த அரசர்களின் கால்களை நக்கி வாழும் இவர்கள், அரசர்களுக்கு தங்களின் விசுவாசத்தை வெளிக்காட்ட எவ்வளவு கீழே இறங்குவார்கள் என்பது ஈவீகோ இ வின் உரையில் இருந்து புரிகிறது.
By SlaveTamilOfIndia
8/5/2010 7:59:00 PM
மத்திய அரசு நேரு குடும்பத்திற்கு சொந்தம், தமிழக அரசு முக குடும்பத்திற்கு சொந்தம் என்னும் அடிமை புத்தியின் வெளிப்பாடு இது.இது மக்களாட்சி நடக்கும் நாடு என்பதை மறந்த இந்த அரசியல்வாதிகள், மத்திய அரசை பேரரசாகவும், தமிழக அரசை சிற்றரசாகவும் எண்ணுவதை நிறுத்த வேண்டும். தங்களின் பிழைப்பிற்காக இந்த அரசர்களின் கால்களை நக்கி வாழும் இவர்கள், அரசர்களுக்கு தங்களின் விசுவாசத்தை வெளிக்காட்ட எவ்வளவு கீழே இறங்குவார்கள் என்பது ஈவீகோ இ வின் உரையில் இருந்து புரிகிறது.
By SlaveTamilOfIndia
8/5/2010 7:50:00 PM
... Ilangovan should point his finger on congressmen succumbing to DMK but not towards karunanidhi. If congress men have self esteem left they should demand power sharing with DMK .Otherwise they should withdraw their support to DMK. I don't understand why congress is afraid of demanding its share.There should be some unholy alliance.Karunanidhi alone is not to be blamed.
By R.Krishnamurthy
8/5/2010 7:27:00 PM
ama ama public moneya yarrumae wastepunnathe illa.yean vajpayee india olirkirathuinu vilamparam goverment kasulae gudutthathi marunthuteengalla.ungallukku vayatheirichal.athanala meda konayairrukkinu yelluthikkittu irrukeenga
By sundu
8/5/2010 7:23:00 PM
amaa itha onu kandupidichiteenga.ela pirachinai.rajiv gandhi sethallum nangathan,pirapagaran sethallum nangathan,yean matthavanllam tamilan illiya.yenna singaporela politics punikkitu irunthingalakkum
By valavanthan
8/5/2010 7:17:00 PM
BETTER PUT ALL THE NAMES IN THEIR FAMILY ONE ONE PROJECT. THEN IT WILL LOOK LIKE THE WHOLE GOVT PROJECT. BUT FOR THAT MANY NAMES WHETHER THAT MAY PROJECTS ARE AVAILABLE. ANY WAY ONE NAMING THE PROJECT. AFTER THAT THERE WILL BE ONLY ONE CORNER STONE. FUNCTION COST FOR CORNER STONE LAYING PUT SOME 400 CORESE. USE PUBLIC MONEY AS YOU LIKE. ANY WAY IF ANYBODY ASKS ANY QUESTION PUT TADA OR PODA CASE AND PUT THEM IN ONE YEAR IN PRISON. CHEERS AND LONG LIVE THE SO CALLED TAMIL DYNASTY AND FINISH OFF ALL THE TAMILS AND BRING DRAVIDAN PEOPLE RULE THE STATE. BU.... SH....
By naan
8/5/2010 7:14:00 PM
BETTER PUT ALL THE NAMES IN THEIR FAMILY ONE ONE PROJECT. THEN IT WILL LOOK LIKE THE WHOLE GOVT PROJECT. BUT FOR THAT MANY NAMES WHETHER THAT MAY PROJECTS ARE AVAILABLE. ANY WAY ONE NAMING THE PROJECT. AFTER THAT THERE WILL BE ONLY ONE CORNER STONE. FUNCTION COST FOR CORNER STONE LAYING PUT SOME 400 CORESE. USE PUBLIC MONEY AS YOU LIKE. ANY WAY IF ANYBODY ASKS ANY QUESTION PUT TADA OR PODA CASE AND PUT THEM IN ONE YEAR IN PRISON. CHEERS AND LONG LIVE THE SO CALLED TAMIL DYNASTY AND FINISH OFF ALL THE TAMILS AND BRING DRAVIDAN PEOPLE RULE THE STATE. BU.... SH....
By naan
8/5/2010 7:14:00 PM
apputi thanda poduvom.jayalalitha potta punnakku thittathukku yllam ava paer vachallae ,appa mattum suttha mudikittu irunthingalla. nallathu nadakka udungada.
By pirambaladipen
8/5/2010 7:11:00 PM
Karunanidhi, you sold our nation and rights to hindikarans and indirectly murdered 50K Thamizhs in the war. Now, what is the point in shedding tears? No Thamizhs is going to support you in your unholy alliance with hindikarans. Name all the projects in hindikarans name like rajiv, sonia, indira, priyanka, rahul, sanjay, manmohan, etc. Remember, even enemy can be forgiven but not traitor like you.
By Raja
8/5/2010 7:04:00 PM
Whether it is central or state, it is public money. All govt. projects should be implemented in the name og govt. only and not in any individual's name. We can have the individual name only if the project is funded solely by the individual. It is only common sense. One cannot use govt. money to perpetuate one's name. Leave these things aside, what will happen to this name when the other party comes to power.
By ankandasamy
8/5/2010 6:55:00 PM
இளங்கோவன் ஒரு காமடி பீஸ். இவருக்கு எல்லாம் பதில் சொல்லி முதல்வர் தன் பொன்னான நேரத்தை வீணாக்கிக் கொள்கிறார். இவருக்கு பதில் சொல்ல வெற்றிக்கொண்டனை போஸ்டிங் போட்டுலாம்.
By பரமசிவம்
8/5/2010 6:39:00 PM
பொதுமக்களின் வரிப்பணமே அரசுக்கருவூல்த்தில் உள்ள நிதியாகும்.இதிலிருந்து செய்யப்படும் செலவுகளுக்கு தனிப்பட்ட அரசியல்வாதிகளின் பெயர்களை வைப்பது குற்றமாகும்.தண்டிக்க வேண்டியதாகும். ஊரான் நெய்யே,என் பொண்டாட்டிகையே!
By vendhan
8/5/2010 6:31:00 PM
Mr. Karunanithi, whatso ever it be, why the blody Kalaingar name is coming to the picture...? You should stop using your surname to all government schemes.. understand..?
By Bala
8/5/2010 5:44:00 PM
unkku vendumya. idu thevaiya?
By ahmed
8/5/2010 5:40:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
Yes you Right Mr.இலக்குவனார் திருவள்ளுவன், than இந்தி அல்லது சமற்கிருதப் பெயர் சூட்டும் மத்திய அரசைக் கண்டிக்காத கோவன் வீராவேசமாகப் பேசிப்பயனில்லை. ஆனால், இவரின் பேச்சு கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்திக் காங்.ஐ அடியோடு தொலைக்கும் என்றால் மகிழ்ச்சிதான்,  Very,very very Good, i follow your command, No need to Congress In tamil Nadu
By Tamilan In Qatar
8/6/2010 7:47:00 AM
 

"வலி'ப்படுத்துகிறார் இளங்கோவன்: கருணாநிதி அறிக்கை



கருத்துக்கள்

பார்வதியின் மடிமீது இருந்து கொண்டு பாம்பு சீறுகிறது. எனவே, கலைஞர் கோவனைச் சினந்து பயனில்லை.எனினும்,மத்திய அரசிற்குப் பணம் எங்கிருந்து வந்தது என்பதைக் கோவன் சொன்னால் நன்றாக இருக்கும். நமது பணத்தில் ஒரு பகுதியைத்தான் அது திருப்பி்த் தருகிறது. அவ்வாறிருக்க அதற்கு என்ன பெயர் சூட்ட உரிமைஉள்ளது? இந்தி பேசாத மக்களின் பெரும்பான்மை வரியைக் கொண்டு தனது திட்டங்களுக்கும் அமைப்புகளுக்கும் இந்தி அல்லது சமற்கிருதப் பெயர் சூட்டும் மத்திய அரசைக் கண்டிக்காத கோவன் வீராவேசமாகப் பேசிப்பயனில்லை. ஆனால், இவரின் பேச்சு கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்திக் காங்.ஐ அடியோடு தொலைக்கும் என்றால் மகிழ்ச்சிதான். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/6/2010 3:26:00 AM
Even in this old age he did not learn or know free speach. Is it the Dravidan pricnciple?. M. K always want to hear people saying "you are perfect", "you are good", "you always do right", even though you have three wives?.
By raa
8/6/2010 12:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் தினமலர்