திங்கள், 8 ஆகஸ்ட், 2011

எம். ஞ்)சி.ஆர். விரும்பிய தமிழ் ஈழத்துக்காகப் போராட வேண்டும்: பழ. நெடுமாறன்

எம்.ஜி.ஆர். விரும்பிய தமிழ் ஈழத்துக்காக போராட வேண்டும்: பழ. நெடுமாறன்

First Published : 08 Aug 2011 01:12:35 AM IST

Last Updated : 08 Aug 2011 03:56:30 AM IST

சென்னை, ஆக. 7: முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். விரும்பிய தனி தமிழ் ஈழத்துக்காக, அனைவரும் ஒன்றுப்பட்டு போராட வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வலியுறுத்தினார்.  எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்களின் சார்பாக இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை கண்டித்து, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரைப்பட இயக்குநர் மணிவண்ணன், நடிகர் சத்யராஜ், கவிஞர் புலமைப் பித்தன், எம்.ஜி.ஆர். கட்சியின் தலைவர் லியாகத் அலிகான் உள்ளிட்டோர் இதில் கலந்துக் கொண்டனர்.  அப்போது பழ. நெடுமாறன் பேசியதாவது:  போர் என்ற பெயரில் இலங்கையில், பல அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதற்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.  மேலும் இலங்கையில் நடைபெற்றது போர்க்குற்றம் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இதைத் தவிர, அச்சமயத்தில் இலங்கையில் உள்ள பல தமிழ் பெண்களும், குழந்தைகளும் பல்வேறு சித்ரவதைக்குள்ளாகி பலியாகினர்.  இதற்கு மூலக் காரணமாக விளங்கிய ராஜபட்சவை போர்க்குற்றவாளி என அறிவித்து அவரிடம் நீதி விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் தனி தமிழ் ஈழம் அமைவதற்கு எம்.ஜி.ஆர். பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.  இதற்காக அவர் தன்னால் இயன்ற பல உதவிகளைச் செய்தார். ஆனால், அவர் விரும்பிய தமிழ் ஈழம் இன்றுவரை அமையவில்லை. எனவே எம்.ஜி.ஆரின் உண்மைத் தொண்டர்கள், ரசிகர்கள், அவர் மீது பற்றுள்ளவர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு, தமிழ் ஈழத்துக்காக போராட வேண்டும் என்றார் பழ. நெடுமாறன்.

இராமேசுவரத்தில் பாசக கடல் முற்றுகை: 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


ராமேசுவரத்தில் பாஜக கடல் முற்றுகை: 
5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

First Published : 08 Aug 2011 12:42:38 AM IST

Last Updated : 08 Aug 2011 03:47:12 AM IST

ராமேசுவரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்களுடன் உற்சாகமாகப் பேசியபடி வந்த பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.
 ராமேசுவரம், ஆக. 7: தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமையை வலியுறுத்தி ராமேசுவரத்தில் பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியினர் கடல் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.  தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனவும், மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.  போலீஸாரின் அனுமதி மறுப்பை மீறி நடந்த இப்போராட்டத்தில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 5,000-த்துக்கும் மேற்பட்ட பாஜக-வினர் கலந்து கொண்டனர்.  ராமேசுவரம் துறைமுகம் சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா, கட்சியின் மாநில முன்னாள் தலைவர்கள் லட்சுமணன், சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போராட்டத்தை விளக்கிப் பேசினர்.  அப்போது, பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலர் சுப. நாகராஜன் உள்ளிட்டோர் ராமேசுவரம் கடற்கரையில் நின்று மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். உடனே, போலீஸôர் விரைந்து சென்று அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.  பின்னர் மேடை நோக்கி வந்த ராதாகிருஷ்ணன், தொண்டர்களிடம் பேசுகையில், நாட்டுப் படகில் கடலுக்குள் சென்று 6 மணி நேரம் கடல் மறியல் போராட்டம் நடத்தியதாகத் தெரிவித்தார்.  உடனே உற்சாகமடைந்த தொண்டர்கள், அவரை தோளில் தூக்கியபடி மீண்டும் கடற்கரை நோக்கிச் சென்றனர். அவர்களைப் போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  பாஜகவினர் நடத்திய இந்தக் கடல் மறியல் போராட்டம் போலீஸாருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது.  ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் மீனவர்கள் போல கடற்கரை ஓரத்தில் நடந்து வந்ததாகவும் அவர்கள் கடலுக்குள் செல்லவில்லை எனவும் உளவுப் பிரிவு போலீஸôர் தெரிவித்தனர்.  இப்போராட்டத்துக்கு இந்திய, இலங்கை நிரபராதி மீனவர் கூட்டமைப்பு நிர்வாகி யூ. அருளானந்தம், மீனவர் சங்கத் தலைவர்கள் போஸ், பாம்பன் சிப்பிசேசு ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர். 

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

தமிழ் ஈழம்தான் நிரந்தரத் தீர்வு : இராமதாசு, திருமாவளவன் பேச்சு

கடைசித் தமிழன் உள்ளவரை தமிழ் ஈழம் பற்றிப் பேசிக் கொண்டு இருப்பான் எனத் திரைப்படம்போல் பேசுவதன் பொருள் என்ன? எஞ்சிய தமிழர்களையும்அழிக்குமாறு சிங்களத்திற்குத் தெரிவிக்கிறார்களா?  எஞ்சிய தமிழர்கள் உலகத்தமிழர்களுடன் சேர்ந்து தமிழ் ஈழத்தை அமைப்பார்கள். இனப்படுகொலையாளிகள் அனைவருக்கும் கொடூரமான மரணத்தண்டனை  வழங்குவார்கள் என்று பேசினால் பொருள் உண்டு. பதவிகளுக்காகக்  கொலையாளிகளுடன் கூட்டணிவைத்ததால் தடுமாறுகிறார்கள். இனியாவது விழித்தெழுந்து பகைவர்களுடன் சேர வேண்டா.  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!    மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
தமிழ் ஈழம்தான் நிரந்தர தீர்வு : ராமதாஸ், திருமாவளவன் பேச்சு

First Published : 07 Aug 2011 04:48:25 PM IST


சென்னை, ஆக.7: தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழ் ஈழமே தீர்வு என்ற தலைப்பில் சென்னையில் இன்று கருத்தரங்கம் நடந்தது.   கருத்தரங்கில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் உரையாற்றினர். திருமாவளவன் பேசியதாவது: தமிழ் ஈழ விடுதலை போராட்டம் நசுக்கப்பட்டு விட்டது. இனி யாரும் பேச மாட்டார்கள் என்ற மமதையில் சிங்கள ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் கடைசி தமிழன் உள்ளவரை தமிழ் ஈழத்தை பற்றி பேசிக் கொண்டுதான் இருப்பான்.   தமிழ்நாட்டில் சாதி மதத்தால் மக்களிடையே பிளவு, இன்னொரு புறத்தில் சினிமாவாலும், போதை பழக்கத்தாலும் இளைய சமுதாயம் சீரழிந்து வருகிறது. அவர்களுக்கு தமிழர்களை பற்றியோ, தமிழர்களின் வரலாற்றை பற்றியோ புரிந்து கொள்ள இயலவில்லை. முதல்வர் ஜெயலலிதா இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என சட்ட சபையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். தமிழ் ஈழமே தீர்வு என தீர்மானம் கொண்டு வர தயாரா? தி.மு.க.வும், தமிழ் ஈழம் என்று பலமேடையில் தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால், அப்போது தி.மு.க. சூழ்நிலை கைதியாக இருந்தது. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தமிழ் ஈழம்தான் தீர்வு என பேசுவது இல்லை. இலங்கை தமிழர் பிரச்னை தீர, தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் மலர வேண்டும்.பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசும் போது, இலங்கை இன பிரச்சினைக்கு ஒரே தீர்வு தமிழ் ஈழம்தான். தமிழ் ஈழம் மலரும் வரை குரல் கொடுப்போம் என்றார்.

மலேசிய அரசுக்கும் சிறீலங்கா அரசுக்கும் மறைமுகத் தொடர்பு

மலேசிய அரசுக்கும் சிறீலங்கா அரசுக்கும் மறைமுக தொடர்பு

சர்வதேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்புவதில் மலேஷிய உள்துறை அமைச்சர் ஹிஷாம்டீன் ஹூசைனுக்கு மறைமுகமான தொடர்பு இருப்பதாக பீனாங் முதலமைச்சர் பி.ராமசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக தோற்கடிக்கப்பட்ட நிலையில், ஏன் மலேசியா முன்னாள் போராளிகளை கைது செய்து தடுத்து வைத்து நாட்டுக்கு திருப்பி அனுப்புகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், மலேஷியா அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் மறைமுகமான தொடர்பு இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எப்படியிருப்பினும் அவ்வாறான தொடர்புகள் தெளிவுபடுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்
அத்ததோடு யுத்தத்தில் இருந்து தப்பி மலேஷியா மீண்டும் அந்நாட்டுக்கு அனுப்புவது என்பது கவலைக்குரிய விடயமாகும். ஏனெனில் தமிழர்கள் அனைவருமே தமழீழ விடுதலைப் புலிகளின் ஆதவாளர் எனும் கண்கொண்டுதான் இலங்கை அரசு பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இவ்வாறு திருப்பி அனுப்பப்படுபவர்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்படக் கூடுய வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

suranganaaru water falls : சுரங்கனாறு அருவி - தினமலர் படம்


சித்த மருத்துவத்துக்கு மாற வேண்டும்

சித்த மருத்துவத்துக்கு மாற வேண்டும்

First Published : 06 Aug 2011 11:09:19 AM IST


புதுச்சேரி, ஆக. 5: பாரம்பரிய சித்த மருத்துவத்துக்கு பொது மக்கள் அனைவரும் மாற வேண்டும் என்று புதுச்சேரி வனம் மற்றும் வன விலங்குகள் துறையின் துணை வனப் பாதுகாவலர் ஏ.அனில்குமார் தெரிவித்துள்ளார். புதுச்சேரி கள விளம்பர அலுவலகம் மற்றும் தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்கம் சார்பில் சித்த மருத்துவமும், மருத்துவ மூலிகைகளும் என்ற தலைப்பில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் லாஸ்பேட்டையில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடந்தது. வனம் மற்றும் வன விலங்குகள் துறையின் துணை வனப் பாதுகாவலர் ஏ.அனில்குமார் கலந்துகொண்டு, 70 வகை மூலிகைகள் இடம்பெற்ற கண்காட்சியை தொடங்கிவைத்தார்.அப்போது அவர் பேசியது: சித்த மருந்துகளுக்கு மூலப் பொருளாக இருப்பது தாவரங்கள். இந்த மூலப் பொருள்கள் மனிதனுடைய நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. ஆங்கில மருந்துகளுக்கு மூலப் பொருளாக இருப்பது வேதிப் பொருள்கள். இவற்றைப் பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். அதனால் பாரம்பரியமான சித்த மருத்துவத்தை பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும் என்றார்.புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் சீ.பக்தவச்சல பாரதி: மனிதனின் இன்றைய வாழ்க்கை முறை இயற்கை மற்றும் பாரம்பரியத்தில் இருந்து விலகியும், மாறுபட்டும் இருக்கிறது. நாம் ஐரோப்பிய வாழ்க்கை முறைக்கு அடிமைப்பட்டு இருக்கிறோம். அவ்வாறே அலோபதி மருத்துவ முறைக்கும் ஆட்பட்டுள்ளோம். ஆனால் திராவிட மருத்துவ முறை தனித்தன்மையும் சிறப்புத் தன்மையும் வாய்ந்தது. சித்த மருத்துவம் அறிவியல் பூர்வமான முறையில் அமைந்துள்ளது. இந்த அசலான மருத்துவ முறையை நாம் மீண்டும் பரவலாக்க வேண்டும் என்றார்சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பாவண்ணன்: பாடப் புத்தகக் கல்வியை விட பள்ளிக்கு அப்பாற்பட்ட பண்பாட்டுக் கல்விதான் மனிதனை முழுமையாக்குகின்றன. இன்று நாம் பயன்பாட்டைத்தான் முதன்மையானதாக பார்க்கிறோம்.நமக்கு பயன்படாத எதையும் நாம் ஒதுக்கி விடுகிறோம். மரங்கள் மனித வாழ்விற்கு இன்றியமையாதவை. ஏட்டுக் கல்வி மரத்தை நேசிக்க கற்றுத் தரவில்லை. ஒரு மரம் தாயையும் தந்தையையும்விட முக்கியமானது என்று உணரும் போதுதான் இயற்கையை பாதுகாக்கத் தோன்றும் என்றார்.தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகாசங்கத்தின் மாநிலத் தலைவர் வைத்தியர் கே.பி.அருச்சுனன்: ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியமிக்க சித்த வைத்தியம் உணவே மருந்து, மருந்தே உணவு என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. இன்றைய பல்வேறு விதமான தொற்றாத நோய்களின் பெருக்கத்திற்கு காரணம் நம் உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம்தான். இன்றைக்கு மனிதரின் நோய் எதிர்புச் சக்தி வெகுவாக குறைந்துள்ளது. இக்குறையை போக்க சித்த மருத்துவம்தான் ஒரே வழி என்றார்.களவிளம்பர அலுவலர் தி.சிவக்குமார், கல்லூரிகளின் என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் ஆர்.வாசுகி, சமுதாயக் கல்லூரி முதல்வர் கே.எஸ்.குமாரி, என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் அரங்க.முருகையன், வேலூர் வைத்தியர் ப.செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கா. சிவத்தம்பியின் சிந்தனைகள் சமூக வரலாற்றில் புதிய அடையாளம்: பேராசிரியர் வீ. அரசு புகழாரம்

கா. சிவத்தம்பியின் சிந்தனைகள் சமூக வரலாற்றில் புதிய அடையாளம்: பேராசிரியர் வீ. அரசு புகழாரம்

First Published : 07 Aug 2011 04:35:31 AM IST


புதுச்சேரி மணற்கேணி பதிப்பகம் சார்பில் சனிக்கிழமை நடந்த விழாவில் பேராசிரியர் கா.சிவத்தம்பி நினைவு சிறப்பிதழை வெளியிட்ட பேராசிரியர் வீ.அரசு (வலமிருந்து
புதுச்சேரி, ஆக. 6: இலங்கை தமிழறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் சிந்தனைகள் சமூக வரலாற்றில் புதிய அடையாளத்தைத் தந்துள்ளன என்று சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத்துறை பேராசிரியர் வீ. அரசு கூறினார்.  புதுச்சேரி மணற்கேணி பதிப்பகம் சார்பில் பேராசிரியர் கா. சிவத்தம்பி நினைவுக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது அவர் பேசியது:  தமிழ்நாட்டில் சிவத்தம்பியை நினைவு கூறும் வகையிலான நிகழ்ச்சி எதுவும் நடக்கவில்லை. புதுச்சேரியில் இப்படியொரு நிகழ்ச்சி நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சிவத்தம்பி ஆராய்ச்சியாளராக இருந்தாலும் அடிப்படையில் ஆசிரியர். ஆராய்ச்சியாளராக யார் வேண்டுமென்றாலும் வர முடியும். ஆனால் ஆசிரியர் பணி என்பது எளிதான வேலையல்ல.  சங்க இலக்கியம் உள்பட பல்வேறு தடங்களில் பேராசிரியர் சிவத்தம்பியின் சிந்தனைகளை வாசித்தால் 5 ஆயிரம் ஆண்டு கால சமூக வரலாற்றை அறிந்து கொள்ள முடியும். இவரது சிந்தனை அடிப்படையில் தென்னிந்திய வரலாற்றை அறிந்து கொள்ள முடியும். தென்னிந்திய வரலாறு வட இந்திய வரலாற்றில் இருந்து வேறுபட்டது.  சிவதம்பியின் சிந்தனை அடிப்படையில் தென்னிந்திய வரலாறு புவியியல், பண்பாடு, மொழியியலில் புதிய புரிதலை உண்டுபண்ணியது. சங்க இலக்கியத்தில் அகம், புறம் என்ற மரபு, தமிழ்க் கவிதை மரபு- பக்தி, பாசுரமாக எப்படி இருந்தது, அருணகிரிநாதரின் சந்த மரபு, தாயுமானவரின் பாடல்கள் உள்ளிட்ட தமிழ்ச் சமூக வரலாற்றின் பரந்த நீண்ட வரலாற்றை பதிவு செய்துள்ளவர் சிவத்தம்பி. ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக தந்தை பெரியாரின் பங்களிப்பு இருக்கிறது. அது போன்று தமிழில் வேறுபட்ட கலைத்திட்டம், பாடத் திட்டம், கலைச் சொல்லாக்கத்தில் பேராசிரியர் சிவத்தம்பியின் பங்களிப்பு இருக்கிறது. அவர் தமிழ்ச் சமூகத்துக்குக் கொடை வள்ளல். மனித உறவைப் போற்றிய மாமனிதர் என்றார் அரசு.  சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் பெ. மாதையன் பேசுகையில், பல்வேறு தமிழ் கலைச் சொற்களைச் சமூக, பொருளாதாரப் பின்புலத்தோடு ஆராய்ந்தவர் பேராசிரியர் சிவதம்பி. பல்வேறு ஆய்வுகளை முறையாகப் பிற துறைகளோடு ஒப்பீட்டு ஆய்வு செய்தவர். பல்வேறு சமூகப் பரிமாணங்களின் இயங்குத் தளங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் என்றார்.  சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ் மொழியியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் பேசுகையில், இலக்கிய ஆய்வு என்பது இயற்பியல் ஆய்வைக் காட்டிலும் கடினமானது. அந்த அளவுக்கு ஆய்வு அணுகுமுறையைத் தமிழியல் ஆய்வில் பின்பற்ற வேண்டும். பேராசிரியர் சிவத்தம்பியின் இலக்கிய, இலக்கண, மொழியியல் ஆய்வுகளில் சமூகவியல் கண்ணோட்டம், அறிவியல் கண்ணோட்டம் இருக்கும் என்றார். புதுச்சேரி பேராசிரியர் க. பஞ்சாங்கம் பேசுகையில், தமிழ் சமூக வரலாற்றை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயல்பட்டவர் பேராசிரியர் சிவத்தம்பி. பேராசிரியர்கள் கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்கு வெளியே எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் சிவத்தம்பி என்றார்.  புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் பக்தவத்சல பாரதி பேசுகையில், சமயம், சமூகம், பண்பாட்டுகளின் பின்புலமாக இலக்கியத்தைப் புரிந்து கொள்ள வைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி. தாய்வழி சீதன மரபு தமிழகத்தில் இப்போது இல்லை. இலங்கையில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் இருக்கிறது என்றார்.  பேராசிரியர் மே.து. ராசுகுமார் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். எழுத்தாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ரவிக்குமார் தலைமை வகித்தார். மணற்கேணி இதழ் கா. சிவத்தம்பியின் சிறப்பிதழாக விழாவில் வெளியிட்டது. பேராசிரியர் வீ. அரசு வெளியிட எழுத்தாளர் இமையம் பெற்றுக் கொண்டார்.  சென்னையைச் சேர்ந்த டி.எஸ்.எஸ். மணி, பேராசிரியர்கள் விஜயவேணுகோபால், ராஜ்கெüதமன் ஆகியோர் பேராசிரியர் சிவத்தம்பி தொடர்பான மற்றொரு நூலின் படிகளைப் பெற்றுக் கொண்டனர். 

அண்ணா வளர்ப்பு மகன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

 
தம் குடும்பத்தினரைத் தன் வழியில் அரசியலில் குறுக்கு முறையில் இறக்காத பேரறிஞர் அண்ணா அவர்களின் பெருந்தன்மைக்கேற்ப அவர் வளர்ப்பு முறையால் ஊழல் பார்வையையும்  மோசடிச் செயல்பாட்டையும் கொள்ளாது  எளிமையாக வாழ்ந்த திரு  இளங்கோவன் மறைவிற்குத் தனி மணி நேயர்கள் சார்பில் ஆழ்ந்த  இரங்கல்கள்! அரசியல் மூலம் ஆதாயம் பெற்றுச் செல்வம் பெருக்காத பெருந்தன்மை நாளைய உலகில் உங்களைப்பற்றியும் பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றியும் பேசும். வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!    மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

அண்ணா வளர்ப்பு மகன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

First Published : 07 Aug 2011 04:54:41 AM IST


சென்னை, ஆக. 6: முன்னாள் முதல்வர் அண்ணாவின் வளர்ப்பு மகன் இளங்கோவனின் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:  அண்ணாவின் வளர்ப்பு மகன் சி.என்.ஏ.இளங்கோவன், உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். இளங்கோவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.  நேரில் அஞ்சலி: முதல்வர் ஜெயலலிதா சார்பில், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அமைப்புச் செயலாளர் சுலோச்சனா சம்பத், அமைச்சர் செந்தமிழன் ஆகியோர் இளங்கோவனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினர். இளங்கோவனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவரது மனைவி விஜயாவுக்கு தந்தி அனுப்பியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. இதுகுறித்து, திமுக வெளியிட்ட செய்தி:  திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக அரசைக் கண்டித்து நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக திருவாரூர் சென்றுள்ளார். இதனால் இளங்கோவன் துணைவியார் விஜயாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி ஆறுதல் தெரிவித்து இரங்கல் தந்தி அனுப்பியுள்ளார். இதனிடையே, இளங்கோவனின் உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

புட்டிப் பாலாக ஆங்கிலம் எதற்கு?

ஓவியர் பார்த்தசாரதி சின்னச்சாமிக்குப் பாராட்டுகள். செய்தியாளர் ஆனந்து அத்தகைய சில படங்களையும் வெளியிட்டு இருந்தால் சிறப்பாக  இருந்திருக்கும்.  தொடர்பு முகவரி தெரிவித்து இருந்தால் எல்லா ஊர்களிலும் இத்தகைய ஓவியத்தமிழ்க் காட்சி நடத்த வாய்ப்பாக  இருக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!    மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


புட்டிப் பாலாக ஆங்கிலம் எதற்கு?

First Published : 06 Aug 2011 02:13:09 PM IST


தாய்ப்பாலாகத் தமிழ் இருக்க, புட்டிப் பாலாக ஆங்கிலம் எதற்கு? இந்தக் கேள்வியை ஓவியத்தின் மூலமே எழுப்புகிறார் ஓர் ஓவியர். அவர், அமெரிக்க வாழ் தமிழரான பார்த்தசாரதி சின்னசாமி. கோவை பீளமேடு கஸ்தூரி ஸ்ரீனிவாசன் கலைக் கூடத்தில் நான்கு நாள்கள் நடந்த "ஓவியத்தமிழ்' என்னும் தலைப்பில் அமைந்த ஓவியக் கண்காட்சியில் அவரைச் சந்தித்தோம்.இப்படியொரு கண்காட்சியை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?ஆங்கிலத்தில் பேசுவது நாகரிகம் என்று யாரோ விதைத்த விதை. இன்று ஆலமரமாய் கிளை பரப்பியுள்ளது. மொழிக் கலப்பு இல்லாமல் தமிழ் மட்டும் அல்ல, இந்திய மொழிகள்... ஏன் உலக மொழிகள் எதுவும் பேசப்படுவதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் எந்த நகரத்தில் நாம் நின்று சுற்றிப் பார்த்தாலும், உற்றுப் பார்த்தாலும் இது தெளிவாக விளங்கும்.நமது சமூக சூழலில் உள்ள பிரச்னைகளை மையப்படுத்தி வரைய வேண்டும் என்று ஒரு கால கட்டத்தில் யோசித்துக் கொண்டிருந்தேன். சுமார் மூன்று வருடங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் பல ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்குக் காரணம், தாய்மொழியுடன் ஆங்கிலம் கலந்து பேசுவதுதான் என்பதை உணர்ந்தேன். அப்போது தோன்றிய உணர்வுகளுக்கு வண்ணமேற்றி ஒவியங்களில் பதிவு செய்ய ஆரம்பித்தேன். எனக்கே நான் சொல்ல ஆசைப்பட்ட செய்திகளைத் தாய் மொழி நலம் விரும்பும் என் உடன்பிறப்புகளுக்குச் சொல்ல கடல் தாண்டி, ஓவியங்களைச் சுமந்து வந்தேன். "ஓவியத்தமிழ்' என்ற தலைப்பில் கண்காட்சி நடத்தக் காரணம்?தமிழில் பேசும்போது அதில் ஆங்கிலம் கலந்துள்ளது என்பதை ஓவியம் வாயிலாக வெளிபடுத்தியுள்ளேன். ஓவியம் என்பது வண்ணச் சிதறலாக மட்டுமல்லாமல் எண்ணச் சிதறலாகவும் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையோடு ஓவியம் வழி எனக்கு நானே சொல்லிக் கொண்ட செய்திகளை உங்கள் பார்வைக்குப் படைக்க நான் தேர்வு செய்த தலைப்பு இது.அமெரிக்காவில் இருந்து வந்து தமிழ் நாட்டில்இந்த ஓவியக் கண்காட்சியை ஏன் வைத்தீர்கள்?அமெரிக்காவில் வாழும் தமிழ் இளைஞர்கள் தங்களுக்குள் ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள்தான். காரணம், அங்கிருக்கும் தமிழர்கள் நீண்ட நேரம் உரையாடுவது அமெரிக்கர்களுடன்தான். அதனால் அவர்கள் தமிழ் பேசினாலும் அதில் ஆங்கிலக் கலப்பைத் தவிர்க்கமுடியாது. ஆனால் தமிழ்நாட்டில் வாழும் இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொள்ளும்போது நாகரிகம் எனும் போர்வையில் தாய்மொழியில் பேசாமலும் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து "தமிங்கல'மாகப் பேசுவதும் இங்குதானே நிகழ்கிறது! அதனால்தான் தமிழ்நாட்டில் ஓவியக் கண்காட்சியை நடத்தினேன்.எந்த கல்லூரியில் ஓவியம் பயின்றீர்கள்?நான் யாரிடமும் ஓவியம் பயிலவில்லை. சிறுவயது முதலே எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்தது. எனது தந்தை வெ.சின்னசாமி என்னை உற்சாகப்படுத்தினார். என் உள்ளக் குமுறல்கள், மொழி சிதைவடைகிறது என்ற எண்ணத்தினால் ஏற்படும் நடுக்கங்கள் கை வழியே ஊடுருவி ஓவியமாக மாறின. நீங்கள் எந்த ஊரில் எந்த மொழியில் கல்வி பயின்றீர்கள்?நான் உதகை அருகே உள்ள கீழ் கோத்தகிரியில் இருந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். 12-ம்வகுப்பு வரை தாய்மொழியில்தான் படித்தேன். பள்ளிப் படிப்பில் சிறப்பிடம் பெற்றேன். தமிழில் கற்றதால் ஆங்கிலம் வராது என்ற தவறான எண்ணம் எனக்கும் இருந்தது. ஆனால் நம்பிக்கையுடன் ஆங்கில நாவல்கள் மற்றும் சிறுகதைகளைப் படிக்கத் துவங்கினேன். தற்போது. ஆங்கிலம், தமிழில் நல்ல புலமையுண்டு. கொமாரபாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.எம். கல்லூரியில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றேன். மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று எம்.எல்., படித்தேன். தற்போது டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறேன்.

adade... ! mathi : கொசுவைச் சமாளிக்க முடியலியே

கொசுவை சமாளிக்க முடியலியே

First Published : 07 Aug 2011 08:16:13 AM IST