மீனகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீனகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 22 நவம்பர், 2010
மாவீரர் நாளன்று கடை ப் பிடிக்க வேண்டியவை
ஞாயிறு, 14 நவம்பர், 2010
மீனகத்தின் முதன்மைக் கருத்துரைகள்
ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் தள – செயற்பாடு புதுப்பிக்கப்படுகிறது
Thiruvalluvan. I. ஒரு கருத்துரை எழுதியுள்ளார் - "வழக்கில் வாகை சூட வாழ்த்துகள். தமிழ் ஈழத் தேசியக் கொடி பாரெங்கும் பட்டொளிவீசிப் பறக்கட்டும்! விர...
on மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் 11/6/10
Thiruvalluvan. I. ஒரு கருத்துரை எழுதியுள்ளார் - "மனித நேயமற்ற அரசின் நடுவுநிலைமையற்ற அரசின் அணிசாராக் கொள்கையைக் கை விட்டஅரசின் வல்லரசாக ஆசைப்படு...
on மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் 11/12/10
on மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் 11/12/10
Thiruvalluvan. I. ஒரு கருத்துரை எழுதியுள்ளார் - "தமிழ் நலம பேண நாம் தமிழர் அமைப்பில் சேர்ந்து தொண்டாற்றிய இளைஞர் மறைவு பெரிதும் அதிர்ச்சியாக உள்ள...
on மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் 11/12/10
on மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் 11/12/10
Thiruvalluvan. I. ஒரு கருத்துரை எழுதியுள்ளார் - "அற உணர்வும் வீர உணர்வும் கொண்டு தாய்நிலம் காக்கப் போராடியவர்களை ஞ்சகத்தால் வீழ்த்திய சிங்களத் தல...
on மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் 11/12/10
on மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் 11/12/10
Thiruvalluvan. I. ஒரு கருத்துரை எழுதியுள்ளார் - "கணிணி மூலம் தமிழை அழிக்கும் முயற்சியை எடுத்துரைத்து மக்களை விழிப்படைய செய்து தமிழ்க்காப்பில் ஈடு...
on மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் 11/12/10
on மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் 11/12/10
Mohan Doss Rengaraj ஒரு கருத்துரை எழுதியுள்ளார் - "ithu indiya naduthana? enekku oru santhegam ullathu, inthiya suthanthiram vangiya nada illaya, e...
on மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் 11/9/10
on மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் 11/9/10
Thiruvalluvan. I. ஒரு கருத்துரை எழுதியுள்ளார் - "கல்விச் சாலையாகவும் மருத்துவச் சாலையாகவும் அறநிலையமாகவும் திகழ்ந்த கோயில்களைப் பிற்கால ஆரியர்களி...
on மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் 11/9/10
on மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் 11/9/10
nellai lion ஒரு கருத்துரை எழுதியுள்ளார் - "இவனெல்லாம் ஒரு ஆளா ............... இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது ? இலை மலர்ந்தால் ஈழம் மலருமுன்...
on மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் 11/9/10
on மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் 11/9/10
Thiruvalluvan. I. ஒரு கருத்துரை எழுதியுள்ளார் - "முன்பும் இது போன்ற செய்தி வந்திருந்தது. எனவே, தொடர்ந்து சிங்களப் பொதுமக்கள் வீரத்திருமகனைப் பெற்...
on மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் 11/8/10
on மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் 11/8/10
polurdhayanithi ஒரு கருத்துரை எழுதியுள்ளார் - "unmayana unarvalar glukku ellame therinthirukkirathu ariyamaiyil ulla makkalai kuzhappuvathum. t...
on மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் 11/8/10
on மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் 11/8/10
on மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் 11/6/10
ஞாயிறு, 31 அக்டோபர், 2010
கொழும்பு பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு
புறக்கணிப்போம்! புறக்கணிப்போம்! பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிப்போம்! தமிழ் எழுத்தாளர் போர்வையில் தமிழ் அழிப்பாளர்கள் நடத்தும் அழிச்சாட்டியத்தைப் புறக்கணிப்போம்! கொலைகாரக் கும்பலுக்குப் பொன்னாடை அணிவித்துப்புண்களை மறைக்க முயலும் கோமாளிகளும் ஏமாளிகளும் கூடும் கூட்டததைப் புறக்கணிப்போம்! மனித நேய உணர்வு இருக்கும் அனைவரும் மாக்கள் கூட்டும் கூட்டத்தைப் புறக்கணிப்போம்! வேண்டுதலுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் : சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்கள் கூட்டறிக்கை
வரலாறு நெடுகிலும் படைப்பாளிகள், கலைஞர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவுமே சார்புநிலை எடுத்திருக்கிறார்கள். ரஷ்யப் புரட்சியைச் சாட்சியமாக இருந்து கண்டு சொல்ல, அமெரிக்க எழுத்தாளர் ஜோன் ரீட் மொஸ்கோ சென்றார்.
ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் குடியரசுவாதிகளுக்கு ஆதரவாகச் சார்புநிலையெடுத்து, அவர்களுக்காகப் போராட ஸ்பெயினுக்கு விரைந்தனர் எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜோர்ஜ் ஓர்வெல், கிறிஸ்ரோபர் கோட்வெல் போன்ற படைப்பாளிகள். வியட்நாம் மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடினார்கள் தத்துவவாதிகளான பேர்ட்ரண்ட் ரஸ்ஸல், ழீன் போல் ஸார்த்தர் போன்றோர். ஈராக் யுத்தத்தின்போது, ‘அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை அழிக்க வந்த ஒரு பிசாசு’ எனத் தனது நோபல் பரிசு உரையில் பிரகடனப்படுத்தினார் நாடகாசிரியரான ஹரோல்ட் பின்ரர்.
படைப்பாளிகள், கலைஞர்கள் எந்த மதிப்பீடுகளுக்காக நிற்கிறார்கள்? இவர்கள் கருத்துச் சுதந்திரத்திற்காகத் தம்மை உறுதியாக நிலைநிறுத்திக்கொண்டவர்கள். ‘வாளை விடவும் எழுதுகோல் வலிமையானது’ என்று நிரூபித்தவர்கள்.
சிறிலங்காவில் எழுதுபவர்கள் தேர்ந்துகொள்ள இன்று என்ன இருக்கிறது? லசந்த போன்ற மனச்சாட்சியுள்ள சிங்கள, தமிழ்ப் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தமது உயிராபத்துக் கருதி சிறிலங்காவிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். மாற்றுக் கருத்து ஊடகங்கள் அனைத்தும் தாக்கப்படுகின்றன. கலைஞர்கள் காணாமல் போனோராக அறிவிக்கப்படுகிறார்கள். படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத நாடு சிறிலங்கா என உலக ஊடகங்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றன.
தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினைப் பயங்கரவாதமாகச் சித்திரித்து, தமிழின அழிப்பை நடத்தி முடித்துள்ளது சிறிலங்கா பயங்கரவாத அரசு. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை அழிக்க எடுத்த இராணுவ நடவடிக்கையின்போது, சர்வதேச யுத்த விதிகளை மீறி, தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் போராளிகளையும் தமிழ் மக்களையும் வகைதொகையின்றிக் கொலைசெய்தும், பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்தவர்களை மண்மூடிக் கொன்றும், சரணடைந்தவர்களைச் சல்லடையாக்கி நரபலியாடி நின்றது இந்தச் சிங்களப் பயங்கரவாத அரசு. யுத்தம் முடிவடைந்த பின்பும் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு சாட்சியங்கள் இல்லாமல் ஆக்குவதற்காக, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை யுத்தபூமியில் பார்வையிட தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருகிறது.
சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பெற்ற போர்க்குற்றங்களும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டு, சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கப்படவேண்டும் என்று உலகின் மனித உரிமை அமைப்புக்கள், டப்ளின் தீர்ப்பாயம் போன்ற நீதியமைப்புக்கள் தொடர்ந்தும் குரலெழுப்பிவருகிறன.
தமிழர்களின் குருதியில் தோய்ந்துபோய் இருக்கும் இனவெறிச் சிங்கள அரசு, நீதிக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள, தனது நிரந்தரச் செயற்பாடான பொய், ஏமாற்று, வஞ்சக நடிப்பு ஆகியவற்றை மீண்டும் அரங்கேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசியல் களத்தில் மட்டுமல்லாது, தமது பொருளியல் நலன் கருதிய வகையில் கலை, இலக்கியம், விளையாட்டு, கேளிக்கை ஆகியவைகளின் மூலம் தனக்கான அதிகார வெளியைச் சிறிலங்கா அரசு ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறது.சிறிலங்கா பயங்கரவாத அரசின் இந்தத் திட்டத்தின் சங்கிலித் தொடர்ச் செயற்பாடுகளாகக் கொழும்பில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழா, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கேளிக்கை, சிறிலங்கா இராணுவத்தினர்களுடனான இந்திய நடிகர்களின் கிறிக்கெற் விளையாட்டு ஆகிய களியாட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன.
சிங்கள மேலாதிக்கத்தால் இறுகிப்போன சிறிலங்கா அரசு, பல்வேறு மனித உரிமை அமைப்புக்களைக் கொழும்பில் அனுமதிக்க மறுத்துவரும் நிலையில், தனது பகை இனத்தின் இலக்கிய மாநாட்டை, அதுவும் உலகெங்கிலுமிருந்து திரட்டப்பட்ட சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டைக் கொழும்பில் நடத்த அனுமதித்திருக்கிறது என்றால், சிங்கள அரசிற்கு அதனால் ஏற்படும் அரசியல் அனுகூலம்தான் இதற்கான அடிப்படையாக இருக்குமே தவிர, தமிழ் எழுத்தாளர்களது செயற்பாட்டு நலன்களின்பால் கொண்ட அக்கறையாக இருக்க முடியாது.
2011 ஜனவரியில் கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்துவதற்கான அதனது ஏற்பாட்டாளர்களின் ஜனநாயக உரிமையை, மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள எழுத்தாளர்கள் கலைஞர்கள் எனும் வகையில் நாங்கள் மதிக்கிறோம் என்றாலும், இன்றைய நிலையில் சிறிலங்கா பயங்கரவாத அரசினால், தன் நலன் சார்ந்து உருட்டப்படும் சதுரங்கக் காய்களாகவே இந்த எழுத்தாளர்கள் ஆகிப்போவார்கள் என்பதற்கும் அப்பால் வேறெதுவும் நிகழப்போவது இல்லை என்றும் நாங்கள் கருதுகிறோம். சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களை மாநாட்டில் பங்குகொள்ள அனுமதிப்பதன் மூலம் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள் அனைவரும் தனது பக்கமே எனும் தோற்றப்பாட்டினை சிறிலங்கா அரசு தனக்கான அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்க முனையலாம். இதற்கு நாம் எவரும் பலியாகிவிடக்கூடாது.
இன்னும் உலர்ந்துவிடாத எமது மக்களின் குருதிச் சுவடுகளின் மீதும், எமது பெண்களதும் எமது பச்சிளம் குழந்தைகளினதும், முதியவர்களினதும் மரணித்த, எரியூட்டப்பட்ட உடலங்களின் மீதும் நடத்தப்படும் சிறிலங்கா அரசின் அரசியல் நாடகத்திற்கு துணைபோகக் கூடிய வகையில், நடைபெற்ற மனிதப் பேரழிவுக்குக் காரணமான சிறிலங்கா கொடுங்கோல் அரசு குறித்த எந்த நிலைப்பாட்டையும் முன்வைக்காத, இந்தச் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்
மாநாட்டை எல்லா வகையிலும் புறக்கணிப்பதே மனச்சாட்சியுள்ள படைப்பாளிகளாக, கலைஞர்களாக உள்ளவர்களது வரலாற்றுக் கடமையாகும் என நாங்கள் கருதுகிறோம். நீதியின்மேல் பசி தாகம் உடைய படைப்பாளிகள், கலைஞர்கள் தார்மீக நிலையில் மனிதகுல மனச்சாட்சியாகவே இருப்பவர்கள். அநீதிகளை, சிறுமைகளைக் கண்டு பொங்குபவர்கள். நொந்துபோன மக்கள் வலியின் குரலை ஓங்கி ஒலிப்பவர்கள். நீதிக்காக அதிகாரத்தை எதிர்ப்பவர்கள். வரலாறு நெடுகிலும் நிமிர்ந்து நிற்கும் இந்தத் தார்மீக அடிப்படைகளில் நின்று எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாகவும் நாங்கள் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நிராகரிக்கிறோம்.

கோவை ஞானி கோட்பாட்டாளர், இந்தியா எஸ். வி. ராஜதுரை கோட்பாட்டாளர், இந்தியா ஏ. ரகுநாதன், திரைப்படக் கலைஞர், பிரான்ஸ் தமிழவன் கோட்பாட்டாளர், இந்தியா நா. முத்துமோகன் கோட்பாட்டாளர், இந்தியா நாஞ்சில்நாடன் நாவலாசிரியர், இந்தியா பொன்னீலன் நாவலாசிரியர், இந்தியா இன்குலாப் கவிஞர், இந்தியா சிற்பி பாலசுப்ரமணியம் கவிஞர், இந்தியா புவியரசு கவிஞர், இந்தியா பா. செயப்பிரகாசம் சிறுகதையாசிரியர், இந்தியா கலாப்ரியா கவிஞர், இந்தியா பழமலய் கவிஞர், இந்தியா சேரன் கவிஞர், கனடா மாலதி மைத்ரி கவிஞர், இந்தியா மகேந்திரன் கோட்பாட்டாளர், இந்தியா கவிதாசரண் பதிப்பாளர், இந்தியா தேவிபாரதி எழுத்தாளர், இந்தியா புனித பாண்டியன் இதழாளர், இந்தியா காமராசன் பொதுச்செயலாளர்,கலை இலக்கியப் பெருமன்றம், இந்தியா கௌதம சித்தார்த்தன் பதிப்பாளர், இந்தியா அசோக் யோகன் பதிப்பாளர், அசை, பிரான்ஸ் காலம் செல்வம் கவிஞர், பதிப்பாளர், கனடா க. முகுந்தன் இதழாசிரியர், மௌனம், பிரான்ஸ் சுகிர்தராணி கவிஞர், இந்தியா அரசெழிலன் இதழாளர், நாளை விடியும், இந்தியா க. விஜயகுமார் பதிப்பாளர், இந்தியா நிழல் திருநாவுக்கரசு பதிப்பாளர், இந்தியா அ. விஸ்வநாதன் பதிப்பாளர், பதிவுகள், இந்தியா கே. வி. ஷைலஜா பதிப்பாளர், இந்தியா வேனில் கிருஷ்ணமூர்த்தி பதிப்பாளர், இந்தியா அய்யநாதன் ஊடகவியலாளர், இந்தியா புகழேந்தி ஓவியர், இந்தியா பொள்ளாச்சி நசன் ஆவணக்காப்பாளர், இந்தியா கி. பி. அரவிந்தன் கவிஞர், பிரான்ஸ் தமிழ்நாடன் கவிஞர், இந்தியா கண. குறிஞ்சி பதிப்பாளர், இந்தியா பொதியவெற்பன் பதிப்பாளர், இந்தியா எ. நாராயணன் இதழாளர், இந்தியா ம. செந்தமிழன் ஊடகவியலாளர், இந்தியா அமரந்தா மொழிபெயர்ப்பாளர், இந்தியா.
க. வாசுதேவன் கவிஞர், பிரான்ஸ் மே. து. ராசுகுமார் ஆய்வாளர், இந்தியா செழியன் திரைப்பட ஒளிப்பதிவாளர், இந்தியா தளவாய் சுந்தரம் ஊடகவியலாளர், இந்தியா பாலா கார்டூனிஸ்ட், இந்தியா பாஸ்கர் சக்தி எழுத்தாளர், இந்தியா ஜனநாதன் திரைப்பட இயக்குநர்,இந்தியா அழகிய பெரியவன் சிறுகதையாசிரியர், இந்தியா எஸ். சிறிதரன் சிறுகதையாசிரியர், ஐக்கிய அமெரிக்கா ராஜுமுருகன் திரைப்பட இயக்குநர், இந்தியா யுகபாரதி திரைப்பட பாடலாசிரியர், இந்தியா ஏக்நாத் ஊடகவியலாளர், இந்தியா பிரேமா ரேவதி ஊடகவியாலாளர், இந்தியா லெனின் ஊடகவியலாளர், இந்தியா மு.சந்திரகுமார் விமர்சகர், இந்தியா முனைவர் பஞ்சாங்கம் விமர்சகர், இந்தியா தமிழியம் சுபாஷ் திரைப்பட இயக்குநர், நோர்வே ஆ. சிவசுப்ரமணியன் ஆய்வாளர், இந்தியா டானியல் ஜீவா சிறுகதையாசிரியர், கனடா ச. பாலமுருகன் நாவலாசிரியர், இந்தியா நிழல்வண்ணன் மொழிபெயர்ப்பாளர், இந்தியா பேராசிரியர் கோச்சடை மொழிபெயர்ப்பாளர், இந்தியா எஸ். வேலு விமர்சகர், இங்கிலாந்து சன். தவராசா விமர்சகர், ஸ்விட்சர்லாந்து டி. எஸ். எஸ். மணி பத்திரிக்கையாளர், இந்தியா இரா. முருகவேள் மொழிபெயர்ப்பாளர், இந்தியா குட்டி ரேவதி கவிஞர், இந்தியா லெனின் சிவம் திரைப்பட இயக்குநர், கனடா அருள் எழிலன் பத்திரிக்கையாளர், இந்தியா ஆர். ஆர். சீனிவாசன் ஆவணப்பட இயக்குநர், இந்தியா வளர்மதி நாடகாசிரியர், இந்தியா அறிவன் விமர்சகர்,இந்தியா நடராஜா முரளிதரன் பதிப்பாளர், கனடா ஜமாலன் கோட்பாட்டாளர், சவூதி அரேபியா ஹெச். பீர் முகமது கோட்பாட்டாளர், இந்தியா சுப்ரபாரதி மணியன் நாவலாசிரியர், இந்தியா மெலிஞ்சிமுத்தன் கவிஞர், கனடா பெருமாள் முருகன் நாவலாசிரியர், இந்தியா ரோஸா வசந்த் விமர்சகர், இந்தியா ரூபன் சிவராஜா வில்லிசைக் கலைஞர், நோர்வே வி. உதயகுமார் மொழிபெயர்ப்பாளர், இந்தியா ஆர். பாலகிருஷ்ணன் மொழிபெயர்ப்பரளர், இந்தியா லிங்கராஜா வெங்கடேஷ் விமர்சகர், இந்தியா பாமரன் விமர்சகர், இந்தியா அருள்மொழிவர்மன் விமர்சகர், கனடா ரஃபேல் கோட்பாட்டாளர், கனடா சிவதாசன் இதழாளர், கனடா இரவி அருணாசலம் சிறுகதையாசிரியர், இங்கிலாந்து எம். சி. லோகநாதன் கவிஞர், டென்மார்க் பா. சிறிஸ்கந்தன் விமர்சகர், கனடா டி. தயாநிதி நாடகக் கலைஞர், பிரான்ஸ் அ. முருகையன் கல்வெட்டாய்வாளர், பிரான்ஸ் நாச்சிமார்கோவிலடி ராஜன் வில்லிசைக் கலைஞர், எழுத்தாளர், யேர்மனி சாந்தினி வரதராஜன் எழுத்தாளர், யேர்மனி முல்லை அமுதன் கவிஞர், இங்கிலாந்து அய்யனார் விஸ்வநாத் சிறுகதையாசிரியர், இந்தியா கவிமதி கவிஞர், துபாய் பொன்.சந்திரன் விமர்சகர், துபாய் பாரதி தம்பி ஊடகவியலாளர், இந்தியா ஜென்ராம் ஊடகவியலாளர்,இந்தியா அன்பாதவன் கவிஞர், இந்திய அடூர் ஷா நவாஸ் ஆவணப்பட இயக்குநர், இந்தியா சச்சிதானந்தன் சுகிர்தராஜா ஆய்வாளர், எழுத்தாளர், இங்கிலாந்து கௌதமன் திரைப்பட இயக்குர், இந்தியா ஜெயபாஸ்கரன் விமர்சகர், இந்தியா குணா திரைப்பட இயக்குநர், பிரான்ஸ், கஜேந்திரன் ஊடகவியலாளர், இந்தியா கழனியூரான் நாட்டுப்புறவியலாளர், இந்தியா ஈரோடு தமிழன்பன் கவிஞர், இந்தியா அ. முத்துக்கிருஷ்ணன் விமர்சகர், இந்தியா தொ. பரமசிவம் ஆய்வாளர், இந்தியா சேரன் திரைப்பட இயக்குநர், இந்தியா தங்கர்பச்சான் திரைப்பட இயக்குநர், இந்தியா ஓவியா விமர்சகர், இந்தியா தமிழ்நதி கவிஞர், கனடா ராம் திரைப்பட இயக்குநர், இந்தியா இராஜேந்திர சோழன் சிறுகதையாசிரியர், இந்தியா மா. மதிவண்ணன் கவிஞர், இந்தியா என். டி. ராஜ்குமார் கவிஞர், இந்தியா பாரதி கிருஷ்ணகுமார் ஆவணப்பட இயக்குநர், இந்தியா வீ. அரசு ஆய்வாளர், இந்தியா அ. மங்கை நாடகாசிரியர், இந்தியா சிபிச்செல்வன் கவிஞர், இந்தியா தா. பாலகணேசன் கவிஞர், பிரான்ஸ் அஜயன் பாலா சிறுகதையாசிரியர், நடிகர், இந்தியா தேடகம் தோழர்கள், தேடகம், கனடா கீற்று நந்தன் பதிப்பாளர், இந்தியா நேமிநாதன் எழுத்தாளர், இங்கிலாந்து மு. புஷ்பராஜன் கவிஞர், இங்கிலாந்து யமுனா ராஜேந்திரன் கோட்பாட்டாளர், இங்கிலாந்து இ. பத்மநாப ஐயர் பதிப்பாளர், தமிழியல், இங்கிலாந்து.

கூட்டறிக்கை ஒருங்கிணைப்பாளர்கள் : மு. புஷ்பராஜன், இங்கிலாந்து காலம் செல்வம், கனடா கி. பி. அரவிந்தன், பிரான்ஸ் யமுனா ராஜேந்திரன், இங்கிலாந்து இ. பத்மநாப ஐயர், இங்கிலாந்து கண. குறிஞ்சி, இந்தியா அருள் எழிலன், இந்தியா கீற்று நந்தன், இந்தியா.
குறிப்பு : இலங்கையில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கைவாழ் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்களை இவ்வறிக்கையில் இணைத்துக்கொள்ள நாங்கள் முனையவில்லை என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம்
}
குறிப்பு : இலங்கையில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கைவாழ் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்களை இவ்வறிக்கையில் இணைத்துக்கொள்ள நாங்கள் முனையவில்லை என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம்
சங்கப்பலகை :கலைகள் மொழிகளுக்கு அப்பாற்பட்டனவா?
கலைகள் மொழிகளுக்கு அப்பாற்பட்டனவா…? – இலக்குவனார் திருவள்ளுவன்
மக்கள் தொலைக்காட்சியில் தோழர் தியாகுவின் சங்கப்பலகையில் கலைகள் மொழிகளுக்கு அப்பாற்பட்டனவா என்பது குறித்துக் கலைகளின் மொழிகள் என்னும் தலைப்பில் இலக்குவனார் திருவள்ளுவன் உரையாடல் நிகழ்ச்சியினை தாயக நேரப்படி 10.30 மணியளவில் மக்கள் தொலைக்காட்சியில் காண்லாம். மக்கள் தொலைக்காட்சி காண இங்கே சொடுக்கவும்>>
திங்கள், 18 அக்டோபர், 2010
உடனடியாக மனித நேயர்கள் தலையிட்டு ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். சிங்களக் கொடுங்கரங்கள் அயலகத்திலும் நீண்டு கழுத்தை நெருக்குவதைத் தடுக்க வேண்டும்; நொறுக்குவதைத் தடுக்க வேண்டும். கனடா வாழ் தமிழர்களே! மனித நேயர்களே! ஒரு காலத்தில் தமிழர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தாய்லாந்து நாட்டு மக்களே! உங்கள் நாகரிகப் பண்பாட்டு வளர்ச்சியல் முதன்மைப் பங்கு வகிக்கும் தமிழர்களைக் காப்பாற்ற உடனே முந்துங்கள்! இதுவே நீங்கள் செய்ய வேண்டிய முதற்பணியாகும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Thiruvalluvan. I. 10/18 3:34am
சனி, 16 அக்டோபர், 2010
நவராத்திரி சண்டை
October 15th, 2010நவராத்திரி கொலுவில் சரசுவதி, லட்சுமி, கிருஷ்ணன், இராமன், சீதை, பிள்ளையார் உள்ளிட்ட கடவுள் பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. தனது வீட்டுக்கு வந்த நவராத்திரி விருந்தினருக்கு சுண்டல், தயிர் சாதம் வழங்கினார், கோபால அய்யர். இரவு தொலைக்காட்சியில், நடிகர்கள், கடவுள் வேடமிட்டு நடித்த பக்திப் படம் ஒன்றைப் பார்த்து உறங்கச் சென்றார். கனவில் கொலுவில் இருந்த கடவுள் பொம்மைகளும், உருவங்களாகப் பேசத் தொடங்கின….
கிருஷ்ணன் கீழே இறங்கி வந்து அய்யர் ‘ஆத்து’ சமைய லறைக்குப் போகிறான். பாத்திரங்களை உருட்டுகிறான். சத்தம் கேட்ட விநாயகன், கிருஷ்ணனை பின் தொடருகிறான்.
கிருஷ்ணன் : டேய், யானைத் தலையா! இங்கே, ஏண்டா வந்தே?
விநாயகன் : நிறுத்துடா, வெண்ணெய் திருடா; நீ எதையெதை எல்லாம் உருட்டப் போகிறாய், திருடப் போகிறாய் என்பதை பார்க்கத்தான் வந்தேன்.
கிருஷ்ணன் : நான் திருடினாலும் சரி; குளிக்கும் பெண்களின் ஆடைகளை உருவி மரத்தில் போய் உட்கார்ந்து கொண்டாலும்; நான் எப் போதுமே பக்தர்களுக்கு அன்பான விளையாட்டுப் பிள்ளைதான் தெரியுமா?
விநாயகன் : டேய்! இப்போதெல்லாம் ‘ஈவ்டீசிங்’ சட்டம் வந்து விட்டது. உள்ளே பிடித்து போட்டு விடுவார்கள், சும்மா துள்ளாதே!
கிருஷ்ணன் : அடேய், அழுக்குருண்டைப் பிண்டமே! வரம்பு மீறிப் பேசாதே; ஒவ்வொரு ஆண்டும் உன்னை அடித்து துவைத்து கடலில் போட்டு, உனது பக்தர்கள் மூழ்கடித்தும் புத்தி வர வில்லையே!
விநாயகன் : போதும் நிறுத்துடா! இப்போ அரசியலையே நான் தான் கலக்குறேன் தெரியுமா? எனது பிறந்த நாள் வந்துட்டா, நாடே அமளி துமளிப் படுது. போலீஸ்காரன் வீதிக்கு வீதி துப்பாக்கியோடு திரியறான், தெரியுமா? உன்னை எல்லாம் சீந்துவாரில்லை.
(விநாயகனும், கிருஷ்ணனும் கூச்சல் போடுகிற சத்தத்தைக் கேட்டு, கொலுவிலிருந்த இராமன், இறங்கி ஓடி வருகிறான்.)
இராமன் : என்னப்பா, என்ன பிரச்சினை: இப்படி நமக்குள்ளே சண்டை போட்டுக் கொண்டால் பக்தர்கள் நம்மை மதிப்பார்களா? கடவுள்களாக வந்துவிட்ட பிறகு, ஒழுங்கு வேண்டாமா?
விநாயகன் ஆத்திரத்துடன் : அடேய், ராமா! பொண்டாட்டியையே சந்தேகித்தவனே! நீயா, ஒழுங்கு பற்றிப் பேசுகிறாய்.
இராமன் : வீணா, என் வம்புக்கு வராதே; எனக்குள்ள செல்வாக்கு உனக்குத் தெரியாது!
விநாயகன் : என்னைவிட உனக்கு செல்வாக்கு அதிகமோ? பேத்தாதே!
இராமன் : அடேய், நான் தான்டா, இந்த நாட்டுல நீதிமன்றங்களையே ஆட்டிப் படைக்கிறவன். அலகாபாத் நீதிபதிகளையே என் காலடியில் விழச் செய்து விட்டேனே தெரியுமா?
விநாயகன் : இதைச் சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை. வானுலகின் தெய்வமாக இருக்க வேண்டியவன். பூலோகத்துல நீதிமன்றத்துல வந்து வழக்குப் போட்டுகிட்டு நிற்கிறியே; நீ எல்லாம், ஒரு கடவுளா? நீதிமன்றத்திலே உன் பெயரிலேயே மனு போடுகிறானே, உனக்கு அவமானமாக இல்லை?
இராமன் : இதிலே என்னடா அவமானம்; நான் எடுத்த எத்தனையோ அவதாரங்களில் இதுவும் ஒன்று.!
விநாயகன் : என்ன புடலங்காய் அவதாரம்; உனக்கு சக்தி இருந்தால் உன் பிறந்த இடத்தை நீயே நேரில் வந்து சொல்லியிருக்கலாமே! பிரசவம் பார்த்த மருத்துவர்கள், மருத்துவச்சிகள் பெயரைக் கூறி இருக்கலாமே! இதற்காக 60 ஆண்டுகள் நீதிமன்றத்தில் வழக்கு நடக்க வேண்டுமா?
இராமன் : டேய், பிஸ்கோத்து! தேசத்தையே மீண்டும் ராமராஜ்ய மாக்கியிருக்கிறேன். மனுதர்மத்தை மீண்டும் நீதிமன்ற சட்டமாக்கி விட்டேன்; பாவம்! இந்த முட்டாள் ‘சூத்திரர்’கள்; அவர்கள் நாட்டில் மக்களாட்சி நடப்பதாக நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். இதெல்லாம் உனக்கு எங்கே புரியப் போகுது!
கிருஷ்ணன் : (குறுக்கிட்டு) போதும்; போதும்; நிறுத்துங்கள்! நமக்குள்ளே ஏன் வீண் சண்டை? நமக்குள் ஒற்றுமைதான் மிகவும் முக்கியம். நாம் ஒற்றுமையாக எந்த சண்டையும் போடாமல், ‘கல்லாக’ நின்றால் தான் இந்த மக்களை காலம் முழுதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியும். மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டால், நம்ம கதை அம்போ தான். இப்போதே பிளாட்பாரத்தில்கூட இடம் கிடைக்காத நிலை வந்து விடும் போலிருக்கிறது. இப்படி சண்டை போட்டுக் கொண்டால் நாட்டிலேயே இடமில்லாது போய்விடும். ஒற்றுமை யாக பக்தியைப் பரப்பி மக்களை மடையர்களாக்கி மொட்டை அடிப்போம்; சரிதானா?
(‘கடவுள்’கள் சமரசம் செய்து கொண்டனர். உறக்கம் கலைந்த கோபால அய்யர், மனைவியிடம், கெட்டக் கெட்ட கனவாக வருதுடி, ஏதோ, ஆபத்து வரும் போலிருக்கே என்று புலம்புகிறார்.)
- கோடங்குடி மாரிமுத்து
நன்றி: பெரியார் முழக்கம்
வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010
தமிழகத்தில் கருத்துரிமை?
| ||||||||||
| PathivuToolbar ©2010thamizmanam.com | ||||||||||
தமிழ்நாடு அரசு வழங்கிய இலவச வண்ணத்தொலைகாட்சி மூலம் மானாட, மயிலாட நிகழ்ச்சி, சினிமா நிகழ்ச்சிகள், நெடுந்தொடர்கள் ஆகியவற்றை பார்த்து நாம் மகிழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் நமது கருத்துரிமை சத்தமின்றி களவாடப்படுவது உங்களுக்குத் தெரியுமா? ஆதிக்க சக்திகளுக்கு எதிராக பெரியார் தலைமையில் கருத்துப் புரட்சியை தோற்றுவித்த திராவிட இயக்கத்தின் இன்றைய வாரிசான திராவிட முன்னேற்றக் கழகம்தான் மக்களின் கருத்துரிமைக்கு பெரும் சவாலாக விளங்குகிறது.
எந்த ஒரு ஆட்சியிலும் புறக்கணிக்கப்படும் மக்கள் பிரிவு, தங்கள் கோரிக்கைகளை ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்களுக்கு நினைவுறுத்துவதற்காக போராட்டங்களை நடத்துவதும், மக்கள் பிரசினைகள் குறித்து ஊடகங்களில் எழுதுவதும் தொன்று தொட்டு நடந்து வரும் நிகழ்வுகளே. இவை காமராஜர், அண்ணாதுரை ஆகியோர் ஆட்சிக்காலத்திலும் நடந்தவையே. இன்று அரசு இயந்திரத்தால் புறக்கணிக்கப்படும் மக்கள், தங்கள் குறைகளை அரசின் கவனத்துக்கு கொண்டுவருவதற்காக நடத்தப்படும் சாதாரண நிகழ்வுகளைக்கூட அரசு அமைப்பின் கவனத்தைக் கவரும் அம்சமாக கருதுவதற்கு பதிலாக, ஆட்சியை கலைக்க நடக்கும் பயங்கரவாத சதித் திட்டமாக அரசும், ஆட்சியில் இருப்போரும் கருதுகின்றனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற ஜனநாயக நாடுகளில் நாடாளுமன்றத்திற்கு எதிரிலும், பிரதமர் இல்லத்தின் அருகிலும்கூட போராட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதை நாமும் தொலைக்காட்சிகள் மூலமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டிலோ ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஆளரவமே இல்லாத இடம் ஒதுக்கப்படுகிறது. அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தவும் அனுமதி மறுப்பதற்கு ஆயிரம் காரணங்களை கூறுகிறது காவல்துறை. பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை எடுத்துக்கூறும் சுவரொட்டிகளை அச்சடிக்கும் அச்சகங்கள் மிரட்டப்படுகின்றன. இரவு நேரத்தில் சுவற்றில் ஒட்டப்படும் சுவரொட்டிகளை காவல்துறையும், உளவுத்துறையும் விடிவதற்குள் அகற்றுகிறது. சுவரொட்டி ஒட்டும் தொழிலாளர்களை மிரட்டியும், தாக்கியும் ஒடுக்குகிறது தமிழக காவல்துறை!
அரங்குகளுக்குள் நடத்தப்படும் கருத்தரங்குகளுக்கு காவல்துறையின் அனுமதி தேவையில்லை என்று சட்டம் அனுமதித்தாலும், அரங்கு உரிமையாளர்களை மிரட்டி அச்சுறுத்துவதன் மூலம் மக்களின் கருத்து சுதந்திரத்தை கட்டுப்பாட்டில் வைக்கிறது அரசு! செம்மொழி மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்பேசி மூலம் குறுந்தகவல் அனுப்பியவர்களைக்கூட பொய்வழக்கு மூலம் சிறையில் அடைத்தது தமிழக காவல்துறை.
அரசின், அதிகாரிகளின் ஊழல் முகத்தை வெளிக்கொணரும் பத்திரிகை ஆசிரியர்கள் கைது செய்யப்படுகின்றனர். வலைப்பதிவுகளில் எழுதும் வலைபதிவர்களையும் பொய்வழக்கில் சிக்கவைக்க காவல்துறை தயங்குவதில்லை. மிகப்பெரிய தொழிற் சாலைகளை அமைக்கும்போது மக்களின் கருத்தறியும் சட்டரீதியான கூட்டங்களில்கூட மக்கள் தத்தம் கருத்துகளை வெளிப்படையாக கூறமுடியாமல் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலுவின் குடும்பத்தினருக்கு சொந்தமான வடசேரி எரிசாராய ஆலையில் நடந்ததுபோல குண்டர்களைக் கொண்டும், காவல்துறையினரைக் கொண்டும் கொடூரமாக ஒடுக்குகிறது தமிழக அரசு.
ஈழத்தமிழர்களின் இன்றைய அவலம் பற்றி யார் பேசினாலும் அவர்களை தேசத்துரோகிகள் என்று பட்டம் சூட்டும் தமிழக அரசு, சிங்கள பேரினவாத ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படும் இந்திய-தமிழ் மீனவர்கள் குறித்து பேசிய சீமானை தேசப்பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் பூட்டுகிறது.
சுமார் 500க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் நடுக்கடலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் சாவுக்கு இலங்கை கடற்படையே காரணம் என்று தமிழக காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. ஆயினும் இந்த பிரசினையை தீர்ப்பதற்கு மாநில அரசோ, மத்திய அரசோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மீனவர்களின் இந்த அவல நிலை குறித்து கேள்வி எழுப்புபவர்களை இந்திய இறையாண்மைக்கு எதிரானவாகளாக சித்தரிக்கின்றன மத்திய, மாநில அரசுகள். இது எந்த வகையில் நியாயம்?
சென்னை உயர்நீதிமன்றத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண் எதிரிலேயே திமுக குண்டர்கள் வழக்கறிஞர்களை தாக்கியதையும், அதை படம்பிடித்த செய்தியாளர்கள் தாக்கப்பட்டதையும் ஒரு செய்தியாகக் கூட பதிவு செய்ய முடியாமல் ஊடகங்கள் விலை பேசப்படுகின்றன: அதற்கு மசியாத ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. திராவிட முன்னேற்றக் கழகமே ஆதரித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழ்! என்ற கோரிக்கையை வலியுறுத்தி அறவழிப்போராட்டத்தைக்கூட ஆட்சியை கவிழ்க்க முனையும் சதியாக நினைத்து ஒடுக்க முனைகிறது அரசு.
செய்தியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக இயக்கத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரின் தொலைபேசிகளையும், பிற தகவல் தொடர்புகளையும் ஒட்டுக்கேட்பது போன்ற கண்காணித்தல் நடவடிக்கைகளால் அவர்களது இயல்பான, சுதந்திரமான நடவடிக்கைகளை முடக்கி தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
போபால் விஷவாயு விபத்து குறித்து விவரணப்படங்களை மக்கள் கூடும் இடங்களில் திரையிடுவது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைக்கூட காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகிறது. முதல்வரையும், அவரது செயல்பாடுகளையும் போற்றிப்பாடும் கருத்துகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அரசு அமைப்புகளுக்கு எதிரான கருத்துகள் அனைத்தும் திட்டமிட்டு நசுக்கப்படுகின்றன.
குறளோவியம் படைத்தும், கன்னியாகுமரி கடற்கரையில் அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடி உயர உருவச்சிலை அமைத்தும் திருக்குறளின் புகழ் வளர்க்க முனையும் முதலமைச்சர் திரு. கருணாநிதி, அதே அய்யன் திருவள்ளுவரின்
“இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்”
என்ற திருக்குறளை மறந்து மக்களின் கருத்துரிமைக்கு வாய்ப்பூட்டு போடும் செயலை தொடர்ந்து செய்து வருகிறார்.
தமிழக அரசின் இந்தப்போக்கு எதிர் கட்சிகளுக்கும்,செய்தியாளர்களுக்கும், பேச்சாளர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்களுக்கு மட்டுமே எதிரான செயலல்ல! இது பொது மக்களின் கருத்துரிமைக்கு எதிராக அரசு தொடுக்கும் யுத்தம். அரசின் இந்த ஒடுக்குமுறைகளை சமூக ஒழுக்கம் நீங்கள் நினைத்தால், நாளை உங்களுக்கு ஏற்படும் பிரசினைக்காக நீங்கள் வீதியில் இறங்கி போராடத்துணியும்போது இதே ஒடுக்குமுறை உங்கள்மீதும் பாயும்.
தமிழக அரசின் இந்த மக்கள் விரோத போக்குக்கு எதிராக கருத்துரிமையின் அவசியத்தை விளக்கும் கருத்தரங்கத்தினை நடத்த கருத்துரிமைக்கான கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.
வருங்கால சந்ததியினருக்கு இருண்ட சுதந்திரத்திற்கு பதிலாக, உண்மையான சுதந்திரத்தை அளிக்க விரும்பும் அனைவரும் இந்த நிகழ்விற்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.
கருத்துரை
திரு.கோவிந்தன்குட்டி, ஆசிரியர்-பீப்பிள்ஸ் மார்ச்
திரு.தமிழருவிமணியன், காந்திய இயக்கம்
திரு.தியாகு, தமிழ்தேச விடுதலை இயக்கம்
திரு.திருமலைராஜன், தமிழ்நாடு-புதுவை வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பு
திரு.பாரதிதமிழன், சென்னை பத்திரிகையாளர் மன்றம்
07-08-2010 மாலை 5மணி, கேரளா சமாஜம் (பூந்தமல்லி நெடுஞ்சாலை )
கருத்துரிமைக்கான கூட்டமைப்பு
எண் 5, 4வது தெரு, சுங்குராமன் தெரு, சென்னை.600 001
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)